Random image

வார ராசிபலன்: 22.12.2017 முதல் 28.12.2017 -வேதா கோபாலன்

மேஷம்

மனசில் நல்ல எண்ணங்கள் பெருகும். நாலு பேருக்கு நல்லது செய்வீங்க. நல்ல பெயரும் புகழும் வருவதோடு ஆஃபீஸ்ல செம பாராட்டுக் கிடைக்குமுங்க. புத்திசாலித்தனம்னா அப்படி ஒரு புத்திசாலித்தனம் உங்க பேச்சில் வெளிப்பட்டு புகழ் வாங்கித்தரும். குடும்பத்தில் யாரேனும் பள்ளியிலோ கல்லூரியிலோ சாதனை செய்து பாராட்டுப் பெறுவாங்க. வெளிநாட்டில் உங்களுக்கு வேலை கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கு. பல காலமாய் முயற்சி செய்து சோர்ந்து போய் முயற்சியையையே கைவிட்ட நிலையில் திடீர்னு உங்களை அது வந்து அரவணைச்சு சந்தோஷமும் நிம்மதியும் மகிழ்ச்சியும் குடுக்குங்க.

ரிஷபம்

திடீர் அதிருஷ்டம் என்பது மத்தவங்களுக்கெல்லாம் உள்ளூர்லேயிருந்து வரும். ஆனால் அது உங்களுக்கு வெளியூர்லேயிருந்து வரப்போகுது. வெளியூர் மற்றும் வெளிநாடுகள் என்றும்   சொல்லலாம். உங்களோட சகோதர சகோதரிங்க வெளிநாட்டில் இருந்தால் அவங்க மூலம் உங்களுக்கு ரொம்ப நல்ல செய்தி வரும். அது உங்க எதிர்காலத்தையே நிர்ணயிக்கக்கூடிய நல்ல செய்தியாகக்கூட இருக்கலாங்க. லாபங்கள் எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கு. ஆனால் கொஞ்சம் அவசரப்படாம இருங்க. எல்லாம் தன்னால வரும். உடனே வரணும்னு அவசரம் வேண்டாம்.

மிதுனம்

உங்க ஆரோக்யத்தை மட்டுமில்லாம உங்க லைஃப் பார்ட்னர் ஆரோக்யத்தையும்  கொஞ்சம் அலட்சியப் படுத்தாம பார்த்துக்குங்க/ பார்த்துக்கச் சொல்லுங்க. வழக்குகள் நீங்க எதிர்பார்த்தமாதிரி இல்லாமல் திடீர்னு உங்களுக்குச் சாதகமாய் முடியும். நண்பர்களெல்லாம் எதிரியாகிக்கொண்டே வந்ததால் கடந்த சில மாசங்களா ரொம்பவும் அப்செட் ஆகியிருந்தீங்க இல்லையா. இப்ப எதிரிங்களே உங்க காலில் விழுந்து “ஸாரி ஏதோ தப்பா செய்துட்டேன்” என்று மன்னிப்புக் கேட்பாங்க.  பழைய நண்பர்கள் வந்து நட்பைப் புதுப்பிப்பாங்க. குறிப்பாக எதிர்பாலினத்து நண்பர்கள்/ சிநேகிதிங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 20 முதல் 23 வரை

கடகம்

நீங்க டீச்சிங் துறையில் இருந்தால் இப்போ பொற்காலம்னுதான் சொல்லணும். நல்ல மதிப்பும் மரியாதையும் வழக்கமாவே கிடைக்கும். இப்போ இன்னும் அதிகமாக் கிடைக்குங்க.  பிரமோஷன் சம்பள உயர்வு இதெல் லாம் நீங்க எதிர்பார்க்காமலும் கேட்காமலும் தானாய்க்கிடைக்குங்க. புது வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டி ருந்தீங்களா? அது கிடைக்க வாய்ப்பு அதிகம். வெளியூர் வெளிநாடுன்னு நீங்க போகவும் வாய்ப்பு உள்ளது. அங்கே உள்ள உங்க குடும்ப உறுப்பினர்ஸ் இங்கே வந்து உங்களோட தங்கி சந்தோஷப்படுத்தவும் சந்தோஷப்படவும் வாய்ப்பு உள்ளது.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 23 முதல் 25 வரை

