வார ராசிபலன்: 2.10.2020 முதல் 8.10.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

இத்தனை காலம் உங்க மீது அழுத்திக் கொண்டிருந்த  கவலையும் வேதனையும் டாட்டா  காண்பித்து விடை பெற்று ரயிலோ பஸ்ஸோ விமானமோ ஏறிப் போய்விடும். அது மட்டுமில்லைங்க.. இனி குழந்தைகளைப் பற்றி நீங்க  நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க.. தந்தை வழி உறவினர்களைக் கண்டு பேசவும், சந்தித்து சந்தோஷப்படவும் வாய்ப்பு வரும். யார் கண்டது? ஒரு வேளை இப்போது உங்க ஜாதகத்தில் வலுவான தசா புக்திகள் நடந்து கொண்டிருக்குமானால்… பாட்டன் வழி சொத்து அல்லது தந்தையின் பிராபர்ட்டி உங்க பெயருக்கு வருவதற்கும் சாத்தியம் உள்ளது. எதிர்பாலினரிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். மருந்து, ரசாயனத் தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமுங்க. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் . விலகிப் போனவங்க விரும்பி வந்திணைவாங்க. சேமிப்புக்கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீங்க. வீடு மாற்றம் பற்றிச் யோசிப்பீங்க. இட்ஸ் குட்.

ரிஷபம்

திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக்காக ஏங்குபவர்கள், உத்யோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு. பல சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டிருக்கும். எல்லாமும் இனி சுபமாய் முடியும். குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்மா . சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும் – வைசி வெர்சா. உங்க நல்ல மனசு இப்போது மேலும் அதிகமாக வெளிப்படும். குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உங்க உதவியும் அவர்களால் உங்களுக்கு உதவியும் கிடைக்குமுங்க. உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றி தரும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பக் கவலைகள் மறையும். செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். கங்கிராட்ஸ்.

மிதுனம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்குமுங்க. ஆன்மிக எண்ணங்கள் உருவாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர் செயல்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்னையையும் சமாளிக்கும் திறமை கூடும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீங்க. நீண்ட நாட்களாக நினைத்திருந்த செயலைச் செய்து முடிப்பீங்க. மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமுக உறவு ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீங்க. மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வது நல்லது. இட்ஸ் பெட்டர்

கடகம்

எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்குமுங்க. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீங்க.  தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பாங்க.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீங்க. எதிர்ப்புகள் விலகும். தாங்க் காட்.

சிம்மம்

குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிட்டதே! அனைத்திற்கும் காரணம்  உங்க பொறுமையான அணுகுமுறை மட்டுமில்லை.. சமீபத்திய குரு பெயர்ச்சியும்தான். நீங்க வேற மாதிரிய அவங்களை ட்ரீட் செய்திருந்தால் இந்நேரம் அவங்க உங்களுக்குப் பகையாக்கூட ஆகியிருப்பாங்க. ஆனால் உங்க நல்ல காலம்.. இப்ப அவங்க உங்க அருமையை உணர்ந்துட்டாங்க. வாக்கில் கவர்ச்சி அம்சம் கூடும்.  இதனால் மற்றவர்களை சமாதானம் செய்யும் கடமையைச் செய்வீங்க. பிரிந்த குடும்பங்களையும், நண்பர்களையும் சேர்த்து வைப்பீங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. ஏராளமான வெபற்றியுடன் வருவதால் உங்களுக்கும் மகிழ்ச்சிதான். அனேகமாக அவங்க உங்க மகன் அல்லது மகளா இருக்கவும் ஓரளவு வாய்ப்பு உள்ளது. எனவே இரட்டிப்பு சந்தோஷம். சூப்பர் ஹாப்பினஸ்

சந்திராஷ்டமம்  செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை

கன்னி

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும்.  விரும்பிய பதவி கிடைக்குமுங்க. வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்குமுங்க. அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்குமுங்க. உங்க திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீங்க. எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.  இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். பழைய வாகனத்தை மாற்றம் செய்ய முன்வருவீங்க. பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பெஸ்ட் விஷஸ்

சந்திராஷ்டமம்  அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5 வரை

துலாம்

வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், இட்ஸ் பெட்டர்.

சந்திராஷ்டமம்  அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை

விருச்சிகம்

நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்குமுங்க. கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீங்க. அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை மாறுதல் செயவீங்க. திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கப்பெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நல்லுறவு ஏற்படும். நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்க செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவாங்க. மின்சாரம் கட்டுமானப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வளம் பெறுவாங்க. பெண்களுக்கு குழப்பமான மனநிலை அகலும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். டெஃபனட்லி.

தனுசு

கலைத்துறையினர் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவீங்க. அரசியல்வாதிகள் புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவாங்க. சுணங்கிக் கிடந்த செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவாங்க. சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவுவீங்க. சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்க நற்செயல்கள் இருக்கும். உத்தியோகஸ் தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். வெரி குட். கங்கிராஜுலேஷன்ஸ்

மகரம்

எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்குமுங்க. நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவாங்க. புதிய பங்குதாரர்கள் கிடைப்பாங்க. பெண்கள் தொழில் மேன்மை பெறுவாங்க. கலைத்துறையினர் பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவாங்க. அரசியல்துறையினர் உங்களின் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப் பெறுவீங்க. மேலிடத்துடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும்.  மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மார்க் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவாங்க. தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்குமுங்க. தடைகள் அகலும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே தேடி வரலாம். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் அதிகரிக்கும். தட்ஸ் குட்

கும்பம்

நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்குமுங்க. பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான செய்திகள் வரும். பொருளாதார நிலை உயரப்பெறுவீங்க. தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பாங்க. நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவாங்க. பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினர் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்குமுங்க. கிரேட் ரெஸ்பெக்ட்

மீனம்

எடுத்த காரியத்தை போஸ்ட்போன் பண்ணிக் கடைசியில் மலையாய் வேலையைக் குவிச்சுக்காதீங்க. ஏனெனில் இதைவிட நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றும் நேரம் செலவு செய்ய வேண்டிய பிரச்சினைகள் (நல்ல விஷயங்கள்தான்) ஏராளமாக உங்க முன் வந்து கியூ கட்டி நிற்கப்போகுதுங்க.  உங்க மம்மிக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வந்தேமாதரம்னு மங்களம் சொல்லி மகிழ்ச்சியடைவீங்க. ஒரு வேளை அம்மாவுடன் டிஷ்யூம் டிஷ்யூம் இருந்திருந்தால் அதுவும்கூட சரியாகும். வேறென்ன? அவங்கதான் விட்டுக்குடுப்பாங்க. மம்மியாச்சே. தந்தைக்காக நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். மற்றவர்களின் கல்விக்காகவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். தாங்க் காட். குட் லக்.