வார ராசிபலன்: 23.4.2021 முதல் 29.4.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம்

எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீங்க. தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். டிராவல்  செல்ல நேரலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள்  நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். இன்கம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன் யோசிப்பது  நல்லது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 28 முதல் 30 வரை

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம்  தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீங்க. பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். டிராவல்  செய்யும் போது கவனம் தேவை. ஸ்டூடன்ட்ஸ் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீங்க. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீங்க. கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும். அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் இருப்பதும் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், பிசினஸ்  திருப்திகரமாக நடக்கும். எழுத்து சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

மிதுனம்

வீண்குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும்  அதிகம் யோசித்து மனதைக்  குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்கம் இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும்  அவர்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும். தொழில், பிசினஸ் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். கஸ்டமர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக  ஈடுபடுவீங்க. உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். இன்கம் திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப்பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. பிரதர்ஸ் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.

கடகம்

வாழ்க்கைத் துணை ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் சக்ஸஸாய் செய்து முடிப்பீங்க. இன்கம் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஸ்டூடன்ட்ஸ் கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீங்க. கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள்  மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கைக் கைவிடுவது நல்லது. பாலிடிக்ஸ்ஸில்  உள்ளவங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் சக்ஸஸாய் முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.  ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையே குதூகலம் ஏற்படும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும்,  நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீங்க. சிலருக்கு உங்கள் செல்வாக்கைக்  கண்டு பொறாமை உண்டாகலாம். கவனம் தேவை.   எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது வீண் பிராப்ளம்ஸ் ஏற்படாமல்  தடுக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும்.

கன்னி

பிரதர்ஸ்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள்  விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். ஸ்டூடன்ட்ஸ் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும்.  மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வாங்க. உறவு பலப்படும்.  தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். ஸ்டூடன்ட்ஸ் பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த வாரம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீங்க.

துலாம்

எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். இன்கம் அதிகரிக்கும். வெளியூர்  அல்லது வெளிநாட்டுப் டிராவல்  மூலம்  நன்மை உண்டாகும். எதை விரும்பி னாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள்  நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில், பிசினஸ் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப்  பெறுவீங்க. தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இன்கம் கிடைக்கப் பெறுவாங்க.  மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது. மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்யம் அடையும்.  சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீங்க. உங்கள் உதவியை நாடி பலரும் வருவாங்க. சந்தோஷமான மன நிலை இருக்கும். ஸ்டூடன்ட்ஸ் சக மாணவர்களிட மும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதூரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கலைத்துறை யினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிராப்ளம்ஸ் தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில், பிசினஸ் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.அரசியல்துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீங்க. நண்பர்களுடன் மனத்தாங்கல்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட  வேண்டாம். வேலையாட்களால் பிராப்ளம்ஸ்கள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

தனுசு

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீங்க.  சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீங்க. புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். இன்கம் அதிகரிக்கும். தொழில், பிசினஸ் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள்  மிகவும் கவனமாக தங்களது பணிகளைக் கவனிப்பது நல்லது. மேலதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையேகுதூகலம் ஏற்படும்.. எதையும் எதிர்த்து நிற்பதைத்  தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்

மகரம்

கணவன்,  மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். இன்கம் தாமதப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். வெளியூர்,  வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள்  மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். கைவிட்டுப் போன பொருட்கள்  மீண்டும் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் சக்ஸஸாய் முடியும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 22 முதல் 24 வரை

கும்பம்

இன்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும்  அதற்கு ஏற்றாற் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீங்க. அனுபவ பூர்வமான அறிவுத்திறன்  அதிகரிக்கும். தொழில், பிசினஸ் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீங்க. பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவாங்க. ஸ்டூடன்ட்ஸ் புத்தகங்கள் வாங்குவீங்க. கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 24 முதல் 26 வரை

மீனம்

பெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீங்க. புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களைத்  தவிர்ப்பது நன்மை தரும். அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவாங்க. லாபம் பெருகும்.  மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவாங்க. வாழ்க்கைத் துணை ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் சக்ஸஸாய் செய்து முடிப்பீங்க. இன்கம் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 26 முதல் 28 வரை