வார ராசிபலன்: 21.12.2018 முதல் 27.12.2018 வரை! வேதா கோபாலன்

மேஷம்

பொதுவாக அவ்வளவாகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது என் றாலும் மிக திடீரென்று ஃப்ளாஷ் அடித்த மாதிரி ஒரு அதிருஷ்டம் உங்களைத் தட்டிவிட்டுச் செல்லும். பயங்கரமாக இருக்கும் என்று நீங்க அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ஆரோக்யம் சும்மா சாதாரண மருந்துக்கே பயந்துகிட்டுப் புற முதுகு காட்டி ஓடிடும். கடுமையும் கடுகடுப்பும் இருந்தாலும் நல்ல கிரகங் களின் சேர்க்கை உதவவிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என்பதோடு பேச்சில் மென்மை கூடுவதால் மேற்சொன்ன குணங்கள் சற்று மென்மையாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குப் பொறுமை தேவை.

ரிஷபம்

உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்  என்றாலும் அநாயாச மாய்ச் சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. டோன்ட் ஒர்ரி.  சிம்ப்பிள். வருமுன் காப்பது சிறந்தது என்பதை எப்பவும் நினைவில் வெச்சுக்குங்க. குடும்பதிலும் அலுவலகத்திலும் எதிர்பாலினத்தினரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பாகக் கணவன் மனைவிக்குள் சமீபத்தில் காணாமல் போயிருந்த ஒற்றுமையும் நட்புணர்வும் மீளும். தந்தையின் உடல் நிலையையும் அவருக் கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். திருமணத்திற்கு நாள் குறிச்சுட்டாங்களா?  மஜாதான். பதற்றமும் டென்ஷனும் இல்லாமல் சுபகாரியங்களை எதிர்கொள்ளுங்க. 

மிதுனம்

ஸ்கேல் வெச்சு அளந்து பேசுங்க. குறிப்பா அலுவலகத்தில் சென்டிமீட்டருக்கு மேல் வாயைத் திறக்காதீங்க. அதுவும் காபி குடிக்க மட்டுமே இருக்கட்டுங்க. காதலர்/ காதலி உயர் நிலை அடைவார். காதல் பலித்து உடனே மோதிரம் மாற்றப்போறீங்க. அதாங்க எங்கேஜ்மென்ட் எனப்படும் நிச்சயதார்த்ததைச் சொன்னேன். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.  கூடவே உங்க பேச்சுக்கு மதிப்புக்கொடுத்துச் செவிசாய்க்க ஆரம்பிப்பாங்க.  தன்னம் பிக்கை அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். எனினும் குருட்டு அதிஷ்டமெல்லாம் இல்லீங்க. கடுமையான உழைப்புக்கு உங்களுக்குக் கிடைக்கும் பரிசு அது. அதிலும் சற்றுத் தாமதமாய்க் கிடைச்சிருக்குங்க. என்ஜாய்.

கடகம்

மனதில் நல்லெண்ணங்கள் மேலோங்கி அவற்றைப் பரப்பவும் செய்வீர்கள். உங்களைச் சிலர் விமர்சனம் செய்தாலும் பரவாயில்லைங்க. நல்ல செயல் களை நிறுத்தாதீங்க. உங்கள் கோபதாபங்கள் காரணமாய்க்     குடும்பத்தின ருடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். கூடவே கேதுவும் இருப்பதால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் ராசிக்கு, குரு பார்வை இருப்பதால் உங்கள் பெருந்தன்மையும் நல்ல செய்கைகளும் எல்லா மனத்தாபங்களையும் சரிக்கட்டிவிடும்.  முரட்டுத்தனம் ஈகோ போன்ற வேண்டாத விஷயங்கள் உங்களைப் பிடித்தாட்ட வாய்ப்புள்ளது. சற்று பணிவும் மென்மையும் இருந்தால் நல்லது.

