வார ராசிபலன்: 23.3.2018 முதல் 29.3.2018 வரை – வேதா கோபாலன்

மேஷம்

நகை நட்டு,.. ஆடை.. ஆபரணம்.. என்று ஏகமாய்ச் செலவுகள் செய்து கார்டைத்தேய்ச்சுக் காசை அள்ளி வுடறீங்க.. அவ்வப்போது கணக்குப் பாருங்க.. தன்னி குழந்தைகள் பற்றிய பயம் தீரும். மனைவிக்கு ஏற்படும் சின்னச் சின்ன சிக்கல்கள் பற்றித் தூகத்தை இழக்க வேண்டாம். எல்லாம் கொசுத்தொல்லைதான். ஆரோக்யம் என்பது வைரப் பெட்டகம் மாதிரி. அதைப் பாதுகாத்து வைக்க வேண்டியது நம் கடமை. சமீபத்தில் திடீர் அதிருஷ்டம் பற்றி உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தால் அதை உடனே டஸ்டர் வெச்சு அழிச்சுடுங்க.. இப்போதைக்கு அதற்கெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்சான்ஸே இல்லை

ரிஷபம்

சஸ்பென்ஸூடன் காத்திருந்த அலுவலகப் புதிர்கள் நல்ல முறையில் மகிழ்ச்சிகரமாக விலகும். அலுவலகத்தில் சிந்தும் வியர்வையை வைத்து எட்டு ஊருக்கு உப்பு தயாரிக்கலாம்னு அலுத்துக்காதீங்க. கால் வலி கைவலின்னு அவ்வப்போது இருக்கவே செய்யும். பெரிய  அளவில் பயந்து கன்னத்தில் கை வைக்க வேண்டாம். காதல்? உங்கள் அன்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. பொறுங்கள். குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்தீங்களே.. இப்ப பார்த்தீங்களா.. என்னமாய் சாதனை செய்துட்டு வந்து நிக்கறாங்க?

மிதுனம்

ஒரே தாயின் வயிற்றில் பிறந்துவிட்டு சண்டை சச்சரவுன்னு இறங்கலாமா? வேண்டாங்க. கவலைகளும் டென்ஷனும் கடந்து செல்லும் படகு மாதிரி கொஞ்ச நேரத்தில் காணாமல் போயிடும். கணவன் மனைவி சண்டையைப் பெரிசா நினைச்சு நகத்தையும் பல்லையும் கடிக்க வேண்டாம். நீங்க பொறுமையா இருந்தீங் கன்னாலே போதும். எல்லாம் சரியாகும். பொதுவாகவே சமீபத்தில் சில நாட்களாகவே கோபம் தலைக்கு மீறி யாரை அடிக்கலாம் … யாரைக் கடிக்கலாம் என்று பார்த்துக்கிட்டிருக்கீங்க.. வேணாமே? வலிய சண்டைக்கு இழுத்து பிறகு சிரமப்படாதீங்க..

கடகம்

ஒரு குழந்தையைப்பற்றிப் பெருமிதமும், இன்னொரு குழந்தை பற்றிக்கவலையும் ஏற்படக்கூடும். பயப்படாதீங்க.. சீக்கிரம் பயம் தீரும். அலுவலக முன்னேற்றம் பற்றிக் கவலையே வேணாம். உங்கள் திறமைகளை கவனிக்க வேண்டியவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஃப்ளேஷ் லைட் மாதிரி திடீர் அதிருஷ்டம் ஓடி வந்து உங்களைத் தொட்டுவிட்டுப் போகும். அதை நிரந்தரமாக ஒட்ட வைச்சுக்க நல்ல உழைப்பும் நேர்மையான முயற்சியும் போதும். சகோதர சகோதரிகளின் நிலை உயரும்..  பொறாமையோ பகையோ வேண்டாம்..

சிம்மம்

பயங்கரமாய் சர்ஜரியை எதிர்பார்த்து நடுங்கிக்கிட்டிருந்தீங்க. ஆனால் வெறும் மாத்திரை மருந்திலேயே சரியாயாச்சு. மகிழ்ச்சிதானே? பொதுவாவே நீங்க நினைச்சதெல்லாம் வெற்றிகரமாய் நிறைவேறும். குடும்பத்தினருடன் ரொம்பவும் அட்ஜஸ்ட் செய்துக்கிட்டுப் போறீங்க. மகிழ்ச்சி ஓங்கும். குழந்தைகளால் ஏற்பட்ட டென்ஷன்களை அதே குழந்தைகள் தீர்த்து வைப்பாங்க. மாணவர்கள் கொடிகட்டிப் பறப்பீங்க. சில நியாயமான செலவுகளைத் தவிர்க்க முயலாதீங்க.. வெரு வழியில்லை. ஏனென்றால் இந்தப்பக்கம் இழுத்தால் இன்னொரு பக்கம் செலவி செய்ய வேண்டி வரலாம்.

கன்னி

வாகனத்தை நல்ல முறையிலா பராமரித்துப் பாதுகாப்பவர்களுக்கு பிரச்சினைகளற்ற வாரம்.  அம்மா வுடன் எக்காரணம் கொண்டும் சண்டையோ, தகறாரோ, போரோ யுத்தமோ வேண்டவே வேண்டாம். மாறாக .. முடிந்தால் அவருக்கு உதவிகரமா இருங்க.. அவங்க வேலையில் ஏற்பட்ட தடைகளையும் தாமதங்களையும் தீர்க்க உதவி செய்ங்க.  அபாரமான புத்திசாலித்தமும் தன்னம்பிக்கையும் கொழித்துச்செழிக்கும் (அல்லது செழித்துக்கொழிக்கும்) புகழும் பாராட்டும் சூழ்ந்து கைகுலுக்கும். கை தட்டும்.

