Random image

வார ராசி பலன் 15-09-17 முதல் 21-0917 – வேதா கோபாலன்

மேஷம்

உங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதே. மம்மியின் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும். ஆரோக்யத்துக்குதான் முதல் முக்கியத்துவம் என்பதை தயவு செய்து எப்போதும் நினைவில் வையுங்கள். குழந்தைகளுடன் ஃபைட்டிங் வேண்டாம். அவங்க படிப்பில் அதிக கவனம் செலுத்தி உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வாங்க.. பார்த்துக்கிட்டே இருங்க. வெளிநாட்டு ஜாப் உங்களைத் தேடி வந்தாலும் நீங்க அதைத் தேடிப்போனாலும் வெற்றி நிச்சயம். மனசில் நல்ல எண்ணங்களும் கருணைச் சிந்தனையும் தன்னிச்சையாய்த் தோணும்.

ரிஷபம்

உழைப்பதற்கு ஒரு அளவில்லை? முதுகு பெண்ட் ஆகிற வரைக்குமா உழைக்க முடியும்? கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. எது எப்படியானாலும் பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா? புது வீடு .. புது வாகனம்.. புது பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி என்று மனம் மகிழும். திருமணம் சற்று தாமதமானாலும் அருமையாய் அமையும். அப்பா கூட சும்மா சும்மா சண்டை போடாதீங்க. அவர் உங்க நன்மைக்காகப் பாடுபவர்களில் முதல் நபர் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.

மிதுனம்

உங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பாராட்டியே தீரவேண்டும். பெருமையான பொறுப்பு தருவாங்க. உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…  குழந்தைங்களைப் பற்றி நீங்க வெச்சிருந்த அபிப்ராயம் எல்லாம் தலைகீழாய் மாறும். ஆமாங்க அவங்க மேல நம்பிக்கை இல்லாமல் இருந்தீங்க. பொறுப்பில்லாம இருப்பதாய் நினைச்சிருந்தீங்க. படிப்பில் கவனம் இல்லைன்னு பயந்தீங்க. அதெல்லாம் மாறி நிம்மதியா சந்தோஷமா அவங்களை வாழ்த்தி சந்தோஷப்படுவீங்க. இத்தனை காலமாய்க் குழந்தை வரம் வேண்டித் தவம் இருந்தவங்க எல்லாம் குதூகலத்துடன் தெய்வத்துக்கு நன்றி சொல்வீங்க.

கடகம்

எதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பனமாகத்தான் ஆகிவிடுவீங்க… சம்பளம் கூடுதலாகும் சரி. மற்றவர்களைக் கவர்வதற்கு நீங்க எந்த முயற்சியும் எடுக்கவே வேண்டாம். அது தன்னிச்சை யாய் நிகழப்போகுது பார்த்துக்கிட்டே இருங்க. குழந்தைங்களிடம் கொஞ்சம் வேகக்குறைவு இருந்தால் டென்ஷன் ஆக வேண்டாம். சீக்கிரம் வேகம் பிடிப்பாங்க. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுக்கு 144 போட்டுடுங்க. பேச்சில் சூடு அதிகமாகாமல் பார்த்துக்குங்க.  சொல்வ தெல்லாம் பலிக்கும். சண்டை போடவும் கூடாது அந்தச் சமயத்தில் சாபம் இடவும் கூடவே கூடாது என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் எண்ணம் உங்களுக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.

சிம்மம்

தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய… அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே! அது! அரசியல் ஆர்வம் உள்ளவங்களும் அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் எதிர்பார்த்தி ருப்பவங்களும் நல்ல செய்தி கிடைத்துத் துள்ளிக்குதிக்கும் காலகட்டம் இது. ஆடைகள்.. ஆபரணங்கள்.. வாசனைப் பொருட்கள்.. அழகு சாதனங்கள்.. போன்றவை வாங்கக் காசைச் செலவு செய்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் இனிதாய்ப் பொழுது போகும். அவங்களுக்கு நன்மை செய்வீங்க. அவங்களும் உங்களுக்கு ரிடர்ன் கிஃப்டாய் நன்மை செய்வாங்க.

