வார ராசிபலன்: 24.4.2020 முதல் 30.4.2020  வரை! வேதா கோபாலன்

மேஷம்

பூர்வீக சொத்துகளால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவும் ஏற்படலா முங்க. ஆனால் அதெல்லாம் டக் டக்கென்று சரியாயிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காதீங்க, முன் ஜாமீன் கொடுக்கவே வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க. உத்தியோகத்தில் உள்ளவங்க வேலையில் முன்னேற்றத்தைக் காண்பாங்க. பெண்களுக்குப் பாராட்டும், புகழும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பதற்குக் கடுமையான உழைப்பு தேவை என்ற நிலை உருவாகுமுங்க. ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் வராமல் கவனமாய் இருங்க. கணவனால் மனைவியும் மனைவியால் கணவரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். கலைத்துறையினர் புகழ் பெறுவீங்க. நவகிரக வழிபாடு நன்மை தந்தே தீரும்.

ரிஷபம்

குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை நிலவும். உணவுப்பொருட்கள் சம்பந்தமான தொழில் செய்பவங்க கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்கப்படாத வேலைகள் முடிவடையும், இதனால் பணவரவு கிடைக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவங்க தங்கள் கல்வியை நல்ல  வகையில் முடிப்பீங்க. பெண்கள் மற்றவர்களின் பிரச்சினையைத் தீர்த்து மகிழ்ச்சியடைவீங்க. செல்வாக்கு அதிகரிக்கும். கணவரின் வாழ்வில் அடுத்தடுத்து  நன்மைகள் உண்டு.  கலைத்துறையினர் நிம்மதியடைவீங்க. ராமரை வணங்கினால் நிம்மதி  நிலைக்குமுங்க.

மிதுனம்

நிதி நிலையில் ஏற்ற இறக்கம் நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். பிற்காலத்தில் அவை நல்ல முறையில் நிகழும் என்பதால் பொறுமையுடன் இருங்கள். பணித்துறையில் சக ஊழியர்களிடம் அதிக நம்பிக்கை வைக்காதீங்க.  அவங்க உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும். புதிய முதலீட்டில் கவனம் தேவைங்க. ஆலோசனை இல்லாமல் புதிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். உடல் நலம் சீரடையும். பெண்கள் தங்களது பெண் மேலதிகாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அவங்க மூலம் பல நன்மைகள் நடக்கக்கூடும். மாணவர்களுக்குப் படிப்பைத் தவிர மற்றவற்றில் கவனம் செல்லும்.  கலைத்துறையினர் சோதனைகளைக் கடப்பர். முருகரை வணங்கினால் நிம்மதி பிறக்குமுங்க.

கடகம்

உங்கள் அலுவலக வேலையை வேறொருவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.  கவனத் துடன் செயல்படுங்கள். புதிய மனிதர்களுடன் பழகும்போது ரகசியங்களைப் பகிர வேண்டாம். . புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்மிக யாத்திரை பற்றி சிறு ஏமாற்றம் இருக்கும். இருந்தாலும் அது உங்கள் இயல்பு நிலையை பாதிக்காது. அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீங்க. கலைத்துறையினர் தங்கள் தொழிலில் நல்ல உச்சத்தில் செல்ல வாய்ப்புள்ளது. ராமரை வழிபட்டால்  நல்ல விஷயங்கள் நடக்குமுங்க.

சிம்மம்

கடந்த வாரங்களில் இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து சிம்ப்பிளா விடுபடுவீங்க. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். மம்மிக்காக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  சிலருக்கு பூர்வீக சொத்துக்களை விற்றுப் பணம் வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லதுங்க. யார் வம்புக்கும் போக வேண்டாங்க. யாருடைய தவறையும் மேலதிகாரிகளிடம் சுட்டிக்காட்ட வேண்டாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக் கிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லதுங்க. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைங்க விஷயத்தில் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பொறுமையாக இருங்க.. ப்ளீஸ். கலைத்துறையினரின் வருமானம் உயரும். சூரிய பகவானை வழிபடுதல் நல்ல பலனைத் தருங்க.

கன்னி

மாணவர்கள்  தேர்ச்சி பெறுவர். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோங்க உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீங்க. கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீங்க. அரசியலுடன் தொழில் நடத்துபவங்க உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து நல்ல விஷயங்களும் சீரான முறையில் நடக்கும். கலைத்துறையினருக்கு நன்மை தரும் திருப்பம் நிகழும். மாணவர்களின் ஆசை நிறைவேறும். ராகவேந்திரரை வழிபட்டால் பிரச்சினைகள் டாட்டா சொல்லிடும்.

