வார ராசிபலன் 27-05-17 முதல் 02-06-17 வரை – வேதா கோபாலன்

 

   

மேஷம்

உடம்பும் மனசும் கடந்த சில வாரங்களாய்ப் பாடாய்ப்படுத்தியதில் உன்பாடு என்பாடு என்றாகியிருக்குமே?இனி பாருங்கள்.. எல்லாமே  ஷூ என்று விரட்டியமாதிரி ஓடிவிடும். குழந்தைகள் கொடுத்து வந்த டென்ஷனை கின்னஸ் புக்கில் போடலாமா என்று யோசிக்குமளவுக்கு அவை அதிகமாக இருந்திருக்கும். அதனால் என்னங்க. இப்ப ஹப்பாடான்னு நிம்மதியுடன் சிரிப்பீங்க. இதுக்காகவா இம்புட்டு பயந்தோம்னு கண்ணாடி பார்த்து சிரிச்சுக்குவீங்க. எப்படியோ .. மனசு கலங்காம சமாளிச்சீங்களே .. இதுக்கே உங்களுக்குத் தனி அவார்ட் குடுக்கணுங்க. குடும்பத்தில் படிபபதற்காக வெளிநாடு போவாங்க., சந்தோஷமா வழியனுப்புங்க. குடும்பத்தில் யாருக்கேனும் கவர்ன்மென்ட் உத்யோகம் கிடைக்கப்போகுது.  பார்ட்டி குடுக்கச் சொல்லுங்க, விடாதீங்க.

ரிஷபம்

அம்மாவை பத்திரமாப் பாத்துக்குங்க. முக்கியமா மம்மீ கூட சண்டை சச்சரவு வாள்போர் .. விற்போர் எல்லாம் வேணவே வேணாம். அவங்களோட நல்லுறவு முக்கியம் பாஸ். புதுசா வாகனம் வாங்கணும்னு நீங்களும் பல மாசங்களாய்த் தவியாய்த் தவிச்சுக் காத்திருந்தீங்க. ஏராளமாய் முயற்சிகளைக் கொட்டியபோதெல்லாம் நடக்காத விஷயங்கள் இப்ப நீங்க கைகட்டிக்கொண்டு இருக்கும்போது தன்னிச்சையாய் வந்து உங்க விட்டு வாசலில் நின்று ஹார்ன் அடிக்குமே. எதைத் தீர்மானித்தாலும் .. எதைத் திட்டமிட்டாலும் அது நிதானமாய்த்தான் போய் முடியும். அதுக்காக  முகத்தை ஒரு முழ நீளத்துக்குத் தூக்கி வெச்சுக்காதீங்க.

மிதுனம்

பேச்சிலும் செயலிலும்  அனல் பறந்தால் அது என்ன பெருமையா? நீங்க சுபாவத்தில் எவ்வளவு புத்திசாலி? இப்ப என்ன அதிசயமாய்க் கோவமெல்லாம் படறீங்க? மம்மிக்கு வர வேண்டிய பணபாக்கியெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி கண்ணாமூச்சிதான் காட்டும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆக வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லிவையுங்க. புது வண்டி வாங்கப்போறீங்க,. புது வீடு .. அல்லது ஃப்ளாட் வாங்கி கிரகப்பிரவேசம் செய்யப்போறீங்க. இப்போதைக்குக் கடன் கிடன்/ லோன் கீன் வாங்கி வைக்காதீங்க. அப்புறம் அதைத் திருப்பிக் கட்டுவதற்குள் உன்பாடு என்பாடு என்றாவதுடன் வசூலிப்பதற்கு அவர்கள் கடுமையாக நடந்துகொண்டால் மட்டும் சுர்ரென்னு டென்ஷனாகிடுவீங்க.

