வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

 

த்யோகம் சம்பளம் இரண்டு கிராஃப்களும் மேல் நோக்கி உயர  வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். நீங்கள் மனதில் திட்டம் போட்டிருந்த நிகழ்ச்சி லிஸ்ட் வரிசை  மாறி நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை முடிக்க முடியாமலும் போகலாம். எதிர்பாராத செயல்களில் ஈடுபட வேண்டியும் இருக்கலாம். ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும்.வெளிநாட்டிலிருந்து வருமானம்  வரும், பகைவராய் நினைச்சவங்க நண்பராய்..சினேகிதியாய்.. மாறிட்டாங்களா? எல்லாம் உங்கள் கவர்ச்சி அம்சமும் முகராசியும்தான் காரணம். ஆங்கிலத்தில் சாரிஷ்மான்னு சொல்லுவாங்களே.. அதாம்மா..பொலிவு… அது உங்களுக்கு நிறைய உள்ளது. அதை வெச்சே நேர்மையான முறைல நிறைய நன்மைகளை சாதிச்சுடுவீங்க.  முன்னேற்றம் ஆமை ஸ்பீல்ட இருக்கேன்னு சலிச்சுக்கிட்டா எப்படி? நன்மை இருக்கில்ல!

நெருங்கிய உறவினருடன் போக்கு வரத்து அதிகரிக்கும். பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். வங்கி சேமிப்பு குறையும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு இருந்தாலும் மனதுக்குள் சிறு கவலைகளை மறைத்து வைத்து சிரமப்படுவீர்கள். குடும்ப விவகாரங்களிலோ அல்லது பொருட்கள் பழுதாவதாலோ  உங்களுக்குப் பிரச்சினைகளும் கோபமும் உண்டாகலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். முதலீட்டை அதிகப்படுத்துவீங்க. உழைச்சு நிறையப் பணம் பார்க்கறப்ப அதோட சுகமே அலாதிதான். மாபெரும் சபைகளில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் குவியும். நீங்கள் மாணவியா .. பள்ளியில்… கல்லூரியில் உங்க உழைப்புக்குப் பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும். உங்களோட உடன் பிறந்த புத்திசாலித்தனம் உங்க குடும்பத்தையே சந்தோஷத்துல ஆழ்த்தும் பாருங்களேன்!

உறவினர்களுக்காக அலைந்து திரிந்து உதவ வேண்டியிருக்கும். அதனால் என்ன? செய்வோமே, செலவினங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவர்களுக்கு மதிப்பெண்களும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நன்கு படிக்கும் ஆர்வம் ஏற்படும். சோம்பல் காரணமாகவோ உடல் நிலை காரணமாகவே சில வேலைகளை  வேறு வழியின்றித் தள்ளிப் போடுவீர்கள். தேங்கியிருந்த வழக்குகள் நல்ல விதமாகவும் உங்களுக்கு சாதகமான முறையிலும் தீர்ப்புக் கிடைக்கும். பேச்சினால் வெற்றியை சாதிப்பீங்க. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திக்குக் காத்துக்கிட்டிருந்தீங்களே…வந்திருக்குமே! சின்னதாய்க் காலில் அடிபட்டாலும் அலட்சியம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஹாப்பியான செய்தி உண்டு. குழந்தைகளைக் கோவிச்சுக்காதீங்கம்மா. சீக்கிரத்தில் உங்க பாராட்டு அவங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் கணவரும் கர்வப்படுவீங்க

சந்திராஷ்டமம் : 22.03.2017 முதல் 25.03.2017 வரை

உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல டாட்டா காண்பிக்க ஆரம்பிக்கும். 18ம் தேதிக்குப்பிறகு நல்லவை நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் வரப்போவதற்கான ஏற்பாடுகள் நடக்கும் கோயில்களுக்குப் போவீர்கள். ஆடை ஆபரணங்களுக்காக கரென்சி கரையும்.நண்பர்கள் மூலம் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.நண்பர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் ஏன் உங்க அழகிய மூக்கை நுழைக்கறீங்க? சகோதரர்களால் நன்மையடையப் போறீங்க. இன்னிக்கு ஒரு பிளேனில் நாளைக்கு ஒரு ரயிலில்னு நிறைய அலைச்சல்தான். ஆனாலும் அதை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. ஜாலியாவும் லாபமாவும் இருக்குமில்ல! சம்பளம் உயரும் அல்லது பண வரவு கூடும் அல்லது புது வேலையில் போய் ஜம்மென்று உட்காருவீங்கள். அலுவலகம் பத்தி டென்ஷன் வேணாம்மா! எல்லாம் எளிதாய் சரியாகும்…பார்த்துகிட்டே இருங்க.