சிம்மம்

டாடிக்கு நன்மைகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அதிருஷ்ட வாய்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கவர்ன்மென்ட்டால் நன்மைகள் அதிகரிக்கும். அவர்களுக்கு அரசு உத்யோகம் அல்லது வங்கி உத்யோகம் கிடைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை குழந்தைங்க பாஸ்போர்ட் அல்லது விசாவுக்காகக் காத்திருக்கற வங்கன்னா அது சர்வ சுலபமாய் நிறைவேறிடும். சகோதர சகோதரிகளின் வழிகாட்டுதல் அதிகமாகி நன்மைகள் கூடும். பெரியவங்களை மதிக்கும் நற்பண்புகள் முன்பைவிடக் குறையாமல் பார்த்துக்கிட்டீங் கன்னா நல்லது. இரண்டு மூன்று வருமானங்கள் / லாபங்கள் வருமுங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 25 முதல் 27 வரை

கன்னி

எந்தச் செயல் செய்தாலும் அதுக்கு முன்னாடி அதன் சாதக பாதகங்களை நல்லா யோசிச்சுட்டு அதன் பிறகு செய்யுங்க. உங்களுக்கு நன்மை செய்பவர்கள் உங்களுக்குப் பெரிய பாதுகாப்பு வளையமா செயல்படுவதால் பிழைச்சுப் போறீங்க. பச்சைமிளகாய் தடவிய பேச்சைக் கைவிடுங்க. உங்கமேல எப்பவும் பலர் மதிப்பு வெச்சு நடத்திக்கிட்டிருக்காங்க. அதைக் கெடுத்துக்கக்கூடாதுன்னு உறுதியா இருங்கப்பா. உத்யோகத்துக்காக மனுக்களைப்போட்டுப்போட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா? இதோ.. நீங்க எதிர்பார்த்த எல்லா இடங்களிலிருந்தும் நல்ல செய்தி வரும். தேர்ந்தெடுத்துக்குங்க

சந்திராஷ்டமம்: டிசம்பர் 27 முதல் 29 வரை

துலாம்

கோயில்.. குளம்… புண்ணிய காரியங்கள்… பெரியவங்க தரிசனம் என்று அருமையாப் போயிகிட்டிருக்கு. அலுவலகத்தில் வேலை பிழிஞ்சு எடுக்குதுன்னு டென்ஷன் ஆறீங்க. என்னங்க  செய்வது.. வேற வழி இல்லையே? இப்போ வேற வேலை மாறுவது பற்றி யோசிக்க வேண்டாங்க. நல்ல நல்ல கிரகங்கள் சாதகமாயிருந்தாலும் பேரதிருஷ்ட கால கட்டம்னு சொல்வதற்கில்லை. பிளீஸ் வெயிட். மம்மி அல்லது மம்மி இன்லாவின் ஆரோக்யத்தை சீரியஸா எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்துங்க. நீங்களும் உற்று கவனிச்சு.. உதவுங்க.

விருச்சிகம்

பேச்சில் வானவில் மாதிரி அமைதி.. சாந்தம்.. ருத்ரம்.. கோபம்.. அட்வைஸ் என்று எல்லா வர்ணங்களும் வெளிப்படும். உங்களால் பலருக்கு உதவும்படியான ஆலோசனைகள் வழங்குவீங்க. சூப்பர்ங்க.  உங்க வழிகாட்டுதலால் பலரின் வாழ்வில் நன்மைகள் துளிர்க்கும். சம்பளம் அதிகரிக்கும். ஆனால் வரவும் செலவும் சரிக்கு சரியா இருக்குன்னு பொலம்பாதீங்க. ஏதோ செலவுக்கேற்ற வரவு வருதேன்னு சந்தோஷப்படுங்க. நண்பர்களின் வழிகாட்டுதலால் வாழ்வில் நன்மைகள் பெருகும். சகோதர சகோதரிகள் வெளிநாட்டிலிருந்து உதவுவாங்க.

