Random image

வார ராசிபலன்: 19-04-2019 முதல் 25-04-2019 வரை – வேதா கோபாலன்

மேஷம்  

நிறைய வகை லாபங்கள் வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு ஜாக்பாட்தான். தந்தை வழி சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதலாய் நாட்டமும்  கவனமும் தேவை.   நண்பர்கள், உறவினர் களுடன் பயணங்கள் போவீங்க. செம ஜாலிதான் போங்க. அப்பாவுடன் இணக்கமாகச் செல்லுங்கள். சுப செலவுகள் நிச்சயமாய் உண்டுங்க. ஆனாலும் அளவுக்கு அதிகமாய் ஒடிடாமல் பார்த்துக்குங்க. உத்யோகத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் உண்டு. சகோதர சகோதரிகளுடன் சண்டை வேண்டாம்.  அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகப் பாருங்க. ப்ளீஸ்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை

 ரிஷபம்

நோய்கள் குணமாகி நிம்மதி பிறக்கும். மாணவர்கள் தயவு  செய்து படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அது பற்றி இத்தனை காலம் இருந்து வந்து டென்ஷன்கள் குறையும். நகைகளும் உடைகளும் வாங்குவீங்க. மனசில் குதூகலமும், சந்தோஷமும், நிறைவும், நிம்மதியும் நிரம்பி வழியும்.  நண்பர்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பழைய பகைகள் காணாமல் போகும்.  ஒதுங்கியிருந்த நண்பர்களும் உறவினர்களும் ஓடி வந்து ஒட்டுவார்கள். நீங்க எப்பவும் போலவே அமைதியா இருப்பீங்க. உங்க சமீபத்திய வெற்றிகள் பலரை ஆட்டம் காண வைத்துவிட்டது என்பதென்னவோ உண்மைதான். சொல்லிக்க மாட்டாங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை

மிதுனம்

கோபத்தால் உடல் நிலை பாதிக்கப்படலாம். எனவே கோபம் வேண்டாம். பயணங்கள் நிறைய இருக்கும். அது அலுவலக சம்பந்தப்பட்ட பயணமாகவும் இருக்கலாம். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிக்காகவும் இருக்கலாம்.  அக்கா.. தங்கை.. அண்ணா .. தம்பி .. குடும்பத்துடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத் தினரால் நன்மைகள் ஏற்படும். உங்களின் கவர்ச்ச அம்சமும் அதிகரிக்கும். கல்வித் துறையிலும் கலைத்துறையிலும் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களால் இத்தனை காலம் இருந்த வந்த பிரச்சினைகள் இனி இல்லை.

கடகம்

அலுவலக விஷயமாக வெளியூர் வெளிநாடு செல்வீர்கள். குழந்தைகளைக் கண்காணிப்பது நல்லது. உங்களுக்கு நேரமே இருக்காது. எனினும் குழந்தைகளின் நலன் அதைவிட முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் கவனிக்கறீங்க  என்பது தெரிந்தாலே அவங்க நல்ல வழியில் நடப்பாங்க. உங்களின் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். பொழுது போக்கான காரியங்கள் மகிழ்ச்சி தரும். அடிக்கடி விருந்து உண்பீர்கள்.  அப்பாவின் ஆரோக்யம் பற்றி இத்தனை காலம் இருந்து வந்த  டென்ஷன்கள் குறையும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். குறிப்பாக சகோதரிகளால் அதிக நன்மை ஏற்படும்.  உங்களின் தொழிலில் ஏற்கனவே இருந்து வந்த  எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்திலும் கல்வி கற்குமிடத்திலும் உங்களின் திறமைக்குரிய பலன் கிடைத்துவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். அவர்களின் லட்சியங்கள் நிறைவேறும்  தொலைதூரப் பயணம் நன்மை தரும். அதிலும் அலுவலகம் சார்ந்த பயணம் என்றால் உயர்வுகளை ஏற்படுத்தித் தரும் ஏணியாகவும் அது அமையும். பக்தியும் அதிகரிக்கும். பிரார்த்தனைகளும் நிறைவேறும். வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தீங்களா? கவலை வேண்டாங்க. வேலை கிடைக்கும்.

கன்னி

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவும்.  பலவித சூழ்நிலைகள் காரணமாக அலைச்சல் சற்று கூடவே செய்யும். அது அலுவலகம் சம்பந்தமாகவும் இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவும் இருக்கலாம். உல்லாசப்பயணமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்காத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். வாகனங்களால் இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்த நிம்மதியடைவீர்கள். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பிரபலமானவங்களும் மேலதிகாரிகளும் உதவுவாங்க. 

