வார ராசிபலன்: 27.12.2019 முதல் 02.01.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

பேச்சிலும் செயலிலும் ரொம்பவே நிதானம் வேண்டுமுங்க. மூன்றுவித லாபங்கள்/ வருமானங்கள் வரும்.  மனைவி/ கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். குழந்தைங்க காலில் ஸ்கேட்டிங் சக்கரம் கட்டிக்கிட்ட மாதிரிப் பயணம் போவாங்க. விமானம் ரயில் பஸ் கார் பைக் என்று சகலமும் அவங்களைக் கூட்டிக்கிட்டுப் போகும்.  அரசாங்கத்திடமிருந்து நீங்க எதிர்பார்த்துக்கிட்டிருந்த விஷயங்கள் நல்ல முறையில் கிடைக்கும். தந்தை வழி சொத்து வரும். கல்வி சம்பந்தமான செலவுகள் எக்கச்சக்கமா இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உதவியும் செய்வீங்க என்பதால் மனம் நிறையும். இத்தனை காலமாய் எதிரிகள் உங்களை அழ வெச்சாங்க. இனி அவங்களை நீங்க ஓட வெப்பீங்க. ஆனால் யார்கிட்டயும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்துடாதீங்க.

ரிஷபம்

கடந்த சில  வாரங்களாய் சின்ன சின்ன டென்ஷன்கள் இருந்துக்கிட்டிருந்தன அல்லவா? இனி எல்லாம் சந்தோஷமும் சுபமும் லாபமும்தான். மனதில் நிம்மதி அதிகரிக்கும். மம்மிக்கும் உங்களுக்கும் ஃபைட்டிங் வராமல் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. அவங்க வாயில் வரும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் அப்படியே பலிச்சு உங்களுக்கு உதவும். அதிருஷ்டம் அது இது என்று எதையும் நம்ப வேண்டாமுங்க. உழைப்பை மட்டுமே நம்புங்க. போதும். அதுதான் உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாடு போக வாய்ப்பு வரும். கலைத்துறையில் உள்ளவர்கள் கொழிப்பீங்க. எதிர்பாலினத்தினரால் நன்மை உண்டாகும். பயணங்கள் நல்ல விதமான ரிசல்ட் கொடுக்கும். மாணவர்கள்  அநாயாசமாகத் தேர்வில் வெற்றி பெறுவீங்க.

மிதுனம்

காதல் திருமணத்துக்குப் பச்சை சிக்னல் கிடைச்சாச்சு…  ஹாப்பிதானே? கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். ஒரு சின்ன கவர்ச்சி அம்சம் உங்களை இணைக்கும்.  வார்த்தைகளை அளந்து , நன்றாய் யோசித்து.. பிறகுதான் பேச வேண்டும் என்பதை நல்லா நினைவில் வெச்சுக்குங்க்.  மம்மிக்கு லாபம் வரும். அவங்களுக்கு அலுவலகத்தில் அவார்ட் ரிவார்ட் என்று ஏதேனும் கிடைக்க சான்ஸ் இருக்குங்க. உங்களுக்குப் பெருமையும் பாராட்டும் உத்யோக மற்றும் சம்பள உயர்வும் வரும். ஆனால் அதற்காக நீங்கள் நிறையப் பாடுபட்டிருப்பீங்க. புது வேலை முயற்சி செய்யறீங்களா? இதோ கிடைச்சாச்சே. புண்ணியத் தலங்களுக்குச் செல்வீங்க. குழந்தைங்களுக்கு நன்மையும் லாபமும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை

