வார ராசிபலன் 27-04-2018 முதல் 3-5/18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

இந்த வாரம் ஒரு சின்னத் திருப்பம் இருக்கும். அது உங்களைப் பெரிய நன்மைக்கு இட்டுச் செல்லும். திடீரென்று புதிய வேலை கிடைக்கவும், ஏற்கனவே கிடைத்த வேலையில், பதவி உயரவும் வாய்ப்பு இருக்குங்க. சகோதர சகோதரிகளுக்கு, மேன்மை கிடைக்கும்.  அது அனேகமாக உங்கள் மூலமாகவே நிகழும். பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரித்து, அலுவல கத்திலும், சுற்றுவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பதுடன் பெருமையையும் பரப்பும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படாதவாறும், அப்படி ஏற்பட்டால் அது பெரிதாகாமலும் பார்த்துக்குங்க.

சந்திராஷ்டமம் : 01.5.2018 முதல் 03.5.2018 வரை

ரிஷபம்

கவரும் தன்மை அதிகரித்து நட்பு வட்டார்த்தைப் பெரிதாக்கும். வரவேண்டிய லாபங்கள் சற்றே தாமதமானால் கவலை வேண்டாம். பொறுமையாய் இருங்க. பலன் தானாய் வரும். நண்பர்களின் வழிகட்டுதலால் நேர் வழியில் செல்வீர்கள். நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதைமட்டும் சற்று உன்னிப்பாகக் கண்டறிந்து அவரவரை அந்தந்த இடத்தில் வைத்தால் பிழைச்சுப்பீங்க. கலைத்துறையில் உள்ளவர்கள் மேலும் சிறந்து விளங்குவீர்கள். பரிசுகளும், விருதுகளும் எதிர்பாராமல் உங்களை வந்தடையும்.

மிதுனம்

பலகாலமாக உடலையும், மனதையும் வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் நாலு கால் பாய்ச்சலில் ஓடியே போகும். வேலை மாறுவதுபற்றி அவசரப்பட வேண்டாமே. பேச்சில் மட்டும் பலமடங்கு கவனமாக இருந்தாக வேண்டிய நேரமிது. ஆரோக்கியத்தை நீங்கள் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டாலும் சிறு டென்ஷன்களைத் தவிர்க்க முடியாது. அதற்காக பயம் வேண்டாம். அவை உண்மையிலேயே ‘சிறு’ டென்ஷன்கள்தான். ஆடையும், அணிமணியும் வாங்க நிறைய மணி செலவாகும். இழுத்துப் பிடியுங்க.

கடகம்

கணவர் / மனைவி டென்ஷனாய் இருந்தாலோ, டென்ஷன் ஏற்படுத்தினாலோ பயப்படாதீங்க. பிரச்சினை தற்காலிகமானதுதான். குழந்தைகள் இத்னை காலம் கொடுத்துவந்த சிரமங்கள் மெல்லத் தேய்ந்து மறையும். அரசாங்க உத்தியோகம் அனாயாசமாகக் கிடைத்தாலும், அதில் நீங்க காலூன்ற சிறிதுகாலம் பிடிக்கும். செலவுகள் நல்ல செலவுகளாகவே இருக்கும் என்பதால் வங்கி இருப்பு குறைந்தாலும், மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை சந்தோஷமும் மனநிறைவும் அளிக்கும்.

சிம்மம்  

தந்தைக்கு நல்ல வகையில் உயர்வும் முன்னேற்றமும், பெருமிதமும் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு என்றாலும்  அதையே நம்பிக்கொண்டிருக் காமல் உழைக்கவும் ஆரம்பிக்கலாமே. பெரிய நல்ல செய்தி என்ன தெரியுமா? உங்கள் மனதில் இத்தனை காலம் காணாமல் போயிருந்த தன்னம்பிக்கை மெல்ல வந்து ஒட்டிக் கொள்ளும். எதைத்தொட்டாலும் வெற்றியடையும் நேரம், கைக்கெட்டிய தூரத்தில் காத்துக் கிடக்குதுங்க. உங்கள் கீழே வேலை செய்பவர்கள், பொறுப்புடனும், பொறுமையுடனும் வேலை பார்ப்பார்கள்.

கன்னி

பேச்சில் இன்னும் சிறிது காலத்திற்கு நிதானம் தேவை. கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஒருவழியாக வந்தேவிட்டது. உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிட்டு, முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும்தான் என்றாலும், உஷ்ணாதிக்கம் இன்னும் சில நாட்களுக்கு உங்களைப் பிடித்துக்கொள்ளும். அதொன்றும் பெரிய பிரச்சினை இல்லை. உணவு முறையில் கவனமாய் இருங்க. போதும். வாகனம் வாங்க எதுக்காக இந்த அவசரம் காட்றீங்க. கொஞ்சம் பொறுமை தேவை. பிறகு வாங்குவீங்களாம்.