கடகம்

குழந்தைங்க வாழ்க்கைல எல்லாமே கொஞ்சம் ஆமை வேகதத்துலதாங்க நடக்கும். அது பற்றி டென்ஷன் எதுவும் வேணாம். எது  எப்ப  எப்படி நடக்கணுமோ அது அப்ப அப்படி நடக்கும் என்பதை மட்டும் நினைவில்  கொள்ளுங்க. பேச்சினால் சில பிரச்சினை வலையில் சிக்கித்  தவிக்க வேண்டியிருக்கும். எனவே நல்ல ஏழு லீவர்  பூட்டு அல்லது நம்பர் லாக் போட்டு வாயைப் பூட்டி வைச்சுக்குங்க. ஆரோக்யத்தை அலட்சியம் செய்யவே செய்யாதீங்க. அதுக்கு உரிய மரியாதை குடுத்தே தீரணும். பல காலமாய் உங்க அதிருஷ்டம் பிரேக் போட்டு நின்னிருந்தது. இப்போ அது நாலுகால் பாய்ச்சலில் நாலாவது கியரில் பறக்கும். சிலருக்கு இரண்டு மூன்று வருமானங்களும் லாபங்களும் கிடைக்கும். திருமணம் நிச்சயமாவதில் தடை  தாமதம் டிலே டென்ஷன் எல்லாமும் இருந்து வந்த நிலை மாறி சட்டென்று மேகம் கலைந்து நிலா வெளிவருவதுபோல் நல்ல வேளை தலை காட்டும்.

சிம்மம்

போதுங்க.. எவ்ளோ பயணம், எவ்ளோ நாடுகள். எவ்ளோ மாநிலங்கள். சுற்றிச் சுற்றி வந்தாச்சு.  ரெஸ்ட் எடுக்கணு வழியைப் பாருங்க. குடும்பத்தில் தாமதமாகிக்கிட்டிருந்த கல்யாணங்கள் மடமடன்னு நடக்கும். அதிலும் சில சின்னத் தடைகள் வந்தால் கதி கலங்கிப்போய் உட்கார்ந்துடாதீங்க. மம்மிக்கு எதிர்பார்த்திருந்த நன்மைகள் கிடைப்பதில் இருந்து வந்த தாமதங்கள் மெல்ல  மெல்ல விலகும். ஆரோக்யம் சம்பந்தப்பட்ட பிரச்சினை  ஏற்பட்டாலும் அது கடுகளவுதான் இருக்கும். இந்த வாரமே அட்ரஸ் கண்டுபிடிக்க முடியாத தொலைவுக்குப் பிரச்சினைகளும் கடன்களும் நோய்களும் காணாமல் போய்விடும். இவ்ளோ காலமாய் அரசாங்க சம்பந்தப்பட்ட உத்யோகம் அல்லது ஆர்டருக்காகக் காத்திருந்தவங்களுக்கு செம குட் நியூஸ் உண்டு

கன்னி

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாதபடி நீங்கதாங்க பார்த்துக்கணும். நீங்க வாங்கின கடனாய்  இருந்தாலும் சரி .. போட்ட ஷ்யூரிட்டி கையெழுத்தானாலும் சரி உங்களைத் துரத்திக்கிட்டு வந்து பயமுறுத்தாதபடி பார்த்துக்குங்கப்பா. சகோதரர்களுக்கும் நீங்க எவ்வளவுதான் நன்மை செய்தாலும் அவங்க உங்களை உதாசீனப்படுத்தறாங்கன்னு ஒரு எண்ணம் ஏற்படத்தான் செய்யும். அதைக் கொஞ்சம் குப்பைத் தொட்டியில் போடுங்க. பாதி கற்பனை, பாதி தற்காலிகம். எனவே மறந்து மன்னியுங்களேன். திருமண பந்தத்துக்காகக் காத்திருந்தவங்க இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதோ வேளை வந்தாச்சு, நல்ல நேரம் வந்தாச்சு எங்க? சிரியுங்க பார்க்கலாம்?  குழந்தைங்களோ குடும்பத்தைச் சேர்ந்தவங்களோ வெளிநாடு போவாங்க, கொஞ்சம் செலவுகள் இருக்கத்தான் செய்யும். பயப்படாதீங்க. அது செலவில்லை என்றும் முதலீடு என்றும் அவ்வப்போது நினைவு படுத்திக்கிட்டே  இருங்க.