தனுசு

மனைவிக்கு/ கணவருக்கு அரசாங்க உதவிங்க கிடைக்கும். அவர் அரசாங்க உத்யோகத்தில் .. வங்கி உத்யோகத்தில் இருந்தார்னா உத்யோக உயர்வு.. சம்பள உயர்வு கிடைக்கும். இல்லைன்னா பாஸ்போர்ட் விசா போன்றவை சுலபமாய்க் கிடைக்கும்.  நீங்க எது பேசினாலும் உடனடியாகவோ காலப்போக்கிலோ பலிக்கும். ஆகவே யாருக்கும் சாபமே விடாதீங்க. வாழ்த்தியே பேசுங்க. இன்னிக்கு வேண்டாதவங்களா உள்ளவங்க நாளைக்கு வேண்டியவங்களா ஆவாங்க. நீங்க பேசுவது மற்றவங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் பலன் குடுக்கும். ஜாக்கிரதை.

மகரம்

எப்பவும்போல அதிருஷ்டம் அடிக்கும்தான். வெற்றி உண்டுதான்.  புகழ் வரும்தான். வெற்றி கிடைக்கும்தான். உழைப்பு பலன் கொடுக்கும்தான். ஆனாலும் எல்லாமே நீங்க நினைச்ச வேகத்தில் இருக்காதுங்க. சற்றே நிதானமாய்த்தான் இருக்கும். அதை மனசில் வெச்சுக்கங்க. வெளியூர் வெளிநாடு பயணங்கள் இருக்கும். ஜாக்கிரதை .. (இதைப் பத்துவாட்டி.. இருபது வாட்டி.. நூறு வாட்டி படிச்சுக்குங்க)  பயணத்தின்போது பொருட்களை சரி பார்த்துக்குங்க. புதியவர்களிடம் பேச்சு வெச்சுக்காதீங்க. குறிப்பாய் எதிர்பாலினத்தினரிடம் பயணத்தின் போது மட்டுமில்லாமல் எப்பவுமே கவனமாயிருங்க.  

கும்பம்

அதிருஷ்டம்னா அதிருஷ்டம் இப்படி ஒரு லக்கை நீங்க பார்த்திருக்கீங்களா சமீபத்தில்? வெயில் உள்ள போதே காய வைங்க என்பதுபோல் எதையெல்லாம் திட்டமிடறீங்களோ அதையெல்லாம் நிறைவேற்றிக்குங்க. ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயங்க. நல்ல திட்டங்களும் நேர்மையான விஷயங்களும் மட்டும்தான் நிறைவேறும். வேலை மாற்றம் சம்பள உயர்வு எல்லாமே உங்க திட்டப்படிதான் .. விருப்பப்படிதான் நடக்கும். சந்தோஷம்தானேங்க? வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அடுத்தடுத்து வந்து வாசல் கதவைத் தட்டும்.

மீனம்

குடும்பத்தில் மிக திடீர் சுப நிகழ்ச்சிகளும் பார்ட்டிகளும் ஏற்பாடாகும். எதிர்பாலின நண்பர்கள் / சிநேகிதிகள் உதவியால புது  வேலை கிடைக்க சான்ஸ் இருக்குங்க. அதிலும் வங்கி வேலை அரசாங்க வேலைன்னு கிடைக்க அமோக வாய்ப்பு உண்டு. குழந்தைகளால டென்ஷன்.. அல்லது குழந்தைகளுக்கு டென்ஷன் இருந்தாலும் நீங்க டென்ஷன் ஆகாதீங்க. எல்லாம் சரியாகும். நம்பிக்கை உள்ளவங்க துர்க்கையை வணங்குங்க. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் உதவுவாங்க. உத்யோகத்திலும் வெளிநாட்டுப் பணம் கிடைக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க. பொற்காலம் துவங்கப் போகுதே.