வார ராசிபலன்: 23-10-2020 முதல் 29-10-2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

உத்தியோகஸ்தர்கள் விருப்பமான முயற்சிகளைத் தொடங்கி, எளிதாக வெற்றி காணலாம். தொழில் துறையினருக்கு முன்னேற்றம் இருப்பினும், உழைப்பு கடுமையாக இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே இனிமையான சூழ்நிலை நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். திடீர் அதிர்ஷ்டத்தால் சிலருக்கு பலன் உண்டு. இந்த வாரம் காலையில் சூரிய பகவானை வழிபட்டு வாருங்க. உடல்நலம்,மனநலம் நன்றாக இருக்கும். உற்சாகமாக செயல்படுவீங்க. தாய், தாய்மாமன் வகையில் ஆதாயம்,  ஆதரவு கிடைக்குமுங்க. . நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மகள் / மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கெடைக்கும் . வரவேண்டிய பெரிய தொகை அசல் வட்டியுடன் வசூலாகும். திடீர் பதவி யோகம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கட்சியில்  செல்வாக்கு அதிகரிக்கும்., அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீங்க. எதிலும் நிதானம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இட்ஸ் பெட்டர்.

ரிஷபம்

வருமானம் திருப்தியாக அமையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்குமுங்க. . சகோதர வர்க்கத்தினர் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாங்க. புதிய ஆடை,  ஆபரணங்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்த சுபச்செய்தி புதன்கிழமை வரும்.  வண்டியை ஓட்டும் போதும், பின்னால் அமர்ந்து  செல்லும் போதும் கவனமாக இருப்பது அவசியம். பணம் புரட்டுவதில் சிரமங்கள் இருக்கும். கூட்டுத் தொழில்  செய்பவர்கள்  விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். எதையும் எளிதாக சமாளித்துவிடுவீங்க. சொந்த பந்தங்கள் உங்களை பகடைக் காயாக பயன்படுத்தப் பார்ப்பாங்க கவனமாக இருப்பது அவசியம். எதிர்பாராத இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. நெருங்கிய நண்பர்களிடையே மிக லேசான நட்பில் விரிசல் வர வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். யெஸ். ஹாப்பி?

மிதுனம்

என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட சொத்து, இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் ஒரு பெரும் தொகை கிடைக்கலாம். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்க. கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவாங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவாங்க. சிறப்பான வாரம் உற்சாகமாக செயல்படுவீங்க. சொத்து  சம்பந்தமாக பிரச்னைகளை நல்லபடியாகப் பேசி முடிப்பீங்க. அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய அனுமதி கடிதங்கள், சான்றிதழ்கள் கைக்கு வரும். வாடகை, வட்டி, குத்தகை பாக்கிகள் வசூலாகும். எதையும் நீங்க திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயங்களும் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். பொறுமையும், நிதானமும் அதிகம் தேவைப்படும் நேரமிது எந்தக் காரியத்தையும் செய்வோமா வேண்டாமா என்று சிந்திப்பீங்க. பயணங்களால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றி மறையும்.பி கேர்ஃபுல்.

சந்திராஷ்டமம்:  அக்டோபர் 23 முதல் அக்டோபர் 25 வரை

கடகம்

உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் கவனம் செலுத்துவீங்க. தொடக்கத்தில் வளர்ச்சியும், பிறகு தளர்ச்சியும் ஏற்படும். காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். கணவன்- மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் தான் குடும்பத்தில் அமைதி கிடைக்குமுங்க. . பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பலநாட்களாக எதிர்பார்த்த சலுகை இப்பொழுது கிடைக்கலாம். உங்கள் திறமை பளிச்சிடும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும். புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டு கொடுத்து செல்ல வேண்டிய வாரம். சொந்த பந்தங்கள் விசேஷங்கள் காரணமாக அன்பளிப்பு, பரிசு பொருட்கள் என செலவுகள்  கூடும். புதிய வேலை தேடியவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்குமுங்க. . கங்கிராஜூலேஷன்ஸ்.

சந்திராஷ்டமம்:  அக்டோபர் 25 முதல் அக்டோபர் 28 வரை

சிம்மம்

தாய்வழி ஆதரவு கிடைக்குமுங்க. . தடைப்பட்ட கட்டிடப் பணி தொடரும். ‘பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனத்தை வாங்கலாமா?’ என்ற உங்கள் சிந்தனை இப்பொழுது செயல்படும். உடன்பிறப்புகளின் வழியில் ஆரோக்கியத் தொல்லைகளும், அதனை முன்னிட்டு விரயங்களும் ஏற்படலாம். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு கிடைக்குமுங்க. . முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீங்க. கவனம் தேவைப்படும் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைங்களை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். டோன்ட் ஒர்ரி. நத்திங் பிக்.

