வார ராசிபலன்: 16.4.2021 முதல் 22.4.2021வரை! வேதாகோபாலன்

மேஷம்

உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து உயரதிகாரி களின் நன்மதிப்பைப் பெறுவீங்க. பிசினஸ் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வீண் வார்த்தைகளை‘க் குறைங்கப்பா. அது பிரச்சினையைத் தவிர்க்கும். இன்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு ஹெல்ட் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிராப்ளம்ஸ் ஏற்பட்டு நீங்கும். ரிலேட்டிவ்ஸ்ஸுடன் பேசும்போது பொறுமை அவசியம். கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. உங்க திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உள்ளவங்க, பணியில் கவனமாக இல்லாவிட்டால் மேலதிகாரி களின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். தொழிலில் இன்கம் இருக்கும். குடும்பத்தில் மனவேறுபாடுகள் நீங்குவதால் ஹாப்பினஸ்யான சூழல் நிலவும். கடன்கள் தொல்லை தராது. தூரத்து உற வினர்களின் திடீர் வருகையால் செலவு உண்டு.. பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனாலும், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். டாடியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைங்க பிடிவாதமாக இருப்பாங்க. கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவங்க உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீங்க.

மிதுனம்

சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு சல சலப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க எண்ணிய ஒருவரை சந்திப்பீங்க. நிதானப் போக்கை கடைப்பிடிக்கணுங்க. . உத்தியோக மாற்றத்தை தேடிச் செல்ல வேணாம். கணவன்-மனைவி உறவில் ஹாப்பினஸ் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் குறைவு என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். டாடிவழி ரிலேட்டிவ்ஸ் வருகையால் வீட்டில் சில பிராப்ளம்ஸ் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பது சாதகமாக முடி யும். நீண்டநாள்களாகச் செலுத்த முடியாமல் இருந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். புது முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவாங்க.

கடகம்

செலவுகளை திட்டமிடுவது அவசியம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருந்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீங்க. பிசினஸ் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு, அவைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீங்க. எதிர்பார்த்ததைவிடவும் இன்கம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்க முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு ரிலேட்டிவ்ஸால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு பிள்ளைகள் வழியில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். டாடியிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கை கால் வலி சோர்வு வந்து போகும்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்கள், ஆபீசில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அவசியமான வேலையை செய்ய வேண்டியதிருக்கும். பிசினஸ், லாபம் தருவதாக இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிராப்ளம்ஸ் வரலாம். சுப காரியங்களைத் தள்ளிவைப்பது நன்மை யளிக்கும். குடும்பத்தில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. ரிலேட்டிவ்ஸ் வருகை சந்தோஷம் தரும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக மனஸ்தாபம் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. . உங்க பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

கன்னி

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்க கைக்கு வந்து சேரும். உங்களுடைய அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாயமடைவீங்க. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவாங்க. தேவைகள் பூர்த்தியாகும் தடை, தாமதங்களை தவிர்க்க இயலாது. உத்தியோகஸ்தர்கள், பொறுப்பில் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பிசினஸ் செய்பவர்கள், குறித்த நேரத்தில், பணிகளை முடித்து பாராட்டு பெறுவீங்க. குடும்பம் சீராக நடைபெற்று வரும். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக அதிக அளவில் பணம் செலவாகக்கூடும்.. நெருங்கிய ரிலேட்டிவ்ஸ் மூலம் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சாமர்த்தியமாகச் சரிசெய்துவிடுவீங்க. கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம்

காரியங்கள் யாவும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரியின் விருப்பப்படி முக்கிய வேலை ஒன்றை விரைவாக செய்வீங்க. பிசினஸ், நல்ல இன்கம் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிராப்ளம்ஸ் இருக்கத்தான் செய்யும். பணவரவு இருந்தாலும், செலவும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். டாடிவழி ரிலேட்டிவ்ஸால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் சில வேலைகளை மட்டுமே நினைத்த வேகத்தில் முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 14 முதல் 17 வரை

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களில் தீவிர முயற்சியால் வெற்றி பெறுவீங்க. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு விரும்பியபடி இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முதலீடுகளை அதிகரிக்க வேணாம். குடும்பத்தில் தோன்றும் சிறுசிறு பிரச்சினைகளை, சாமர்த்தியமாக சமாளித்து விடுவீங்க. பணவரவைப் பொறுத்த வரை திருப்திகரமான போக்கே காணப்படுகிறது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். வாழ்க்கைத்துணைவழி ரிலேட்டிவ்ஸ் வருகை செலவுகளை ஏற்படுத்துவதுடன் ஹாப்பினஸ் தருவதாக இருக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19 வரை

தனுசு

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டியதிருக்கும். தொழிலில் வாடிக்கை யாளர்களின் அவசரம் கருதி, முக்கிய வேலையை விரைவாகச் செய்து கொடுப்பீங்க. குடும்பத்தில் திட்டமிட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் செலவுகள் இருக்காது. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். டாடியுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். டாடிவழி ரிலேட்டிவ்ஸால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நண்பர்களின் வருகை ஹாப்பினஸ் தருவதாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு உகந்த வாரம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சகிப்புத் தன்மை தேவைப்படும். தீயவரை நல்லவர்னு நெனைச்சு நட்பு பாராட்டிடாதீங்கப்பா.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 22 வரை

மகரம்

உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீங்க. தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சமாளித்து விடுவாங்க. சிறிய கடன் தொல்லை தரலாம். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிலேட்டிவ்ஸ் வருகையால் குடும்பத்தில் சில பிராப்ளம்ஸ் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீங்க. கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீங்க. உங்க செயலில் வேகம் கூடும்.

கும்பம்

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, வெளியூர் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். பிசினஸ் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கை யாளர் சேர்க்கை உண்டு. குடும்பம் சீராக நடை பெறும். கணவன் – மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீங்க. பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதி உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பாங்க. அவர்களால் ஆதாயமும் உண்டாகும். டாடியின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். செலவுகள் ஏற்பட்டாலும் பணவரவு இருப்பதால் சிரமம் எதுவும் இல்லை.

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர் பார்த்தபடி பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். தொழிலில், பணிகள் சுறுசுறுப்பாக நடை பெறும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்வீங்க. செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக குறுகிய தொலைவுப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவங்களோட வளைஞ்சு கொடுத்துப் போங்க.