வார ராசிபலன் 29-12-2017 முதல் 04-01-2018 – வேதா கோபாலன்

 

மேஷம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எதிர்பாலினத்தால் நல்லதெல்லாம் நடக்குமுங்க. ஆரோக்யம் முன்பின்னாக இருந்தால் நீங்க டென்ஷன் மயமாக வேண்டிய அவசியமே இல்லவே இல்லை. அது பாட்டுக்கு வரும் .. போகும்..  நீங்க பாட்டுக்கு உங்க வேலையைக் கவனிங்க. பெரிசாய் சர்ஜரி ஆகுமோ என்று நீங்க  பயந்ததெல்லாம் சின்ன குண்டூசி விஷயம்தான் என்றும் இரண்டு வேளை மாத்திரையில் சரியாயிடும் என்றும் முடிவாகும். போதுமா? வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாகும்.  பயணங்களும்தான்.

ரிஷபம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

உங்க புத்திசாலித்தனத்தால் அலுவலகத்தில் லாபம் பெருகி அங்கே உங்களுக்கு நல்ல பெயரும் செல்வாக்கும் அதிகமாகும், தொழில்சார்ந்த நன்மைகள் மட்டுமல்லாமல் குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டாகும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும். அவங்களால நன்மைகளும் உண்டு. பல வித வருமானங்கள் அல்லது லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். சேமித்த பணமும் ஆக்கப்பூர்வமாகச் செலவழியும். சின்னச்சின்ன உடல் உபாதைகள் மனதைச் சோர்வடையச் செய்யக்கூடாது என்பது பற்றி கவனமாக இருங்கப்பா.

மிதுனம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

ஏற்கனவே மற்றவங்களைக் கவரும்படியான தோற்றமும் புத்திசாலித்தனமும் உள்ள நீங்க இன்னும் அதிக அட்ராக்டிவ்வா ஆவீங்க. செல்வாக்கு சொல்வாக்கு எல்லாம் அதிகமாகும். நிறையப் பேர் உங்களை அட்வைஸ் கேட்பாங்க. சற்றே நிதானித்து அவசியமானாலன்றி அட்வைஸெல்லாம் குடுத்துடாதீங்க. கொஞ்சம் தன்னம்பிக்கை குறையறமாதிரி இருந்துச்சுன்னா அனுமதிக்காதீங்க. உங்க பலம் உங்களுக்கு என்னிக்குங்க தெரிஞ்சிருக்கு, இன்றைக்குத் தெரியறதுக்கு? திடீர் அதிருஷ்டம் மற்றும் லாபம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து உங்க வாசலில் பெல் அழுத்தும். 

கடகம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

பலகாலம் தாமதமாகி , நீங்க சுவாரஸ்யம் இழந்து ‘எப்படியோ ஆகட்டும் .. போ’ என்று கைவிட்ட விஷயம் ஒன்று இப்ப அநாயாசமாய் நடந்து முடியும். உங்களாலேயே நம்ப முடியாத வெற்றிகள் உண்டு. கர்வம் தலைதூக்காமல் பார்த்துக்குங்க. “எனக்கு கர்வம் வந்தால் உனக்கென்னம்மா?” என்று கேட்கிறீர்களா? மத்தவங்களை எடுத்தெறிந்து பேசிடக்கூடாது பாருங்க. மனிதர்களைச் சம்பாதிப்பது கஷ்டம் இல்லையா? அதுக்காகத்தான். பொறுப்புகள் அதிகமாகும். அதனால் அசந்துவிடுகிற ரகமா நீங்க? ஜமாய்ப்பீங்க.

சிம்மம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

குழந்தைங்க பல வகைல முன்னேறுவாங்க. சில சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி வென்று நிமிருவாங்க. பெருமைப்படுவாங்க.. பெருமைப்படுத்துவாங்க. இத்தனை காலம் இருந்து வந்த ஏராளமான செலவுகள் இனி இருக்காது. 2018 ல் செலவுகளும் கட்டுப்படும். வருமானமும் அதிகமாகும். அதிருஷ்ட வாய்ப்புகள் அதிகமாகும். தாயாருக்கும் உங்களுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் ஏற்படாமல் பார்த்துக்குங்க. பொதுவாவே பெரியவங்களிடம் பணிவும் வணக்கமும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை நினைவில் வெச்சுக்கங்க.

