இந்த வார ராசிபலன் : 20-07-18 முதல் 27-07-18 வரை – வேதா கோபாலன்

மேஷம் 

சகோதர சகோதரிகளுக்கு அரசாங்க நன்மைகளுக்கும் தந்தையின் ஆதரவும் கிடைக்கும். கிடைச்சுட்டுப்போகட்டுமே. அதுக்கு நீங்க ஏன் டென்ஷன் ஆறீங்க? குறையில்லாமல் இருக்கிங்கதானே? மம்மிக்கு  செல்வாக்கும் புகழும் இன்க்ரீஸ் ஆகுமுங்க. உங்களுக்கும் வேலை பார்க்குமிடத்தில் பாராட்டும் கைதட்டலும் கிடைக்கும். மனசில் பாசிட்டிவ் எண்ணங்களும் தெய்வீக சிந்தனையும் கருணையும் பெருக்கெடுத்து ஓடும். கலைத்துறையில் உள்ளவங்களுக்கு நிறைய சான்ஸ்கள் கிடைத்து லாபமும் பெருகும்.

சந்திராஷ்டமம் : 22.7.2018 முதல் 24.7.2018 வரை

ரிஷபம்

டாடிக்கு வந்த சோதனையெல்லாம் தலைப்பாகையோடு போகும். பெரிய சர்ஜரி என்று பயமுறுத்தியிருப்பாங்க. அதெல்லாம் சிம்ப்பிளாய் முடியும். குடும்பத்தோடு ஜாலியா டூர் போவீங்க. உங்களுக்கு வேலையில் சந்தோஷமான மாற்றல் கிடைக்கும்.  புரிய வேலை மாற ஆசைப்பட்டால் இப்போதைக்கு அவசரம் வேண்டாம். சில மாதங்கள் பொறுக்கலாம் … அல்லது ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து அவர் பச்சை சிக்னல் காண்பித்தால் தொடருங்கள். நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் செழிப்பு கூடும். அது நேர்மையானதாகவும் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 24.7.2018 முதல் 27.7.2018 வரை

மிதுனம்

சகோதர சகோதரிகளின் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும். பேச்சில்  புத்திசாலித்தனம் ஜொலிக்கும். மேடைப்பேச்சாளர்களுக்குப் பாராட்டுக்கிடைக்குமுங்க. ஆரோக்யம் இத்தனை காலம் டென்ஷனுக்குள்ளாகி யிருந்ததல்லவா. இப்போது நிம்மதியும் ஆரோக்யமும் மீண்டு ராத்திரி தூக்கம் வரும். அறுவை சிகிச்சை என்று பயந்ததெல்லாம் அரை மாத்திரையில் சரியாப்போகும். குழந்தைகங்க வாழ்வு செழிக்கும். அவங்க கேட்ட கல்லூரி/ பள்ளி சீட் கெடைக்கும். அப்பாவுக்குப் பெரியதோர் நன்மை கிடைத்து அவருக்கும் உங்களுக்கும் சந்தோஷம் மீளும்.

கடகம்

தயவு செய்து எந்தவிதமான வம்புக்கும் பிரச்சினைக்கும் போகவே போகாதீங்க. யாராவது உங்களை வம்புக்கு இழுத்தாலும் தயவு  செய்து நீங்க அமைதியா இருந்துடுங்க. சண்டை   வேண்டாம். கோபம் வேண்டாம். அடி தடி வேண்டாம்.  அவ்வளவு ஏன்  ..பேசவே பேச வேண்டாம் என்கிறேன். உங்க பேச்சில் கவரும் தன்மை அதிகரிப்பதால் மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கும். சிறிது நாட்களுக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்து தொல்லை தரும். எகிறிவிடாமல் உங்களை நீங்ளே கட்டுப்படுத்திக்குங்க. குறிப்பா மனைவியிடம்/ கணவரிடம் அட்ஜஸ்ட் செய்துகொண்டுதான் போகணும்.

சிம்மம்

உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகமாகும். எனவே பல சுவாரஸ்யமான பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம். காதல் கைகூடும் வேளை வந்துவிட்டது. எதிர்பாலினத்தினரின் நட்பு நன்மையும் முன்னேற்றமும் தரும். நல்ல நண்பர்கள் மருத்துவ விஷயத்திலும் வீடு கட்டும் வகைகளிலும் உதவுவார்கள். அது உங்களுக்கு மட்டுமின்றி உங்களின் கணவருக்கும் (அ) மனைவிக்கும் உதவிகரமாக இருக்கும். உத்யோக விஷயத்தில் இத்தனை காலமாக நீங்கள் இழந்திருந்த தன்னம்பிக்கை இப்போது கிடைக்கும்.

கன்னி

சந்தோஷமான விஷயங்களுக்கும், ஜாலியான சமாசாரங்களுக்கும் நிறையச் செலவு செய்வீங்க. பார்த்துங்க. ஏகமா வேட்டு விட்றாதீங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப்போகுதே. அதுக்காக ஆடை அணி மணிகளும் நகைகளும் சேலைகளும் வாங்குவீங்க. எதிர்பாலினத்தினரின் உதவியும் ஆறுதலும் உண்டுங்க.  நிச்சயமாய் நம்பலாம். பல வகைகளில் லாபமும் நன்மையும் கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவங்களுக்கு லாபம் வரும். ஒன்றிற்கு மேற்பட்ட வகையறாக்களில் வருமானம்  வரும். குழந்தைகளால் ஏற்படும் டென்ஷன்களைப் பொருட்படுத்தாதீங்க. எல்லாம் சீக்கரம் சரியாகக்கூடிய தற்காலிகப் பிரச்சினைகள்தான்.

