வார ராசிபலன்: 11.10.2019 முதல் 17.10.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்

தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எளிதில் தூண்டிவிடப்படுபவர்கள் நீங்கள் ஆனால் அதனால் எந்த சாதகமும் ஏற்படப்போவதில்லை ஆனால் வருடம் முழுக்க எச்சரிக்கை அவசியம். பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குல தெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேண்டாம். இந்தத் தடை கூடிய விரைவில் நீங்கும். நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு வருவீங்க. அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது  ஆமையின் வேகத்தில் தான் எல்லாமே நடக்கும். பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். உடல் நலன் பல மாதங்களுக்குப் பிறகு  இந்த வாரம் மேம்படும்.

ரிஷபம்

உங்கள் திருமண வாழ்வை இனிமையாக்குவதுடன் உங்கள் அன்புக்குரியவருடன் இனிமையான பொழுதினை செலவிப்பீங்க. அரசுத் துறையில் இருப்பவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேர லாம். வணிகர்களுக்கு லாபம் உடனடியாக கிட்டாமல் போனாலும் நிரந்தரமாக கிட்டும். காதல் வாழ்வில் மகிழ்சி பொங்கும். மன அமைதியிருந்தால் எதையும் சாதிப்பது எளிது. மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. . பங்கு சந்தையில் இருந்து தள்ளி இருப்பது இப்போதைக்கு நல்லதுங்க.  கூடிய விரைவில் நற்பலங்களை எதிர்ப்பார்க்கலாம்.

மிதுனம்

நண்பர்கள் சூப்பரா உதவுவார்கள். குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வமாக நன்மைகள் செய்வார்கள். அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க.  குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டுங்க. அரசியல்வாதிகள் பல ஊர்களுக்குப் பயணம் செய்வீங்க. அதனால் நன்மையும் உண்டு. நிதி நிலையை பொறுத்தமட்டில் இந்த வாரம் ரொம்பவே சிறப்பாக அமையும். அதிகப் பணம் சம்பாதிப்பீர்கள். அது மிக நேர்மையான வழியில் இருக்கும். மனதில் நல்ல எண்ணங் களும் இறை சிந்தனையும் அதிகரிக்கும். வாதங்களைக் குறைச்சுக்குவீங்க. மாணவர்களின் கல்வி ஈடுபாடும் சுறுசுறுப்பாக இருக்கும்

கடகம்

பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினைகள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. . பெற்றோரை மகிழ்விக்கும் வண்ணம் அவர்கள் நடந்துகொள்வார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தின் மூலமாக வரும் லாபத்தை அதிக அளவில் எதிர்பார்க்கலாம். அதேவேளையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். அது உங்களின் பொருளாதார நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இனிமையான சூழ்நிலை காணப்படும். புனிதத் திருத்தலத்திற்கு குடும்பத்தோடு பயணிக்கும் வாய்ப்பு உருவாகும். வடமேற்கு திசையிலிருந்து ஒரு நற்செய்தி தேடி வரும்.

சிம்மம்

பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரிப் பாய்வீங்க. குட் லக். நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும்படி உங்களை யார் வற்புறுத்தி னாலும் பெரிய எழுத்தில் “நோ” சொல்லிடுங்க. அது பிறகு உங்களை விடாமல் பிடிச்சுக்கிட்டா எதிர்காலம் என்னங்க ஆறது? எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கா விட்டாலும், அதற்கு இணையான பல நன்மைகளை இப்போது அமையும். தொழில் துறையில் இருப்பவர்கள், வளர்ச்சியைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்று வது மிகவும் சுலபமாய் இருக்கும்.  வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருவாய் கிடைக்கத்தான் செய்யும்.  எனவே டோன்ட் ஒர்ரி!

சந்திராஷ்டமம் : அக் 11 முதல் அக் 14 வரை

கன்னி

மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யுமுங்க. எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது முன் வரை இருந்து  வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. கூட்டுத் தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். என்றாலும் பார்ட்னரிடம் சற்று கவனமாய் இருங்க. . உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். சற்று இழுத்துப்பிடிக்கணுங்க. வேறு வழியில்லை. வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் கோபதாபங்களைக் காட்டக் கூடாது.  சற்று இதமான போக்கைக் கடைப்பிடிங்க.

