ராசிபலன்: 24.1.2020 முதல் 30.1.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் அட் லாஸ்ட்,  நல்ல விதத்தில் முடியும். உங்களின் முயற்சி பலனிளித்து, அழகு, ஆரோக்யம் கூடும். திடீர் பணவரவு உண்டு. உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களும் அறிமுகமாவார்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.  அந்த அளவுக்கு உருப்படியான ஆலோசனைகளாக அவை விளங்கும். எஸ்பெஷலி உங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கெல்லாம் இப்போது பெரிய ஏமாற்றம்தான் போங்க. சொத்துப் பிரச்னை ஏதும் இருந்திருந்தால் அவையெல்லாம் உங்களுக்குச் சாதகமான வெற்றி அளிக்கும். பலகாலம் இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக் கேற்ப கவர்ச்சியான வீடு, மனை அமையும். திருமணம் கூடி வரும்.

ரிஷபம்

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையும் விருந் தும் விட்டைக் கலகலப்பாக்கும்.  வயிற்று உபாதைகளைப் பெரிய பிரச்சினைன்னு நினைச்சு முகத்தை ‘உம்’முனு வைச்சுக்காதீங்க. உடனே சரியாகப் போகுது. அழகான..ரொம்ப ரொம்ப அழகான வீடு அல்லது கார் வாங்கப் போறீங்க. மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு வரும்.  பார்ட்டி வெய்ங்க. கல்யாணம் நிச்சயமாகப்போகுது. அவசரம் வேண்டாம். நண்பர்கள் செம புத்திசாலியா அமைவாங்க. பிள்ளைகளால் மகிழ்ச்சி நிச்சயமாய் உண்டுங்க. அவர்களின் உடல் நிலை படிப்படியாகச் சீராகும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்யம் கிட்டும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. 

மிதுனம்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்ற பழைய ( எம் ஜி ஆர்) பாடலை நினைவில்  வெச்சுக்குங்க.  கணவருக்கு அல்லது மனைவிக்கு  உத்யோகமும் சம்பளமும் உயரும். நீங்க பல காலமாய்க் கனவு கண்டுக்கிட்டிருந்த திட்டம் நிறைவேறும். செல்வம் வரும். குழந்தைகள் பற்றிய பயங்கள் தீரும். வெளிநாட்டு வருமானமும் லாபமும் உங்க விலாசத்தை விசாரிச்சுகிட்டு வரும். அலுவலகத்தில் கோபம் வந்தால் அதைத் தூக்கிக் கூவத்தில் போடுங்க. மனைவி வழியில் அல்லது கணவர் வழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு இருந்து வந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். மனைவிக்கு வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 24 முதல் ஜனவரி 26 வரை

கடகம்

திடீர்னு  ஒரே நாளில் மிகுந்த  புகழ் வந்து சேரும். அது நல்ல விஷயத்துக்கான புகழாகவே இருக்கும். கவலைப்படாதீங்க. டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டி ருந்தீங்களே.. வாசலில் எட்டிப் பாருங்க. அந்த வாய்ப்பு உங்க வீட்டுக் கதவைத்தான் தட்டிக்கிட்டிருக்கு. எதிர்ப்புகள் குறையும். வழக்குகள் சாதகமாகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்க செல்வாக்குக் கூடும். ஓய்வெடுக்க முடியாதபடி அலைச்சல் இருக்கும். தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். செலவுகள்  மட்டுப்படும்/ கட்டுப்படும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 26 முதல் ஜனவரி 29 வரை

சிம்மம்

லோன் (கடன் உதவி) கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பாங்க. ஜாலிதான் போங்க.  ஆனால் அதைப்பொறுப்பாய் நீங்கதான் திருப்பி அடைக்க வேண்டும் என்பதை மறக்காம நினைவில் வெச்சுக்குங்க. அப்பாவின் உடம்பை அவர்தான் அலட்சியம் செய்கிறார்னா நீங்களுமா அதை அனுமதிப்பீங்க? கணவருடன்/ மனைவியுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வராதபடி நீங்க அனுசரிச்சுப் போகணும். அவரை/ அவங்களை அனுசரித்துப் போக வைக்கும்படி இனிமையா இருக்கணும். குழந்தைங்க வாழ்வில் நீங்க விரும்பிய திருப்பங்கள் உண்டு. குடும்பத்தில் மனமாற்றம் காரணமாய் நல்ல நிகழ்வுகள் உண்டு. பெண்களே! முன்கோபம் குறையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 29 முதல் ஜனவரி 31 வரை

கன்னி

 நீங்க புல் விதைச்சால்கூடப் பொன்னாய் விளையும் பாருங்களேன். உங்களுக்கு நேரம் சரியில்லைன்னும் சிரமங்கள் வரும்னும்  நீங்களே இமாஜின் செய்துக்கிட்டா அதுக்கு நானா பொறுப்பு? ஐஸ் பாதி ஃபயர் பாதி உங்களைச் சூழ்ந்திருப்பதுபோல் சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்க ளும் இன்னொரு பக்கம் நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு கலந்து ஒரு மிக்ஸர் மாதிரி அலைக்கழிக்கும். அதுக்காக இத்தனை ஊர்களுக்குக் கேட்கும்படியாவா கத்துவாங்க? மனசில் நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் மேம்பட்டு அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும். பெண்களுக்குத். திருமணப் பேச்சு வார்த்தையும் கூடி வரும். வண்டிகள்/ வாகனங்கள் வாங்குவீங்க. உங்க மனசுக்குப் பிடிச்ச வகையில் அது அமையும்.

