வார ராசிபலன் – 2.03.2018 முதல் 08.03.2018 வரை: வேதா கோபாலன்

மேஷம்

வங்கியில் வெச்சிருந்த இருப்பு திடீர்னு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதிருஷ்டம் என்பதை விடவும் உங்க பல வருஷ உழைப்பின் பலன் என்பதுதான் கரெக்ட். ஆரோக்யத்தை கொஞ்சம் கரெக்டா பார்த்துக்கிட்டீங்கன்னா பிரச்சினை இல்லாத வாரம்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. பல வருமானங்கள் உங்களைத்தேடி வரும். என்றைக்கோ செய்த முதலீடுகள் மூலமாகவும்.. அரசாங்கம் மூலமாகவும்…. நீங்கள் கற்ற கல்வி மூலமாகவும் வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. குடும்பம் இணைந்து உல்லாசமாகப் பயணமெல்லாம் போவீங்க. பல வருஷம் சந்திக்காத சொந்தக் காரங்களையெல்லாம் மீட் பண்ணுவீங்க.

சந்திராஷ்டமம்: 07.03.2018 முதல் 10.03.2018 வரை

ரிஷபம்

கணவன் மனைவி ஒருத்தருக்கொருத்தர் மிகவும் சப்போர்ட்டாவும் இருப்பீங்க. வழிகாட்டியா வும் இருப்பீங்க. சிலருக்கு திடீர்னு அரசாங்கம் மூலம் நன்மையும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்குப் பங்குதாரிகளின் மூலம் உதவியும் நன்மையும் கிடைக்கும். கணவர்க்கு/ மனைவிக்கு ஏற்பட்டுள்ள சின்ன ஆரோக்யக்குறைபாடு முழுவதும் சரியாகும். சகோதர சகோதரிகளுக்கு உங்களின் உதவி தேவை.. மனசாரச் செய்யுங்க.. பெற்றோர் மனசை மகிழ்விக்கறீங்க.. அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். கல்வி சம்பந்தமான நன்மைகளும் லாபங்களும் வரும்.

மிதுனம்

மனசுக்கு நெருக்கமானவர்களால் ஏற்படும் சின்ன வருத்தங்கள் உடனுக்குடன் சரியாகும். அதுக்காகவெல்லாம் மனசைப் போட்டு உழப்பிக்காதீங்க. குடும்ப உறவினரிடையே சின்னச்சின்னதாய்க் கசமுச இருக்கும். கண்டுக்காம விடுங்க. ஆனால் ஒண்ணு மட்டும் ரொம்பவும் முக்கியங்க… மறந்தும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டுப் பிறகு சிரமப்படாதீங்க… வாங்கிக் கட்டிக்காதீங்க. குறிப்பா நல்லவங்களை மனசார மதிச்சா நன்மை உங்களுக்குத்தான். நல்ல செலவுகள் வரும். தாய் தந்தைக்கு சுப நிகழ்ச்சி செய்து சந்தோஷப்பட்டு சந்தோஷப்படுத்துவீங்க.

கடகம்

ஒரு கொடுங்கோல் மன்னர் மாதிரி அல்லது ராணி மாதிரி நடந்துக்க முயற்சி செய்யவே செய்யாதீங்க. பணிவுதான் நல்ல சினேகிதங்களையும் பாராட்டுகளையும் வாங்கித் தரும் என்பதை மறக்காதீங்க. குழந்தைங்க வாழ்க்கைல பெருமிதப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். கணவர்/ மனைவி வெளி நாடு போவாங்க. அவரின் எந்தப் பயணமும் அவருக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் லாபமோ மகிழ்ச்சியோ அளிக்கும். நண்பர்களால்/ சினேகிதிகளால் அதிக நன்மை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அவங்க மேல பாயாதீங்க. அவங்க நிலமையைப் புரிஞ்சுக்குங்க.

