வார ராசி பலன்: 01/01/2021 முதல் 07/01/2021 வரை! வேதாகோபாலன்

மேஷம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமுதாயத்தில் நல்ல பெயரெடுப்பீங்க.       நண்பர்களின் ஒத்துழைப்பைச் சுலபமாகப் பெறுவீங்க.  திறமைகளைக் கொண்டு புதிய சாதனைகளைப் படைப்பீங்க. செயல்களில் நியாயத்தையும் கடைபிடிப்பீங்க. நேர்மறையாக சிந்தித்து காரியமாற்றும் வாரம் இது.• எதிரிகளை வாக்கு சாதுர்யத்தினால் நயமாகப் பேசி வென்றுவிடுவீங்க. முகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீங்க. பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்தியையும் பெறுவீங்க.புதிய முன்னேற்றப் பாதையில் பயணப்படத் தொடங்குவீங்க. குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பாங்க.  வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பற்றி யாரிடமும் கேலி பேச வேண்டாம். பெண்கள் முயற்சியில் வெற்றி பெறுவீங்க

ரிஷபம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆமை வேகத்தில் நடந்த செயல்கள் அனைத்தும் துரித வேகத்தில் நடக்கத் தொடங்கும். பழையக் கடன்களை முழுவதுமாகத் திருப்பி அடைத்து விடுவீங்க. எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவாங்க. வேறு ஊர்களுக்கும் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீங்க.அன்னையின் அன்பும் பாசமும் கிடைக்கும்.பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும். பெற்றோருடன் இணக்கமாகச் செயல்பட்டு ஆசிகளைப் பெறுவீங்க. அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உன்னதமான பதவிகளைப் பெறுவாங்க. உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் அடங்கி விடுவாங்க. மாணவர்கள் போராடி வெல்வீங்க. கலைஞர்களின் முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும். தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீங்க. உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு தகுந்தாற்போல் விஷயங்கள் நடைபெறாமல் பதற்றம் ஏற்படலாம். பணியாளர்கள் மேலதிகாரியின் விருப்பங்களை நிறைவேற்று வீங்க.

மிதுனம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

வருமானம் உயர்வதால் குடும்பத்தின் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீங்க. அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உங்களுக்கு கருணை காட்டுவாங்க. கலைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள  தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீங்க. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். நண்பர்கள் நட்புடன் பழகுவாங்க. உறவிர்களுடனான பழைய பிணக்குகளை மறந்து விடுவீங்க. அரசு வகையில் சிரமங்கள் இல்லாமல் செயல்கள் முடியும். வியாபாரத்தில் கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும் உழைப்புக்கேற்ற வருமானம் தொடர்ந்து கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும். பெண்களுக்குப் புகழும் பாராட்டும் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.

கடகம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆத்ம பலம் பெறுவீங்க.மாணவர்கள் கடுமையாக முயன்று வெற்றி காண்பீங்க. நண்பர்களுடன் சிறுசிறு சலசலப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது.அவசரமாக முடிக்க வேண்டிய விஷயங்களை நன்கு முடித்து வெற்றியடைவீங்க.திட்டமிட்ட வேலைகளை எப்பாடுபட்டாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீா்கள். பிரபலமான ஒருவர் அறிமுகமாவார். மாணவர்களுக்கு வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்களின் மேலதிகாரி உங்களை மதிப்பார். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பெண்களின் முயற்சிகள் நிறைவேறும்.

சிம்மம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று நல்ல முன்னேற்றத்தைக் காண்பீங்க. தற்காலிக வாய்ப்புகள் நிரந்தரமாகிவிடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரும் அனுசரித்து நடந்துகொள்வாங்க.பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் சேர்வாங்க.சிலர் விலையுயர்ந்த பொருள்களை விற்று புதிய நிலம், வீடு வாங்க வாய்ப்புண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும்.கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத பலன் இந்த காலத்தில் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீங்க. நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். திருமணமாகாமல் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு  திருமணப் பிராப்தம் கூடி வரும். பெண்களுக்குக் குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பணியாளர்களுக்கு உடன் பணிபுரியும் நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். பண விஷயத்தில் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரிகளுக்கு, அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