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வர வேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கொடுத்த கடனும் வாங்கிய கடனும் தீரும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குறிப்பாகத் தங்க நகை போன்ற விஷயங்களில் அதிகப்படி கவனத்துடன் இருங்கள். தந்தை நலம் பற்றிய கவலை தீரும். அவரால் உங்களுக்கு நிம்மதி கிடைப்பதுடன் நன்மைகளும் விளையும் லாபமும் அடைவீர்கள் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சிறு பிரச்சினைகள்கூட உண்டாகக்கூடாது என்பதில் கவனமாகவும் உறுதியாகவும் இருந்தால் நீங்கள் ஜெயித்துவிடுவீங்க.

விருச்சிகம்

புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். உடைகள் மற்றும் நகைகள் வாங்குவீங்க. அதாவது, அதிகச் செலவானாலும் அது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருவது உறுதிங்க.  கண் சம்பந்தப்பட்ட  பிரச்சினைகளுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்தால் பிரச்சினை பெரிதாகாது. பேச்சில் திறமை பளிச்சிடும். குறிப்பாக மேடைப்பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். பெருமிதம் அடையும் வகையில் புகழ் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்புக் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.

தனுசு

கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். வெண்மையான பொருட்களால் நன்மையும் லாபமும் கிடைக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும். உங்களின் மனதுக்குப் பிடித்த வகையில் இடமாற்றம் உண்டாகும். அரசுப்பணிகளில் விழிப்புடன் இருப்பவருக்குப் பிரச்சினை வராது. திருமணம். உத்யோகம் போன்ற முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் நன்மைகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.  வடதிசையிலிருந்து நல்ல செய்தி வரும்.  அரசாங்கத்தின் மூலம் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கும்  நன்மைகள் கிடைக்கும். 

மகரம்

கடன்கள் அதிகமாகும். ஆனால் நல்ல காரணங்களுக்காகக் கடன் வாங்குவதால் கவலை  வராது. கலைத்துறையில் உள்ளவர்கள் அதிக நலம் பெறுவீர்கள். கல்வி பற்றிய உதவிகள் கிடைக்கும்.  நல்லவர்களின் நட்பு கிடைக்கும். விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். குழந்தைப் பேறு   போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வீடு வாங்குவீர்கள்.  உங்களைப் பற்றி உங்களின் பெற்றோர் கண்டிருந்த கனவுகளெல்லாம் நல்லபடியாக  நனவாகும். தந்தைக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பள்ளி, கல்லூரியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில்  பாராட்டுப்பெறுவீர்கள்.

கும்பம்

உங்களுக்கு இத்தனை காலமாக இருந்து வந்த திருமணத் தடைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  நன்மையும்தான் தரும். அலுவலகத்தில் நீங்கள் பலகாலம் ஏங்கிருந்த மேலதிகாரிகளின் பாராட்டுக்கிடைக்கும். இந்த வாரம் மிக மலர்சியான வாரமாகும். உங்கள் துணையின் மேல் அன்பும் பாசமும் ஏற்படும். இத்தனை காலம் அவங்களுக்கும்/ அவருக்கும் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் சுலபமாக மறையும்.  எனவே எந்த சிக்கலுமின்றி வாழ்க்கை இனிமையாகச் செல்லும். அலுவலக வாசிகள் இந்த வாரம் மிக சிறந்த வெற்றிகளை அடைவீர்கள். ஆனாலும் தாமதத்துக்குப் பிறகே வெற்றி கிட்டும். அனாவசியமான செலவுகள் வேண்டாம். கட்டுப்படுத்திக்குங்க. காதல் வாழ்வில்  எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மீனம்

இன்ப துன்பம் கலந்த பலன்களை பெறுவீர்கள். குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்னுமளவு  சமாளிச்சு வெற்றிகரமாய் நிமிர்ந்துடுவீங்க. வேலைப்பளு அதிகமாகும். ஏகமாய் உழைக்க ஆரம்பிப்பீங்க. ஆனாலும் அதில் ஒரு மன நிறைவும் மகிழ்ச்சியும் இருக்கும் என்பதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாங்க ப்ளீஸ். பங்கு சந்தையில் இருந்து தள்ளி இருப்பது நலம். அதில் அதிக முதலீடு எதுவும் இப்போதைக்கு வேண்டாம். வழக்கமான தொழில் மற்றும் உத்யோகம் குறையின்றி நடக்கும். அதிலும் நல்லபடியாக கவனம் செலுத்தி மற்றவர்களைத் தலையிடவிடாமல் நடத்துங்க. வெற்றிதான்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 21 வரை