வார ராசிபலன் 27.10.2017 to 02.11.2017 – வேதா கோபாலன்

மேஷம்

மகிழ்ச்சியும் வெற்றியும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உங்க வீட்டிலும் மனசிலும் வந்து உட்காரும். சுப நிகழ்வுகளும்  மனசில் தர்ம சிந்தனைகளும் தலைதூக்கும். வாயைத் திறக்காமல் இருங்க. நிச்சயமா எந்தப் பிரச்சனையும் வரவே வராது. குழுந்தைகள் வாழ்க்கையில் அருமையான முன்னேற்றங்கள் இருக்கும். அம்மாவுக்கு ஏதேனும் பிராப்ளமா? கவலை வேண்டாம். தலைக்கு வந்தது தொப்பியோடு போகும். அதாவது அறுவை சிகிச்சை செய்யணும்னு நேற்று பயமுறுத்திய டாக்டர்ஸ் இன்னிக்குப் புன்னகையுடன் “வெறும் மருந்திலேயே சரி செய்துடலாம்” என்பார்கள்.

ரிஷபம்

வெளிநாடு கிளம்பத் தயார்தானே? சந்தோஷமாய்ப் போயிட்டு வாங்க. பேச்சினால் ஒரு பக்கம் நன்மையும் வரும் மறுபக்கம் பிரச்சினையும் வரலாம். எனவே அடக்கி வாசிங்க. திடீர்க் கோபத்துக்கு நோ என்ட்ரி போடுங்க. இத்தனைநாளாய்ப் படிப்பில் சிரத்தை இல்லாமல் இருந்திருப்பீங்க. அல்லது முயற்சிகள் எடுத்தும் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். இனி அந்தப் பிரச்சினை இல்லை. குதிரை வேகத்தில் படிப்பில் முன்னேறுவீங்க. பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக் பிடிச்சு சூப்பராப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க.

மிதுனம்

திருமணம் நிச்சயமாகப் போகுது. கணவர் / மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து.. கடந்து அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைச்சுட்டீங்க. வெளிநாடு போவதற்கான செலவுகள் இருந்தாலும் அது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும். நண்பர்களிடம் சற்று கவனமாய் இருங்க. எதிரிகளிடம் டோட்டலா கவனமா இருங்க. புத்திசாலித்தனத்தாலும் கவர்ச்சி அம்சத்தாலும் உங்களைப் பலருக்கும் பிடிக்கும். மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் பேச்சினால் வெற்றியும் செல்வாக்கும் கியூவில் நிக்கும்.

சந்திராஷ்டமம் – அக் 27 – அக்  29

கடகம்

வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பிசினஸ் செய்யறவங்களுக்கு வெளிநாட்டு லாபம் வரும். நிறைய செலவுகள் வரும். ஆடை அணி மணிகள் என்று ஒரு பக்கம் செலவு இருக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் சற்றே மருத்துவச் செலவு இருக்கவும் லேசான வாய்ப்பு உள்ளது. படிப்புக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பதுடன் வாழ்த்தும் பெறுவீர்கள். குழந்தைகளால் சிறிது பிரச்சினை வரும்போல் இருந்தாலும் உடனே சரியாகும். எதுக்கு வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க?

சந்திராஷ்டமம் – அக் 29 – அக் 31

சிம்மம்

திடீர் அதிருஷ்ட வாய்ப்புகள் வரும்.  குழந்தைகள் வாழ்வில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தமாதிரி பிரகாசம் பரவும்ங்க.  கணவருக்குக் கடந்த ஒரு வருடமாய் எதிர்பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பேச்சில் சற்றே கவனமாய் இருந்துவிட்டால் போதும். நல்ல காரணங்களுக்காக செலவு செய்வீங்க. அல்லது நீங்க செய்யும் செலவு நன்மையும் லாபமும் அளிக்கும். மம்மியுடன் ஃபைட் செய்யக்கூடாது. அவங்க நன்மைல கவனம் செலுத்துங்க. கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதீங்க.

சந்திராஷ்டமம் – அக் 31 முதல் நவ 3 வரை

கன்னி

மம்மிக்கு நன்மை உண்டு. இத்தனை காலமாய் அவங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அடியோடு தீர்வதுடன் அதிருஷ்டமும் நன்மையும் உண்டாகும்.  அப்பாவுக்கும் உங்களுக்கும் அபிப்ராய பேதம் உண்டாகமல் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க. அவர் கோபப்பட்டாலும் நீங்க தணிஞ்சு போகணுங்க. ப்ளீஸ். உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். நிறைய நல்ல (சுப) செலவுகள் வரும். புது வேலை கிடைக்கும். எல்லோரையும் கவருவீங்க. தடையும் தாமதமும்தானே ஆகுது? கிளைமேக்ஸ்ல நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. அது புரியுதா இல்லையா? அந்தப் பொல்லாத கோபத்தை அடுப்பில் போடுங்க. ஆமாம்.  சொல்லிட்டேன்.