கடகம்

இத்தனை காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்மைகள் மடியில் விழும். குழந்தைகளுக்கு மட்டுமில்லீங்க. உங்களுக்குமே கவர்மென்ட்டால் நன்மை உண்டுங்க. நண்பர்களால் உங்களுக்கும் உங்களால் நண்பர்ஸ்க் கும் நன்மை உண்டு. அதிலும் குறிப்பாக நெருங்கிய.. நல்ல நண்பர்கள் பிரமாதமாய் உதவுவாங்க. இவ்ளோ காலம் நல்ல நண்பர்கள் இல்லையோ என்று பயந்தவங்க இப்போ நன்மை செய்து நிரூபிப்பாங்க. உங்க வாழ்க்கையையே திசை திருப்பும் உதவிகள்கூடச் செய்வாங்க. உங்க சம்பள கிராஃப் மேல் நோக்கி நகரும். அரசாங்க உத்யோகம் வங்கி வேலை என்று காத்திருந்தவர்களுக்கு அது உடனே கைக்குக் கிடைப்பதற் கான உறுதியான செய்தி/ தகவல் வரும். சின்னச் சின்ன செலவுகள்கூட உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தேடித் தரும். அவற்றால் உங்களுக்குப் புண்ணியமும் கிடைக்குமுங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை

சிம்மம்

எதில்பாலினத்து சிநேகிதங்கள் அதிகமாகும். பட்… ஜாக்கிரதையா இருங்க. குடும்ப விவகாரங்கள் மற்றும் உறவினர்களைப் பொருத்த வரைக்கும்… எடுத்தேன் தலைகீழாய்க் கவிழ்த்தேன் என்று எந்த விஷயத்தி லும் அவசரப்பட்டு வார்த்தைங்களை விட்டுவிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க. ஆமாம். சொல்லிட்டேன். அலுவலகத்தில் உங்க பிரசித்தி பெற்ற  கோபம் வெடிக்காமல் பார்த்துக்குங்க. அமைதிக்காக வேண்டி ஏதாவது தியான செய்தால்கூட நல்லது.  அதற்கான வகுப்புகளில் சேரலாம். குறிப்பா நண்பர்கள் மத்தியில் பேசும்போது  வாயில் பிளாஸ்டர் போட்டுக்குங்க. இல்லாட்டி நம்பர் லாக் போட்டுக்குங்க.  பிகாஸ் விளைவுகளை நீங்கதான் சந்திக்கணும். நன்மைகள் அடுத்தடுத்து வரும். வாகனம் வாங்க பிளான் இருக்கா? எனில் அது இனிதே நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 1 முதல் வரை ஜனவரி 4 வரை

கன்னி

இப்போதைக்குப் பணம் நிறைய வருது இல்லையா? ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருகின்றனதானே? இதையெல்லாம் விட்டுடாம சேமிச்சு வைங்க. பிற்காலத்திற்குத் தேவையா இருக்கும். உதவும். பாவம்.. உங்களுக்கு வாகனத்தால் எவ்ளோ சிரமங்களும் செலவும் ஏற்பட்டன. இனி அவை இல்லை. வீடோ .. வாகனமோ.. அவற்றை விற்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் கவலையே வேண்டாம்.  நல்ல விலைக்கு விற்கலாம். அருமையான வீடு வாங்க ஏக்கமா ஏங்கிக்கிட்டிருந்தீங்க. நிறைவேறிடுங்க. நண்பர்கள் என்று எதிரிகளிடம் ஏமாறுவீங்க. நல்ல நண்பர்களைச் சந்தேகப்படுவீங்க. காலையில் ஒரு வித மனநிலை.. மாலையில் ஒருவித மனநிலை என்று மாற்றி மாற்றி செயல்படுவீங்க. அதுவேண்டாமே. முக்கியமாய்க் கோபத்தை டெலிட் செய்ங்க. 