சிம்மம்

குழந்தைங்க கூட நல்லபடியா அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கத்துக்குங்களேன். அதை விட்டுட்டு எப்பவுமே அவங்களையே குற்றம் சாட்டினால் எப்படி? கவர்ச்சி மாணவர்களுக்கு திடீர் முன்னேற்றங்களும் பாராட்டும் கிடைக்கும். வாகனம் வாங்க எத்தனை காலமா திட்டமிட்ருந்தீங்க. இப்போ நிறைவேறும். புது வேலை கிடைக்கும். நீங்க மன நிறைவோட அக்ஸப்ட் செய்வதாக இருக்கும். திருப்தியளிக்கும் வேலையாகவும் இருக்கும். எனினும் எந்தப் பெரிய முடிவு எடுப்பதற்கு முன்பும் விஷயம் தெரிந்தவர்களையும் உங்க ஜோதிடரையும் கன்சல்ட் செய்ங்க.

கன்னி

சகோதர சகோதரிகளுக்கு திடீர் நன்மை ஏற்படுவது மட்டுமில்லாமல், அவங்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த உறவுப்பாலமும் உறுதி படும். புகழின் உச்சியை நோக்கிப் போவதற்கான படிகளில் மள மளன்னு ஏற ஆரம்பிச்சுட்டீங்க. சபாஷ். இனி வெற்றியின் உச்சிக்குப் போய்த்தான் நின்று திரும்பிப் பார்ப்பீங்க. இப்போதைக்கு வாகனம் வாங்கியே தீரணும் என்றால் மட்டுமே அதில் இறங்குங்க.. இல்லாட்டி பொறுமையா இருப்பது ரொம்பவும் நல்லது. குழந்தைங்க ஒரு பக்கம் டென்ஷன் செய்தாலும் இன்னொரு பக்கம் பாராட்டும் புகழும் வாங்கி வந்து உங்களை உச்சி குளிரவும் செய்வாங்க.

துலாம்

ஆரோக்யப் பிரச்சினைகள் இருந்தாலும் அவை பெரிதாகாது… நிரந்தரமாகவும் இருக்காது. அறுவை சிகிச்சை என பயந்த் விஷயங்கள் எளிதான மருந்திலேயே சரியாகிவிடும்..  எனவே கவலைப்படாதீங்க அண்ட் பயப்படாதீங்க. பேச்சினால் நன்மைகள் விளையுமாறு பேசுங்க. புத்திசாலித்தனமான தீர்மானங்கள் எடுக்க நண்பர்கள் மிகவும் உதவி செய்வாங்க. அலுவல கத்தின் வெளிநாட்டுக்கிளை உங்களை அழைக்க வாய்ப்புள்ளது. சென்று வென்று வாருங்கள்.  சகோதர சகோதரிகளுக்கு சின்ன பிரச்சினை வரலாம். ஸோ வாட். சரி செய்யத்தான் நீங்க இருக்கீங்களே. உதவுங்க.

விருச்சிகம்

தேவையில்லாத மன உளைச்சல்களுக்கு வேறு யாருமே காரணமில்லை. நீங்களேதான்.. உங்களின் கற்பனையும் மனப்போக்கும் சந்தேகங்களும்தான் என்பதை மறக்காம நினைவில் வெச்சுக்குங்க. குழந்தைங்க நீங்க எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறுகிறார்களான்னு பார்க்காதீங்க. உங்க எதிர்பார்ப்பு ரொம்ப அதிகங்க. அவங்க நல்லபடியாத்தான் போயிக்கிட்டி ருக்காங்க. பேச்சை மிக மிகக் குறைங்கப்பா. பேச்சினால் பிரச்சினை வராம பார்த்துக்குங்க. திடீர்னு லக் வந்து உங்க மெயிபாக்ஸ் வழியா உங்களை எட்டிப்பார்க்கும்.