வருமானம் அதிகரிக்கும். எது பற்றியெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்லபடியாக நடந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். பொதுவாகவே உங்கள் மனசில் பயமும் குழப்பமும் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை என்றால் கிலோவில் அளக்கணுமா லிட்டரிலா என்பீங்க. உங்களுக்கு அபாரத் திறமை உள்ளது என்று யாராச்சும் எப்பவும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். இப்ப கேட்கவே வேண்டாம். உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கிட்டு “நீ அபாரத் திறமைசாலி. உன்னால் வெல்ல முடியும்” என்று சொல்லிக்கிட்டே இருங்க. சகோதர சகோதரிகளுடன் பிரச்சினை வராமல் அனுசரிச்சுப் போங்க. ப்ளீஸ். பெண்கள் தன்னம்பிக்கையுடன் பொது நல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டுப்பெறுவீங்க. உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்த எண்ணம் நிறைவேறும். வேற்று மதத்தவர்களால் நன்மை ஏற்படும். வியாபாரிகளும் பணியாளர்களும் வழக்கத்துக்கு அதிகமாக உழைப்பீங்க.

துலாம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

உஷ்ணம் சம்பந்தப் பட்ட உடல் உபாதைகள் வராதபடி கவனமாப் பார்த்துக்குங்க. கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்க உதவி  அல்லது உத்யோகம் கிடைக்கும். அடி  வயிற்று உபாதைகள் இருக்கும். உடனே சிகிச்சை எடுங்கள். எளிமையான மருந்து மாத்திரையுடன் முடிந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் கடுமையாகப் பேசவோ சாபம் கீபம் விடவோ வேணாங்க.  உங்களுக்கு இருக்கும் இளகிய மனசை அப்டியே மாற்றாம வெச்சுக்குங்க. அவங்க சொன்னாங்க  இவங்க சொன்னாங்கன்னு உங்க அடிப்படை குணத்தை மாத்திக்காதீங்க. பெரிய அளவில் பயமுறுத்திய உடல் கோளாறுகளும் உபாதைகளும் எளிமையாய் சரியாகி நிம்மதி வழங்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீங்க. கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டி வரும். உத்தியோகம் பற்றிச் சில முக்கிய முடிவுகள் எடுக்க குடும்பத்தினர் உதவுவர். கலைஞர்களுக்குப் புதிய சிந்தனைகள் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

விருச்சிகம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

மந்த கதியில் போயிக்கிட்டிருந்த வாழ்க்கை துரித கதியில் போகும். காதலில் ஈடுபாடு வரும். அல்லது உங்க காதல், திருமணத்தில் முடியும். நண்பர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகிடைக்கும் அல்லது அரசாங்க உத்யோகமே கிடைக்கும். இப்போதைக்கு உத்யோகம் மாறும் நினைப்பெல்லாம் வேணாங்க. சற்றே பொறுமையா இருங்க. அப்படி மிகவும் தவிர்க்க முடியாத காரணம் என்றிருந்தால் உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பியுங்கள். உங்கள் கவர்ச்சி அம்சமும், புகழும் அதிகரிக்கும். மாணவர்கள் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. பெண்கள் புதிய நட்பால் உற்சாகமடைவீங்க. வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். அதிரடி மாற்றம் ஏற்பட நல்லவர்கள் உதவுவர். வியாபாரிகளுக்கு, மனதில் மாறுபட்ட யோசனைகள் உதிக்கும். கலைஞர்கள் அதிகமாக உழைப்பீங்க.பெண்களுக்குப் பெற்றோரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்குச் சற்று அதிகமாகப் பாடுபடுவீங்க.

