வார ராசிபலன்: 25.9.2020 முதல் 1.10.2020  வரை! வேதா கோபாலன்

மேஷம்

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்த்தெறிந்து செய்தொழிலில் ஏற்றம் பெறுவீங்க. நண்பர்களுடன் சேர்ந்து சாதனைகள் புரிவீங்க. வரவு செலவு கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராட்டும் கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து சக்ஸஸ் பெறுவாங்க. தொழில் செய்யறவங்க உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நல்ல பலனை அடைய முடியும். விரும்பிய பயணங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். வம்பு வழக்குங்களை சமாளிச்சு வளம் காணும் வாரம். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிங்க  சக்ஸஸ்பெறும். அரை குறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீங்க.

ரிஷபம்

லேடீஸைப் பொருத்தவரை விட்டுக் கொடுத்து நடந்துக்கிட்டா  குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஸ்டூடன்ட்ஸ் இப்பொழுது செய்யும் சிறிய முயற்சிகளும் அதிக மார்க்ஸ்ஸைப் பெற்றுத் தரும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகத்தைப் பெறுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஆஃபீசில் சாதகமான சூழ்நிலையைக் காண்பீங்க. தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும்போது அதை ஒதுக்கி விடுங்கள். செலவுகளை, சுபச் செலவாக மாற்றிக்கொள்வது உங்க கையில்தான் இருக்குங்க . நீதிமன்ற வழக்கு, பூர்வீகச் சொத்து தொடர்பான பஞ்சாயத்து, சாதகமாக முடியும். இந்த வாரம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரியனையும் வழிபடுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் உருவாகலாம். சொந்தத் தொழில் செய்யறவங்களுக்கு,  முன்னேற்றம் ஸ்லோவாகவே இருக்கும்.   இந்த வாரம் திங்கட்கிழமை சிவன் கோவிலுக்குச் சென்று, வில்வ இலையால் ஈசனை வழிபடுங்க.

சந்திராஷ்டமம் : செப் 23 முதல் செப் 26 வரை

மிதுனம்

எடுத்த காரியத்தில் சக்ஸஸ் கிடைக்கும். பொருளாதாரத்தில் சின்ன பிராப்ளம்ஸ் ஏற்பட்டு விலகிவிடும். உற்றார் உறவினர்களை நம்பி எதையும் செய்யாதீங்க. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க சான்ஸ் உண்டு. உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை கண்மூடித்தனமா நம்ப வேணாம். உழைப்புக்குத் தகுந்த இன்கம் கிடைக்கும். வியாபாரிங்களுக்கு  கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் குறையும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். சந்தைகளில் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும். கால்நடகளாலும் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகள் கடினமாகப் பாடுபட்டு தங்கள் கெளரவத்தை நிலை நிறுத்திக் கொள்வாங்க. கலைத் துறையினரின் முயற்சிகள் அனைத்தும் சக்ஸஸ்தான்.  லேடீஸ் உற்றார் உறவினர்களைச் சந்திச்சு, அவங்களுடன் உற்சாகமாக இருப்பாங்க. பேசும் நேரத்தில் நிதானம் தேவை. புதிய தொழில் ஒன்றை தொடங்கும் எண்ணம் உருவாகும். பயணங்களால் ஓரளவு ஆதாயம் உண்டு. தம்பதிகளுக்குள் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டு மறையும்

சந்திராஷ்டமம் : செப் 26 முதல் செப் 28 வரை

கடகம்

அரசியல்வாதிகள் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. கலைத்துறையினருக்கு சக்ஸஸ்ஸும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். பெண்மணிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான காலமாகும். பெற்றோர்களின் அரவணைப்பும் கணவரின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ் எதிர்கால லட்சியங்களை நோக்கி மனதைச் செலுத்துங்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து சக்ஸஸ் அடைவீங்க. கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீங்க. கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீங்க. பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைங்க மூலம் மகிழ்ச்சி உண்டாகும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியிலும், விளையாட்டிலும் நல்ல பலனை அடைவாங்க. சுப நிகழ்ச்சிகளால் மன உற்சாகம் ஏற்படும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் போதிய கவனம் செலுத்துவீங்க. உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வீங்க.

சந்திராஷ்டமம் : செப் 28 முதல் செப் 30 வரை

சிம்மம்

இந்த வாரம் சற்று பரபரப்பாக காணப்படுவீங்க. நண்பர்கள் வலிய வந்து உதவி செய்வாங்க. பிரிந்த கணவன் – மனைவி மீண்டும் ஒன்றுசேர வாய்ப்புண்டு. உத்தியோகத்தில், உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் கூட, பெரியவர்களின் தலையீட்டால் அமைதி வழிக்குத் திரும்பும். இந்த வாரம் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி ராமபிரானையும், சனிக்கிழமை அனுமனையும் தரிசியுங்கள். காரியங்கள் கடினமாக இருப்பதால் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் உங்கள் உறுதியான மனத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீங்க. பணப்புழக்கம் சுமாராக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் சற்று தள்ளிப் போகும். உத்யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகள் உங்கள் மீது கூடுதல் அக்கறை காட்டுவாங்க. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சக்ஸஸ் கிடைக்கும். அதோடு புதிய திட்டங்களின் மூலம் பெயரும் புகழும் வளரும். பெண்மணிகளைப் பொருத்தவரை இல்லத்தில் குதூகலமான சூழ்நிலையைக் காண்பாங்க. ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : செப் 30 முதல் அக் 3 வரை

கன்னி

விவசாயிங்களுக்கு நீர்ப்பாசன வசதி பெருகும்.  மகசூல் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சின்னஞ்சிறு தோல்விகளைச் சந்திப்பீங்க. ஆகவே புதிய முயற்சிகளைத் தள்ளி வைக்கவும். கலைத்துறையினர் சரிவுகள் நீங்கி முன்னேற்றம் காண்பீங்க. சக கலைஞர்களால் நன்மை அடைவீங்க. லேடீஸ் தன யோகத்தைக் காண்பாங்க. கணவருடனான அன்பு மேலோங்கும். ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீங்க. ஸ்டூடன்ட்ஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவாங்க. உடற்பயிற்சிகள் செய்து உடலை பேணிக்காப்பீங்க. ஸ்டூடன்ட்ஸ்ஸின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீங்க.   வியாபாரிங்களுக்கு  பண வரவு சீராக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.   உத்யோகஸ்தர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவாங்க. எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பாங்க.

