மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீங்க. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீங்க. நட்பால் ஆதாயம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்களை சுற்றி இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புகழ் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வாங்க. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீங்க. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீங்க. தைரியமுடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சியால் லாபம் அடைவீங்க. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வாங்க. ஆர் யூ ஹாப்பி?

ரிஷபம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீங்க. உறவினர்/ நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவாங்க. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வாங்க. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறுவீங்க. புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் நிலை பாதிப்புகள் வராமல் இருக்க மருந்து மாத்திரைகளை கவனமாக சாப்பிடுங்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவும் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். திடீர் கௌரவ பதவிகள் தேடி வரும். அதிகம் கோபப்பட வேணாங்க. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. ஆரோக்யத்தின் உச்சியில் இருப்பீங்க. பேச்சினால் நன்மையும் லாபமும் ஏற்படுமுங்க. ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. அதாவது எடுக்கும்படி ஆகிவிடும். இட்ஸ் ஃபார் குட்.

மிதுனம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரர் உதவுவார். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீங்க. புதுவேலை அமையும். வியாபாரத்தில்பங்குதாரர்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.நன்மை கிட்டும். இதுவரை பிரச்னைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் தற்போது கைக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. உறவினர்கள், நண்பர்களிடையே மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும். . பழைய பிரச்னைகளுக்கு வேற ஒரு கோணத்தில் தீர்வு காண்பீங்க. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லதுங்க. வேலைச்சுமையால் தூக்கம் குறையும். யாரைப்பற்றியும் யாரிடமும் வம்பு பேச வேணாங்க. உங்கள் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க  வேணாங்க. ப்ளீஸ் டோன்ட்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 19 முதல் நவம்பர் 22 வரை   

கடகம்

சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீங்க. யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேணாங்க. உத்தியோகத்தில் சின்ன சின்னஇடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும். கோபத்தால் உடல் நிலை பாதிக்கப்படலாம். எனவே கோபம் வேணாங்க. பயணங்கள் நிறைய இருக்கும். சகோதரர்களின் குடும்பத்துடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத்தினரால் நன்மைகள் ஏற்படும். கடன்கள் விஷயத்தைப்பொருத்தவரை கவலை வேணாங்க.  இதமாகப் பேசி வட்டியையாவது தருவீங்க. ஆஃபீசில் ஏற்கெனவே உற்ற பிரச்னைகளுக்கு வெவ்வேறு கோணங்களில் யோசித்துத் தீர்வு காண்பீங்க. பென்ஷன் போன்றவை தாமதமாகியிருந்தாலும், பாஸ்போர்ட் விசா போன்றவை வராமல் இருந்தாலும் அவை உடனே கிடைக்கும். பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றிபெறுவீங்க. சக்ஸஸ். கங்கிராட்ஸ்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 22 முதல் நவம்பர் 24 வரை  

சிம்மம்

சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளானாலும் அவர்களைப் பொருட்படுத்த வேணாங்க. அவர்கள் பொறாமை காரணமாக உங்களை எரிசசலூட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஒதுங்குங்கள்.  யாரை நம்புவது என்கிற கோபத்திற்கு ஆளாவீங்க. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேணாங்க. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும். புது முயற்சிகள் வெற்றியாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தந்தையால் நன்மைகளும் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். எனினும் அவருடன் நல்ல வகையில் அனுசரித்துப போக வேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தந்தை வழி சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அதிக கவனம் தேவை.  மோர் கான்ஸன்ட்ரேஷன்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 24 முதல் நவம்பர் 26 வரை  

கன்னி

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீங்க. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் சாமர்த்தியசாலிகள், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி வரும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் இந்த வாரம் அற்புதமாக இருக்கிறது. குடும்பத்தில் மூத்த சகோதரியின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியாக வரவு செலவு சரியாக இருக்கும். சவாலாகத் தெரிந்த சில வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீங்க. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நன்மை நடக்கும். குட் லக்.

துலாம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீங்க. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால்  சோர்வு அடைவீங்க. அலைச்சல் இருப்பினும் ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர்களுடன் பயணங்கள் செல்வீங்க பண விவகாரங்கள் மெதுவாக  இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. உங்க பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். ஏங்கிக் காத்திருந்தவங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார். உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க லைஃப் பார்ட்டனருக்குக்கும்கூட இத்தனை காலம் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். வெரி மச்.