தனுசு

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

நன்மைகள் சற்று ஆமைவேகத்தில் வரும். செலவுகள் மடமடவென்று ஓடும். எதுக்கும் பயப்படாதீங்க. உங்க ஜோதிடரைக் கேட்டு உரிய பரிகாரங்கள் செய்ங்க. தானே சரியாகும். வரவர உங்களுக்குப் பொறுமை குறைஞ்சுக்கிட்டே வருது. குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பாஸ்போர்ட், விசா கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் எதிர்பார்த்தமாதிரியே அவங்களுக்குக் குடியுரிமையும் நல்ல உத்யோகமும் கிடைக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீர் அதிருஷ்டம் உள்ளே நுழைஞ்சு உங்களை சந்தோஷத்துல திக்குமுக்காடச் செய்யும். புதியவரின் நட்பால் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். ஆரோக்யம் பற்றிய பயம் வேண்டாம். பணியாளர்கள் அதிரடி மாற்றம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.

சந்திராஷ்டமம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை

மகரம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

வயிறு சம்பந்தமான சின்னச்சின்ன உபாதைகளைச் சமாளிச்சுடுவீங்க. அறுவை சிகிச்சையும் இருக்காது ஒண்ணும் இருக்காது. ஏன் இப்படி பயப்படறீங்க? அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, ஆனால் அதில் சில தடைகளும் தாமதங்களும் இருக்கும். குரு சன்னிதிகளுக்குச் செல்வீங்க.  கோயில்களுக்குச் செல்ல நீங்கள் போட்டிருந்த திட்டங்கள் பல தடைகளுக்குப் பிறகு இப்போது நல்ல முறையில் நிறைவேற ஆரம்பிக்கும். குழந்தைகள் பெயரும், புகழும் பெற்று ஜமாய்க்க ஆரம்பிப்பாங்க. திடீர் லாபங்களும், எதிர்பாராத வருமானமும் கிடைக்கும். பலகாலம் வராத தொகைகள் திடீரென்று வந்து சேரும். நீங்களும் பல காலம் கிடப்பில் போட்டிருந்த கடமைகளைச் செய்து முடிப்பீங்க. அனுபவசாலிகளின் ஆலோசனையுடன், சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. வியாபாரிகளுக்குப் பொருட்கள் வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பணியாளர்களுக்கு உயர் அதிகாரியுடன் எதிர்பாராத சந்திப்பு உண்டு.. கலைஞர்களுக்கு சாமர்த்தியம் அதிகரிக்கும் நாள்.

சந்திராஷ்டமம் ஜனவரி 2 முதல் ஜனவரி 4 வரை

கும்பம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

வெளியூரில் மகன்/ மகள் மூலம் மகிழ்ச்சிகரமானசெய்தி வந்து சேரும்.  தொழில்  வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் பார்ப்பீங்க.  உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக உள்ள தடைகள் விலகி நல்ல வாய்ப்பு  கிடைக்கும். பயணங்களால் நன்மை கிட்டும்.   வருமானம் பெருகும். உறவினர்களால் உதவி கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு இருந்து வந்த சிக்கல்கள் குறையும்.  கலைஞர்கள் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீங்க. தைரியம் கூடும் நாள்.உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீங்க. பெண்களுக்குப் பொருட்களின் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீங்க. வியாபாரிகள் புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள்.  கலைஞர்களின் முயற்சிகள் கைகூடும். குடும்ப விவகாரங்களைத் தீர்மானிப்பதில் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பாங்க. உத்தியோகத்தில் உங்கள் திறமையை நிரூபிப்பீங்க. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவாங்க.. மாணவர்கள் அலட்சியம் காரணமாகச் சிறு ஏமாற்றங்களைச் சந்திப்பீங்க.  கடன் வாங்குமுன் யோசியுங்கள்.

சந்திராஷ்டமம் ஜனவரி 4 முதல் ஜனவரி 7 வரை

மீனம்

வாசகர்களுக்கு 2021ம் ஆண்டு அமோகமாக அமைய இனிய வாழ்த்துகள்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்குச் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்க வேண்டி வரும். மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளுவீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுவீங்க. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனத்தாபங்கள் நீங்கும். பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். சுபநிகழ்ச்சிகள் பற்றிய விருப்பங்கள் கைகூடும்.மாணவர்களின் கவலை தீரும். கலைஞர்கள் முயற்சியைக் கூட்டுங்கள். குடும்பத்தினரை அனுசரித்து போவீங்க. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் பெண்கள் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.