வார ராசி பலன் 17-11-17 முதல் 23-11-17 வரை – வேதா கோபாலன்

மேஷம்

ஏகப்பட்ட அட்ராக்ஷன் கூடும். உங்க செல்வாக்கு உயரஉயரப் போகும். சகோதர சகோதரிகளுக்கு குட் நியூஸ் உண்டு. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதற்கேற்ப அனைவரையும் பேச்சிலேயே கவர்ந்து மகிழ வைப்பீங்க. அலுவலகத்தில் மண்டையை பிச்சுக்கும்படியா சம்பவங்கள் நடந்தாலும் பொறுமையா சரி செய்வீங்க. ஒரு வேளைக்கு நடந்துக்கிட்ட மாதிரி மறுவேளைக்கு நடந்துக்க மாட்டீங்க. ஏராளமான குண மாற்றங்கள் இருந்துக்கிட்டே இருக்கும். உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக்கிட்டா பிரச்சினை வராது.

சந்திராஷ்டமம் : நவ 18 முதல் நவ 20 வரை

ரிஷபம்

ஆரோக்யம் ஆரோக்யம்னு சொல்லுவாங்களே.. அப்படி ஒரு விஷயம் நினைவிருக்கா? கவனம் தேவை. ஆமாம் சொல்லிட்டேன். . ரூபாயை அடுக்கி வைக்க இன்னொரு வீடுதான் வாங்கணும் நீங்க. அவ்ளோ பண வரவு வரும். சரியாச் சேமிச்சு வெச்சுக்கங்க. எவ்ளோ உழைக்கறீங்க. சமீபத்தில் வெற்றிகளும் சுப நிகழ்ச்சி களும் லாபங்களும் அதிகரிச்சிருக்குமே? புகழும் பேரும் அபரிமிதமாய்க் கிடைக்கும். கோயில்களுக்குப் போகும் திட்டங்கள் சற்று தள்ளிப்போனாலும் ஒரு வழியா நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : நவ 20 முதல் நவ 23 வரை

மிதுனம்

வெளிநாட்டில் உள்ள உறவினர்களால் லாபமும் நன்மையும் கிடைக்கும்.  கன்னாபின்னான்னு சாப்பிடா தீங்க. அப்புறம் அவஸ்த்தைப் படாதீங்க. ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கத்தையும் வெட்டென மறங்க. பார்வை டெஸ்ட் செய்துக்குங்க. நண்பர்கள் மற்றும் சிநேதிங்க கிட்ட கோப தாபங்கள் வேண்டாம், ப்ளீஸ். பிறகு ஸாரி சொன்னாலும் ஒட்டாது. தேவையா? குழந்தைகள் வாழ்வில் மிகவும் எதிர்பாராத நன்மை மிகவும் சட்டென்று நிகழும்.

கடகம்

திருமணம் தள்ளிப்போய் டிலே ஆனால் கவலையே படாதீங்க. எல்லாம் நன்மைக்கே என்பதை மட்டும் மைண்ட்ல உறுதியா ஆணியடிச்சு மாட்டிடுங்க. வாழ்க்கைத் துணைவர் வெளியூர் வெளிநாடு போவாங்க.  குடும்பத்தைப் பிரிஞ்சு அலுவலக ரீதியாய்ப் வெளியூர்ப்பயணம் போக வேண்டி வரும்.  அந்தப் பிரிவுக்கு உங்களுக்குப் பரிசா அவருக்கு  உத்யோகமும் சம்பளமும் பாராட்டும் அவார்டும் ரிவார்டும் கிடைக்குமே. கணவருக்கு/ மனைவிக்கு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் இருக்கும். அதில் உங்க பங்கும் இருக்கும்.

சிம்மம்

எந்த சிநேகிதரையும் சிநேகிதியையும் பகைச்சுக்க வேண்டாம். எந்த பகைவர்கிட்டயும் வம்புக்குப் போக வேண்டாம். இன் ஷார்ட் நண்பர்களிமும் பகைவர்களிடமும் சர்வஜாக்கிரதையா இருங்க.அலுவலகத்தில் பொறுமையும் பொறுப்புமாய்ப் பணியாற்றி அவங்க கிட்டேயிருந்து உங்களுக்குப் பாராட்டும் கிடைக்கும். ஓகே தானே? சந்தோஷமா? நல்லாத்தான் பேசிக்கிட்டிருப்பீங்க.. எனினும் நடுநடுவில் சுள்ளுன்னு ஒரு வார்த்தை வருது பாருங்க. அதை மட்டும் அவாய்ட் செய்துடுங்க, ப்ளீஸ்..