சிம்மம்

பரவாயில்லை. முன்பைவிட அடக்கி வாசிக்கறதால உங்க மேல்  மற்றவர்கள்  வைத்திருக்கும் மதிப்பு மேலும் மேலும் கூடும். பழைய பழிகளை எரேசர் வைச்சு அழிச்சுக்கிட்டே வர்றீங்க. குட். குட். சற்று விரக்தியான சிந்தனைகளும் மன ஓட்டங்களும் தலைகாட்ட முயன்றாலும்கூட அவையனைத்தும் ஆன்மிக சிந்தனைகளாக மாறி உங்களுக்கு நன்மைகளையே ஏற்படுத்திக் கொடுக்கும். நன்மைகளை நாலுபேருக்கு எடுத்துச் சொல்வீங்க. பிரிந்த நண்பர்களை.. பிரிந்த குடும்பங்களை ஒன்று  சேர்க்கப்பாடுபடுவீங்க.  மற்றவர்களுக்கு மருத்துவம் சம்பந்தமான உதவிகள் செய்வதோடு ஆன்மிக வழிகாட்டல் போன்ற உதவிகளும் செய்வதால் மனசில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கும் உங்க மீது மரியாதை  அதிகரிக்கும். கட் லக்.

கன்னி

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது நீங்கள் நம்பியிருந்தவர்கள்  அரசாங்க உத்யோகம் வாங்கித் தருவார்கள். வேறு கம்பெனி மாற நினைச்சீங்க. எப்பிடி இருக்கு புது அலுவலகம்? ஆபீசும் பதவியும் முன்பைவிட  ரொம்பவும் அழகாய் மதிப்பாய் இருக்கில்ல… சந்தோஷம். பொறுப்புணர்ந்து செயல்படுங்க. அதிக சம்பளம் என்றால் அதிகப்பொறுப்பு அல்லவா? உங்கள் டி.ஷர்ட்டின் ‘டி‘ மேல் கை வைச்சு சொல்லுங்க. மனசாட்சிப்படிதான் நடக்கறீங்களா? நியாயத்தை என்னிக்கும் மறக்காதீங்க. இப்போதைக்கு வெற்றி கிடைச்சாலும் பிற்பாடு திண்டாடுவீங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். கங்கிராட்ஸ்

துலாம்

நிறைய ஜாலி டூர் போவீங்க. முன்பு பல காரணங்களுக்காக உங்களிடமிருந்து விலகியிருந்த நண்பர்களும் உறவினர்களும் நட்புக் கரத்தை நீட்டியவாறு நெருங்கி வருவாங்க. புதிய வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவீங்க. பணத்துக் காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். வெற்றி கரமான அலைச்சல்தான். அதன் பலன் சுபம்தான். வீட்டைக்கட்டிட்பபார்னு சும்மாவா சொன்னாங்க?  சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. வீடு … திருமணம் போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்குவீங்க.  அதனால் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் அதிகரிக்கும். பழைய கசப்புகள் எல்லாம் காலியாகி இனிப்பு பரவும் குடும்பத்தில்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 20 முதல் 22 வரை

விருச்சிகம்

ஆரோக்யம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சு டென்ஷனாகாதீங்க. பெரிய அளவில் வர வேண்டியது இதோடு போயிருக்கு என்று உங்களுக்கே தெரியும். கரணம் தப்பியிருந்தால் என்னாகி யிருக்கும்? அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. அந்தக் கவலையே வேணாம் உங்களுக்கு. நல்ல விஷயத்துக்குத்தான் செலவு செய்யறீங்க, பலகாலமாய்த் துலக்காத விளக்கைப் பொன் புடம் போட்ட மாதிரி இப்போ தான் மனசில்  நல்ல விஷயங்கள் துளிர்விட ஆரம்பிச்சிருக்கு. கீப் இட் அப். வார்த்தைகளில் மட்டும் அதீத கவனம் தேவை என்பதை நினைவில் வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 22 முதல் 24 வரை