தனுசு

உங்க நண்பர்கள் மற்றும் சிநேகிதிகள் நிறைய நன்மை செய்ய ஆரம்பிப்பாங்க. ஒரு சிலர் உங்க வாழ்க்கையின் முன்னேறத்தை ஏற்படுத்தும் திருப்பு முனையைக் கூட அன்பளிக்கக்க கூடும். முன்பு பயமுறுத்திய  ஆரோக்யம் இப்ப புன்னகைக்க வைக்கும். அப்பாடா. மீண்டு விட்டீர்கள். உங்க டாடி பிரபலமாவார். அவருக்கு அலுவலகத்தில் பாராட்டும் ரிவார்ட் அல்லது அவார்டும் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவங்களுக்கு சூப்பர் வெளிச்சம் மேலே பட்டு ஏராளமான கைதட்டல்களை வாங்கித்தரும். என்ஜாய்.

மகரம்

குழந்தைங்க உங்க மீது இப்போது கொண்டிருக்கும் கோபமெல்லாம் சும்மா தற்சமயத்துக்குத் தான்.  அதுக்காக நீங்க அவங்களைப் பரம எதிரி மாதிரிப் பார்க்கக்கூடாது. நாளைக்கே அசடு வழிய நேரிடும். கவர்ச்சிகரமான உங்களின் பேச்சால்  நிறைய சாதிப்பீங்க. அலுவலகத்தில் ஹீரோ/ ஹீரோயின் நீங்கதான். காதல் அரும்பும். பணவரவு நீங்க எதிர்பார்த்ததுக்கும் மேலயே இருக்கும். வழக்கமா திருப்தியடையாத நீங்ககூட சந்தோஷமா முகத்தை வெச்சுப்பீங்க. ஆன்மிகத்தால் நன்மை ஏற்படும். எழுத்து மற்றும் கலைத்துறைல உள்ளவங்க ஆன்மிகப் படைப்புகளில் ஈடுபடுவீங்க.

சந்திராஷ்டமம்: 28.2.2018 முதல் 03.03.2018 வரை

கும்பம்

வாகனம் வாங்கும் எண்ணம் திடீர்னு நிறைவேறும். மகிழ்ச்சிதானே? கவர்ச்சி அம்சம் அதிகமாகும். புகழ் பிளஸ் பிளஸ் ஆகும். பணவரவு அதிகமாயிக்கிட்டே போன நிலையில் திடீர்னு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது பற்றி அதிர்ச்சியாகி டென்ஷன்ல நடுங்காதீங்க. இது தற்காலிகத் தேக்க நிலைதான். மேலும் பெரிய தொகை முடங்காது. மாணவர்களுக்கு இருந்த டென்ஷன்கள் தீர்ந்து அருமையாய்ப் படிக்க ஆரம்பிச்சுப் பாராட்டுப் பெறுவீங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்கும் பேச்சுத் துறையில் உள்ளவங்களுக்கும் ஜாக்பாட்தான்.

சந்திராஷ்டமம்: 03.03.2018 முதல் 05.03.2018 வரை

மீனம்

காற்றடிக்கும்போது தூற்றிக்கணும் என்பார்களே.. அது மாதிரி இப்போ நல்ல நல்ல வாய்ப்புகள் வரும்.. அதிருஷ்டக்காத்து வீசுது.. டக் டக் என்று பயன்படுத்திப் பலனடைங்க. புத்திசாலித்தனமும் படிச்ச படிப்பும் உதவி செய்வதால் புகழும் பாராட்டும் கைதட்டலும் கிடைக்குங்க. காதல் அரும்பும் அல்லது ஏற்கனவே அரும்பியிருந்த காதல் வெற்றிகரமாக வளர்ந்து திருமணத்தில் முடியும். கணவருக்கு/ மனைவிக்கும் அலுவலகத்தில் பராட்டும் பரிசும் உண்டு. வாகனங்கள் சற்று செலவு வைக்கும். கவனமாய்க் கையாண்டால் செலவு குறையும்.

சந்திராஷ்டமம்: 05.03.2018 முதல் 07.03.2018 வரை

கார்ட்டூன் கேலரி