சந்திராஷ்டமம் : 25.03.2017 முதல் 27.03.2017 வரை

வெளிநாட்டிலிருந்து வருமானம் .. இன்கம்… பிராஃபிட்…. லாபம்…வர வாய்ப்பு அதிகம் உண்டு. மகள் மகன் வழியில் நன்மைகளும் ஹாப்பினஸ்ஸும் உண்டு. சிலர் உத்யோகமே மாறக்கூடும். ரெஜிஸ்ட்ரேஷனுக்குத் தயாரா இருங்கம்மா…வீடு வாங்க சான்ஸ் இருக்கு.  விற்கலாம். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகள் உங்க அட்ரஸ் விசாரிச்சுக்கிட்டு வரப்போகுது. நிலம் வீடு போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். செலவினங்கள் குறையும். லாபங்கள் அதிகரிக்கும். இத்தனை நாள் பொறுத்துட்டீங்க. இப்போ ஏன் மனசைத் தளர விடறீங்க? அவசரம் வேண்டாம். யார்கிட்டயும் குறை காண வேண்டாம். திடீர் அதிருஷ்டம் உண்டுதான். ஆனால் அதுக்காக உழைப்பைக் கை விட வேண்டாமே! எங்கும் கோபம் எதிலும் கோபம்னு கண்மண் தெரியாமல் எகிறிடாதீங்க. முப்பது வயசை நெருங்கறவங்களுக்கு இந்த ஏழரைச்சனி மெதுவாகவேனும் நன்மைகள் தருமே!!

சந்திராஷ்டமம் : 27.03.2017 முதல் 29.03.2017 வரை

உங்க கடமைகள் உங்களுக்காக வெயிட் பண்ணிக் காத்துக்கிட்டிருக்கும்போது அதிகமாகக் காலம் கடத்த வேண்டாம். அந்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற பழைய பாடலை ஒரு பத்து வாட்டி கேளுங்க. உங்க பெண்களுக்கு சிநேகிதியுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும்.சிறப்பாக எதையும் எதிர் பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். நோட்டு பறக்கும், அலுவலகவாசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். ஃபோர் அடிக்க மட்டையை உயர்த்தி சிக்ஸர் அடிச்ச மாதிரி ஒரு அதிருஷ்டம்தான் போங்க. சிவில் படிக்கறவங்க, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யறவங்க, மருத்துவத்துறையின் எந்தக் கிளையிலும் உள்ளவங்க எல்லோருக்கும் நல்ல காலம்தாங்க. அரசாங்க நன்மைக்குக் காத்திருக்கீங்களா? விஷயம் நல்லபடியா முடிஞ்சாச்சுன்னு நினைச்சுக்குங்க! நீங்க என்ன செய்தாலும் கிளாப் செய்து பாராட்ட ஒரு குழுவே காத்திருக்கே.

 சந்திராஷ்டமம் : 29.03.2017 முதல் 31.03.2017 வரை

மை டியர் ஸ்டூடன்ட்ஸ்… உங்களின்  கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாமேம்மா. ப்ளீஸ்… இப்பன்னு பார்த்து எவ்ளோ டைவர்கஷன்ஸ். அடாடா.  கணவன் மனைவிக்குள் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். என்ஜாய். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதால் மனம் லேசாகும். எதிர்பாராத பண வரவு சிறிதளவு உண்டு.  ஓவரா எதிர்பார்க்க வேண்டாம், எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு …உங்க படைப்புகள் அங்கீகரிக்கப்படும். காதலிக்கும்போதே சண்டை போட்டால் பிற்காலத்தில் இன்னும் சிரமம். அடக்கி வாசியுங்க. சிலருக்கு நட்பு காதலாய் மலரவும் வாய்ப்புள்ளதும்மா. பண பாக்கி வசூலாகும். தற்போதைக்குக் கடன்.. கைமாத்து.. லோன் எதுவும் வேண்டாம். கல்யாணம் நடந்தோ.. பிரசவம் நிகழ்ந்தோ.. குடும்பத்தில் ஒரு புது நபர் நுழைந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாங்க. யார்கூடவும் வாக்குக்வாதம் வேணாம்மா! கண்டுக்காம போங்க.

உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் ஆல்ரைட்டாகும்மா வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். நல்ல வகையில் பணம் செலவழியும். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபட முடியாது. நண்பர்கள் சந்திப்பு உண்டு.  அவர்களால்  நன்மையும்  உண்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களாய் நடிக்கும் எதிரிகளிடம் மட்டும் கொஞ்சம் கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதும். மற்ற எல்லாமே அருமையாய்ப் போயிக்கிட்டிருக்கு. வீடு வாங்கப் போறீங்க. நல்லபடியாக முடியும். கவலைப் படாதீங்க. அறுவை சிகிச்சைன்னு பயந்துக்கிட்டிருந்தது மாத்திரை மருந்தோடு விட்டதே. மகிழ்ச்சிதான். பயணம்னா பயணம் அவ்வ்வ்ளோ பயணம் போவீங்க.

