வார ராசிபலன்: 01-05-2020 முதல் 07-05-2020  வரை வேதாகோபாலன்

மேஷம்

சந்தோஷம் ஜாஸ்தியாகுமுங்க. புதிய பொருட்கள் வாங்குவீங்க. வெளிநாட்டு தொடர்புகள், பயணங்கள் மகிழ்ச்சி தரும். உத்யோகம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத இன்கம் உண்டுங்க. பண வரவு திருப்தி தரும். புதிய சேமிப்பில் ஈடுபடுவீங்க. கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகுமுங்க. வாழ்க்கை துணையின் சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் குடுங்களேன். ப்ளீஸ். குழந்தைகளின் சந்தோஷம் கூடும். உறவினர்கள் நெருங்கிய ரிலேடிவ்ஸ் தொடர்பில் இருப்பாங்க.  மாணவர்கள் பொறுப்புணர்ந்து படிப்பார்கள். தெய்வ, பித்ரு கடமைகளை சரியாக செய்து வருவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பர்கள் உதவுவாங்க. புதிய சொத்துக்கள் வாங்க உகந்த நேரம். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துடுங்க..

ரிஷபம்

மனக்குழப்பங்கள் தீரும். புதிய உத்வேகம் இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்யோகத் தில் சக ஊழியர்களால் மனசஞ்சலம் இருக்கும். தேவையற்ற வாக்குறுதிகள் கொடுக்காதீங்களேன். குடும்பத்தில் சுப விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை முன்பைவிட பெட்டரா இருக்கும். குழந்தைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படுமுங்க. நொ டென்ஷன். சரியாயிடும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் ஏற்படுமுங்க.  திடீர் பிரயாணங்களும் அதனால் ஆதாயமும் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் விலகும். புதிய வீடு கட்ட, பராமரிக்க திட்டங்கள் தீட்டுவீங்க. மனைவி/ கணவர் வழியில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நிலை லைட்டா, பாதிப்படையலாம். கொடுக்கல், வாங்கலில் கேர்ஃபுல்லா இருங்க.

மிதுனம்

குழந்தைகள் வழியில் சந்தோஷம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். பண வரவு நன்றாக இருக்கும். தூர தேசத்து செய்திகள் மகிழ்ச்சி கொடுக்கும். எதிர்பாராத பரிசுப் பொருட்கள் சேரும். கணவன், மனைவி உறவு ஹாப்பியா இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீங்க. குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. மாணவர்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்வ தில் ஆர்வம் காட்டுவர். பிரயாணங்களால் செலவுகள் கூடும். தோல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றக்கூடும். உறவினர்கள் வழியில் நன்மையான செய்திகள் வரும். நிலம் , விவசாயம் சார்ந்த தொழில்கள் அபிவிருத்தி அடையும். தடைபட்டிருந்த வழிபாடுகள் நல்லபடியாக முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டுங்க. புதிய தொழில்கள் தொடங்க நல்ல நேரம்

கடகம்

நிம்மதியான கால கட்டம். வேலை பளு இருந்தாலும் மனநிறைவு இருக்கும். தொழில், வியாபாரம், உத்யோ கத்தில் முன்னேற்றம் காணப்படும். தனவரவு திருப்தியளிக்கும். புதிய முதலீடுகள் பற்றி திட்டமிடுவீங்க. கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் அவசியம். நோய்தொற்று, பித்தம் கபம் ஆகியவற்றால் உடல்நிலை பாதிப்படைய கூடும். பெற்றோர்கள் சந்தோஷமாக இருப்பர். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படும். உடல் நலனில் கவனம் தேவை. ஓய்வு மன அழுத்தத்தை குறைக்கும். வாகன செலவுகள் உண்டுங்க. உத்யோகஸ்தர்களுக்கு சகபணியாளர்களால் நன்மைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், உறவினர்களிடம் வீண் சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் கவனம் தேவை. வீடு, நிலம் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்

வெற்றிகள் வீடு தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நல்ல பெயர் வாங்குவீங்க. உத்யோகம், வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியடைவீங்க. மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்க்கவும். நண்பர்கள், உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டுங்க. பேச்சில் எச்சரிக்கை தேவை. உடல்நிலையில் இரத்தம், சிறுநீரக உபாதைகள் வந்தால் அலட்சியம் வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. கொடுக்கல், வாங்கலை தவிர்க்கவும். விருந்து, விசேஷங்கள், உறவினர் சந்திப்பு, பிரயாணங்கள் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளால் சந்தோஷம் உண்டுங்க. வாகனங்கள் பராமரிப்பு செலவு கூடும். வீட்டில் சுபகாரியம் பற்றிய பேச்சுகள் நடைபெறும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படுமுங்க.