கன்னி

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

அம்மாவுக்கு நல்லதெல்லாம் நடக்கப்போகுது பார்த்துக்கிட்டே இருங்களேன். யாரையும் எடுத்தெறிஞ்சு பேசாதீங்க. அனைவரையும் வாழ்த்துங்க. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் .. வாழ்த்தினாலும் வைதாலும் நீங்க சொல்றது எல்லாமே நடக்கும். எனவே நல்லதை மட்டுமே பேசுங்க. மத்தவங்களுக்குத் தீமை நடந்தா என்னன்னு அட்சியமா யோசிக்காதீங்க. ஏன் தெரியுமா? அவங்களுக்கு எது நடந்தாலும் பிறகு அது கட்டாயம் உங்களுக்கும் நடக்கும். திடீர்னு உடல் நலம் லேசாய்க் குன்றும். எனினும் அது திடீர்னே சரியாயிடும். பயம் வேண்டாம். உங்க உணவுப்பழக்கத்தால் ஏற்படும் சாதாரண அஜீரணம்தான்.

துலாம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

பரிசுகளும் பாராட்டும் ஒரு பக்கம் இருந்தாலும் வேலைப்பளு அழுத்துதா? டோன்ட் ஒர்ரி. நீங்க செய்த வேலைகளுக்கேற்ற நல்ல ஓய்வும் விடுமுறையும் கிடைச்சுடுங்க. வரவுக்கேற்ற செலவு வருதேன்னு டென்ஷன் வேண்டாம். செலவுக்கேற்ற வரவு வருதேன்னு சந்தோஷப்படுங்க.ஓ.கே? வெளிநாட்டு வேலை  வெளியூர் வேலைன்னு போக வேண்டி வரலாம். அது சின்ன ‘ஆன்சைட்’ டாகவும் இருக்கலாம். நிரந்தர வேலை மாற்றல் உத்யோகமாகவும் இருக்கலாம். முதலில் முனகிக்கிட்டே போவீங்க.  ஆனா திரும்பி வரவே மனசு வராத அளவுக்கு ஒன்றிப்போய் லைக் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க.

சந்திராஷ்டமம்: 29.12.2017 முதல் 01.01.2018 வரை  

விருச்சிகம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

யம்மாடீ. பேச்சில் என்ன ஒரு கவர்ச்சி. குறிப்பா எதிர்பாலினத்தவரெல்லாம் உங்க பேச்சைக்  கேட்டு அசந்து கவரப்படுவாங்க. திடீர் செலவுகள் இருந்தாலும் அதெல்லாம் நல்ல செலவுகளாகவும் ரொம்பவும் எதிர்பார்த்த எக்ஸ்பென்ஸ்களாவும் இருக்கும் என்பதால் டென்ஷன் ஆக  மாட்டீங்க. சகோதர சகோதரிங்க கிட்ட ராங்கு காட்டாதீங்கப்பா. அவங்க எப்டி வேணா இருந்துட்டுப்போகட்டும். நீங்க பொறுமையாப் போங்க. எதுக்காகன்னு வீம்பாக் கேட்கறீங்களா? வேற எதுக்காக… கூடிய சீக்கிரம் அவங்க கிட்ட நீங்க உதவி கேட்டுப் போக வேண்டியிருக்கலாம், அல்லது அவங்களாகவே முன் வந்து உதவக்கூடும். அப்ப லிட்டர் லிட்டரா அசடு வழியக்கூடாதில்லை? அதுக்குத்தான்.

சந்திராஷ்டமம்: 01.01.2018 முதல் 03.01.2018 வரை 

தனுசு

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

சாப்பிட மட்டும் வாயைத் திறங்க. பேசவே பேசாதீங்க. அவசியமான விஷயங்களுக்கும் நல்லதற்கும் மட்டும் பேசுங்க. மற்றபடி வேண்டாமே? இப்போ நேரம் சரியில்லை. நீங்க வெறும் ஹலோ சொன்னால்கூட தப்பு என்பார்கள். அவ்ளோ ஏன் நீங்க யாரையேனும் பாராட்டினால்கூட அதில் உள் குத்து இருக்குன்னு செய்தி பரவும்னா பார்த்துக்குங்களேன். அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்க உங்களோட கவர்ச்சி அம்சம் மறுபுறம் அதிகரிச்சுக்கிட்டே போகும்.  செல்வாக்கு கூடும். எல்லோரும் உங்களை நாடி வந்து ஆலோசனை கேட்பாங்க. குறிப்பா எதிர்பாலினத்தினர் உங்களை நாடி வந்து நிறையப் பேசுவாங்க. அதுதான் கூடிய விரைவில் பிரச்சினையாக வடிவெடுக்கவும் உருவெடுக்கவும் சான்ஸ் இருக்கு..  ஆகவே.. பேசாதீங்க. அவ்ளோதான். சிம்ப்பிள்.