துலாம்

நண்பர்களுடனும் சினேகிதிகளும் ஜாயியாய் பிக்னிக் போவீங்க. அவர்கள் முக்கியமான விஷயங்களில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பாங்க. வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாங்க. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதியார் சொன்னதை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ… நீங்க இந்த வாரம் சின்சியராய்ப் பின்பற்றுவீங்க. அப்புறம் என்ன? எல்லோருக்கும் உங்களைப் பிடித்துப் போகும். அலுவல கத்தில் உங்களுக்குக்கீழே உள்ளவங்களை அருமையாய்த் தட்டிக்கொடுத்து வேலை வாங்கறீங்க. உங்க மேலதிகாரியிடம் பாராட்டும் வாங்கறீங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 21 முதல் மார்ச் 24 வரை

விருச்சிகம்

மாணவர்களுக்குச் சற்று டென்ஷனாக இருந்தாலும் இன்னும் சில வாரங்களில் பல வித மகிழ்ச்சிகள் காத்திருப்பது உறுதி. குழந்தைகள் மிகவும் புகழடைந்து உங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்வாங்க. அவர்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்க வேண்டிய நன்மைகள் யாவும் தானாக வரும். அவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி, பயமோ.. கவலையோ வேண்டாம். அம்மாவுக்குப்பாராட்டு+ புகழ் தேடி வரும். ஆடை .. நகைகள் வீட்டில் யாரேனும் வாங்குவீங்க. பேச்சுக்குப் பெரிய பூட்டாய்ப்போடுங்க. ஹலோ என்று சொன்னாலும்கூட வில்லங்கமாக வாய்ப்புள்ளது.

சந்திராஷ்டமம்: மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை

தனுசு

வெளிநாடு  வெளியூர்னு நிகழ்ச்சி நிரல் ரொம்பவும் பிஸிதான். நீங்க மட்டும் இல்லாம குடும்பத்தினரும் பயணம் போவாங்க. நல்ல செலவுகளும், திடீர் செலவுகளும் வந்தாலும் மனம் நிறைந்த மகிழ்ச்சி நிலவும் அதல்லவா முக்கியம்?  சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மைகள் விளைய ஆரம்பிக்கும். அப்பா பல காலங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்களெல்லாம் மெல்ல மெல்லக் கனிய ஆரம்பிக்கும். அவருக்கும் மகிழ்ச்சி. அவரால் உங்களுக்கும் சந்தோஷம். நண்பர்களுக்கு நன்மைகள் நிகழும். பார்த்து மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை

மகரம்

இந்த ஆரோக்யம் இருக்கு பாருங்க ஆரோக்யம்.. அது செல்ல நாய்க்குட்டி மாதிரிங்க.. கவனமாய்ப் பார்த்துக்கிட்டா சந்தோஷமா உங்க கிட்ட இருக்கும். இல்லாட்டி அலட்சியம் காட்டினால் கவலையுடன் ஒரு மூலையில் போய் நின்றுகொண்டு ஏக்கத்துடன் நெருங்க முடியாமல் கவலைப்படும். எனவே ஆதரியுங்க. ஒரு வேளை சிரிப்பீங்க. ஒரு வேளை முறைப்பீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலைன்ன மத்தவங்க டென்ஷன் ஆவாங்க. இந்தப் புதிர்த்தன்மைதான் உங்க சிறப்பம்சம். கணவன் மனைவிக்குள்ள சின்னச்சின்ன மனத்தாபங்கள் இருந்தாலும் அவை தற்காலிக ஊடல்கள்தான் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை

கும்பம்

காதல் வெற்றியடையும். கணவர்/மனைவி உங்க கிட்ட அனுசரணையா இருப்பாங்க.. பேச்சில் கவர்ச்சி கூடும். குறிப்பா எதிர்பாலினத்தினரிடம் செல்வாக்கு ஓஹோ என்றாகும். மம்மி உங்களுக்கு ஆதரவாய் இருப்பாங்க…இப்பவும் எப்பவும். தந்தை பக்கம் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். லாபங்களும் வருமானமும் கொஞ்சம் மெதுவா வந்தாலும் மறுக்கப்படாது. மனதில் தன்னம்பிக்கை உயரும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். வாய்ப்புகள் வரும், கைதட்டலும் பாராட்டும் கிடைச்சாலும் வேண்டாத விஷ்யங்களுக்கு மனசைப்போட்டு உழப்பிக்க வாய்ப்பு உள்ளது. தவிர்க்கப்பாருங்கள்.

மீனம்

மனதுக்கு இனியவரை சந்திக்கும் நாள் அதிக தொலைவில் இல்லை. தயாரா? சிலகாலமாக மனசை ஆட்டிப்படைச்சுக்கொண்டிருந்த சஞ்சலங்களும் டென்ஷன்களும் ஒரு முடிவுக்கு வரும். குறிப்பா உடல் நிலை குறிச்சு ஒரு பயமே வந்திருக்கும். அதெல்லாம் இனி இல்லை பயப்படாதீங்க. சில அநாவசிய செலவுகள் செய்யக் கை துறு துறுக்கும். தயவு செய்து கண்ட்ரோல் செய்துக்குங்க. குழந்தைகள் உண்மையில் உங்க கிட்ட உள்ளார்ந்த பாசம் உள்ளவங்கதான் என்று உங்களுக்கு உணர்த்தும் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நடக்கும்.

கார்ட்டூன் கேலரி