கன்னி

தொழில், வியாபாரத்தில் புதிய லாபங்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உற்சாகம் தரும். உத்யோகத்தில் இருந்த தேக்க நிலை மாறும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை அல்லது பதவி உயர்வு வாய்ப்பு இருக்கும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பர். எதிர்பாராத தன வரவு இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். பழைய நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டுங்க. நரம்பு சம்பந்தமான உபாதைகள், பயணங்கள் உடல்நிலையை பாதிக்கும். கொடுக்கல்-வாங்கல் சுமாராக இருக்கும். வாகனங்களை இயக்கும் பொழுது நிதானம் தேவை.

துலாம்

பயணங்கள் அனுகூலம் தரும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீங்க. போட்டியாளர் களை சமாளிக்க நேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. குழந்தைகளால் மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் இருக்கும். மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், விரும்பிய படிப்புகளில் சேர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவுவர். பெற்றோரின் உடல் நலன் சீராக இருக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் உடல்நிலையை பாதிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். பிரயாணத்தில் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். சிறிய அளவிலான புதிய முதலீடுகள் செய்யலாம்.

விருச்சிகம்

தொழில், உத்யோகம், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். தன வரவு திருப்தியளிக்கும். குடும்ப கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள்  நடக்கும். குழந்தைகள் வழியில் சந்தோஷ மான செய்திகள் வரும். கணவன் மனைவியிடையே சுமூக நிலை காணப்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விருந்து விசேஷங்களுக்கு செல்வீங்க. சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவீங்க. குடல், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளால் உடல் நிலை பாதிப்படைய லாம். பிரயாணங்களை தவிர்க்கவும். வாகன மாற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் குறைந்த லாபம் தரும். .அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். கடன் சுமை தீரும். அயல் நாட்டு உதவி கிடைக்கும்.

தனுசு

மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளின் போது  மௌனம் காப்பது நல்லது. திடீர் ஆன்மீக பயணம் இருக்கும். தன வரவு திருப்தி தரும். உத்யோகம், வியாபாரம், தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வீங்க. கணவன், மனைவி ஒற்றுமை கூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி திறன் மேம்படும். நண்பர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவீங்க. உறவினர்கள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும்.  நரம்பு, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் உடல்நிலை பாதிப்படையும். வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுமுங்க. தனவரவு நன்றாக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். வீடு கட்ட, புனரமைக்க முற்படுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். புத்திர பாக்யம் வேண்டியவர்களின் கனவு நனவாகும். கணவன் மனைவியிடையே  ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீங்க. குழந்தைகள் வழியில் சுப செலவுகள் உண்டுங்க. வீட்டில் சுப காரியங்களுக்கு திட்டமிடுவீங்க. மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுமுங்க. உஷ்ணம், எலும்பு தேய்மானத்தால் உடல்நிலை பாதிக்கப்படலாம். உத்யோகம், வணிகம், வியாபாரம்  சிறக்கும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். உறவினர்கள், நண்பர்களால் மனஸ்தாபம் ஏற்படலாம். இயந்திரங்கள், வாகனம் இயக்கும் போது நிதானம் அவசியம்.

சந்திராஷ்டமம்:  1.5.2020 முதல் 3.5.2020 வரை

கும்பம்

விடாமுயற்சியால் வெற்றிகள் கிடைக்கும். தொழில், உத்யோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் தாமதமாகும். குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். தன வரவு திருப்தி தரும். பழையகடன்கள் அடைபடும். தம்பதியரிடையே அன்யோன்யம் இருக்கும். பெற்றோரின் உடல் நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர். உடலில் நடுக்கம், இரத்தம் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அவசியம். வாகன செலவுகள் ஏற்படுமுங்க. உறவினர்கள் நண்பர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீங்க. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பிரயாணங்களால் செலவுகள் உண்டுங்க. நிலம் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற காலம்.

சந்திராஷ்டமம்:  3.5.2020 முதல் 5.5.2020 வரை

மீனம்

வீட்டில் சுப செலவுகள் ஏற்படுமுங்க. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகன சேர்க்கை ஏற்படுமுங்க. தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவீங்க. தன வரவு திருப்தி தரும். தம்பதியரிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். பெற்றோரின் உடல் நிலை திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் கவன சிதறல் ஏற்படுமுங்க. வயிறு, நீர் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். உத்யோகம், வியாபாரம் முன்னேற்றம் தரும். புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும். நண்பர்களிடம் விட்டுகொடுத்து போவது நல்லது. உறவினர்கள், விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டுங்க. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் ஆதாயம் தரும்.

சந்திராஷ்டமம்:  5.5.2020 முதல் 8.5.2020 வரை

கார்ட்டூன் கேலரி