துலாம்

நிலம் அல்லது வீடு அல்லது வாகனம்னு  ஏதாவது ஒன்றைக் கட்டாயம் வாங்குவீங்க. குழந்தைங்களின் புத்திசாலித்தனமான செய்கையினால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனசில்  தர்ம சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத கோயில்களுக்கெல்லாம் விஸிட் அடிப்பீங்க. கோயில் களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா ஸ்தலங்களுக்கும் ஜாலியா போய்விட்டு வருவீங்க. யதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீங்க.  குறிப்பா,  அலுவலகத்தில் பேச்சு வார்த்தைகள் நல்லபடியா முடிவதால், உங்க பாஸ் பாராட்டுவார். குடும்பத்தில் நிம்மதி உண்டு. காத்திருந்த குழந்தை பாக்யம் கிடைக்குமுங்க. புது முதலீடு செய்து வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பும் உண்டாகும்.

விருச்சிகம்

நீங்க தயாரா இருக்கீங்களோ இல்லையோ. திருமணம் தன் பாட்டுக்கு நிச்சயமாயிடும். டாடியின் பிரச்சினைகளைப் பற்றி டென்ஷன் இருக்கத்தான் இருக்கும். கவலைப்படற நேரத்தில் சாமி கும்பிடுங்க. சரியாய்ப் போயிடும்.  தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆரோக்யம் கூடும். ஒரு  வழியாக ஏமாற்றங்கள் நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த ஃபைட் சீன்கள் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். இதனால் வீட்டில் நிம்மதி நிலவும்.  உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.  விட்டுப்போயிருந்த சொந்தங்கள் வந்து செல்வார்கள். அலைச்சல் குறையும். மனஇறுக்கங்கள், சகோதர வகையில் இருந்த சச்சரவுகள் விலகும்

தனுசு

இத்தனை நாட்கள் உடலையும் உள்ளத்தையும் ஆட்டிப்படைத்துக்கிட்டிருந்த சோர்வு நீங்கும். எனவே துடிப்புடன் செயல்படத் தொடங்குவீங்க.  குடும்பத்தில் காணாமல் போயிருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் மீளும். தேவையான உதவிங்க.. நீங்க கேட்ட இடத்தில் கிடைச்சுடும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு ஆதரவாய்ச் செயல்படுவார். கிடைக்கும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாய்ப் பயன்படுத்திக்கிட்டு முன்னேறுவீங்க. பெற்றோரும் , ஃப்ரெண்ட்ஸும் உதவிகரமாக இருப்பாங்க. மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். கணவருக்கு/ மனைவிக்கு நன்மை நடக்கும். திருமணமாகாவங்களுக்குக் கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. உண்டுங்க.

மகரம்

பிசினஸ் செய்பவர்கள், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீங்க. உத்தி யோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். எனினும் அவங்களைப் பொருத்தவரை, உள்ளுக்குள் பச்சையாய் ஒரு பொறாமைப்புகை இருந்துக்கிட்டிருந்தானுங்க இருக்கும். எது எப்படியானால் என்னங்க? நல்லது நடக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்வது நல்லது. வாகனத்தை கவனமாய் ஓட்டணுங்க. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்தாலும் கண்டுக்காம கடமைகளைச் செய்யுங்க. . வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்த்தே ஆகணுமுங்க.

கும்பம்

கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் வெற்றிகரமாய் முடியும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்கள் கணவர் குடும்பத்தினருடன் அனுசரித்து நல்ல பெயர் எடுப்பீங்க. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத்தருவார்கள். நன்மை கிட்டும். குடும்பத்தில் இருந்து வந்து சிக்கல்கள் நீங்கும்.  பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றி கிட்டும்.

மீனம்

நீங்க சினிமாத்துறையா? விளம்பரத் துறையா? சின்னத்திரையா? கொழிக்கப் போறீங்க பாருங்களேன். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கும். டவுட்டே இல்லை. அதுக்காகக் குரல் உயரணும்னு எந்த சாஸ்த்திரத்திலும் எழுதி வெச்சிருக்கலை. உங்களுக்குத் திருமணத்திற்கு வேளை வந்தாச்சு. ஏகமாய்ச் சிந்தனை செய்து குழம்பி மனசைப் பயத்தில் தள்ளும் வேலையெல்லாம் வேண்டாம். இயல்பா இருங்க. நீங்க போட்டு வைத்திருந்த வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. வியாபாரத்தில் சில புது யுக்திகளைப்புகுத்தி பிசினஸைப் புரிஞ்சுக்குவீங்க. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும்

கார்ட்டூன் கேலரி