சந்திராஷ்டமம்:  அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30 வரை

கன்னி

திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத இழப்புகள் உருவாகலாம். வீண் விரயங்களும் அதிகரிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்குப் அலுவலகத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்குமுங்க. . பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை சிறப்பாக அமையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கலாம். பணிபுரியும் பெண்கள் சலுகைகளைப் போராடிப் பெறுவீங்க. பெண் தெய்வ வழிபாடு பெருமை சேர்க்கும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீங்க.  யூ ஆர் கிரேட்.

துலாம்

.பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்குமுங்க. . அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு இனித் திறப்புவிழா நடத்திப் பார்ப்பீங்க. உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீங்க அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீங்க. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்குமுங்க. . திடீர் யோகம் கிட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீங்க. அதிகம் உழைக்க வேண்டி வரும். கையில் பணப்புழக்கம் இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீங்க.  வாய்மூலம் பேசி தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்குமுங்க. .  கட்டிட சம்பந்தமான வேலைகளை தொடங்குவீங்க. பழைய வண்டியை மாற்றி புதுவண்டி வாங்குவீங்க. தாய் வழி உறவுகளால் அலைச்சல் செலவுகள்  இருக்கும். இட்ஸ் ஓகே. யூ வில் மேனேஜ்.

விருச்சிகம்

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீங்க. வழக்குகள் சாதகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீங்க. நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்குமுங்க. . உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் உண்டு. வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவாங்க. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவாங்க. நினைத்ததை முடிக்கும் வாரம். கடந்த இரண்டு நாட்களை விட இன்று மகிழ்ச்சி தங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீங்க. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீங்க. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய வாரம். கான்ஷியன்ஸ்.

தனுசு

தந்தை வழி உறவில்இருந்த விரிசல் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலருக்கு தொழில் மாற்றுச் சிந்தனைகள் ஏற்படலாம். உறவினர்களுக்குள் மனகிலேசங்கள் அதிகரிக்கும். விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்யும் சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் குடும்பத்தில் அமைதி காண இயலும். பிள்ளைங்க உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும். நல்ல தகவல் உங்கள் இல்லம் தேடிவரும். குறிப்பாக ‘நன்றாக படித்திருந்தும் வாழ்க்கைத்துணைக்கு வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது எதிர்பார்த்த வேலை கிடைக்குமுங்க. .ஆர் யூ ஹாப்பி?

மகரம்

வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில், உத்தியோகத்தில் நீங்க எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய வழிபிறக்கும். மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்குமுங்க. . தொழில் துறையில் இருப்பவர்களாக இருந்தால் ஏதேனும் ஒரு தொழிலை பிறரிடம் ஒப்படைத்து விட்டு புதிய முயற்சியில் ஈடுபட வைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிகப் பிரயாசை எடுத்தும் முன்பு முடியாத காரியங்கள் இப்பொழுது முடியும். பத்திரப்பதிவில் இருந்த தாமதங்கள் அகலும். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பிள்ளைகளின் பட்ட மேற்படிப்பிற்காக எடுத்த முயற்சி கைகூடும். தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீங்க. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீங்க. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்குமுங்க. . உழைப்பால் உயர்வீங்க. இட்ஸ் கிரேட்.

கும்பம்

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்துசேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்குமுங்க. . ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஏதேனும் சிறு தொந்தரவு வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க. கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்ட நாளையக் கனவுகளை நனவாக்குவீங்க. பணிபுரியும் பெண்களுக்கு வீடு மற்றும் வாகனங்கள் வாங்க விண்ணப்பித்திருந்தால், அதற்கான சலுகைகள் கிடைக்குமுங்க. . மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகளைத் தருவர். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவாங்க. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீங்க. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீங்க. நல்லன நடக்கும். குட் திங்க்ஸ்.

மீனம்

வளர்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்க தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் தானாகவே கிடைக்குமுங்க. . வாராஹி வழிபாடு வளம் சேர்க்கும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீங்க. பிள்ளைகளால் பெருமை அடைவீங்க. பயணங்களால் ஆதாயமடைவீங்க. விஐபிகள் அறிமுகம் ஆவாங்க. வீடு வாகனத்தை சீர் செய்வீங்க. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. அலுவலகத்தில் மரியாதைக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீங்க. உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக் கறை காட்டுவாங்க. வாகனப் பழு தை சரி செய்வீங்க. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீங்க. உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும். இட்ஸ் குட்.