விருச்சிகம்

கடந்த வாரம் இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகமடைவீங்க. குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீங்க. புது அத்தியாயம் தொடங்கும். மகளின்  அல்லது மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீங்க. உறவினரும் நண்பர்களும் மூக்கின் மேல் வைச்ச கையை எடுக்க வெகுநாட்களாகும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்புக்காக எவ்ளோ காலம் காத்திருந்தீங்க. அது வரும். மனஇறுக்கங்கள் குறைவதால் நிம்மதி அதிகமாகும். குடும்பத்தில் அமைதி அதிகமாகும். வீடு கட்டும் பணி  அரைகுறையா நின்னுக்கிட்டிருந்ததா? அதை இப்ப தொடங்குவீங்க. தொடர்வீங்க. ரியல் குட் நியூஸ்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீங்க. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. பிரபலங்கள் உதவுவாங்க. வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீங்க. உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும். செலவுகளைக் குறைத்து சேமிக்க ஆரம்பிச்சுடுவீங்க. பல காலத்துக்குக் கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் ஒரு வழியாக நிறைவேறும். ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவாங்க. என்ஜாய். சுப செலவுகள் உண்டு. தந்தைக்கு இருந்து வந்த ஆரோக்கிய மற்றும் நிதிப் பிரச்சினைகள் தீரும். உத்யோகத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  அதுவும் உங்களுக்கு ஏற்கனவே அந்த வாய்ப்பு வந்து தட்டிப்போயிருந்ததல்லவா? இனி தடை இல்லை. நோ பிராப்ளம் அட் ஆல்.

மகரம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களில் அரவணைப்பு அதிகரிக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்குவீங்க. தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திறமைகள் வெளிப்படும். சகோதர சகோதரிகளுடன் சண்டை வேண்டாமே. நோய்கள் குணமாகி நிம்மதி வரும். வெகு சீக்கிரத்தில் ஒருவருக்கொருவர் பழம் விட்டுவிட்டு  வெள்ளைக்கொடி காண்பிச்சு ஜாலியாக் கைகோத்துக்கிட்டு சுற்றுலாவெல்லாம் போகப் போறீங்களே. சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீங்க. புது வாகனம் வாங்குவீங்க. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். எடுத்த எடுப்பில் உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போடாதீங்கப்பா. இருக்கின்ற இடத்திலேயே உத்யோகத்தைத் தொடர்வது நல்லது. இப்போது மாறுவது பற்ற யோசிக்க வேணாங்க. டோன்ட் திங்க்.

கும்பம்

குடும்பத்தினருடன் பொது விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் பாராட்டப்படுவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீங்க. புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறை கூறிக் கொண்டிருக்க வேணாங்க. பொறுமை தேவைப்படும். கடன்கள் மடமடன்னு அடையும். கல்யாணம் எப்பதான் ஆகுமோன்னு சலிச்சுப்போயிருந்தீங்க. ஆனால் இதோ.. வேளை வந்தாச்சுங்க. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். செலப்ரேஷன்ஸ்.

மீனம்

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீங்க. உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் . அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவாங்க. திடீர் யோகம் கிட்டும். டியர் ஸ்டூடன்ட்ஸ்… ப்ளீஸ் படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அலுவலகவாசிகளுககு உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டுதான். எனினும் சில டென்ஷன்களையும் தாமதங்களையும் எதிர்பாராத (விருப்பமில்லாத) திருப்பங்களையும் தவிர்க்க முடியாது. நகைகளும் உடைகளும் வாங்குவீங்க. எனினும் லோனும் வாங்குவீங்க. அவாய்ட் செய்யப் பாருங்க. பெரியவங்களின் ஆசி இருக்கும்.. சற்றே மறைமுகமாக. இந்த விஷயத்தை எப்படித்தான் முடிப்போமோ என்ற கிலியில் இருந்த நீங்கள், அட.. இத்தனை சுலபமாக முடிக்க முடிந்ததே என்று சந்தோஷமாக வியப்பீங்க. ஹாப்பி ஹாப்பி.