தனுசு

புதுப்புது விஷயங்களைக் கத்துக்குவீங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரிப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த வருடம் வேற அலுவலகம், வேற பள்ளிக்கூடம், புதிய கல்லூரி சேரப்போறீங்க. வாழ்த்துக்கள். கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும்.  எடுத் தேன் கவிழ்த்தேன் என்று அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குறிப்பாகப் பேச்சினால் யாரையும் பகைவர்களாக்கிக்காதீங்க. சினிமா உலகில் உள்ள வங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். காதல் துவங்க வாய்ப்புண்டு. மனசில் மார்கழி! பகைவர்களாய் இத்தனை காலம் முறைச்சுக் கிட்டு இருந்த வங்க நட்புணர்வுடன் உங்களை நெருங்கி தங்கள் செயல்களுக்கு ஸாரியெல்லாம் சொல்லுவாங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 24 முதல் 26 வரை

மகரம்

முக்கியமான பொருட்களை அந்தந்த இடத்தில் ஜாக்கிரதையா வைக்கக் கத்துக்குங்க. குறிப்பாக  அலுவலகத்தில் மறதிக்கு இடம் கொடுக்காதீங்க. அதன் காரணமாய் எந்தச் சிக்கலிலும் மாட்டிக்காதீங்க. கவனம் தேவை. ப்ளீஸ். நீண்ட பயணம் ஒன்று உண்டு… உங்க கணவருக்கு/ மனைவிக்கு எதிர்பாராத தொகை ஒன்று கிடைக்கும். குழந்தைகளுக்குக் கல்யாணம், குழந்தைப்பேறு என்று சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு வேளை  அவங்க மாணவர்கள் என்றால் படிப்பில் சாதனை செய்து மனதைக் குளிர்விப்பாங்க. சிலருக்கு வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! டாடிக்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க. அவர் பக்கம் நியாயம் இருக்கு. டென்ஷன் பண்ணாம இருங்க. போதும். முடிந்தால் அவரோட மனசை சந்தோஷப்படுத்தி ஆசீர்வாதம் வாங்கினால் இன்னும் பெட்டர்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 26 முதல் 28 வரை

 கும்பம்

 குழந்தைங்க பற்றிக் கடந்த ஒரு வருஷமா இருந்து வந்த டென்ஷன் போயே போச்சு. லாபம் .. வரவு எல்லாமே சற்று பதற்றம் தரும். எதையும் பொறுமை யாய் டீல் செய்தால் பிரச்சினை எதுவுமே வராது. திடீர் லாபங்களும் அரசாங் கம் மூலம் நன்மைகளும் வரும். எதுவுமே சற்று நிதானமாகத்தான் நடக்கும். அவசரம் வேண்டாம். கவலையும் வேண்டாம். தந்தைக்குக் கலை சம்பந்த மான நன்மைகள் உண்டு. பேச்சில் திடீர்க் கோபதாபங்களால் ஆத்திரமும் வராமல் பார்த்துக்குங்க. எதையும் சற்று யோசிச்சுப் பேசுங்க. உத்யோ கத்தைக் காப்பாத்திக்கப் பாருங்க. நல்லவேளையாய் மிகவும் புத்திசாலித் தனமாய் செயல்படுவதால் அதிக பிரச்சினைகள் உங்களை அண்டாது.

மீனம்

தேவையில்லாத கோபம், படபடப்பு சந்தேகம் எல்லாம் வேண்டாம். இயல்பா இருங்க. அமைதியா இருந்தா ஆரோக்யம் பிழைக்கும். அப்பாவுக்கும் உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த சின்னச்சின்ன உரசல்கள் சரியாகி ஸாரி டாடி ரேஞ்சுக்கு இறங்கி வந்திருப்பீங்க. அலுவலக டென்ஷன்ஸ் எல்லாமே படிப்படியா சரியாகும். ஃப்ரெண்ட்ஸ் நல்ல விதமாய் அமைஞ்சிருக்காங்க. லக் தான். கற்பனை சார்ந்த துறைகளில் உள்ளவங்க புது சாதனைகள் புரிந்து நாலு பேரைத் திரும்பிப் பார்க்கச் செய்வீங்க. பரம்பரை வீடு நகை எல்லாம் தேடி வரும். வர வேண்டிய தொகைகள் அப்படி இப்படி ஆட்டம் காட்டும். இட்ஸ் ஓகே. பிறகு கிடைக்கும்.  கண்டுக்காம விடுங்க.

 

கார்ட்டூன் கேலரி