வார ராசிபலன்: 11.09.2020  முதல் 17.09.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

நினைத்ததை முடிக்கும் வாரங்க.  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பாங்க. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து பிரச்சினையில் ஒன்று தீரும். பிசினஸில்லாபம் அதிகரிக்கும். ஆஃபீசில்அதிகாரிகளுக்கு நெருக்கமாவீங்க. மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தருமுங்க. எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீங்க. நண்பர்கள் ஹெல்ப் கிடைச்சுடும். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராக சான்ஸ் கொஞ்சம் இருக்குங்க. உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீங்க. அல்லது கோவிலுக்குப் போவீங்க. வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீங்க.  புதிய தகவல்களால் புதிய உற்சாக மும் பிறக்கும். ஹோப் யூ ஆர் ஹாப்பி.                                            

ரிஷபம்

திடீர்த் திருப்பங்கள்  நிறைந்த வாரங்க. பல வகைகளிலும் ஹாப்பியான வாரங்க. பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். ஃபேமிலியில்  சில குழப்பங்கள் இருந்துக் கொண்டே இருக்கும். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் சகோதர, சகோதரிகளால் நன்மை எதுவும் கிடைக்காது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீங்க. பண வரவுக்கு குறைவு இராது. கடந்த இரண்டு சில தினங்களாக இருந்துக்கிட்டிருந்த  அலைச்சல், கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். ஃபேமிலியில்  நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீங்க. பிசினஸில்ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீங்க. ஆஃபீசில் புது அதிகாரி உங்களை மதிப்பார். குட் குட்.

மிதுனம்

மகிழ்ச்சி நிறைந்த வாரங்க. இந்த வாரங்க இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவும் உண்டு. ஒய்ஃப் மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைச்சுடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீங்க.  வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீங்க. சில குறுக்கீடுகளையும் சந்திப்பீங்க. மனம் தளராமல் அவற்றை கையாண்டு வெற்றி கொள்ளத் தயங்காதீர்கள்.  டோன்ட் ஒர்ரி. யூ வில்.

கடகம்

பேச்சில் இங்கிதம் தேவைப்படும் வாரங்க. கலைத்துறையினர் பெயரும் புகழும் பெறுவதற்கான முயற்சியில் தீவீரமாக ஈடுபடுவீங்க. சில வாய்ப்புகள் உங்களை வந்தடையும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் ஒய்ஃப்க்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. பிசினஸில்வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். ஆஃபீசில்அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  பெண்மணிகள் ஹஸ்பெண்டின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீங்க. மாணவ மணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். விளையாட்டுக்களைத் தவிர்த்திடுங்கள். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். பிசினஸில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். வெரி குட்.

சிம்மம்

விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரங்க. ஆஃபீசில் சக  ஊழியர்களிடம் விவாதம் வேணாமே.  எதையும் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. பணியில் உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். பொறாமை   எழலாம். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். குழந்தைங்க பற்றி உங்களுக்கிருந்த பயம் தீரும். மற்றவர்களுக்கு நன்மை செய்து சந்தோஷப்படுவீங்க. பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீங்க. மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தமுடியாது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம்.  ப்ளீஸ்.

கன்னி

மதிப்புக் கூடும் வாரங்க.  பணவசதி திருப்திகரமாக இருந்தாலும், பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் குறைக்கும். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளணுங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பிசினஸில்புது இடத்திற்கு கடையை மாற்றுவீங்க. ஆஃபீசில்சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீங்க. வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். ரியல் பெனிஃபிட்.

துலாம்

சாதித்துக் காட்டும் வாரங்க. ஹாப்பியானவாரங்க.சிலருக்கு தொழில் திறன் அதிகரித்து, அதன் காரணமாக, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப்பணி புரிபவர்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீங்க. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீங்க. நெருங்கியவர்களுக்காக சிலர்  உதவியை நாடுவீங்க. பிசினஸில்சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீங்க. அலுவலகத்தில் மரியாதை கூடும். தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. ஷ்யூர்.

விருச்சிகம்

புதிய அத்தியாயம் துவங்கும் வாரங்க. பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். பிசினஸில்புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீங்க. உடன் பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. எந்தக் காரியத்தையும் ஆழமாக சிந்தித்து செயல்படுத்தவும். அதே நேரம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த விவகாரங்கள் சாதகமாக முடியும். உங்களுக்குச் சேர வேண்டிய பணம் எவ்வகையிலாவது  வந்து சேரும். கடந்த இரண்டு வாரங்களாகக் ஹஸ்பென்ட்-ஒய்ஃப்க்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. ஹெல்த் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில், ஆஃபீசில் திருப்தி உண்டாகும். ரியல் ஸாடிஸ் பேக்ஷன்.  

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 13 வரை

தனுசு

குதூகலமான வாரங்க. நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து ஹாப்பியான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். இடைவிடாத வேலைபளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். அசைவ விரும்பிகளுக்கு டைஜஷன் தொல்லைகள் எழலாம். சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை தீரும். எனவே  துன்பம் வரும் போது துவழாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேறும் ஆர்ட் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குங்க. சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீங்க. ஃபேமிலியில்  சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. ஆஃபீசில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நெவர் டூ இட்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை

மகரம்

இனிய செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரங்க. பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஜாப் கிடைச் சுடும். குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீங்க. சிலருக்கு ஒய்ஃப், மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசு ஆதரவு, அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும்  அதிகாரம் மிக்க பதவி  உயர்வு ஏற்படலாம். அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படலாம். சோம்பல் அகற்றி  சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது. உங்களது அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பு, பிறரால் கவனிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படலாம்.  பிசினஸில் எதிர்பார்த்த தைவிட லாபம் கூடுதலாகக் கிடைச்சுடும். பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். ஹப்பாடா. ரிலீஃப்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17 வரை

கும்பம்

அறிவால் சாதிக்கும் வாரங்க. கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீங்க. சகோதர வகையில் பயன் அடைவீங்க. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஒய்ஃப் வழியில் ஆதரவு பெருகும். பிசினஸில்பழைய பாக்கிகள் வசூலாகும். ஆஃபீசில்உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இந்த வாரங்க வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் மகிழ்ச்சி நிலவும். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன் நன்கு படித்தபின் கையொப்பம் இடவும். புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கிக் கடனுதவிகள் சுலபமாகக் கிடைச்சுடும். லேடீஸின் அறிவுத்திறன் கூடும்.  போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும். மனத்திருப்தி அளிக்கும் நல்ல செய்தி உண்டுங்க. ரியல் குட் நியூஸ்.

மீனம்

நினைத்ததைச் சாதிக்கும் வாரங்க. அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைச்சுடும். சிலருக்குத் தேவையற்ற, எதிர்பாராத செலவுகளால் பணமுடை ஏற்படலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். ஹஸ்பெண்டின் அன்பும் சப்போர்ட்டும் மனதுக்கு உற்சாகம் தருமுங்க. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிசினஸில்பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தருமுங்க. ஆஃபீசில்அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீங்க. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும், இருப்பினும் திட்டமிட்ட வேலைகளில் முன் கூட்டியே செயல்பட்டால்தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீங்க. சூப்பர் ப்ராஃபிட்.

You may have missed