வார ராசிபலன் 15-12-2017 முதல் 21-12-2017 வரை: வேதா கோபாலன்

மேஷம்

எடுத்தோமா .. முடிச்சோமான்னு எல்லாமே முடியும். ஜாலிதான். மகிழ்ச்சிதான். பெரிய சந்தோஷம்.. மன நிறைவு எல்லாமும் உண்டாகும். குறிப்பா.. சுபகாரியங்கள் எல்லாமே திட்டமிட்டமாதிரி முடியும். முருகர் மாதிரி … லட்சுமணர் மாதிரி மற்ற சிறப்புகள் இருக்கின்றன. சந்தோஷம்தான். கூடவே அவங்களோட கோபத்தையும் எடுத்தப் பூசிக்காதீங்கப்பா. முன்பைவிட அதிகமாய்ப் பணவரவு எக்கச்சக்கமா வரும். கவனமாய்ப் பார்த்து நல்லபடியை முதலீடு செய்து காப்பாத்திக்குங்க. ஆமாம். சொல்லிப்புட்டேன். இப்பதான் நீங்க பொறுமையா இருந்து உங்களை நிரூபிக்க வேண்டிய சமயம். எனவே கவனமாயிருங்க.. பொறுமையாகவும் .

சந்திராஷ்டமம் : டிசம்பர் 15 முதல் 18 வரை

ரிஷபம்

திடீர் செலவுகள் வரும். நிறையவே செலவாகும். ஆனால் நீங்க செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் (டாலரும் / பவுண்டும்) உங்களுக்கு நன்மையையும் மகிழ்ச்சியையும்தான் தரும் என்பது உறுதி. அதிலும் குறிப்பாய் சுப விஷயங்களுக்காகச் செலவு செய்வீங்க. பாஸ்போர்ட் விசா நீட்டிப்புகள் எல்லாம் உங்க மனசு போல சந்தோஷமாய் முடியும். திடீரென்று சட்டென்று விரைவாய் முடியும். கங்கிராட்ஸ். ஏற்கனவே கவர்ச்சி அம்சத்துக்குப் பெயர் போனவங்க நீங்க. இப்ப அது பல மடங்கா அதிகரிச்சுப் புகழும் பெருமையும் கூடும். குழுந்தைகள் வாழ்க்கையில் அருமையான முன்னேற்றங்கள் இருக்கும். அம்மாவுக்கு ஏதேனும் பிராப்ளமா? கவலை வேண்டாம். தலைக்கு வந்தது கிரீடத்தோடு போகும்

சந்திராஷ்டமம் : டிசம்பர் 18 முதல் 20 வரை

மிதுனம்

யம்மாடியோ. எம்புட்டு லாபம்ஸ். எவ்ளோ நன்மைகள். எத்தனை வருமானங்கள்.  சந்தோஷமும் மனநிறைவும் நிறைய இருக்கும். ஆனால் நாக்கில் கொஞ்சம் ஊசி வெச்சிக்கிட்டு மற்றவங்களை வார்த்தையால் குத்துவீங்களே… அதுதான் கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதை மட்டு கொஞ்சநாளைக்கு மாத்திக்குங்க. ஏனெனில் நீங்க பொதுவாய் ரொம்பவும் நல்ல மனசு உள்ளவங்க. மத்தவங்க உணர்ச்சிகளைப்புண்படுத்தாம நடந்துக்கவும் பேசவும் முயற்சி செய்து அதில் பெரிய வெற்றியும் கண்டிருக்கீங்க. இப்ப கொஞ்சநாளாய் உங்க வாக்கு ஸ்தானம் உங்க கட்டுப்பாட்டில் இருக்காது. அதுக்காகத்தான் இந்த காஷன். பிரச்சினை வராது. ஆனால் எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்க வேண்டியது முக்கியம் இல்லையா

சந்திராஷ்டமம் : டிசம்பர் 20 முதல் 23 வரை

கடகம்

புது வேலை கிடைக்கும். அதுவும் திடுதிப்பென்று கிடைக்கும். அரசு உத்யோகம் கிடைக்க நீங்க செய்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். எதையும் கொஞ்சம் பொறுமையுடன் அணுகுங்கப்பா. ப்ளீஸ்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதற்குமே அவசரப்பட வேண்டாம்.  நன்றாய் யோசித்து அழகாய்த் திட்டமிட்டு நல்லவங்க ஆலோசனை கேட்டு நடந்ததால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் என்பது உறுதி. கணவன் மனைவிக்கிடையே எந்த விஷயத்திலும் பிரச்சினை வராதபடி கொஞ்சம் அனுசரித்து (கொஞ்சம் என்ன ரொம்பவே அனுசரித்துப்) போக வேண்டியது இப்பேதைக்கு அவசியம். ப்ளீஸ்