துலாம்

உங்க மம்மி அரசாங்க உத்யோகத்தில் இருக்கறவங்களாய் இருந்தால்,. அவங்களுக்கு  நிறைய நன்மைகள் கியூவில் வந்து நிற்கும். நீங்க ஒரு வேளை, திடீர்னு வேலை மாறும்படி இருக்கலாம்… ரெடி ஸ்டெடி ஸ்டார்ட் என்று எப்போதும் தயார் நிலையில் இருங்க. உங்க புத்திசாலித்தனத்தால் லாபம் அல்லது வருமானம் பார்ப்பீங்க. அதற்காக நீங்க சற்று அதிகமாய் உழைச்சாலும் பலனும் சூப்பரா இருக்குமுங்க.  டாக்டர்ஸ்க்கும், ரியல் எஸ்டேட்டில் உள்ளவங்களுக்கும் செம லாபம் வரும். வேலை சம்பந்தமா ஏதாவது டென்ஷன் இருந்தால் அது பற்றி டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி. சீக்கிரத்தில் தானாய்ச் சரியாகும். எதில்பாலினத்து எதிரியால் உங்களை எதுவும் செய்ய முடியாது. பயப்படாதீங்க.

விருச்சிகம்

அம்மாடி.. நீங்க இத்தனை காலம் பட்ட சிரமங்கள் எல்லாம் இறகு மாதிரிப் பறந்து போயிடும்.  மனசில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். வெளிநாட்டிலிருந்து வருமானமோ லாபமோ ஓடி வரும். கணவருக்கு நிறைய முன்னேற்றம்.. பீரோ முழுக்க ஏற்கனவே இருந்தாலும்கூட மேலும் நிறைய ஆடைகளையும் நகைகளையும் வாங்கிக்  குவிப்பீங்க. பெரிய அளவில் உடல் நலக்குறைவு என்று நீங்க பயந்தது தலைப்பாகையோடு போகும். வெளிநாடு போகணும்னு உங்க குடும்பத்தில் யாரோ ஒருத்தர்  இத்தனை காலமாய்ச் செய்துவந்த முயற்சிகள் பலனளிக்காம போனது போக இப்ப நீங்க முயற்சியே செய்யாமலிருக்கும்போது தானாய்க் கனிந்து வாய்ப்பு மடியில் விழும். பேக் செய்யுங்க. எது எப்படியோ.. உங்களுடைய அட்ராக்ஷ்ன் அதிகரிக்கும்.

தனுசு

மம்மியோட ஃபைட் செய்து அவங்களை டென்ஷனாக்காதீங்க. ப்ளீஸ்.  பாசமும் அன்பும்தான் கடைசியில் வெல்லும். ஆகவே அம்மாதான் வின் பண்ணுவாங்க. நீங்க சரண்டர் ஆவீங்க. உங்க குடும்பத்தில் ஒரு வேளை யாருக்காவது ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய வேண்டியிருந்தாலும் அதன் ரிசல்ட் நல்ல விதமாகவே இருக்கும். எனவே டென்ஷன் வேண்டாம். புது வீடு அருமையாய்.. அழகான உள்ளமைப்போட ரெடியாகும். வாகனம்(ஸ்) வாங்குவீங்க. உங்க பேச்சின் வசீகரம் அதிகமாகும். அது எல்லோருக்கும் உங்களைப் பிடிச்சவங்களாக்கும். மம்மிக்கு சின்ன உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதை பூதக்கண்ணாடி வெச்சுப் பார்த்து டென்ஷன் ஆயிடாதீங்க. அந்தப் பிரச்சினை சிம்ப்பிளாய் முடிஞ்சுடும். குழந்தைங்க அவார்ட் ரிவார்ட் என்று வாங்கி உங்களை ரொம்பவே சந்தோஷம் அடையச் செய்வாங்க.

