வார ராசிபலன்: 28/08/2020 முதல் 03/09/2020 வரை! வேதாகோபாலன்

மேஷம்

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குமுங்க.  சில சங்கடங்க வந்தாலும்  உங்க பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்குமுங்க. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமடைவீங்க. கடுமையாக காலகட்டத்தை தாண்டி வந்து விட்டீங்க. புதிய வேலை கிடைக்குமுங்க. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  முகத்தில் பொலிவு கூடும். மனக்குழப்பம் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வருமுங்க. உறவினர்களால் இருந்த சங்கடங்க நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி தெம்பும் தைரியமும் கூடும். பணவரவு கூடும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்குமுங்க. இந்த வாரம் அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. ஹாப்பிதானே?

ரிஷபம்

உங்களுடைய பிள்ளைகளில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. அவர்களின் படிப்பிற் காக செலவு செய்ய வேண்டியிருக்கும். திடீர் பணவரவினால் திக்குமுக்காடிப்போவீங்க. வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். பெண்களின் உடல் நிலையில் கவனம் தேவை. எதையும் வெளிப்படையாக பேசி வம்பில் மாட்டிக்காதீங்க. கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன வாக்குவாதங்க வந்து போகும் எதையும் பேசும் முன்பாக ஒருதடவைக்கு 2 தடவை யோசித்து பேசுங்க.  கஷ்டங்க ஏதுமில்லை பணவரவு வருமுங்க. வீண் விரைய செலவுகளை குறைத்து சேமிக்க பழகுங்க. இருக்கிற வேலையில் ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும். புது வேலைக்கு முயற்சி பண்ணுங்க. வெளிநாட்டில் சிக்கித்தவித்தவர்கள் சொந்தநாட்டிற்கு திரும்பி வர வாய்ப்பு உள்ளது. குட் நியூஸ்தானே.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29 வரை

மிதுனம்

கடன் பிரச்சினை நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்குமுங்க அதற்காக கடன் வாங்கி வீண் செலவு செய்யாதீர்கள். நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். இரண்டில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் அனல் பறக்கும் அதற்காக எல்லா இடத்திலும் அதிகார பேச்சு செல்லு படியாகாது. வீட்டில் அமைதியாக பேசி காரியத்தை சாதிங்க. இனிமையான பேச்சினால் எல்லோரையும் உற்சாகப்படுத்துவீங்க. வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்க. இந்த வாரம் சிறு கவலையைக் கொடுத்தாலும் அது நிரந்தரமில்லை அதை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. உற்றவரின் துணை உங்களுக்கு தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கும் புதிய வேலை வாய்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. புதிய வேலை வாய்ப்பையும் கொடுக்கும். இந்த வாரத்தை உற்சாகமான மனநிலையோடு எதிர்கொள்ளுங்க. பெட்டர்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1 வரை

கடகம்

புதிய தொழில் தொடங்க நல்ல வாரம் இது. முயற்சிகள் பலிதமாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்குமுங்க. உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் நல்ல பெயர் கிடைக்குமுங்க. கணவன் மனைவி உறவில் காதல் அதிகரிக்கும். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து உங்க குடும்பத்தினர் உங்களைத் திக்குமுக்காட வைப்பர். கடந்த காலங்களில் கையை விட்டுப்போன வேலை கிடைக்குமுங்க, எதிரிகள் பிரச்சினை தீரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வருமுங்க. புதிய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். பிள்ளைகளுக்கு இருந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு கண்ணில் பிரச்சினை வரலாம் ஞாயிற்று கிழமைகளில் சூரியனை வணங்குங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். வெரிகுட்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3 வரை

சிம்மம்

இந்த வாரம் உங்க ராசிக்கு நல்லதும் கெட்டதுமான சம்பவங்க நடைபெறும். வேலை செய் யும் இடத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம் வீண் பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும். நெருப்பு, வம்பு வழக்கு விசயங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் கவனம் தேவை. உங்க பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. என்ன செய்தாலும் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்க முடியலையே என்ற கவலை மெல்லத் தீரும். மனதில் இருந்த பாரம் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு வீட்டில் நல்ல பெயர் கிடைக்கலையே என்ற மன அழுத்தம் தீரும். புதன்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை வழிபடுங்க கவலைகள் நீங்கும். டோன்ட் ஒர்ரி.

கன்னி

திருமணத் தடை இருந்தவர்களுக்கு திருமணம் பேசி முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடக்கும். நல்ல கம்பெனியில் வேலைக்காக அப்ளை செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமுங்க. திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு சந்தான பாக்கியம் தேடி வருமுங்க. பெண்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி தேடி வருமுங்க. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கணவரின் அன்பில் திளைத்து போவீங்க. சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துவார் கணவர். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. இதுநாள் வரை வெளிநாட்டில் தவித்தவர்கள் இனி சொந்த நாட்டில் உறவினர்களுடன் நிம்மதியாக இருக்கலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. படிப்புக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கிடைக்குமுங்க. ஹாப்பிதானே?