கன்னி

வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். ஸோ வாட் என்று கேட்கும் ரகமாச்சே நீங்க! அதிலும் உடல் உழைப்புப் போன்றே மன உழைப்பும் அதிகம் உண்டு உங்களிடம். குழந்தைங்க பற்றி லேசாய் டென்ஷன் இருக்கும்தான்.  ஆனால் அதை நிரந்தரம் என்று நினைத்து பயப்பட வேண்டாம். பேச்சினால் சூப்பர் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான புதிய வரவு உண்டாகும். வங்கியில் இருப்பு உயரும். வெளிநாட்டு வேலை நிச்சயமாய்க் கிடைக்கும்.. உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ.  எக்ஸ்போர்ட் வியாபாரிகளுக்கு இயல்பாக லாபம்  பெருகும்.

துலாம்

கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்கம்மா..  கணவர் அல்லது மனைவிக்கு வெற்றி உண்டாகும். வேலைக்கேற்ற சம்பளம் இல்லை என்ற அவரது குறை மகிழ்ச்சியாக நீங்கும்.  பேச்சில் சற்றே கவனமாக இருங்க. குடும்பத்தில் எதிர்பார்த்த நிகழ்வுகள் சற்று ஸ்லோவாகத்தான் இருக்கும். பயம் வேண்டாம். கவலை வேண்டாம். டென்ஷன் வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.

விருச்சிகம்

அப்டியாவது லோன் போட்டே ஆகணுமாம்மா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். பெரிய பெரிய இமய மலைகளைத் தாண்டி வந்த உங்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு கூழாங்கல் தடுக்காமல் தாண்டத் தெரியும் என்று உங்களுக்கும் தெரியும். உங்கள் மேல் அக்கைறை யுள்ள மறறவர்களுக்கும் தெரியும். பிறகேன் பயம்? டாடியின்  கோபத்தைப் பற்றிக் கவலைப்படாதீங்க. கோபம் இருக்கும் இடத்தில்தான் லவ் இருக்கும். சகோதர சகோதரிகளுடன் நெருங்க முடியாத சிரமங்கள் பற்றிக் கவலைப்படாதீங்க. சீக்கிரத்தில் அது நிகழும்.

தனுசு

உங்களால் தவிர்க்க முடியக்கூடிய  பயணத்திற்கெல்லாம் ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப்  பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க.  செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளை யெல்லாம்  வாங்குவீங்க. பெட்டியை  எடுத்து ரெடியாய் வையுங்க.  வெளியூர்ப் பயணம் உறுதியாய் உண்டு. அமிலம் கலக்காமல் இயல்பாய் அழகாய்ப் பேசினால் நல்லதுங்க. சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் இருந்தாலும் கவலை அளிக்கும் அளவுக்கு எதுவும் கிடையாது. எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசுங்க. மற்றபடி உங்கள் திட்டப்படி எல்லாம் நல்லபடியா நடக்கும் மேம். கவலைப்படாதீங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17 வரை 

மகரம்

கவலையைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்க. நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங்களே அந்தக் கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா? பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. குழந்தைங்க டென்ஷன் பண்றாங்களா?  அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. சரியாயிடுவாங்க. குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல்கள் தோன்றுவது இயற்கைதான்! எல்லாம் தற்காலிகம். எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. ஏழரைச் சனியை மனதில் கொண்டு (வால்யூம் கம்மியா) அடக்கி வாசியுங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை   

கும்பம்

அபார்ட்மென்ட் வாங்கப் போறீங்க. கங்கிராட்ஸ். இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். உங்க ரேஷன் கார்டில் இன்னொரு பெயர் சேரப்போகுது. கன் ஆன்! செம ஜாலிதான். இடியே இடிக்காது.  நல்ல காலம் பொறக்குது என்பதைவிட நல்ல காலம் பிறந்தாச்சு என்று  சொல்வதுதான் பொருத்தம். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டத்தான் போறீங்க பாருங்க. நேர்மையாவும் நியாயமாவும் மனசு யோசிப்பதால் பொல்லாப்பிலிருந்து தப்பினீங்க

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை   

மீனம்

புது வண்டி வாங்கப் போறீங்க. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி  வைப்பாங்க. ஹஸ்பெண்ட் கிட்ட அனல் கக்க அனுமதி ’நோ ’ எதுக்கு வேண்டாத விஷயங்களுக்கு மனசைப்  போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? எல்லாம் வல்ல இறைவனின் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. ஏராளமான பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில் ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்கும்மா. உங்களை அவங்க ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க.