வார ராசிபலன்: 3.4.2020 முதல் 9.4.2020வரை! வேதாகோபாலன்

மேஷம்

இறைசிந்தனை உள்ளவர்களுக்கும் ஆரோக்யம் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கும் பிரச்சினை இருக்காது. உழைப்புக்கேற்ற வருமாம் இல்லைன்னு மனசில் சின்னக்குறை ஏற்பட அனுமதிக்காதீங்க.  வருமானம் வந்தாலும் மனசில் வேண்டாத கற்பனைகளும் பயங்களும் இருக்கும். அதை அனுமதிக்காதீங்க. உங்களுக்கு இந்த வாரம் வேலை விசய மாக நிறைய நன்மைகள் நடக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்ல வாரம். உங்களுக்கு பெர்சனல் வாழ்க்கையில இந்த வாரம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். எல்லாம் நீங்க விரும்பிய மாறுதல்கள்தான். வாரத்தின் முற்பகுதியில் சில மன அழுத்தங்கள் இருந்தாலும் பிற்பகுதியில் உங்களுக்கு வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து வைத்திருப்பீங்களே. அம்பாளை தீபம் ஏற்றி வழிபடுங்க, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்க டென்ஷன் காணாமல் போகும்.

ரிஷபம்

நினைச்ச எதுவுமே நடக்காம தடைகளும் தாமதங்களும் ஏற்படமுங்க. வேலையில மாற்றங்கள் வேணும்னு நினைப்பவர்கள் வாரத்தின் பிற்பகுதியில் முயற்சி செய்யலாம். விஆர்எஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதைக்கு எது செய்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியான முடிவைத் தராது. எனவே ப்ளீஸ் சற்றுப் பொறுங்க. இப்போது உள்ள வேலையில் விரைவில் நிம்மதி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். அதோட.. எதிர்பாலினத்தவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உங்களுக்குக் கடந்த வாரங்களைவிட லாபம் கிடைக்கும். மன அழுத்தம் இருந்தாலும் விரைவில் நீங்க விரும்பிய துறையில் நீங்க பிசினஸ் பண்ணுங்வீங்க நல்லதே நடக்கும். மூத்தவர்களிடமோ அல்லது வாழ்க்கைத் துணையுடனோ, மனம் விட்டுப் பேசுவீங்க. இதனால எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். குலதெய்வத்தை தியானம் செய்ங்க. கவலை குறையும்.

மிதுனம்

ஒரு பக்கம் டென்ஷன் இருந்தாலும், உங்களைப்பொருத்த வரையில் மிக நல்ல யோகங்கள் உண்டாகும். இதுவரை இருந்த வீடு அல்லது நிலம் தொடர்பான பிரச்சினைகள் ஒரு வழியாக நீங்கும். தொழில் வேலை தொடர்பாக உங்கள் பயணம் வெற்றி அடையும். உத்தியோகஸ்தர் களுக்குச் சிறிது கடினமான மதமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்களின் துணையைக் கேட்டு நடப்பது நல்ல பலனைக் கொடுக்கும். பொருளாதார ரீதியில் பிரச்சினை இல்லாமல் தான் இருப்பீங்க. அலுவலக ரீதியா இருந்துக்கிட்டிருந்த உங்க பிரச்சினைகள் தீரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அதற்கான சந்தர்ப்பம் உண்டாகும். இருந்தாலும் மனசுல இருந்துக்கிட்டிருந்த பயங்கள் தீரச் சிறிது காலம் ஆகும். அம்பாளையும் விநாயகரையும் கெட்டியாப் பிடிச்சுக்குங்க. பயம் நீங்கும்.

கடகம்

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் உங்ககிட்டேயிருந்து கொஞ்சகாலத்துக்கு ஓடி ஒளிஞ்சுக்கும்.  உண்மையான பிரச்சினைங்க ஒரு புறம் இருக்க.. கற்பனை  பயம் வேற உங்களை ஆட்டிப்படைக்கும். சில மாதங்களாய் வற்றியிருந்த உங்களோட பணப்பை நிரம்பும்.  நல்லவை அல்லாத பாதையில் செல்ல அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுங்களை எடுத்ததால சில பிரச்னைங்களில் சிக்கித் தவித்தீர்களே! இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள். அப்பாடான்னு மனசுல நிம்மதி லேசா எட்டிப்பார்க்கும். கடவுள் சிந்தனையை விட்டுடவே விட்றாதீங்க. உங்களை கண்டும் காணாமல் போனவங்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவாங்க பார்த்துக்கிட்டே இருங்களேன். விஷ்ணுவையும் லட்சுமியையும் வழிபடுங்க. சிரமம்ஸ் ஓடிடும்.

சிம்மம்

உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் இன்னும் விரைவாகச் சரியாவீங்க. இந்த வாரம் எதிர்பாராத நல்ல திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்குங்க. வழக்குகளில் இருந்துக் கிட்டிருந்த தேக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகுங்க. ராமரை வணங்குங்க. கஷ்டம் விரைவில் காணாமல் போகும்.