துலாம்

கடந்த வருஷங்களில் பட்ட அளவு இனி கஷ்டப்பட மாட்டீங்க. ஆனா இருக்கும் கொஞ்ச நஞ்ச கஷ்டங்களுக்கே அலுத்துக்குவீங்க. ஏன் இப்படி? லவ் ஏற்படவும் அந்த லவ் வெற்றியடைந்து கல்யாணப் பந்தலில்  கொண்டுவிடவும் வாய்ப்பிருக்கு. உங்களைப் பொருத்த வரை அவங்க வேற இல்லை., இவங்க வேற இல்லை. குழந்தைங்க சில சிறு டென்ஷன் குடுக்க வாய்ப்பிருக்கு. அதுக்கு அவங்க ஆரோக்யமோ… நடந்து கொள்ளும் விதமோ …அவங்க உங்களுக்குக் கொடுக்கும் பிரச்சினையோ அல்லது நீங்க அவங்களுக்குக் கொடுக்கும் பிரச்சியோ.. படிப்பு சம்பந்தமாகவே இருககக்கூடும். எதுக்கும் மசிஞ்சு  கொடுக்காதீங்க. இன்னும் ஓரிரு மாசங்களில் அதெல்லாம் காற்றில் காணாமல் போகும் மேகங்களாய் ஓடிடும்.

விருச்சிகம்

நீங்களும் குழம்பி அடுத்தவங்களையும் குழம்ப வைக்கறீங்க. எதுக்காக? கற்பனை பயங்களுக்கும் குழப்பங்களுக்கும் இத்தனை முக்கியத்துவமா கொடுப்பீ‘ங்க? இத்தனைக்கும் உங்களுக்குப் பதவி உயர்வையும்  சம்பள உயர்வையும் தங்கத் தாம்பானத்தில் வெச்சுக் குடுக்கக் காத்துக்கிட்டிருப்பாங்க. கணவன் மனைவிக்குள் இருக்கும்  எறும்பு சைஸ் ஊடலைக் கற்பனை செய்து ஊதிப் பெருக்கி யானைன்னு நினைச்சு ராத்திரி தூங்காமல் நடுங்க வேண்டாம். நீங்கள் ஏற்கவே வாங்கிவிட்டுத்திருப்ப இயலாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் கடன்கள் அநாயாசமாக அடைந்துவிடும். ஆரோக்யத்தை மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க. கூர்மையான பென்சில் நுனியில் வைச்ச புள்ளிமாதிரிப் பிரச்சினை சிறுசுன்னாலும் அபார முக்கியத்துவம் குடுத்த டீல் செய்ங்க., பிறகேது பிரச்சினையும் இன்னொண்ணும்,?ஓடிடும்

சந்திராஷ்டமம் : மே 27 முதல் மே 29 வரை

தனுசு

அம்மாவுக்குப் பதவியும், சம்பளமும்,  வாழ்க்கைத் தரமும் கும்மென்று உயரும். நாலுபேர் மேடையில் வெச்சுப் பாராட்டுவாங்க. குழந்தைங்களுக்குக் கண் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடி போடுவாங்க. வாகனம் வாங்குவீங்க, யப்பா,. வாகனம்னாலும் வாகனம் .. மிக அழகிய வாகனம். கவர்ந்திழுக்கும் வாகனம். வங்கியில் கடன்  கேட்டுக் காத்திருக்கீங்களா? அப்படியானால் உடனே கிடைக்கும். கணவருடன்/ மனைவியுடன் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, அவற்றை எப்படி ஜெயித்து வெளியே வரலாம் என்று ஆராய்ச்சி செய்ங்க. முடியும் உங்களால். உங்க புத்திகூர்மைக்குத் தீனி போடும் படிப்பைத்தான் தேர்நதெடுத்திருப்பீங்க. சீட் கிடைக்கும்