துலாம்

கணவருக்கு / மனைவிக்கு பொருளாதார ரீதியிலும், மற்ற வகைகளிலும் முன்னேற்றம் இருந்தே தீரும். சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அதி முக்கியம்ங்க. எப்படியானாலும், அவங்களுக்கு சிறு டென்ஷனாவது ஏற்படவே செய்யும். அதை சரிசெய்ய வேண்டியது உங்க பொறுப்பு. திடீரென்று வ்வரக் கடைசியில் வாகனம் வாங்க வாய்ப்பு வரும். ஜமாய்ங்க. திருமணம் ஆகாதவர்களுக்கு அது கைகூடும். புதிதாக வீடு வாங்க முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்

தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்கனவே அதிகம். இப்போது கேட்கவே வேண்டாம். துணிச்சலின் உச்சிகே போயிடுவீங்க. மற்றவர்களைக் கவரும்விதமாக உங்கள் பேச்சும், செயலும் நடவடிக்கைகளும் இருப்பதால், உங்கள் வாதங்கள் எடுபடும். உங்கள் செயல்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரும். காதல் திருமணம் வெற்றிகரமாகக் கைகூடும். கலைத்தாய் உங்கள் பக்கம் தன் கடைக்கண் பார்வையை வீசுவாள். பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிங்க. அடங்கிப்போங்க.

தனுசு

இத்தனை நாள் நீங்களாய்ப்போய் இக்கட்டில் மாட்டிக்கொண்டீர்கள். அப்பாடா! இனி அதெல்லாம் கிடையாது. மன மகிழ்ச்சிக்காக செலவுகள் செய்வீர்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செல்லும். குறிப்பாக நண்பர்களுடன் ஜாலியாகப் பொழுதுபோகும். வரவர ஆரோக்கியத்தைக் கிள்ளுக்கீரை மாதிரி நினைக்கிறீங்க. தயவு செய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். வரவேண்டிய பண வரவுகள் தானாக வரும். இனி அதற்காக அதிகம் மெனக்கெடவேண்டியிருக்காது. கல்வி சம்பந்தமான தடைகள் நீங்க, மிகச்சிறிது காலமே காக்கவேண்டியிருக்கும்.

மகரம்

ஒருவழியாக உங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த விரயங்கள் நீங்கி மனதில் ஓரளவு நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழப்போவதால் செலவுகள் பெரிய அளவில் உங்களை வருத்தப்படுத்தாது. வக்கீல் படிப்பு மற்றும் கணித சம்பந்தமான கல்வி மிக வெற்றிகரமாக அமையும். உத்தியோக சம்பந்தமான சிறுடென்ஷன்களைத் தவிர்க்க முடியாது. இப்போதைக்கு வேலைமாறும் முயற்ச்சி வேண்டவே…. வேண்டாம். சகோதர, சகோதரிகளுக்கு கல்வி விஷயத்தில் அதிக வெற்றி கிடைக்க சற்றே காத்திருக்கவேண்டியிருக்கும்.

கும்பம்

மிக திடீரென்று செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், அது மனைவிக்காகவும், குடும்பத் துக்காகவும், குழந்தைகளுக்காகவும் இருக்கும் என்பதால் அவர்களிடம் நல்ல பெயரை வாங்கிவிடுவீர்கள். அழகிய, புதிய வாகனமோ, வீடோ, அல்லது இரண்டுமோ வாங்குவதற் கான வாய்ப்பு வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வெற்றியின் உச்சத்தை எட்டும் பாதை தென்படும். இப்போதைக்கு நண்பர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாமே.

சந்திராஷ்டமம் : 26.4.2018 முதல் 28.4.2018 வரை

மீனம்

தந்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் வாக்கினால் உங்களுக்குமட்டுமன்றி, மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படுவதால் நல்ல பெயர் எடுப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அவர்கள் கலைத்துறையில் இருப்பவர்களாக இருந்தால் புகழின் உச்சியை நோக்கிச் செல்வார்கள். திடீரென்று லாபமும், வருமானமும் அதிகரிப்பதால், தலையின் கனமும் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தந்தை வழி உறவினரைச் சந்தித்து மகிழச் சந்தர்ப்பம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 28.4.2018 முதல் 01.5.2018 வரை