சந்திராஷ்டமம் : அக் 14 முதல் அக் 16 வரை

துலாம்

வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லதுங்க. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். அதை மிகக் கவனமாகப் பயன்படுத்துங்க. உடனே உதவி கேட்டு அவங்க கிட்ட போய் நிக்காதீங்க. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். கோபங்களை மறந்து புன்னகையுடன் அவங்களை வெல்கம் பண்ணுங்க. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரித்தாலும் அங்கு நன்மைகளும் அதிகமாகும். பெண்கள் புதிய உடைகளும் சேலைகளும் வாங்குவீங்க

சந்திராஷ்டமம் : அக் 16 முதல் அக் 19 வரை

விருச்சிகம்

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களும் வீட்டு உபயோகப்பொருட்களும் வாங்கு வீர்கள். வாகன வசதிப் பெருகும். கட்டாயமா யாருக்கும் சாபம் இடவே கூடாது. நல்ல வார்த்தை கள் மட்டுமே வாயில் வருமாறு பார்த்துக்குங்க. உங்களுக்கு உங்க மேலேயே நம்பிக்கை இல்லைன்னா என்ன செய்யறது? தன்னம்பிக்கை உங்களுக்கு எப்பவும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில்தான் அது மிஸ் ஆயிடுச்சுங்க. கம் ஆன். பிக் அப். எழுமின். விழிமின். உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

தனுசு

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீங்க. உங்க குடும்ப விசேஷங்கள் மட்டுமில்லாமல் நண்பர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களி லும் நீங்கதான் கதாநாயகர் / நாயகி. பட்…. வாக்குவாதத்தைத் தவிர்க்கப்பாருங்க. நீங்க விரும்பி யது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏகப்பட்ட நல்ல நல்ல செலவுகளும் வரும். அதை மிஞ்சும்படியான வருமானமும் வரும். தந்தைக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்கும். அப்பாவின் அலுவலகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகும். யாருக்காகவும் சாட்சிக் கையப்பமிட வேண்டாங்க. எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மகரம்

சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். ஆனால் அதைச் சுள்ளென்று செய்யாதீங்க. இதமாய் எடுத்துரைப்பது பெட்டர்ங்க. செலவுங்க கட்டுப்படும். முன்பைவிட அதிகம் பயணம் செய்வீங்க. ஊர் சுற்றுவீங்க. முக்கிய ஆஃபீஸ் வேலைங்களை மற்றவங்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை இனி நம்ப வேண்டாம். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதனால் என்னங்க. வெற்றிகரமாக முடிச்சுடுவீங்க. செலவுகள் ஒரு பக்கம் கட்டுப்படும். மறுபக்கம் செலவுகளால் சந்தோஷம் உண்டாகும்.

கும்பம்

நண்பர்கள், உறவினர்களில் யார் உண்மையானவங்க, யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு சின்னத் தடுமாற்றம் இருக்கும். ஆனாலும் எல்லோரிடமுமே ஒரு குறிப்பிட்ட டிஸ்டென்ஸ் வெச்சுக்குவீங்க. அது உங்களைக் காப்பாத்திடும். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை அவாய்ட் செய்ங்க. அல்லது குறைச்சுக்கவாவது செய்ங்க. ப்ளீஸ்.. மனைவிவழி உறவினர்களால் செலவினங்களும், அலைச்சலும் இருந்தா லும்கூட அவங்க உங்களுக்குப் பெரிய அளவில் நன்மை செய்வாங்க.  இப்போ இல்லாட்டியும் விரைவில் செய்வாங்க. . அலுவலகம்.. பள்ளி.. கல்லூரி என்று எங்குமே உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்துக்கிட்டிருந்த நிலைமை மாறி அன்யோன்யம் வரும். நெருங்கிய உறவினர்கள், பெற்றோர்,, சகோதர சகோதரிங்க கிட்ட அன்பும், அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கவனக்குறைவால் சின்ன விஷயங்களில் பாடம் கற்க வேண்டி வரும். என்னதான் நடந்தாலும்  பெரிய நஷ்டங்கள் எதுவும் கண்டிப்பாக் கிடையாது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். முன்பைவிட இப்போது அதிகமாகப் பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் டென்ஷனா இருந்தீங்க. இனி கடன்கள் மெல்ல மெல்ல அடையும். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பாங்க. பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க.

 

கார்ட்டூன் கேலரி