துலாம்

ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கத்தை யாராச்சும் பழக்கிவிடப் பார்த்தாங்கன்னா அவங்களுக்கு ஒரு பெரிய  குட் பை சொல்லி அன்ஃப்ரெண்ட் செய்து பிளாக் செய்துடுங்க. பேசும்போது நல்ல விஷயங்களையே பேசுங்க. யாரையும் யார் கிட்டேயும் போட்டுக்குடுக்க வேண்டாம். அப்பாவுக்கு திடீர்ப் புகழும் பெருமையும் ஏற்படும். குடும்பத்தில் யாராச்சும் ஃபாரின் போவாங்க. நீங்க பை சொல்வதற்கு ஏர்போர்ட் போவீங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம்.

விருச்சிகம் 

மகன்ஸ் மகள்ஸ் அனைவருக்கும் அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். திருமணம் நடக்க வேண்டும் என்று காத்திருந்து ‘அடப்போங்கப்பா’ என்ற நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இப்ப மேளச் சத்தம் கேட்கும் நேரம் வந்தாச்சு. ரெடி? கணவருக்கு/ மனைவிக்கு நன்மை உண்டாகும். லாபம் வருமானம் என்று எப்படி வேணாலும் வரும். குழந்தைங்க மேடை ஏறி பிரைஸ் வாங்குவாங்க. கணவரால் நன்மை உண்டாவது உறுதி. சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…

தனுசு

எல்லாம் மெதுவாய் நடந்தாலும் நண்பர்கள் நன்மை செய்வாங்க. உங்கள் வேலை சம்பந்தமாக இருந்த பயம் நீங்கும். சகோதர சகோதரிகளுக்கு சின்ன சைஸ் டென்ஷன்ஸ் இருக்கலாம். பயம் வேண்டாம். எல்லாம் சரியாகும். ஒரு வேளை உங்க மூலமே அது சரியாகலாம். இதன் காரணமாகப் பல நாட்கள் உங்களுக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். டாடியின் உடல் நிலை பற்றிச் சற்று அதிக கவனம் செலுத்துங்க. கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க.. சரியா? அதிலும் மத்தவங்களுக்கு உழைக்கணும்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பீங்க. என்னங்க இது?

மகரம்

புதிய நண்பர்களிடம் சற்று கவனமாய் இருங்கள். மற்றபடி உங்கள் பொற்காலம் துவங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தடைப்பட்ட எல்லா விஷயங்களும் மடை திறந்த வெள்ளம் போல் சரியாகும். திருமண வேளை வந்துவிட்டது என்றாலும் ஒரு சில வாரங்கள் பொறுங்கள். குழந்தைச் செல்வத்துக்காகப் பல காலம் காத்திருந்தவர்களுக்கு நற்செய்தி இன்ஸ்டன்ட்டாகக் காத்திருக்கிறது. தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே!

கும்பம்

வயிறு சம்பந்தமான ஆரோக்யப் பிரச்சினை ஏற்படாதபடி கொஞ்சம் கேர்ஃபுலா இருந்துடுங்க. இதையே வேறு விதமாய்ச் சொல்லணும்னா.. சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாய் இருங்க. ஓகேயா? குழந்தைகள் வெளிநாடு போவாங்க. சந்தோஷமாய் டாட்டா சொல்லுங்க. வாழ்வில் மிக உயர்ந்து வருவாங்க. உங்களுக்கும் வெளிநாட்டு வருமானம் வரும். நல்ல சந்தோஷமான செலவுகள் உண்டு. அதைவிடப் பல மடங்கு லாபம் வரும். குட் லக். கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க.

மீனம்

ஆரோக்யத்தை மிகவும் கவனமாய்ப் பார்த்துக்குங்க. எந்தக் காரணத்தைக்கொண்டும் உத்யோகத்தை விட்றாதீங்க. (நீங்களா விருப்பப்பட்டு சந்தோஷமா ரிசைன் செய்தால் அது வேறு விஷயம்). அப்பாவுக்கு நன்மையும் லாபமும் வரும். அவர் பிசினஸ் செய்பவர் என்றால் அது அருமையாய் விரிவடைந்து லாபம் அளிக்கும். உங்களுக்கு வரவேண்டிய லாபங்கள் நத்தை வேகத்தில் வரும். எனினும் கட்டாயமாய் வரும். . மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில் ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. குழந்தைங்க பத்தின பயத்தைக் கழற்றிக்கடாசுங்க. நல்லா இருப்பாங்க.