சந்திராஷ்டமம்: 03.01.2018 முதல் 05.01.2018 வரை 

மகரம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

முதலில் புலம்பும் குணத்தை நிறுத்துங்க. எத்தனையோ நாளாய் நீங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத எத்தனை விஷயங்கள் நடந்துகிட்டிருக்கு? இப்ப ஒரு சின்ன கமா போட்டிருக்கு. அவ்ளோதானே? வெயிட் வெயிட். எல்லாம் நல்லபடி முடியும்.. சிறிது காத்திருக்கணும். தட்ஸ் ஆல். நமக்கு அவசரம். வேலை தேடிக்கிட்டிருந்தீங்கன்னா அது  ரொம்பவும் திடீர்னு கிடைக்கும். எதிர்பாராத செலவுங்க இருக்கத்தான் செய்யும். இனி அதற்கென்று கொஞ்சம் பணம் ஒதுக்கிடுவீங்களாம், சரியா? குழந்தைங்களால கொஞ்சம் செலவு இருக்கும். அவங்களைப் பற்றி லேசா டென்ஷன் இருக்கலாம். விட்டுத்தள்ளுங்க. சரியாயிடுவாங்க. நீங்க பயப்படும் அளவுக்கெல்லாம் எதுவும் ஆயிடலைங்க. நோ  டென்ஷன் ப்ளீஸ்.

கும்பம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

செம ஜாலிதான். என்றைக்கோ கைவிட்ட பணமெல்லாம் இப்போ உங்களைத் தேடித்தேடி ஓடி வரும். எப்பவோ செய்த முதலீடுகள் லாபம் தரும். அதிருஷ்டம் அடிக்கும். லக் தேடும் உங்களை. ஏதாவது   பெரிய முதலீட்டுத் திட்டங்கள் இருந்தால்  ஜாதகப்படி உங்களுக்கு ஃபேவரபிள் நேரமா என்பதை உறுதி செய்துக்கிட்டு சடக்குன்னு செயல்படுத்திடுவீங்களாம். ஓகே? அதெப்படி செலவுகளையும் கட்டுப்படுத்தி வருமானமும் ஒரே நேரத்தில் உயர்கிறது என்று வியக்கறீங்களா? அதுதாங்க நல்ல  நேரம்ங்கறது. எதிர்பார்த்த சில விஷயங்கள் கொஞ்சம் தாமதமாகக்கூடும்.அதுக்கெல்லாம் அசராதீங்க.  கட்டாயம் வெற்றி கைக்கு வரும்.

மீனம்

2018 ஏராளமான வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் குவிக்க வாழ்த்துகள். 

எத்தனைக்கெத்தனை பொறுமையா இருக்கீங்களோ… அவ்வளவுக்கவ்வளவு நல்ல விஷயங்கள் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கு. குடும்பத்தில் ஏற்பட்ட டென்ஷன்கள் எல்லாம் சரியாகும். காத்துக்கிட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் கனியும். இனி கொஞ்சம் ஓடி ஓடி உழைக்கணும். ஆனால் அது உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? நீங்க ரொம்ப நாளா ஏங்கிக் காத்துக்கிட்டிருந்த பணி அது.  நெருங்கின உறவினர் வீட்டுக் கல்யாணத்தில் உங்களை வி ஐ பி  மாதிரி நடத்துவாங்க. எதில் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நல்லவங்க உதவியால் புது வேலை கிடைக்கும். நல்லா யோசிச்சு ஏத்துக்கலாம் தப்பில்லை. நீங்கதான் அதிகம் உழைக்கத்  தயாராயிட்டீங்களே. தர்ம சிந்தனைகளால் நன்மை விளையும்.