சந்திராஷ்டமம் : மே 29 முதல் மே 31 வரை

மகரம்

கடந்த சில நாட்களில் ரோலர் கோஸ்டர் மாதிரி ஒன்று மாற்றி ஒன்று நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும். எல்லாமே நல்ல செய்திகள்தான். மம்மிக்கு  மேடையில் பாராட்டும் பரிசும் விருதும் கைதட்டலும் கிடைக்கும். எத்தனையோ காலமாகக் காத்திருந்த நல்ல செய்திகள் எல்லாம் நடந்தேறும். வேலை கிடைக்காதவங்களுக்கு வேலையும் திருமணம் ஆகாதவங்களுக்குக் கல்யாணமும், குழந்தை பிறக்காதவங்களுக்குக் குவா குவாவும், உத்தரவாதமாக உடனே கிடைக்கும்.. நடக்கும். பேச்சினால் நீங்கள் மாட்டிக்கிட்டு விழித்த காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அப்பாடா இனி பயமில்லை என்ற வட்டத்துக்குள் வந்துட்டீங்க. குழந்தைங்க வைரம்  மாதிரி ஜொலிப்பாங்க. பெருமை சேர்ப்பாங்க.

சந்திராஷ்டமம் : மே 31 முதல் ஜுன் 2 வரை

கும்பம்

எத்தனையோ பிரச்சினைகள்லேந்து மீண்டு வந்தாச்சு நீங்க. அந்த அனுபவம் தந்த அடிகளால் இன்னும் சில காலத்துக்கு பயம் தொடருமே தவிர கஷ்டம் விலகியாயிற்று. அரசாங்கக் கல்வி நிறுவனங்களில் நீங்க முயற்சி செய்திருந்த கல்வி உங்கள் மனசு போலவே கிடைக்கும். புது வாகனம் வாங்குவீங்க. குழந்தைகளுக்கு சர்ஜரிசெய்ய வேண்டு என்று டாக்டர்கள் பரிந்துரைத்தால் உடனே அவசரப்பட்டு நடுநடுங்காதீங்க. வேறு டாக்டர்கிட்ட போனால் அவங்க அந்த ஆபரேஷன் வேணவே வேணாம்னு சிரிப்பாங்க. கணவர்/ மனைவி வெளிநாடு போய் வெற்றிகரமாகத் திரும்பி வந்தாச்சு போலிருக்கே. வாழ்த்துகள். அந்தப் பயணங்களால் வாழ்க்கை முழுக்க பல நல்ல விஷயங்கள் தொடரப்போகுது. குறிப்பாக இப்போ ஏற்பட்ட தொடர்புகள் பல காலம் நன்மை தரப்போகுது.

சந்திராஷ்டமம் : ஜுன் 2 முதல் ஜுன் 5 வரை

மீனம்

பாராட்டும் கைதட்டலும் வெளிச்சமுமாய் வாழ்க்கை பொலிவா  இருக்கும். கணவன் மனைவிக்குள் அற்புதமான ஒற்றுமை நிலவும். வாகனங்களை ஓட்டும்போது செல்ஃபோனில் பாட்டுக் கேட்டுககொண்டும் சிநேகிதங்களோ பேசிச்கிட்டும் போகாதீங்க. பத்திரம். நண்பர்களுடன் ஓரளவுக்கு மேல இழையாதீங்க. அவங்க உங்களை  இழைப்புளி வெச்சு இழைச்சுட்டுப் போயிடுவாங்க. இதோ கல்யாணம் வாசலில் வந்து காத்திருக்குது. கதவைத்திறங்க. கல்யாணம் வரட்டும். டாடிக்கு  உடல் நிலையில் சின்னச் சின்ன டென்ஷன்கள் இருக்கலாம். அதையெல்லாம் பெரிசா நினைச்சுக்கிட்டு நீங்க சாப்பாடு தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. இதோ சரியாயிடுவாரு பாருங்க. பயமே வேண்டவே வேண்டாம். புது வேலை உங்களை   பெண்டு நிமிர்த்தினாலும் பணமும் பாராட்டும்  பரிசுகளும் தேடி ஓடி வந்து புகழ் தருமே.