மேஷம்

மாணவர்கள் மிகவும் திருப்திகரமான நிலையை எட்டிப் பாராட்டுப் பெறுவாங்க. தாயாரும் மேம்பாடு அடைவார். பாப்பா பிறக்கப் போகிறது. அலுவலக சூழல் சற்று அவசர கதியில்தான் இருக்கும். நல்லா சாப்பிடுங்க!  டாடிக்கு லாபங்கள். டாடியால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். அவருக்கும் உங்களுக்கும் இடையே நல்லுறவு அமையும்.  கன்னா பின்னா என்று குரல் உயர்த்திக் கத்தத் தோன்றும். என்னம்மா ..இப்பிடிப் பண்றீங்களேம்மா? பின் விளைவுகளை யோசிச்சுப்  பேச  வேண்டாமா?  (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…). பிரச்னை கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். மகான்கள் தரிசனம் கிடைக்கும். திருமணம் பற்றி நல்ல தகவல்கள் வரும். வியாபாரத்தில் நேற்றிருந்த கவலைகள் தீரும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீங்க. குடும்பத்தில் நெருக்கம் நல்லா இருக்கும் ஆரோக்கியம் பற்றி கவனம் தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்பு உண்டு. தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சக்ஸஸ்!

ரிஷபம்

குழந்தைங்க நல்லவிதமாய் முன்னேறுவாங்க. தந்தையின் புகழ் அதிகரிக்கும். உங்கள் அதிருஷ்டம் முன்பைவிட அதிரகரிக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும்  சாலரியும்  இல்லையோ என்ற பதற்றத்தைத் தூக்கி உடைப்பில் போடுங்களேன்… எல்லாம் வரும். ஏமாற்ற மாட்டாங்க. ஏமாற மாட்டீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்., காதல் திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்., காதல் திருமணம் நடக்கும். நல்லபடியாக, பிரச்சினைகள் ஏதுமினறி, கிராண்டாகவே நடக்குங்க. எதிர்பார்த்த தனவரவு தாமதமாகும். பணியில் வெற்றிக்குப் போராட வேண்டியிருக்கும். அரசாங்க உதவிகளை எதிர்பார்ப்பதற்கில்லை.  பெண்களின் மனதில் சங்கடங்கள் ஏற்படும். கலைஞர்கள் சலிப்படையக்கூடும். பணியில் அதிக கவனம் தேவைப்படும். வழக்குகளுக்குத் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவாங்க. பொறாமை காரணமாகச் சிக்கல் உண்டாகலாம். பெண்களின் பிரச்னை தீர முயற்சிகள் எடுப்பீங்க. யெஸ்.. குட் எஃபர்ட்!

மிதுனம்

குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும். தவிர குழந்தைகளால் உங்களுக்கு சந்தோஷம் உண்டு. புத்திசாலித்தனமான ஐடியாக்கமள் பிறககும். தியானப் பயிற்சி எடுங்களேன். அதனால் உங்களுக்கும் நன்மைகள் நிகழும்,  சுற்றி இருப்பவர்களுக்கும்  நல்லது. குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம். உங்க தனிப்பட்ட கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பேச்சில் அது மிகவும் அதிகமாக இருக்கும். கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வீர் அதிருஷ்டம்தான் போங்க. உடல்நிலை பற்றி பயம் வந்து நீங்கும். கடுமையான முயற்சிகளால் களைப்படைய வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து பற்றிய வழக்கு இழுபறியாகவே இருக்கும். பேச்சில் கவனம் தேவை. பணிச்சுமையால் பொறுமையிழக்கலாம். தடைகள் நீங்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவீங்க. தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை கூடும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையில் மகிழ்ச்சி நிலவும். யெஸ் ஹாப்பி!

கடகம்

அரசாங்க செலவுகள் ஏற்படும். ஆனால் அந்த செலவுகளால் மிகுந்த நன்மையும் லாபமும்  ஏற்படும். வேண்டாத பயங்களும் குழப்பங்களும் வீண் கற்பனைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிரமம் வருவது போல் தோன்றி எல்லாம் தலைப்பாகையோடு போகும்போது அப்பாடான்னு ஆகும். சுப காரியங்கள் நலமாய் முடியும். செலவுகள் ஏற்படும். ஆனால் செலவுக்கேற்ற நன்மைகளும் ஏற்படும். உங்களுக்கு அலுவலகத்தில் மேலும் சிறந்த நற்பெயர்கள் கிடைக்கும். ஆனா அதுக்கு நீங்க உழைப்பது கொஞ்சமா நஞ்சமா? மனதில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வீங்க. தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்க.  பேச்சினால் நன்மை விளையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. தந்தையின் ஆரோக்யம் தேறும். முயற்சிகள் வெற்றி அடையும். பெண்களுக்கு இனிமையான தகவல் வரும். கலைத்துறையில் புதிய வாய்ப்புக்கிடைக்கும். யாரிடமும் யார் பற்றியும் வம்பு பேசாதீங்க. ப்ளீஸ் டோன்ட்!

மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை

சிம்மம்

திருமணம் போன்ற விசேஷங்களுக்காகச் செலவுகள் செய்வீங்க. தேவையில்லாத பேச்சே யாரிடமும் வேண்டாம். மச்சம்தான் போங்க ஒங்களுக்கு…. கவர்ச்சி அம்சம் மேம்படும். காதல் வளரும். மாணவர்களின் முயற்சிக்கு மிக நல்ல பலன் கிடைக்கும். சென்ற வாரம் இருந்த மனக்குழப்பங்களோ பிரச்சினைகளோ இந்த வாரம் இருக்காது. சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வரும். வீண் அலைச்சல்கள் முடிவுக்கு வரும். கலைஞர்களின் வெற்றிக்கு முயற்சி தேவை. பணி பற்றி எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டு. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். திறமைகள் வெளிப்படும்.  பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கூடும். அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றிபெறுவீங்க. தவறான ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயிருந்து விலகுங்க. ப்ளீஸ் டூ இட்!

மார்ச் 13 முதல் மார்ச் 16 வரை

கன்னி

திடீர்னு வேலை கிடைக்குமுங்க. இத்தனை காலம் பிரேக் போட்டு நின்னுக்கிட்டிருந் தடை நிகழ்ச்சிகள் விரைவில் நடந்தேறும் பாருங்களேன். அம்மா வழி சொந்தங்களிடமிருந்து நகையோ சேலையோ அல்லது ரொக்கப்பணமோ கிடைக்கும். படிப்பில் பாயும் புலியாகப் பின்னிப் பெடலெடுப்பீங்க. அப்பாவுக்குஅ ரசைங்கத்தால் நன்மைகள் கிடைக்கும்., குறிப்பாக அவர் காத்திருந்த நல்ல விஷயங்கள் நிறைவேறும். பக்திப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவீங்க. அறுவை சிகிச்சை நல்லவிதமாய் முடியும்\. கூடுதல் முயற்சி காரணமாகப் பலன் கிடைக்கும். பணியாளர்கள் வேலையில் மனநிம்மதி பெறுவீங்க. திறமைகள் வெளிப்படும். இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேறுபட்ட வாரம். தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுச் சரியாகும். பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீங்க.  பெண்கள் பொறாமைக்காரர்களால் தொல்லைக்கு ஆளாவீங்க. வம்பு எதிலும் ஈடுபடாதீங்க. ப்ளீஸ் டோன்ட்!  

மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை

துலாம்

எடுத்தோமா .. முடிச்சோமான்னு எல்லாமே முடியும். ஜாலிதான். மகிழ்ச்சிதான். பெரிய சந்தோஷம்.. மன நிறைவு எல்லாமும் உண்டாகும்.    குடும்பத்தில்  முன்பிருந்த சண்டை சச்சரவுகள் அல்லது மனத்தாபங்கள் குறைந்து நல்லுறவு ஏற்பட்டு நிம்மதி அளிக்கும். உங்கள் பேச்சு, உங்க  சாப்பாடு இரண்டையும் ‘சி சி காமரா‘ போடாத குறையாக் கண்காணியுங்க. முன்பைவிட இப்போ வருமானமும் மன மகிழ்ச்சியும் பிளஸ் பிளஸ்ஸாகியிருக்குமே! ஹப்பியின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் சிதறி நாலு கால் பாய்ச்சலில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீங்க. ஓகே? காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணியாளர்கள் எடுத்த செயல்களை எளிதில் முடிப்பீங்க. நல்ல செய்திகள் வரும்.. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இனிமையான வாரம். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க. பெண்கள் திறமை காரணமாக நல்லபெயர் பெறுவீங்க.  எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும். யெஸ் எனர்ஜி!

விருச்சிகம்

உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு. தவிரவும் உங்க வாழ்க்கைப் பிரச்சினைகளை மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்காதீங்க. நம் ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன? புத்திசாலித்தனம் உங்க உடன் பிறவா சகோதரி. அது உங்களை எந்த இக்கட்டிலிருந்தும் காக்கும். விசனம் வேண்டாம். அதிருஷ்டம் உயரும். தந்தைக்கு நன்மைகள் அதிகரிக்கும். உங்களுக்கும் தந்தையின் ஆதரவும் நெருக்கமும் கூடும். தைரியமாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மைதான் விளையும். மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. தொழிலில் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பணப்புழக்கம் சிறப்படையும்.. பணியாளர்களுக்கு நின்றுபோயிருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும். நண்பர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றமடைவாங்க.  பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். வாவ். ஜ்வல்ஸ்!