துலாம்

உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் வாரம். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீங்க. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டு. எதையும் நிதானமாக செய்தால்தான் அதில் சக்ஸஸ்பெற முடியும். குடும்பத்தில் உங் களுக்கு இளையவர்களால் கவலை உண்டாகக்கூடும். உடல் உஷ்ணத்தால் தொல்லை ஏற்படும். சொந்தத் தொழில் செய்வர்கள் அதிக கவனத் துடன் செயல்பட வேண்டிய தருணம் இது. கணவன்- மனைவி இடையே இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்ததைவிட அதிக அனுகூலங்களைப் பெறுவாங்க. வியாபாரிகள் பெரிய அளவில் வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி எடுப்பீங்க. விவசாயிகளுக்கு தானிய விற்பனை மகிழ்ச்சிகரமாக நடைபெறும்.

விருச்சிகம்

குடும்பத்தில் பண நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். தைரியத்துடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீங்க. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆன்மிகவாதிகளும், பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அமைதியான முறையில் செயல்பட்டு சக்ஸஸ் அடைவாங்க.   அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு சக்ஸஸ் அடைவீங்க. கலைத்துறையினர் கவனத்துடன் உழைத்தால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறலாம். லேடீஸ் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சக்ஸஸ் பெறுவீங்க. எந்தக் காரியத்திலும் மிகுந்த கவனம் செலுத்தி வரவும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சி அடைவீங்க. ஸ்டூடன்ட்ஸ் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன்களை பெறலாம். விளையாட்டுகளிலும்  வெற்றிவாகை சூடலாம்.  

தனுசு

நல்லவங்களை சந்தித்து நலம் காணும் வாரம். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவங்க கூட ஒத்துழைப்பு செய்வர். மத்தவங்க நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். பூமி சம்பந்தமாக ஏற்பட்ட கடன் தொல்லைகள், உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். வாழ்வில் சங்கடம் வரும் இந்த நேரத்தில், உயர்வும் தேடி வரும். வருகிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அன்னிய மொழி பேசுபவர் களால் புதிய திருப்பத்தைச் சந்திப்பீங்க. இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தொட்டது துலங்கும் காலமிது. நினைப்பது நிறைவேறும். எதிரிகளும் உங்களிடம் பணிந்து செல்வாங்க. திடீர் பணவரவு ஏற்படும். குடும்பத் தலைவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இல்லத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். திருமண ஏற்பாடுகள் நடைபெறும்.

மகரம்

இந்த வாரம் சாதகமான சூழ்நிலையே உண்டாகும். தேவையற்ற சஞ்சலங்களை புறந்தள்ளி விடுங்கள். தொல்லைகளை விலக்கினால் விரயங்கள் சுபமாக மாறும். ஒரு சிலருக்கு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் கவனத்துடன் செயல்படுங்கள். இந்த வாரம் குலதெய்வ வழிபாடும், ஞாயிற்றுக் கிழமை சூரியன் வழிபாடும் நன்மை தரும். எந்த இடையூறுகள் ஏற்படினும் அதனை வெற்றிகரமாகக் கடந்து முன்னேறுவீங்க. செல்வம் பெருகும். வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பெரியோர்களால் பாராட்டப்படுவீங்க. உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை அலுவலகப் பணிகளில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவாங்க. பணவரவு சுமூகமாக இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவாங்க. அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் நடந்து கொண்டால் சக்ஸஸ் அடையலாம்.

கும்பம்

சந்தோஷம் மிகுந்திருக்கும் காலமிது. சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்து சக்ஸஸ் அடைவீங்க. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை விலகிவிடும். உத்யோகஸ்தர்களுக்கு எந்த விஷயத்தையும் பெரிது படுத்தி பிரச்னைகளை உருவாக்க வேண்டாம். சில காரியங்களில் அவப்பெயர் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். வியாபாரிங்களுக்கு  வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு புது குத்தகைகளை எடுக்க முயற்சி செய்வீங்க. அரசியல்வாதிகளுக்கு மக்கள் தொடர்பு சீராக இருக்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீங்க. கலைத்துறையினருக்கு தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பிரயாணங்களைத் தவிர்த்து விடவும். பெண்மணிகளுக்கு இது திருப்திகரமான காலகட்டமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீங்க. ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

மீனம்

எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சக்ஸஸ் பெற, முயற்சி அதிகம் தேவைப்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பொருளாதார விஷயத்தில் ஓரளவு திருப்பத்தைக் காண முடியும். எதிரிகளை இனம் கண்டு விலக்குங்கள். தளராத மனதுடன், நிதானமாக செயல்பட்டால், பிரச்சினைகளை சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. இந்த வாரம் திங்கட்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள். தொழிலில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியமும், மன நிலையும் பலப்படும். பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பரஸ்பரம் நன்மை உண்டாகும். உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக செய்து முடிப்பாங்க. வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி தங்கள் வருமானத்தைப் பெருக்க முனைவாங்க. விவசாயிகளைப் பொருத்தவரை விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும். இதனால் புதிய குத்தகைகளை எடுப்பீங்க.