வார ராசிபலன்: 19.6.2020 முதல் 25.6.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவைங்க. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டுங்க. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கடின உழைப்பால், வாழ்க்கை யில் முன்னேற்றங்களை அடைவீங்க. அதிகாரிகளுக்கு கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்குங்க.. அனைத்து இலக்குகளையும் எளிதில் அடைய உங்கள் தீர்மானங்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குங்கப்பா.  

ரிஷபம்

அலுவலகத்தில் முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்க. கணக்குகளை சீராக்குங்க. அப்போதுதான் வெற்றியடைய முடியும். இனி தடைப்பட்ட தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்குத்  தொழிலில் முன்னேற்றங்கள் தடைப்படும். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் வந்து சேரும். சுகாதார நடவடிக்கைகள், கஷ்டங்களைக் குறைக்கும். சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெறலாம். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். சற்றே பொறுமையா இருந்தால்போதும். பிரச்னைகள் தீருமுங்க. அலுவலக டென்ஷன்ஸ் குறைய ஆரம்பிக்கும்.

மிதுனம்

பிசினஸ் பார்ட்னர்ஸ் ஒத்துழைப்பாங்க. மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். முயற்சி பலிதமாகும். குடும்ப நலம் சீராகும். உழைப்பு வீண்போகாதுங்க. மனத்தில் துணிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்குங்க.. பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நோக்கம் நிறைவேறும். அலைச்சலைத் தவிர்க்க இயலாதுங்க. விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும். வார இறுதியில் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்குங்க.. தந்தைவழியில் சில சஞ்சலங்கள் இருக்கும். தந்தைக்க வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.  பய உணர்வு தீரும். கண் பவர் டெஸ்ட் பண்ணிக்குங்க.

கடகம்

வெளியூர், வெளிநாட்டுத்தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்குங்க.. ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். கடல் வாணிபத்தில் வளர்ச்சி காணலாம். மகன்/ மகளால் பிரச்னைகள் சூழும். மறதி உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீர வழிபிறக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பிசினஸ் செய்வோருக்கு வீண் அலைச்ச லும், உடல் அசதியும் ஏற்படும். வருவாய் கிடைத்தாலும் உறவினர் செலவு வைப்பதால் சில பிரச்னைகளும் உண்டாகும். பிற்பாதியில் வளமான பலன்களை பெறுவீங்க. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்குங்க. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும்.

சிம்மம்

சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி னாலும் மெடிக்கல் செலவுகள் ஏற்படாது. கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமா இருப்பாங்க. கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருப்பதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியா பாரத்தில்  மற்றும் உத்யோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

கன்னி

வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்க எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும். திடீர் லாபங்களும் வருமானங்களும் கிடைக்குங்க. வெளிநாட்டு உத்யோகம் அமையும். ஏற்றுமதி இறக்குமதி  பிசினஸ் சூப்பரா பிக் அப் ஆகப்போகுது பாருங்களேன்.

துலாம்

நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் எதிர் கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவீங்க. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்த நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத வகையில் கிடைக்குங்க. உதவியினால் தேவைங்ககளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை

விருச்சிகம்

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லதுங்க. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் : ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை

தனுசு

எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீங்க. உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாச் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி உண்டா கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை

மகரம்

புத்திசாதுர்யமும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பொருளாதார நிலை நல்லாவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர்அதிகாரிகளால் அனுகூலப்பலனை அடைவீங்க. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பாங்க. கலைத்துறையில் போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்குங்க. பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மெடிக்கல் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.     

கும்பம்

பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளிப் போவது நல்லதுதான். உற்றார் உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்

மீனம்

கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவாங்க. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவைங்க. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவாங்க. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மெடிக்கல் செலவுகள் ஏற்படும். கலை சார்ந்த தொழில் செய்யறவங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை  ஏற்படாது. எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்குங்க. உத்தியோகத்தில் உள்ளவங்க எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும்.

கார்ட்டூன் கேலரி