கன்னி

மகனையோ மகளையோ வெளிநாட்டில் படிக்க வைக்கக் கொஞ்சம் செலவு செய்ய வேண்டி வரலாம். டோன்ட் ஒர்ரி. பல மடங்காகித் திரும்பி வரும். குடும்பத்தில் பலர் ஒன்றாய்க்கூடுவீங்க. ஜாலியா சந்தோஷ மாய்ப் பொழுது கழியும். என்ஜாய். நீங்க எப்ப சிரிப்பீங்க எப்ப கடிப்பீங்கன்னு தெரியாம அடுத்தவங்க குழம்பறதைப் பார்க்கறதுல என்னங்க சந்தோஷம்? நல்ல காரணத்துக்காக உங்களுக்கு  ரொம்பவும் வேண்டியவங்களைப் பிரிய நேரலாம்.

துலாம்

மகன் வெளியூர் அல்லது வெளிநாடு போவார். கல்வி  அல்லது பணிக்காகன பயணம் அது.. உங்களுக்கு அது பற்றிப் பயம் அல்லது கவலையா? நோ நோ. சூப்பர் வெற்றியுடன் வருவார். பொறாமை புழுக்கம் எக்ஸட்ராவையெல்லாம் மூட்டை கட்டித் தூக்கிப்போடுங்க. எக்கச்சக்க  கோயில்ஸ் விசிட்டா? புது வேலை கிடைக்கும். பேங்க் அல்லது அரசாங்க வேலை கிடைக்க அதிக வாய்ப்புண்டு.  நீங்களே பணிக்காக வெளியூர் வெளி நாடுன்னு போக வேண்டியிருக்கலாம். சந்தோஷமாய்க் கிளம்புங்க. லாபம்தான்.

விருச்சிகம்

பேச்சில் சாபம்.. பாய்ஸன் என்று எதுவும் கலக்காமல் அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் பேசுவது மத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ உங்களுக்கு ரொம்பவே நல்லது. ஸ்டூடன்ட்ஸ்க்கு இது ஜாக்பாட் காலம். அனேகமாய் ஸ்பெக்ஸ் பவர் கூடியிருக்கும். பெரியவங்க ஆசி கிடைக்கும். கோயில்களுக்கு விசிட் போவீங்க. சிஸ்டர்ஸும் பிரதர்ஸ்ம் அலுவலக விஷயமாவோ படிப்பு சம்பந்தமாவோ வெளியூருக்கோ அல்லது ஃபாரினுக்கோ போவாங்க.

தனுசு

பாஸ் கூப்பிட்டுப் பாராட்டுகிறாரோ இல்லையோ இத்தனை நாள் திட்டிய திட்டுக்கு மாற்றா ஒரு புன்னகை யாவது அளிப்பார். மம்மிக்கு வாகனம் கிடைக்கும். புதிய பிசினஸ் அல்லது உத்யோகத்தில் காசு மழை கொட்டும். உடல் ஆரோக்யத்தில் பிரச்சினை இருந்தாலும் டென்ஷனெல்லாம் ஆக வேணாம்மா. உங்க உழைப்பும் நல்ல சிந்தனைகளும் லாபத்தையும் ஆரோக்யத்தையும் தரும். நடவடிக்கைகளில் நிறைய கவனம் தேவை, அடக்கி வாசிங்கப்பா .

மகரம்

எவ்வளவு கவலை கஷ்டம் வந்தாலும் பனி போல் நீங்கும் பிரச்சினை எதுவும். நமக்குத்தான் வாய் இருக்கு.. நமக்குத்தான் பாஷை தெரியும்னு பேசித்தள்ளிட்டுப் பிற்பாடு தவிக்காதீங்க, வாயில் கட்டாயம் பூட்டுப் போட்டுக்கணும். சொல்லிட்டேன்.  அப்பாவுக்கும் உங்களுக்கும் சூப்பரான நல்லுறவு நிலவும், திடீர் திடீர் என்று அதிருஷங்கள் உங்க மடியில் வந்து உட்கார்ந்து கொஞ்சம். என்ஜாய். அலுவலகத்தில் நீங்கதான் மையக்கவர்ச்சியா இருப்பீங்க.

கும்பம்

அவசியமற்ற பேச்சகள் வேண்டவே வேண்டாம். மம்மிக்கு ஏரளமான நன்மைகள் வரும். நிறைய நிறைய லாபங்களும் வகைவகையான வருமானங்களும் வரும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…கரெக்ட். உடனே அகமகிழ்ந்து கவச குண்டலத்தைத் தூக்கிக் கழற்றிக்கொடுத்த கர்ணன் மாதிரி ஆயிடுவீங்களா? உணர்ச்சிவசப்படாம அடக்கி வாசிங்க.

மீனம்

வெளிநாடு சம்பந்தமான வேலை அல்லது பிசினஸ்ல பிசியாகி டாலர்களைக் கல்லாவில் நிரப்பிக்குவீங்க. எல்லாமே சற்று ஸ்லோமோஷனில் நகர்ந்தாலும் வெற்றி மின்னல்  மாதிரி கிடைக்கும். இன்னிக்கு ஒரு பிளேனில் நாளைக்கு ஒரு ரயிலில்னு நிறைய அலைச்சல்தான். ஆனாலும் அதை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம்.

சந்திராஷ்டமம் : நவ 16 முதல் நவ 18 வரை

Leave a Reply

Your email address will not be published.