துலாம்

உங்க ராசிக்கு நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றன. திருமண தடைகள் நீங்கி சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். பணவரவு பல வகையில் இருந்து வருமுங்க. தடைபட்டு வந்த சுபகாரியங்க தடையில்லாமல் நடைபெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக் கும். சுப செய்திகள் தேடி வருமுங்க. உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வருமானம் ஏதாவது ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி தரும் வாரமாகும். நீங்க கேட்கா மலேயே உங்களுக்கு பொன் நகைகளை உங்க கணவர் வாங்கிக் கொடுப்பார். பெற்றோர் களால் நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். திருமணமாகி, குழந்தைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமுங்க. சூப்பர்.

விருச்சிகம்

இந்த வாரம் கொஞ்சம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். வார ஆரம்பத்தில் பணம் வந்தாலும் திடீர் விரைய செலவுகளும் வருமுங்க. பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக கையாளுங்க. பெண்கள் எதிர் பாலினத்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்க எதையும் வெளிப்படையாக பேசி மாட்டிக் காதீங்க. பேசும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. மேலதிகாரி பதவி உயர்வைக் கொடுப்பார். அரசு வேலைக்குத் தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கறவங்களுக்கு நல்ல வேலை கிடைக்குமுங்க. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வருமுங்க அதுவே படிப்படியாக மறைந்து நெருக்கம் அதிகரிக்கும். காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யுங்க பாதிப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். ஷ்யூர்.

தனுசு

இந்த வாரம் உங்களின் மனமும் உடலும் அதிக உற்சாகமாக இருக்கும். பாதிப்புகள் நீங்கி நீண்டகால பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைக்குமுங்க. திருமணம் சுப காரிய முயற்சி களில் வெற்றி கிடைக்குமுங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தேடி வருமுங்க. கணவன் மனைவி பிரச்சினையில் விட்டுக்கொடுத்து போங்க. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. தேவையில்லாமல் வார்த்தையை விடாதீங்க. பேச்சில் கவனமாக இருங்க. காதல் விசயங்க கைகூடி வருமுங்க. காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடியும். எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடுவீங்க. பேசும் வார்த்தையில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. பீ கேர்ஃபுல்.

மகரம்

திருமணம் சுப காரியங்க கைகூடி வருமுங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கும் பணத் தட்டுப்பாடு நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்குமுங்க. திடீர் விரைய செலவுகள் வந்து மனதை வாட்டி வதைக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீங்க. காதல் திருமணம் விசயங்க மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக கவலை ஏற்படுத்தி வந்த கடன் பிரச்சினை தீரும். சிலருக்கு வங்கிக்கடன் கிடைக்குமுங்க. அவசியம் இல்லாமல் கடன் வாங்காதீங்க. கணவன் அல்லது மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலையில் கவனம் அவசியம். எவ்வளவு சம்பாதித்தலும் வீண் விரைய செலவுகள் வந்து கொண்டேதான் இருக்கும். அம்மா அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ப்ளீஸ்.

கும்பம்

இந்த வாரம் உங்க ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது என்றாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாத பேச்சுக்களை பேசி வம்புகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஒருவார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பதை உணர்ந்து நாவடக்கத்தோடு நடந்து கொள்ளுங்க. வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும். பயணங்களை தவிர்த்து விடுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. அரசு வேலை கிடைக்குமுங்க வாய்ப்பு உண்டு. பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் வருமுங்க. இந்த வாரம் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் நன்மையும் ஆதாயமும் தேடி வருமுங்க. மனதில் உற்சாகமும் தெம்பும் கூடும். ஜாலி.

மீனம்

புது முயற்சிகளில் வெற்றி கிடைக்குமுங்க எதையும் தைரியமாக எதிர்கொள்வீங்க. எதிர் பார்த்த இடத்தில் இருந்து நிறையப் பணவரவு வருமுங்க. உங்களுக்கு இருந்த நெருக்கடி நிலைகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வியில் யோகம் வருமுங்க. திருமணம் சுப காரிய முயற்சிகள் நல்ல முறையில் நடக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரித்து வருமானம் வருமுங்க. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. திடீர் செலவுகள் வருமுங்க. கேட்ட இடத்தில் கடன் கிடைக்குமுங்க. திரும்ப கொடுப்பதில் சிரமம் இருக்காது. திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்குமுங்க. வாரத் துவக்கத்தில் சின்னதாய் ஒரு நல்ல செய்தி வருமுங்க, யெஸ்.