வார ராசிபலன்: 10/07/2020 முதல் 16/07/2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமியில் வளர்ச்சி காண்பாங்க. ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ் ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பீங்க. பெண்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஆசிரியர்கள் உங்களைப் பாராட்டுவாங்க. பெண்களால் நலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பிறரிடம் அன்புடன் பழகுவீங்க. அதனால் அவர்களது ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

ரிஷபம்

தோற்றப்பொலிவு கூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அறிவாற்றல் பளிச்சிடும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வாரப் பின்பகுதியில் மன அமைதி குறையும். உடல் நலம் லேசாக பாதிக்கும்.. பண வரவு சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் குடுக்காதீங்கப்பா. கெட்டவங்களின் தொடர்பு கூடாது. உடன்பிறந்தவங்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவாங்க. வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள்கூடிவரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள், தரகர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பாங்க. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும். பக்குவமாய்ச் சமாளிக்கணுமுங்க.

மிதுனம்

பண வரவு ஓரளவு சிறப்பாக அமையும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சொத்துப் பிரச்னை ஏற்படும். சிலர் பழைய சொத்துக்களை விற்கவேண்டிய நிலைக்கு ஆட்பட நேரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆடை, அணிமணிகளால் லாபம் கிடைக்கும். போக்குவரத்து இனங்களால் ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு மூலம் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.  இளைஞர்கள் முன்னேற்றம் காண அரும்பாடுபட வேண்டிவரும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்த்து, படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

கடகம்

உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். திறமைக்குரிய பயனைப் பெற்று வருவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். குரு பலம் இல்லாததால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பண வரவு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். என்றாலும் குரு பலம் இல்லாததால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பாங்க

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். எதிர்ப்புக்கள் இருக்கும். எக்காரி யத்திலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது. முன்னேற்றமான போக்கு தென்படும். ஆசிரியர்களிடம் பணிவு தேவை. கிரகங்களின் சஞ்சாரம் கடந்த சில வாரங்களைவிடச் சற்று அனுகூலமாக உள்ளது. செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். முக்கியப் பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். அரசு உதவி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பல வழிகளில் பணம் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். சேமிப்பு வளரும்.

சந்திராஷ்டமம்:  ஜூலை 10 முதல்  ஜூலை 13வரை

கன்னி

கிரக ஆரம்பம், கிரகப் பிரவேசம் செய்ய வாய்ப்பு உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் அதிக லாபமும் கிடைக்கும்..  வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். பதவி உயர்வு, நல்ல இடத்துக்கு மாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். நலம் உண்டாகும். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். தோற்றப் பொலிவு கூடும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். பண நடமாட்டம் ஓரளவு சீராக இருந்துவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்பு குறையும்.

சந்திராஷ்டமம்:  ஜூலை 13 முதல்  ஜூலை 15வரை

துலாம்

சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் பராமரித்துக் கொள்வீர்கள்.கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடம்,  போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணம் சார்ந்த இனங்களில் விழிப்புத் தேவை. மறைந்த, தொலைந்த பொருள் இப்போது கிடைக்கும். குடும்ப நலம் சீராகும்.படிப்பில் அளவோடு வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அறிவாற்றல் பளிச்சிடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீங்க. பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம்:  ஜூலை 15 முதல்  ஜூலை 18வரை

விருச்சிகம்

அறிவாற்றல் பளிச்சிடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஆர்வம் கூடும். : பண வரவு குறைந்து செலவுகள் கூடும். என்றாலும் அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே அமையும்..சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். பழைய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்ல வாய்ப்புக்கள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் அதிக லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் சிறிய அளவிலான சங்கடங்கள் சூழும்.

தனுசு

எதிர்ப்புக்கள் அதிகமாகும். பேச்சில் நிதானம் தேவை. பணப் பிரச்னை ஏற்படும்.மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். உங்கள் புத்திசாலித்தன்ம் வெளிப்படும். பிரச்னைகள் குறையும். சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் புகழ் பெறுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும். குடும்ப நலம் சீராக இருக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.  கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பெண்களால் சங்கடம் ஏற்படும்.  சகோதர நலம் பாதிக்கும்.

மகரம்

அலுவலகப்பணியாளர்களது நிலை உயரும். ஆன்மிகவாதிகளது மதிப்பு உயரும். பூர்விகத் தொழில் லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரம், நெருப்பு, வெடிப்பொருள், எரிபொருள் மின்சாதனங்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போதும் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. மன அமைதி குறையும். எதிர்ப்புக்கள் வலுக்கும். முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது அவசியம் ஆகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். மன உற்சாகம் பெருகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். வார முன்பகுதி சிறப்பானது. பின்பகுதியில் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.

கும்பம்

கடுமையாகப் பாடுபட்டே பயன் பெற வேண்டிவரும். வார முன்பகுதியில் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். ஆன்மிகவாதிகள், அறப்பணியாலர்கள் ஆகியோர் வரவேற்பு கூடப் பெறுவாங்க. தொழில் நுட்பத்திறமையால் செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பெண்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமான எண்ணம் ஈடேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

மனத்தில் துணிவு கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தருமப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் விலகுவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.  பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் அந்நியரால் கலகம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். நினைத்த நிகழ்ச்சிகள் நல்லபடியாக முடியும். மனதுக்கு இனியவங்க உங்களைப் புரிஞ்சுக்குவாங்க.