மகரம்

ஆனால் ஒன்று. எப்பவுமே பழைய சாதனைகளை நினைச்சுப் பெருமிதப்பட்டுக்கிட்டே இப்போதைய முயற்சியைக் கோட்டை விட்டுடாதீங்க. சுறுசுறுப்பை எப்பவும் குறைச்சுக்காதீங்க. வருமானத்துக்குப் புதிய வாய்ப்புகள் வரும். கப்-பென்று பிடிச்சுக்குவீங்க. வாய்ப்பு ஏணியில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க. எனவே சிரமங்கள் குறையும். நண்பர்களால் வாழ்க்கையில் வசந்தம் வீசும்.  குழந்தைங்களோட காதலுக்கு சம்மதம் சொல்லிடுங்க. எப்படியும் அவங்க நினைச்சதுதான் நடக்கும். எனவே நல்ல பெயர் எடுக்கணும்னா அவங்க பக்கம் சாய்ஞ்சுடுங்க. எதிலும் நிதானப் போக்கு இருந்தாலும் உழைப்பு என்ற உங்களோட பலம் இருக்கு பாருங்க.. அது.. ரிவார்டும், அவார்டும், முன்னேற்றமும், லாபமும் குடுத்தே தீரும். எனவே சந்தோஷமா இருங்க. உழையுங்க.

கும்பம்

கல்வித்துறைல உள்ளவங்களுக்கும்  பணம் புரளும் இடங்களில் வேலை பார்க்கறவங்களுக்கும் நேர்மையான லாபம் கிடைக்கும். இப்ப நீங்க பேசப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் உங்க வாழ்க்கையை நிர்ணயிக்கும். எனவே கொஞ்சம் கேர்ஃபுல்லாய்ப் பேசுவது நல்லது. ஆஹா.. அடேய்ப்பா… எவ்ளோ பெரிய கஷ்டமான  பிரச்சினைகளைக்  கடந்து தாண்டி வந்துட்டீங்க. இனி எல்லாம் நலமே. இத்தனை காலமாய்  வருமானத்தைப் பற்றியும் லாபம் பற்றியும் கவலை அரிச்சுத் தின்னுக்கிட்டு இருந்தது உங்களுக்கு. மெல்ல மெல்ல அது அதிகரிக்கும். வேலை பற்றியும் திக் திக்னு பயந்துக்கிட்டிருந்தீங்கதானே? பயமெல்லாம் பறக்கும். நிம்மதியே நிறையும். குடும்பத்தில் உங்களுக்கு மிக வேண்டிய ஒருவரை விமான நிலையத்தில் போய் டாட்டா காண்பிதது வழியனுப்பி வெளிநாட்டுக்கு அனுப்பப்போறீங்க.  

மீனம்

காதல் என்னும் வலையில் சிக்குவீங்க. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். நாலா பக்கமும் கிரெடிட் கார்ட் தேய்ப்பீங்க. செலவுக்கு மேல செலவு இருக்கும்.  அதனால் என்ன? இன்னொரு பக்கம் வரவேண்டிய வருமானம் வரும். பாஸ்போர்ட் விசா கிடைக்கும். குட்டிப் பாப்பா பிறக்கும்.  அல்லது குடும்பத்தில் ஒரு திருமணம் மூலம் புதுசாய் ஒரு நபர் இணைவாங்க. ஆரோக்யம் பற்றி அதிகமாய் பயம் ஏற்பட்டாலும்  அனைத்தும் சரியாகிக் கடைசியில் அப்பாடான்னு ரிலீஃப் ஆகும். கன்னா பின்னான்னு வளைச்சுக் கட்டி.. ஆரோக்யத்துக்கு ஒவ்வாத விஷயங்களையெல்லாம் சாப்பிடாதீங்க. பொதுவாகவே ஆரோக்யம் பற்றிய விஷயங்களில் கவனமாய் இருந்தாலம் .. சாப்பாட்டு விஷயத்தில் இரட்டிப்பு ஜாக்கிரதை உணர்வுடன் இருங்க. . வீடு கட்டுவீங்க. செலவு ஆகத்தான் ஆகும். கட்டடம் கொஞ்சம் மெதுவாய் வளரும். . ஆனால் எல்லாம் நல்லபடியா முடியும். அழகான வீடு அல்லது அழகான கார் இதில் ஏதாவது ஒன்றையாவது வாங்கிடுவீங்க.

கார்ட்டூன் கேலரி