Random image

வார ராசிபலன்: 15.1.2021 முதல் 21.1.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம்

மதிப்பும் அந்தஸ்தும் இன்கிரீஸ் ஆகும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பாங்க. திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நல்ல இடத்துக்கு மாற்றம் ஆகியவை கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பாங்க. எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில்கள் லாபம் தருங்க. மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். விஞ்ஞானிகள் புகழ் பெறுவாங்க. பயணத்தால் நலம் உண்டாகும். எதைப்பற்றியும் கவலைப் படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிப்பீங்க.. உங்க வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இன்கிரீஸ் ஆகும். அளவுடன் பேசுவது நல்லதுங்க. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும், பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுங்க. கடன்கள் பைசலாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லதுங்க.

ரிஷபம்

அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தருங்க. முக்கியஸ்தர்கள் உதவி புரிவாங்க. மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புக் கூடிவரும். வாரப் பின்பகுதியில் பண வரவு இன்கிரீஸ் ஆகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும். பிள்ளைகளால் நல்லதுங்கம் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள் வது நல்லதுங்க. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மையை தருங்க. கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படும். பெண்கள் உடமைகள், பொருள்களை கவனமாக பாதுகாத்து கொள்வது நல்லதுங்க. வீண் பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்துவது அவசியம். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தருங்க. அடுத்தவர்களிடம் கவனமாக பழகுவது நல்லதுங்க.

மிதுனம்

கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். தந்தையால் வார முன்பகுதியில் நலம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் வெற்றி தருங்க. புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுபச் செலவுகள் கூடும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். அலைச்சலும் உழைப்பும் இன்கிரீஸ் ஆகும். உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். பயணத்தால் பெனிஃபிட் பெற வாய்ப்பு உண்டு. புதியவர்களின் தொடர்பு பயன்படும். கெட்டவர்களின் சகவாசத்தைத் தவிர்த்து, நல்லவர்களின் நட்புறவை நாடிப்பெறுவதும் அவர்களது ஆலோசனைகளின்படி செயல்படுவதும் நல்லதுங்க. மன உற்சாகம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும்.பக்குவமாகச் சமாளிக்கவும்.

கடகம்

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லதுங்க. பணவரவு அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லதுங்க. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லதுங்க. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீங்க. விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லதுங்க. மனதில் இருந்த டென்ஷன்ஸ் குறையும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை

சிம்மம்

தொலைதூரத் தொடர்பு பயன்படும். மனதில் துணிவு கூடும். எதிரிகள் அடங்குவாங்க. நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் நிலை உயரப் பெறுவாங்க. உடன்பிறந்தவர்கள், தந்தை, வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். குடும்பத்தில் சில இடர்பாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லதுங்க. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களும், உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் காரியமாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களது நிலை இன்கிரீஸ் ஆகும். கூட்டுத் தொழில் லாபம் தருங்க. ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 18 முதல் ஜனவரி 20 வரை

கன்னி

மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தை களை பேசுவதை தவிர்ப்பது நல்லதுங்க. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லதுங்க. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லதுங்க. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படும். சொத்து சார்ந்த விஷயங்கள் பெனிஃபிட் தருங்க. பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம்.ஸ்டூடன்ட்ஸ்ஸுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லதுங்க.எதிலும் கவனமாக செயல்படுவது நல்லதுங்க

சந்திராஷ்டமம்: ஜனவரி 20 முதல் ஜனவரி 22 வரை

துலாம்

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவாங்க. பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் பெனிஃபிட் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கம் அதிகமாகும். தலை, அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை,. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்களுக்குச் சிறுசிறு பிரச்சிsனைகள் ஏற்படும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். பேச்சாற்றல் வெளிப்படும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பாங்க. மாணவர்களது மந்த நிலை விலகும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்கவேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.: கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற தொழிகள் லாபம் தருங்க. கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவாங்க. சுப காரியங்கள் நிகழும். பண வரவு வார முன்பகுதியில் திருப்திகரமாக இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவாங்க. பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை இன்கிரீஸ் ஆகும். நிலபுலங்கள் அளவோடு லாபம் தருங்க. மாணவர்களது எண்ணம் ஈடேறும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லதுங்க. உடல் நலனில் அக்கறை தேவை. விரும்பதகாத இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்ய வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

தனுசு

நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறுவீங்க. நீங்கள் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இன்கிரீஸ் ஆகும். பணவரவு திருப்தி தருங்க. வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தருங்க. உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லதுங்க. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லதுங்க. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லதுங்க. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

மகரம்

மனதில் துணிவு கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீங்க. இயந்திரப்பணிகள் லாபம் தருங்க. வியாபாரம் பெருகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உதவி புரிவாங்க. புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பிறருக்குத் தாராளமாக உதவுவீங்க. பண வரவு கூடும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் வாரப் பின்பகுதியில் நலம் கூடப் பெறுவாங்க. வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் நல்ல இடத்துக்கு மாற்றமும் கிடைக்கும். எதிரிகள் ஏமாந்து போவாங்க. கொடுக்கல்-வாங்கல் லாபம் தருங்க. வாழ்க்கைத்துணைவரால் நலம் கூடும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். வார முன்பகுதியில் சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

கும்பம்

தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் வாரம். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர் பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். மரியாதையும், அந்தஸ்தும் இன்கிரீஸ் ஆகும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்க கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லதுங்க. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நலம்.பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். ஸ்டூடன்ட்ஸ்ஸுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

மீனம்

எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிப்பீங்க.அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும்.மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லதுங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லதுங்க. புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும்.கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்க ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லதுங்க. பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பர்.குல தெய்வ வழிபாடு நன்மை தருங்க. ஸ்டூடன்ட்ஸ்ஸுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் இன்கிரீஸ் ஆகும்.