வார ராசிபலன் 1-12-17 முதல் 7-12-17 வரை – வேதா கோபாலன்

மேஷம்

செய்யும் தொழிலில் எஸ்கலேட்டர் மாதிரி உயர்ந்து உயர் பதவியை எட்டிப்பிடிப்பீங்க. எதிர்பார்ககலைதானே? மம்மிக்கு உடல் நலம் குறைஞ்சாலும் சிங்கக்குட்டி மாதிரி நீங்க இருக்கும்போது அவங்களுக்கு என்ன குறை? உங்களுக்கு மதிப்பு உயரும். உங்களை குருவாக.. ஆசானாக மதிக்கப் பலர் காத்திருப்பாங்க. குடும்பத்தில் லேடீஸால் சின்ன பிரச்சினைகள் வரும். அதனால் என்ன? கண்டுக்காம போங்க. தன்னால சரியாகும். அலுவலகத்திலும் வீட்டிலும் எந்த விஷயத்திலும் தலையிடாம போயிக்கிட்டே இருங்க.

ரிஷபம்

அரசாங்கத்தின் நன்மைக்காகக் காத்திருக்கீங்களா? குட். நிறைவேறியாச்சுன்னு தைரியமா, நிம்மதியா இருக்கலாம். உதாரணத்துக்கு பாஸ்     போர்ட்.. விஸா.. பிராவிடன்ட் ஃபண்ட்.. பென்ஷன் போன்றவை மிகச் சுலபமாக நிறைவேறும். இத்தனை காலம் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் துரிதமான செலவுகள் சற்றும் எதிர்பாராமல் மின்னல் வேகத்தில் வந்து போகும். இட்ஸ் ஓகே. பயந்து நடுங்காதீங்க.  மன நிறைவோடு செய்யக்கூடிய செலவாய் தான் இருக்கும். ஏற்கனவே உள்ள கவர்ச்சி அம்சம் மேலும் அதிகமாகும். எதிர்பாலினத்தினர் உங்களைப் பாராட்டுவாங்க.

மிதுனம்

உங்களுக்கு  இத்தனை காலம் வெறுத்திருந்த வாழ்க்கை பிடிக்கும். கையில் கார்ட்கள் இருக்கிறதே என்று கடைகடையாய்த் தேய்த்து சந்தோஷம் வாங்குவீங்க. வேண்டிய விஷயத்துக்கே சற்று அதிகமாகக் கவலைப்படறீங்க. வேண்டாததற்கு மிக அதிகமாக! இந்த நாளில் இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ தேவலைதானே? ….பெரிசாய் ஏதோ வந்துடுச்சு போல இருக்குன்னு ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரைக்கும் கற்பனைலயே போயிடாதீங்க.. அதென்ன அப்படி ஒரு தன்னம்பிக்கையின்மை?    உங்களை நீங்களே தைரியப்படுத்தித் தன்னம்பிக்கை டானிக் ஊட்டிக்குங்க பார்ப்போம்.

கடகம்

கவர்ச்சி அம்சம் உள்ள உங்களின் குடும்ப வாழ்க்கை அமோகமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல காரணத்துக்காகப் பிரிவு ஏற்படலாம். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும். வாழ்க்கை உங்களது பிரபலக்கோபத்தினால் சற்றே பிரச்சினைகளின் வாசல் கதவைத் தட்டிவிட்டு வருவீங்க. வாழ்க்கை ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருந்த நிலைமை மாறி இப்போது பொன்னியின் செல்வனில் வரும் குதிரையின் வேகத்தில் சூடுபிடிக்கும்.

சிம்மம்

பிரச்சினை எதுவானால்தான் என்ன? இந்த வாரக்கடைசிக்குள்ளயே பட்டுப் போல் சரியாகி கிண்ணுன்னு எழுந்து உட்கார்ந்துடுவீங்க. திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா? வாழ்த்துக்கள். எப்பப்பார்த்தாலும் எதுக்கு டென்ஷன்.. சோகம்? சும்மா ஈஸியா இருங்க? சிரிங்க. நல்ல செய்தி இதோ வாசனைத் தேடி வந்துகிட்டே இருக்கு.  அதென்ன அவ்ளோ அகல வாயச்சவடால்?  கொஞ்சம் உங்க வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? வேறு வேறு வேலை மாறுவதைப் பொழுது போக்கு மாதிரியோ விளையாட்டுப் போலவே செய்யாதீங்க. இப்போ வேறு வேலை மாற வேண்டுமா என்று யோசிச்சுக்குங்க. 