அலுவலகம் சம்பந்தமான சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள். தந்தையால் உங்களுக்கு நன்மைகளும் மகிழ்ச்சியும் ஏற்படும்.விருதுகளும் பரிசுகளும் கிடைக்கும்.  நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும் சிரமங்களிலிருந்து நல்ல முறையில் ரிலீஃப்தான் போங்க. பல காலம் நிறைவேற்றாத திட்டங்கள் நிறைவேறும். கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க.நண்பர்கள் மத்தியில் சும்மா காலர் தூக்கிவிட்டுக்கும்படியா கெத்து அதிகரிக்கும்.

புத்தக விற்பனை செய்பவரா நீங்க? இத்தனை காலம் தொய்ந்து விழுந்து கொண்டிருந்த தொழில் தலை நிமிரும். தடை தாமதங்களைத் தவிர்க்கத்தான் முடியாது. அதனால் என்ன மேடம்? கடைசியில் முடிவு சுபம்தானே. அதைப் பார்ப்பீங்களா…எதிலும் படபடப்பு காட்டாமல் அமைதியா செயல்பட ஆரம்பிச்சுட்டீங்க. போதும். ஜெயிச்சுட்டீங்க. லோனுக்குக் காத்திருந்தீங்க! கிடைச்சாச்சும்மா.. 

தொழிலிலும் அலுவலகத்திலும் லாபம் நிச்சயம் கிடைக்கும். அதுக்கு எந்தக் குந்தகமும் குறையும் இல்லைம்மா, ஷ்யூர்….  பெரிய அளவில் போட்டிருந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது நல்லது. மனதில் குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத்  தவிர்க்க முடியாது. இத்தனை காலம் இருந்து வந்த வசதியான வீட்டையும் அலுவலகத்தையும் விட்டு, சற்று வசதிக்குறைவான இடத்தில் இருக்க நேரலாம். எல்லாம் மிகத் தற்காலிகம்தான்-அப்டின்னு மனசுக்குள்ள ஒரு போர்டு போட்டுக்குங்க. நல்ல சம்பளத்தில் புது வேலை கிடைக்கலாம் அல்லது இந்த வேலையிலேயே நல்ல சம்பளம் கிடைக்கலாம். பேச்சில் வசீகரிக்கும் தன்மை ஒட்டிக்கும். ஆக எல்லாத்தையும் சாதிச்சுப்பீங்க. கட்டின புருஷனைக் கொஞ்சம் அனுசரிச்சுப் போனால்தான் என்னவாம்? கணவர் வெளி நாடு போகப்போகிறாரே! வாகனம் வாங்குவீங்க. அது உங்களுக்கும் உங்க கணவர் குழந்தைங்களுக்கும் சந்தோஷமும் நன்மையும் தரும்.

சிறிய அளவில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். ஸோ வாட்? நேத்திக்குப் பறிச்ச உருளைக் கிழங்கு மாதிரி கிண்ணுனு எழுந்துடுவீங்க.  சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.நல்ல நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். சத்துள்ள உணவு சாப்பிடுங்கள்பொது விஷயங்களில் ஈடுபட வேண்டி வரும். வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் கூடும்.  டாடிக்கும் உங்களுக்கும் இருக்கும் அன்பு பலப்படும். அவருக்கு பதவியும் சம்பளமும் உயரும். நண்பர்கள்.. சினேகிதிங்க கிட்ட அளவுக்கு மேல் வேண்டாம். சிக்கனத்துக்கும் கருமித்தனத்துக்கம் வித்யாசம் புரிஞ்சுக்குங்க. சாப்பிட்டால் பர்ஸ் இளைச்சுடும்னு தோணினால் பர்ஸ் இளைச்சால் பரவாயில்லைன்னு தீர்மானியுங்க. இன்னொரு பக்கம் வாரி இறைக்கறவர்தானே நீங்க.

 

உங்கள் உடல் நலம் குறித்து சற்று அதிகப்படி அக்கறை காட்டியாக வேண்டும். சும்மா எனக்கென்னன்னு அதை அலட்சியம் செய்துட்டுப் போயிக்கிட்டே இருக்க முடியாது.. கூடாது.. புரிஞ்சுதா? உங்கள் திறமை கவனிக்கப்படும்.புதிய வாகனம் /புதிய வீடு  வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீங்க,  ஆமாம், சொல்லிட்டேன். பொறுமையை அதிகம் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. அதே சமயம் வெளியூர் வெளிநாடுன்னு பயணங்களும் உண்டு. வேண்டாத எறும்பு மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிப் பல்கடிக்காதீங்க. பல் பிழைச்சுப் போகட்டும். எடுத்த காரியத்தை போஸ்ட்போன் பண்ணிக் கடைசியில் மலையாய் வேலையைக் குவிச்சுக்காதீங்க. பொழுது போக்குக்கு நிறைய நேரம் செலவிடறீங்களேம்மா..

Leave a Reply

Your email address will not be published.