துலாம்

குழந்தைகளாலும் கணவராலும்/ மனைவியாலும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். அவர்களுடன் சேர்ந்து சந்தோஷச் சுற்றுலா போவீங்க. அம்மாவின் ஆரோக்யத்தைப்பார்த்துக்குங்க. கணவரின் / மனைவியின் புத்திசாலித்தனம் காரணமாகக் குடும்பத்தில் நிகழவிருந்த பிரச்சினை தீரும். சகோதர சகோதரகளுடன் சின்னச்சின்ன ஊடல் ஏற்படத்தான் செய்யு. அதற்கு ஏங்க இப்பிடி டென்ஷன் ஆறீங்க? விட்டுப்பிடிங்க. அவங்களுக்கும் உங்ககிட்ட சமாதானமாகப் போகத்தான் ஆசை. புரியுதா? திடீர் அதிருஷ்ட யோகங்களும் .. உத்யோக உயர்வும்.. பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

அடி எடுத்து வைக்குமுன் முள் இருக்கிறதா, கல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஒவ்வொரு அடியையும் வையுங்கள். குடும்ப அமைப்பில் சில சிக்கல்கள் ஏற்படலாம். அதில் ஒன்றிரண்டு உங்களாலும் ஏற்பட சான்ஸ் இருக்கு. எனவே உங்கள் செயல்கள் யாரையும் புண்படுத்தாதவாறு இருக்கும்படி பார்த்துக்குங்க. நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க இப்போது வாய்ப்பு வரும். குறிப்பாகக் குழந்தைகளை வெகு காலத்திற்குப்  பிறகு சிலர் சந்திப்பீங்க. படிப்பு, திருமணம் என்று வெளிநாட்டில் இருந்திருப்பாங்க. இப்போது குடும்பங்கள் மறுபடி இணையும்  வாப்பு வரும்.

தனுசு

சட்டென்று எடுத்தெறிந்து பேசிவிடும் உங்களின் பழைய குணம் மறுபடியும் தலைதூக்காமல் பார்த்துக்குங்க. அது உங்க தப்பே இல்லை. கிரகங்கள் அப்படி அமைந்திருந்தன. தற்போது அந்த அமைப்பு உள்ளதால் உங்களைச் சங்கடப்படுத்திப் பார்க்கும். நீங்க பிடி குடுக்காதீங்க.  ஆரோக்யத்துக்கு இன்னும் சில மாசங்களுக்கு தயவு செய்து அதீத முக்கியத்துவம் குடுங்க. தந்தைக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்.  அவரைக்கேட்டுத்தான் பலர் முக்கிய முடிவுகளை எடுப்பாங்க. புதிய வேலையில் அருமையான சம்பளம் கிடைக்கும். புதுசோ பழசோ எந்த  வேலையா இருந்தால் என்னங்க. பதவியும் சம்பளமும் உயரும்.

மகரம்

அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். நினைத்த அளவு  வ ருமானம் வரவில்லை என்ற குறை மனசுக்குள் இருக்கும். கவலை வேண்டாங்க. எல்லாம் தானே வரும். தயவு செய்து இப்போதைக்கு உத்யோகம் மாறுவது பற்றி நினைத்தே பார்க்க வேண்டாங்க. மிகுந்த புத்திசாலித்தனமான தீர்மானங்கள் எடுக்கும் நீங்க இந்த ஒரு தீர்மானத்தை எடுப்பதானால் உங்களுக்கு நலம் நினைக்கும் பெரியவர்களையும்  உங்களின் ஜோதிடரையும் கலந்தாலோசித்துப் பிறகு முடிவெடுங்களேன்.

கும்பம்

நண்பர்கள் ஏராளமாகச் சேருவார்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று குழப்பம் இருந்தால் எல்லோரிடமுமே அதிஜாக்கிரதையாக இருந்துவிடுங்கள். லாபமும் சம்பள பாக்கியும் ஆமை வேகத்தில்தான் வரும். எனவே பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் செலவுகள் கட்டுப்பட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும். இயன்ற அளவுக்கு முயற்சி செய்யுங்கள். அதிலும் மிக திடீர் செலவுகள்வேறு வந்து வைக்கும். சமாளிங்க. நீங்களாக ஆடம்பரச் செலவுகள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

மீனம்

திடீர் நன்மைகளும் லாபங்களும் வந்து உங்களைத் திக்குமுக்காடச்செய்யும். குழந்தைகள் அனுசரணையாக நடந்து கொண்டு நிம்மதியளிப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமும் ஒற்றுமையும் நிலவும். குடும்பத்தில் திடீர் நிகழ்வுகளாகச் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வயிறு சங்கடம் போன்ற சின்ன உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சாப்பாட்டு  விஷயத்தில் கவனமாக இருங்கள். என்றைக்கோ நீங்கள் வராது என்று கைவிட்ட தொகைகள் உங்களை வந்தடையும். எப்போதோ கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சற்று நிதானமாகவே நடைபோடும். பொறுங்கள். சரியாகும்.

சந்திராஷ்டமம் : 19.7.2018 முதல் 22.7.2018 வரை