கன்னி

வேண்டாத விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தறீங்களே.. முக்கியமான விஷயங்க ளுக்கு அதிக நேரம் ஒதுக்குங்க. மண்டையைக் குடைஞ்சுக்கிட்டிருந்ததே….ஒரு வழியாய் எல்லா சஸ்பென்சும் தீர்ந்ததா? சில மனிதர்களைப் புரிஞ்சுக்குவீங்க. நல்லவங்க இத்தனை காலம் கெட்டவங்களாவும் கெட்டவங்க இவ்ளோ நாள் நல்லவங்களாவும் தெரிஞ்சாங்க. அது அவங்க தப்பில்லைங்க. நீங்க அவங்களைச் சரியாப்புரிஞ்சுக்காம இருந்தீங்க. தட்ஸ் ஆல். அலுவலக விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை

துலாம்

புதிய ஒப்பந்தங்கள் கண்ணாமூச்சி காட்டினாலும் கட்டாயம் கனிந்து மடியில் விழும் என்று நம்பிக் காத்திருக்கலாம். .. பெருமூச்சு விடுங்க…. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினை கள் படிப்படியாகத்தீரும். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க கையில்தான் இருக்கு. உங்க குழந்தைகள் பற்றி நீங்க சந்தோஷப்படும்படியான செய்தி உண்டு. கொஞ்ச நாளைக்கு வாயை செலோர் டேப் போட்டு ஒட்டிக்குங்க. கணவரோடு /மனைவியோட உளுஉளுவாக்கட்டிக்குக்கூட சண்டை வேண்டாம்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 வரை

விருச்சிகம்

மம்மி பற்றி நீங்கள் பட்ட கவலைகள் கற்பூரம் மாதிரிக் காணாமல் போயிருக்குமே! எனினும் சற்று கேர்ஃபுல்லாக மம்மி பற்றி அதிகப்படி கவனம் செலுத்துங்க. பல காலம் பார்க்காத உறவினர்களை சந்திக்க சந்தர்பம் அமையும். கணவரின்/ மனைவியின் உடல் நலனை கவனிங்க. . உங்களைப் பரம எதிரியாக நினைத்தவர் நல்ல முறையில் வேறு வேலைக்குப் போய்விடுவதால் நிம்மதிப் பெருமூச்சு என்றால் என்ன என்று பல காலம் கழித்து இப்பதான் உணர்வீங்க. உங்களுடைய இனிய பேச்சுக்கு ரசிகர் மன்றமே உள்ளது. தக்க வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை

 தனுசு

போற்றுவார் போற்றட்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் தூற்றட்டும். இப்ப உங்க கடமைக்ளைச் சரியாத்தான் செய்துக்கிட்டிருக்கீங்க. மாற்ற வேண்டாம். யாரையும் வெறுக்க வேண்டாம். காரணம் உங்களுக்குக்கூடிய சீக்கிரத்தில்  விளங்கும். பொன்னும் பொருளும் நிறைய சேரும். அவ்வப்போது பேச்சையும் மனசையும் வைரஸ் ஸ்கேன் செய்துக்குங்க. எல்லோரிடமும் கட்டாயமாக அனுசரித்துப் போயே ஆக வேண்டும். விஷப் பூச்சிகளிடம் விளையாடிக் கொஞ்சும்படியான இடங்களுக்கு செல்லாமல் விலகியே இருங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை

மகரம்

தேர்வுக்குப் படிக்கறவங்கள் ஒரு பத்து பர்சன்ட் முயற்சியை அதிகமாய்த் தாளிக்கணும், கவனத்தை அதிகரிக்கணும். பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு.  நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குறிப்பாக குடும்பத்தில் சந்தோஷம் டான்ஸ் ஆடும். முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது.  ஆனாலும் ஒரேயடியாய் ரிலாக்ஸ் ஆயிட வேண்டாம். அதே பொறுப்புணர்வுடன் செயல்படுங்க. அதற்கேற்ற சூப்பர் பலன் உண்டுங்க. கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்க. கங்கிராட்ஸ்.

கும்பம்

வொர்ரி..கட்லெட் சமூசாவுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் குடுத்துச் சாப்பிடுங்க. அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பாங்க. அத்தனையும் நீங்க இத்தனை காலம் உழைச்ச உழைப்பின் பலன்தான். அட.. அதெப்பிடிக் கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! வாழ்த்துகள். பலே . பலே. திடீர்னு முகவரி மாறலாம். மனதளவில் தயாரா இருங்க. எனி  வே.. சந்தோஷ மாற்றம்தான்.

மீனம்

கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும். ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சின்னதாய் ஜுரம் வந்தா பெரிசா கவலை வேணாம். பேச்சினால் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும். குறிப்பாகக் குடும்பத்தில் குதூகலம் உத்தரவாதம்.  குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்த் வெப்பீங்க. . சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும்.