தனுசு

உங்கள் அதிருஷ்டம் அதிகரித்து அதிக வருமானமும் மதிப்பும் மரியாதையும் கூடும். குழந்தைங்க விஷயத்தில் கண்டிப்பாய் இருக்கேன் பேர்வழி என்று சொதப்பிவிட்டு அப்புறம் விழி பிதுங்க வேண்டாம். திருமணமாகாவங்களுக்குக் கல்யாண ஏற்பாடுங்க  நடக்கும். குழந்தை பிறக்காதவங்க வீட்டில் நல்ல செய்தி! வருமானம் குவியும். அலுவலகத்தில் லாபங்களும் நன்மையும் கிடைக்கும். நீங்கள் நினைத்தும் பார்க்காத சமயத்தில் உங்களை செல்வம் தேடி வரும். மனத் தெளிவு அதிகரிக்கும். குழப்பமான விஷயங்களை நீங்களாகத் தவிர்ப்பது நல்லது. அதீத யோசனைகள் மற்றும் சிந்தனைகள் ஏற்படும். சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடுவீங்க. கணவருக்கு. கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை குறையும். எதிர்பார்த்த பணம்  வந்து சேரும். பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விண்ணப்பித்த வேலை வாய்ப்பு கை கூடும். பெண்களுக்குக் குதூகலம் ஏற்படும். சாதனை வாரம். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவைத் தவிர்க்கவும்.  ப்ளீஸ் அவாய்ட்.

மகரம்

மனைவிக்கு, பதவியும் சம்பளமும் உயரும். உங்களுக்கும் வெளிநாட்டு ட்ரிப்பும் இருக்கு. அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிஞ்சுக்கும். ஜீரண உறுப்புகள் பற்றி கூகிள் செய்து நிறையத் தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டால் சாப்பாட்டு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பீங்க!  பெற்றோருடனும் பயணம் அதிகமாகும். குடும்பத்தினரும் நன்மைகளை அளிக்கத் தயாராக உள்ளனர். நண்பர்களுக்காகவும் சிநேகிதிகளுக்காகவும் மனம் கசிந்து கடனுக்குக் கையெழுத்துப் போடும் அளவுக்கு உருகாதீங்க. ப்ளீஸ். சேமிக்கும் எண்ணம் உண்டாகும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். பணியாளர்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்கிடைக்கும். இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் சற்றுத் தள்ளிப்போகக்கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களின் பயம் நீங்கும். பணியில் பொறுப்பின்மைகாரணமாக சிரமங்கள் நேரலாம். பி கேர்ஃபுல்.

கும்பம்

கணவரின் உடல் நிலை பற்றிய கவலை வந்தாலும் ஓரிரு  நாட்களிலேயே தானாய்ச் சரியாயிடும்.  உங்களின் கோபத்துக்குச் சின்னச்சினன குழநதைக்களும் வேற வழியில்லாம மர்த்துடறாங்க. படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்க. குடும்பத் தலைவி /தலைவருக்கு…ஆரோக்யம்  கொஞ்சம் பயமுறுத்தும். ஆனால் அதைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம். இப்போது உள்ளவை மிகவும் தற்காலிக் பிரச்சினைகளே. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டு திணற வேண்டாம். எதுவுமே நடக்கும்போது தானாக நடக்கும். கற்பனை பயங்கள் வேண்டாமே! வருங்கால நலன் கருதிச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். கலைத்துறை வாய்ப்புகள்  திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம்  அதிகரிக்கும். வம்புகளிலிருந்து விலகித் தப்பிப்பீங்க. பயம் தீர்ந்து நன்மை பெறுவீங்க. குடும்பத்துடன் உற்சாகமாகப்  பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவாங்க. வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப்போகக்கூடும். பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க. யெஸ். ஃப்ரெண்ட்ஸ் மீட்!

மீனம்

தாயாருக்கு வீடு வாங்குவதாலோ விற்பதாலோ நன்மையும் லாபமும் கிடைக்கும். எதற்குமே அவசரப்படாதீங்க. நல்லபடியாவே, தானாகவே நடக்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான ஒற்றுமையும் நிலவும். தந்தையின் வாழ்வில் அனைத்து வகையிலும் முன்னேற்றங்கள் இருக்கும். அவருக்கும் உங்களுக்கும் இடையே நல்லுறவு அமையும். நம் விருப்பத்திற்கேற்ப உலகமே சுழல வேண்டும் என்று எதிர்பார்க்காறீங்களேம்மா. நடக்கிற காரியமா அது?  அது தன் பாட்டுக்குத் தன் திசையில்  சுழலட்டும். நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே! செலவுக்கேற்ற வரவு வரும். முன்னேற்றப் பாதை கண்ணுக்குத் தெரியும். பணியாளர்கள் மனநிம்மதியடைவீங்க. மகன் , மகள் பற்றிய கவலைதீரும். தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். உதவிகள்  கேட்டபடி கிடைக்கும்.  தேவையற்ற கவலைகள் சூழும். திருமணம் பற்றி நல்ல தகவல் வரும். பணி தொடர்பான முயற்சிகளை துவக்கலாம்.  புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் உங்கள் வாழ்விலிருந்து காணாமல் போவாங்க. சூப்பர் நோ?