சிம்மம்

டாடிக்கு திடீர் நன்மைகள். என்றைக்கோ நின்றுபோன உங்களின் சிறப்புத் திட்டங்கள் டியர் திட்டங்கள்.. ஆசைப்பட்டுக் கனவு கண்ட திட்டங்கள் எல்லாமும் வாசல் கதவைத் தட்டி உள்ளே வந்து நிறைவேறும். உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளாலும் கவர்ச்சி அம்சத்தினாலும் உங்களின் பணியில் சிறப்புச் சாதனைகள் செய்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. வேலை பெண்டு நிமிரும். அதே சமயத்தில் குடும்பத்திலும் குதூகலமும் கொண்டாட்டமும் இருக்கும்.  எல்லோரும் நீங்க வந்தால்தான் மகிழ்ச்சி நிம்மதின்னுவாங்க. மனசுக்குள் நிறைவும் சந்தோஷமும் இருக்கும். அட வேற என்னங்க வேணும். என்ஜாய்!

கன்னி

கலை சார்ந்த தொழில்லயும் வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கறவங்களுக்கு இப்ப பொற் காலம்தான். லாபம் கூடும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகம். கலைத்துறைல உள்ளவங்க வெளிநாடு போய் நிகழ்ச்சி நடத்தறதோடு என்ஜாயும் செய்வீங்க. வயிறு சம்பந்தமான சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும்னாலும் அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்னு உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போவீங்க. மம்மிக்கு கவர்மென்ட் நன்மைகள் ஏற்படும், அவங்க பாஸ்போர்ட் விசாவுக்குக் காத்திருந்தால் அதெல்லாம் சும்மா அநாயாசமா முடிந்து ‘ஹப்பாடா’ன்னு உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். சந்தோஷம்தானே? பேச்சில் கடுமையைக் குறைச்சுக்குங்க. அதே சமயம் பேச்சினால் நன்மையும் உண்டு.

துலாம்

பெரிய பெரிய சாதனைங்களை அநாயாசமாச் செய்யும் உங்களுக்கு எதுக்காக ஒரு தேவையில்லாத பயமும் டென்ஷனம் வருதோ? புரியலை. அதிலும் சால்ட் பெறாத விஷயங்களுக்கெல்லாம் மண்டையை உடைச்சுக்கிட்டு ராத்திரி தூக்கத்தை இழப்பானேன்? டாடிக்கு அரசாங்க நன்மைகள் உண்டு. ஒரு வேளை அவர் ஏதாவது ஒரு விஷயத்துக்காகக் காத்துக்கிட்டிருந்தாருன்னா அது சீக்கிரம் முடியும், நீங்களோ அவரோ அதை எதிர்பார்த்திருக்கக்கூட மாட்டீங்க. சிநேகிதிங்களை சின்ன சின்ன செய்கைகளால் மகிழ்வித்து மகிழ்வீங்க. ஆரோக்யத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதைப் பெரிசாக நினைத்து பயம் வேண்டாம். அறுவைசிகிச்சை என்று டாக்டர் பயமுறுத்தினாலும் பிறகு அசட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே மருந்து மாத்திரையில் சரியாகும் என்று சொல்வார்.

விருச்சிகம்

நண்பர்கள் என்றால் இவங்கதான் நண்பர்கள். எத்தனை நன்மைகள். எவ்ளோ மகிழ்ச்சி பாருங்க அவங்களால. உயிர்காப்பான் தோழன் என்பதும் உடுக்கை இழந்தவன் கை போலக்காப்பவன் என்றும் இந்த முறை உங்களுக்கு நிரூபணமாகும். ரைட்டா? இந்த ஆரோக்யம் இருக்கு பார்த்தீங்களா ஆரோக்யம்.. அது கண் மாதிரி. இதை மட்டும் மனசின் நடுவில் போட்டு உறுதியா நினைவு வெச்சுக்குங்க. ஏன்னா நீங்க அந்த ஒரு விஷயத்தில்தான் ரொம்பவும் அலட்சியம் காட்றீங்க. டாடி வெளிநாடு போவாரு. அல்லது அட் லீஸ்ட் வெளிநாட்டிலிருந்து அவருக்கு  நன்மையும் லாபமும் வரிசையா வரும்.