துலாம்

இந்த வாரம்  உங்களுக்கு பல சந்திப்புகள் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத் தின்மூலம் மூலம் நல்ல செல்வம் லாபம் கிடைக்கும் தந்தையுடன் உறவை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். அலுவலக விஷயங்களில் உங்கள் அதிர்ஷ்ட்டம் கைகொடுக்கும் கணவரால்/ மனைவியால் வாழ்க்கையில் பயனடைவீங்க. வேலை மாற வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சாத்தியமாகும். ஏற்கனவே உங்களுக்குப் புது வேலை கிடைத்தி ருந்தால் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்பாராத விஷயங்கள் இந்த வாரம் உறவினர்மூலம் நடைபெறும். மாணவர்களுக்கு மன இறுக்கம் குறையும். கலைத்துறை யினருக்கு திடீர் நன்மை உண்டு. நவகிரக வழிபாடு நன்மை தருமுங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 வரை

விருச்சிகம்

கணவர்/ மனைவி வழி உறவினரின் உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளதுங்க. மாணவர்களுக்குத் தேவையற்ற கற்பனை மனஉளைச்சல் வந்து நீங்கும். வியாபார விஷயத்தில் நிறை குறைகள் இருந்தாலும் வரவேண்டிய பணத்தைக் கறாராய்ப் பேசி வசூல் செய்துவிடுவீங்க.  பெண்களுக்குப் பொருள் வரவு திருப்திகரமாக இருக்குமுங்க . தாய்மாமன் வகையிலிருந்து உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்குச் சாதகமான மாற்றங்கள் வரும். பதவி உயர்வு எதிர் பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி வரும். பெருமாளை வணங்கினால் வளம் பெருகுமுங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை

தனுசு

மனதில் நினைப்வை நிறைவேறும் என்பதால் உற்சாகமாக செயல்படுவீங்க. குடும்பத்தில் நடக்கவிருந்த விஷயங்கள் பற்றிய பயம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலைகள் இருக்குமுங்க.  சொத்து சம்பந்தமாக நல்ல முடிவுகள் எடுப்பீங்க. குழந்தைகள் மூலம் சிறு சிறு மருத்துவ செலவுகள் வரும். செலவுகள் தொடர்ந்து கொண்டே இருக்குமுங்க. தந்தை அல்லது கணவரின் தந்தை உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோகத் தில் திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.  பெண்களின் விருப்பங்கள், நிறைவேறும்.  பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவாங்க. வியாபாரம், தொழில் சீராக இருக்குமுங்க.  கலைத்துறையினர் உற்சாகம் அதிகரிக்கும் வாய்ப்புகள் பெறுவாங்க. விநாயகர் வழிபாடு நன்மை தருமுங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 27 முதல் மே மாதம்1 வரை

மகரம்

சகோதர உறவுகளால் செலவுகள் உண்டாகும். ஏற்கனவே இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறு போன்ற பிராப்ளம்ஸ் தீர்ந்து நிம்மதியடைவீங்க. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். அலுவலகத்தில் உங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்சேமிப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். வியாபாரிகள் நிதானமாக யோசித்து எந்தவொரு செயலிலும் முடிவெடுங்கள். மாணவங்க பெற்றவர்களின் மனம் குளிர நடந்து கொண்டாலே உங்களுக்கு வெற்றி உறுதி. நீங்கள் இதுவரை செய்த கடின உழைப்பின் பலனை அறுவடை செய்ய வேண்டிய வாரம் இது. இது வரை தற்காலிகப் பணியில் இருந்து வந்தவர்களுக்கு நிரந்தர உத்யோகம் கிடைக்கும். முருமுகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

நிதி முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் வருங்க. . வாகனம் பெட்ரோல் மற்றும் எண்ணெய், தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்யறவங்க பதவி உயர்வு பெறுவர். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல நேரம். கலைஞங்க எதற்கு பயந்தார்களோ அது சுமுகமாக முடிந்து நிம்மதி தரும். மாணவங்க கவனம் சிதறாமல் படிச்சால் சாதனைகூடச் செய்யலாம். வியாபாரிகள் எதையும் எளிதாகச் சமாளித்து விடுவீங்க.  மகள் அல்லது மருமகள் கர்ப்பம் அடையக்கூடும். மின்சார இயந்திரங்களைக் கையாளும்போதும் வாகனம் ஓட்டும்போதும் மிகுந்த எச்சரிக்கை தேவை.  பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல் கைகூடுமுங்க. அம்பாள் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மீனம்

கலைஞர்களுக்குச் சவாலான பணி முடித்துச் சாதனை புரிவீங்க. செலவினங்கள் அதிகரித்தாலும் சமாளிக்கும்படிதான் இருக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆரோக்யம் கெடும். அலுவலகப் பணியாளங்க மிக விரைவான முன்னேற்றத்தை அடைவீங்க. வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தை கேர்ஃபுல்லா கவனிச்சுக்குங்க. மகான்கள் அல்லது பெரியவர்களைச் சந்தித்து, அவர்களின் ஆசியைப் பெறுவீங்க. உங்கள் மரியாதை அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீங்க. மாணவர்களுக்கு ஆசிரியரின் கருணை கிடைக்கும். மீனாட்சியை வணங்குங்க. உங்க துயரெல்லாம் நீங்கும்.

கார்ட்டூன் கேலரி