வார ராசிபலன் – வேதா கோபாலன்

மேஷம்

ஆமை நத்தையையெல்லாம் காப்பியடிச்சுக்கிட்டுப்  போய்க்கொண்டிருந்த வாழ்க்கை இப்போது மெல்ல மெல்ல  வேகம் பிடிச்சு சீக்கிரத்தில் பாகுபலி  குதிரை வேகத்தை எட்டும். புது வேலை தானே? வெயிட் வெயிட். இத்தனை காலம் பொறுமை அடை காத்தீங்க. அது பொன்முட்டை. இன்னும் கொஞ்சநாள் காத்திருங்க. பொன் வாத்து வரும். மம்மி மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை அவங்களும் புரிஞ்சுக்க வேண்டாமாங்க? செயலில் காட்டுங்க. குழந்தைகள்  மேடை ஏறிப் பரிசும் பாராட்டும்  பெறுவாங்க.

ரிஷபம்

கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்த டென்ஷன்ஸ் டாட்டா பை பை என்று சொல்லி நகரும். மனசை ஒருவித அமைதி (அதென்ன ஒருவித? எல்லாவித அமைதி யும்தான்) ஆட்கொள்ளும். வெளியூர் வெளிநாடு என்று சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் ஓரிடத்தில் நிலை கொள்ளும். சுதாரிச்சுக்குங்க. என்றைக்குமே நண்பர்களை உயிராய் மதிக்கும் நபர் நீங்க.  வாகன விவகாரங்கள் அநியாயத்துக்குத் தாமதமாகும். எனினும் ரிசல்ட் நன்மையே.

மிதுனம்

ஃப்ரெண்ட்ஸ்தான் எல்லாமே என்று நீங்க சொன்னபோது மற்றவர்களுக்கு அது கேலியாய் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் செயலைப் பார்த்து பதில் இல்லாமல் தவிப்பாங்க குடும்பத்தினர். ஏன்னா நன்மை அவங்களுக்காச்சே. தன்னம்பிக்கை கிராம் என்ன விலை என்று கேட்கும்படி இருந்த காலம் மாறி இப்ப நீங்க மைக் பிடிச்சுத் தன்னம்பிக்கை பிரசாரம் செய்ய ஆரம்பிப்பீங்க. மம்மி உணர்ச்சி வசப்பட்டு என் செல்லம் என்று புகழ்வாங்க.

கடகம்

நல்ல நேரம் நடக்குது. எல்லாம் டக் டக்கென்று வெற்றிகரமாய் முடியும். எவ்ளோ நன்மை நடந்தாலும் கிடைக்காததற்குத்தானே ஏங்கும் மனித மனம்? நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன? சாப்பிடவும் பாராட்டுக்களை  டெலிவரி செய்யவும் மட்டும் வாயைத் திறங்க போதும். ரொம்ப காலமா புது வண்டி வாங்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டிருந்தீங்க. ஹப்பாடா. எண்ணம் நிறைவேறப் போகுது. ஆரோக்யத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாமே.

சிம்மம்

திருமணத்துக்குக் காத்திருந்தவங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஓயாம சாட் செய்ய ஆரம்பிச்சுடு வீங்க. அப்பா பற்றி டென்ஷனைத் தூக்கிப்போடுங்க. நீங்க பூதக்கண்ணாடி வெச்சுப் பெரிதாக்கிப் பார்க்குமளவு பிரச்சனை ஒண்ணும் பெரிசில்லை. யாருடைய எந்த விவகாரத்தில் உங்கள் அழகிய வைரம் வைத்த மூக்கை நுழைக்க வேண்டாம். அமைதி காக்க வேண்டிய கால கட்டம் இது. மறந்துவிடாதீர்கள். மறந்தும் இருந்துவிடாதீர்கள்.

கன்னி

வாகனம் வாங்கும் விவகாரம்ஸை சற்றே பொறுமையாய் டீல் செய்வீங்களாம். கடுகு வாங்கும் ஸ்பீடில் கார் வாங்கணுமா என்ன? வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கடுமையான உழைப்பும் முனைந்து வேலை செய்யும் பொறுப்புணர்வும் செம நல்ல பெயர் வாங்கித்தரும். அவார்ட் ரிவார்ட் வந்தாலும் வியப்பில்லை. ஒரே நாளில் ஹீரோயின் ஆயிடுவீங்க.கங்கிராட்ஸ். நண்பர்கள் எதிரிகளாகலாம். மிக கவனமாயிருங்க.