கன்னி

பயமும் கவலைகளும் இருக்கவே செய்யும். எனினும், கணவன், மனைவி உறவு மகிழ்ச்சி கரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அன்யோன்யம் அதிகமாகும். தெய்வ நம்பிக்கை இன்கிரீஸ் ஆகும். வாழ்க்கை துணையின் சப்போர்ட் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஃபேமிலியைப் பொருத்த வரைக்கும், பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்னையிலும் சாதகமான முடிவை பெறுவீங்க. கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற் றமடைய உதவும். அரசியல்துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை மாணவர் களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் இருந்தாலும் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நரசிம்மரையும் சிவனையும் வழிபடுங்க,. சிரமங்கள் ஓடிஒளியும்.

துலாம்

இந்த வாரம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எனினும் அது கொஞ்சம் தாமதமாய்க் கிடைக்கும். அதுக்கு மனசைத் தயார் செய்துக்குங்க. வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும். புதியதாக வீடு மனை வாகன சேர்க்கை ஏற்படுவதில் கொஞ்சம் தடை தாமதங்கள் இருக்கும்.  செய்தொழிலில் மன நிம்மதி அதிகரிக்க இன்னும் கொஞ்சகாலம் பொறுத்திருங்க. குடும்ப விவகாரங்களையும் உறவினர் நெருக்கத்தையும் பொருத்த வரையில்  நன்மை உண்டாகும். மேலதிகாரிங்களின் ஆதரவை அலுவலகவாசிங்க பெறுவீங்க.

விருச்சிகம்

சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. தொழில் வியாபாரத் தில் கொஞ்சம் மந்த நிலை இருந்தாலும்கூட உங்களுக்கு இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த போட்டிங்க லேசாய்க் குறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் எளிமையாய் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியும் அன்யோன்யமும் கூடும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகுங்க. எதிர்பார்த்த உதவிங்க கிடைக்கப் போகுதுங்க. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். அதுக்காக டென்ஷனாகாதீங்க.  உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். ஏதோ அப்டி இப்படி சமாளிச்சுடுவீங்க.

தனுசு

பேச்சிலும் செயலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியாக வேண்டும். உங்க சீக்ரெட் விஷயங்களையெல்லாம் யார் கிட்டயும் சொல்லாதீங்க. கடன் தொடர்பான பிரச்சனைகள் முழுக்கத் தீராட்டியும் ஸ்லைட்டா குறைஞ்சுடும். கொஞ்சமே கொஞ்ச காலத்துக்குப் பொறுமையோட இருங்களேன். பல வகையான  யோகங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.  ஆனா இதுக்கெல்லாம் கொஞ்சகாலத்துக்கு வெயிட் செய்யணும்.  குருவாயூரப்பனையும் அனுமனையும் வணங்கி  நன்மைபெற்று சிரமங்களிருந்து வெளியே வாங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை

மகரம்

மனசில் சிறு சிறு கவலைகள் இருப்பதை அவாய்ட் செய்ய முடியாது. சுந்தர காண்டம் படிங்களேன்.  எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். ஆனாலும் எதுவுமே பரபரப்பா முடியாமல் சற்று நிதானமாய்த்தான் நடக்கும்.  மனசைத் தயாரா வெச்சுக்குங்க. மனசாட்சிக்கு முக்கியத்துவம் குடுத்தே ஆகணுங்க. தயவு செய்து அதிலிருந்து மாறாதீங்க. இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  இந்த இரண்டையும் தவிர்க்க முடியாதுதான். பட்.. நீங்க புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லதுங்க. அவரசப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதுவும் செய்யாதீங்க.  சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மனசோர்வு அகலும்.மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை

கும்பம்

நண்பர்கள்கிட்ட கவனமாகப் பேசிப் பழகுவது நல்லதுங்க. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பார்க்கறது சற்று சிரமம்தாங்க. ஏதோ கெடைச்ச வரைக்கும் லாபம்னு இருங்க. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். குடும்பத் தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரிச்சுக்குங்க. வேற என்ன செய்வது? மனதளவில் பாதிப்பு அதிகமா இருக்கும். ஆனா உண்மையான சேதம் நீங்க பயந்த அளவுக்கு இருக்காது. அபிராமி அந்தாதி படிச்சு அம்பாளை வழிபடுங்க.  எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 வரை

மீனம்

நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லதுங்க. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தருமுங்க. இல்லாட்டி வீண் சந்தேகம்தான் ஏற்படும்கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். அல்லது எதிர்பார்த்த வாய்ப்பு வராமலும் இருக்கலாம். மனசைப் போட்டு எதுக்கும் அலட்டிக்காதீங்க. அரசியல்துறையினர் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க.  மாணவர்கள் பெரியோர்களை அனுசரிச்சுப் போறது நல்லதுங்க. கூடுதல் கவனத்துடன் படிப்பது மஸ்ட் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்..

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரை

கார்ட்டூன் கேலரி