தனுசு

உங்க குழந்தைங்களைப் பற்றி நீங்க பெருமிதமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கர்வமும் (இன்னும் எந்த வார்த்தையை  வேணும்னாலும் போட்டுக்குங்க.. எல்லாமே நல்ல வார்த்தை கள்.. மற்றும் பாசிட்டிவ் வார்த்தைகள்) கொள்ளும் காலம் வந்தாச்சுங்க. லோனுக்காகக் காத்திருக்கீங்களா? தைரியமா .. நம்பிக்கையோட எதிர்பாருங்கப்பா. இதோ கிடைச்சுடும். கல்யாணமாகலைன்னு ஏங்கியிருந்தீங்களா? குழந்தை பிறக்கலைன்னு டென்ஷனா யிருந்தீங்களா? கவலையை விடுங்க. இதோ அந்த நல்லகாலம் பிறந்தாச்சுங்க. காத்திருந்த
சுப நிகழ்ச்சிகள் அத்தனையும் கண்முன்னால் தரிசனம் தந்து மகிழ்விக்கும்.

மகரம்

புகழும் பெருமையும் குறையும் என்றும் வாய்ப்புகள் கிடைக்காது என்றும் எல்லாப் பெயர்ச்சிப் பலன்களிலும் எழுதி உங்களை பயமுறுத்தி டென்ஷனாக்கி அப்செட் பண்ணியிருந்தாங்களா? இப்ப என்னாச்சு? நீங்க தைரியம் இழந்திருந்தாலும் உங்களுக்குத் தன்னம்பிக்கை குறைஞ்சிருந்தாலும்கூட… தன் பாட்டுக்கு எல்லா நன்மைகளும் நடந்துக்கிட்டுத்தானே இருந்துச்சு? எல்லா நெகட்டிவ் சமாசாரங்களையும் மறந்து நிம்மதியா இருங்க. வருமானம் குறையாது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எப்பவும் போல வந்துக்கிட்டுத்தான் இருக்கும். பிறகென்னங்க? வெற்றிதான். மகிழ்ச்சிதான். நிம்மதியாப்போய்த் தூங்குங்கப்பா.

 கும்பம்

பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ்க்கு வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் வரும். அதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணிகளாய் இருப்பீங்கன்றதால உங்களை அவங்க  அன்போடயும் மரியாதையோடயும் மதிப்போடவும் நடத்துவாங்க. நன்றி காட்டுவாங்க. உங்களுக்கும் முன்பைவிட நிறைய லாபம் வரும். வருமானம் அதிகமாகும்.  அலுவலகத்தில்   வெளியூர் அனுப்புவாங்க. அதனால் பெருமையும் பாராட்டும் லாபமும் கிடைக்கும். ஒன்று.. இரண்டு.. மூன்று வருமானங்களாவது வரும். கலைத்துறையில் இருக்கறவங்களுக்கு சாப்பிடவும் தூங்கவும் நேரம் இருக்காது.

மீனம்

பேச்சினால் பெரிய நன்மைகள் வரும், சுள்ளென்று யாரையும் பேச வேண்டாங்க. ஜஸ்ட் கன்ட்ரோல் செய்துக்குங்கப்பா. ப்ளீஸ். அரசாங்க உத்யோகம் கிடைக்கும், ஆனால் அதுக்காக நீங்க ஏராளமான பாடு பட வேண்டியிருக்கும். எனி வே .. ஜெயிச்சுடுவீங்க. பெரியவங்க ஆசிகளை வாங்க முயற்சி செய்யுங்க. குழந்தைங்களால சின்ன டென்ஷன்கள் வரும்தான். உடனே தலையில் கையை வெச்சுக்கிட்டு உக்காந்துடாதீங்க. எல்லாம் ஓடும் மேகங்கள் மாதிரி ஓடியே போயிடும். குழந்தைங்க வெளிநாடு போவாங்க. உங்களுக்கு சந்தோஷம் நிம்மதி பெருமிதம் எல்லாம் அவங்களால ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published.