துலாம்

அலுவல் பற்றியும் குழந்தைகள் பற்றியும் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். அதை மண்டையில் ஏற்றிக்கொள்வீங்களா என்ன? அடப்போங்க. வெளிநாடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வருமானம் அல்லது லாபம் வரும். அலுவலகத்தில் சம்பளம் உயரும். எதிர்பாராத லாபமும் வரும். உங்கள் புத்திசாலித்தனத்தை இன்னமும் நீங்களே முழுசாப் பயன்படுத்தாமல் வீடியோ கேம் விளையாடும்போது மற்றவர்கள் எப்படிஉணர்வாங்க?

விருச்சிகம்

பேச்சில் இத்தனை இனிமையை எங்கே ஒளிச்சு வெச்சிருந்தீங்க. “இவ(ங்க) எப்பவுமே இப்டி இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்?” என்று ஏங்கப் போறாங்களே உங்களைச் சேர்ந்தவங்க. வேலை சம்பந்தப்பட்ட எல்லாமே கொஞ்சம் நின்று நிதானிச்சுத்தான் போகும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆவாதீங்க. ஏதோ வண்டி நிக்காம ஓடுதேன்னு சந்தோஷப்படுங்க. மம்மியோட ஃபைட் சீன் வேண்டாம், காட்சியை எடிட் செய்துடுங்க.

சந்திராஷ்டமம்: ஜுன் 23 முதல் ஜுன் 25 வரை

தனுசு

ரெடி ஒன்.. டூ.. த்ரீ.. பாஸ்போர்ட் வாங்கிய மூன்றாவது நிமிஷம் விசா மனு செய்து.. மூன்றாவது வாரம் விசா கிடைத்து .. மூன்றாவது நாள் ஏர்போர்ட்டில் செக் இன்.தயாரா இருங்க. நம் ஆரோக்யத்துக்கு எப்பவும் எந்தப் பிரச்சினையும் வராது என்ற மூட நம்பிக்கையை மூட்டை கட்டிப் பக்கத்தில் உள் நீர்நிலையில் தூக்கிப் போடுங்க. உத்யோக விஷயத்தில் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும், மருத்துவர்களுக்கும்  கட்டடத் துறையினருக்கும் லாபம்ஸ்.

சந்திராஷ்டமம்: ஜுன் 25 முதல் ஜுன் 27 வரை

மகரம்

கணவருடன் / மனைவியுடன் நல்லவிதமாய்த்தான் பேச வேண்டும் என்று ஒரு உறுதியான தீர்மானம் செய்துகிட்ட பிறகுதான் வாயே திறக்கணும். முடிந்தால் பாராட்டினால் இன்னும் சிறப்பு. அவருடைய பெருமையை உணர்ந்து நீங்களே வியந்து பாராட்டும் நாள் இதோ வந்தாச்சு. குழந்தைகள் நன்மையடைவாங்க. புத்திசாலித்தனத்தை நிரூபிக்க அவங்களுக்கு நேரம் வந்தாச். அப்பா வெளிநாடு போய் வங்கியில் பணம் சேர்ப்பார்.

சந்திராஷ்டமம்: ஜுன் 27 முதல் ஜுன் 30 வரை

கும்பம்

உங்கள் கணவரை / மனைவியை என்னமோ சாதாரணம்னு நினைச்சுக்கிட்டு எல்லார்கிட்டயும் விட்டுக்கொடுத்துப் பேசிக்கிட்டிருந்தீ நீங்க “அடடே. தப்பு செய்துட்டேனே” ன்னு நினைக்கும்படி ஜமாய்க்கப்போகிறார் பாருங்க. குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொறுப்புள்ளவங்களா ஆவாங்க.டென்ஷனை டெலிட் செய்ங்க. நண்பர்கள் இன்றைக்கு உத்தமர்களாயும் நாளைக்கு ராட்சஸர்களாயும் தெரிவாங்க. இரண்டுமே இல்லை.

மீனம்

வேற வழியே இல்லை. செலவுகளுக்கு ஒரு பெரிய நோ சொல்லுங்க. சீக்கிரத்தில் வெளி நாடு சம்பந்தப்பட்ட நியாயமான செலவுகளுக்கு வேற கார்ட்டைத் தேய்க்கணும். நினைவு வெச்சுக்குங்க. குழந்தை குட்டிகள்னா சின்னச் சின்னக் கவலைகள் இருக்கத்தான் செய்யும். அதுக்குப் போய் டென்ஷன் ஆவீங்களா என்ன? எடுத்த காரியத்தை முடிச்சே ஆகணும்னு கையில் ஒரு கங்கணம் கட்டிக்குங்க. சோம்பலுக்கு டாட்டா சொல்லணும்.