வார ராசிபலன் 3-6-17 முதல் 8-6-17 வரை -வேதா கோபாலன்

மேஷம்

வசீகரம்னா வசீகரம்.. அவ்வ்வ்ளோ வசீகரம் இருக்கும் உங்கள் வார்த்தைகளில். சிங்கமாய்ச் சீறியவங்களா இவங்க.. என்று வியக்க வைப்பீங்க போங்க. காதல் என்னும் குளத்தில் நீந்துவதற்காக குதிக்கப் போறீங்க. ஜாக்கிரதை. அடி கிடி படாமல் பார்த்துக்குங்க. வேலை கிடைச்சாலும் புலம்பினால் எப்படி? குழந்தைகள் பற்றிய டென்ஷனுக்கு டாட்டா சொல்லப்போற நாள் அதிக தூரத்தில்  இல்லீங்கோ.

சந்திராஷ்டமம்: ஜுன் 7 முதல் ஜுன் 10 வரை

ரிஷபம்

அலுவலகத்தில் எல்லோரும் மண்டையை அல்லது கொண்டையைப் பிச்சுக்கிட்டு யோசிச்சும் தீர்வு காண முடியாத பிரச்சினையை நீங்க சும்மா காஷுவலாய்.. அநாயாசமாய்.. அலட்டிக்காமல் தீர்த்து வைச்சு ஓவர் நைட் கதாநாயகியாயிடுவீங்க. கங்கிராட்ஸ். ஏற்கனவே எல்லோரும் உங்க பின்னாடி மந்திரிச்சுவிட்ட கொக்கரக்கோ மாதிரி சுத்தறாங்க. இனி கேட்கவே வேண்டாம். ஆனாலும் பொறாமையையும் திருஷ்டியும் இலவச இணைப்பாய்க் கிடைக்கும், ஜாக்கிரதை.

மிதுனம்

கணவரோட ஃபைட் சீன் இல்லாத திரைக் கதையாய்த் தேர்ந்தெடுத்துக்குங்க. முடிஞ்சா டூயட் இருக்கட்டும். மம்மீ அழகான வாகனம் வாங்குவாங்க. நினைச்ச படிப்புக்கு சீட் கிடைச்சு ‘உலகத்தில் என்னைவிட அதிருஷ்ட சாலி உண்டா?” என்று சுருதி சுத்தமாய்ப் பாடிக்கொண்டி ருப்பீங்க. வருமானம் அதிகமோ குறைவோ.. செலவுகளுக்கான கிராஃப் இறங்கும், மகிழ்ச்சிதானே?

கடகம்

யம்மாடீ,. பேசாம உங்க க்ரெடிட் கார்ட்டையெல்லாம் ஏதாவது லாக்கர்ல வெச்சுப் பூட்டிட்டு சாவியை நம்பகமானவங்க கைல கொடுங்க. இது மாதிரி செலவு  செய்தால் என்னவாவது? பேச்சில் விஷமாய்க் கொத்தாதீங்க. மிகவும் திடீர்னு பெரிய அதிருஷ்ட வாய்ப்பு சுனாமி யாய்த் தாக்கி சந்தோஷத்தில் அசத்தப் போகுது. அலுவலகத்தில் நீங்கதான் அட்ராக்ஷன் பாயின்ட்டாயிருப்பீங்க.

சிம்மம்

வந்தாச்சு வந்தாச்சு, காத்திருந்த நல்ல தகவல்ஸ் எல்லாமும் வந்தாச்சு. குறிப்பாய்க் குடும்பத்தில் மேளமும் மாலையும் சேர்ந்து வந்தாச்சு. குவா குவா சத்தம் இதோ கேட்டாச்சு. நினைச்ச உத்யோகம் கிடைக்கவே கிடைச்சாச்சு. கலக்குங்கப்பா. இதென்ன இவ்ளோ லாபங்களும் இத்தனை வருமானங்களும். யம்மாடீ, அப்படியே எடுத்து பத்திரமாய் சேமிச்சுக்குங்க. தாம் தூம்னு செலவு செய்ய வேண்டாம். சொத்து வாங்க உதவும்,

கன்னி

டாடிக்கு திடீர் லக் அடிக்கும். உங்க குழந்தைங்க படிப்பு அவங்க கனவு கண்ட மாதிரியே அமையும். நீங்க திருமண வயசில் இருந்தால் உங்களுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகும். தங்கம் வாங்க ரொம்ப நாளாய்த் திட்டம் போட்டிருந்தீங்க. இப்ப அது மறந்துகூடப் போன நிலையில் அநாயாசமாய்க் கைகூடும். கணவருக்கு பிரமோஷன் சம்பள உயர்வுன்னு லிஃப்ட்டில் போவது போல் வாழ்க்கை உயரும்.

துலாம்

இருங்க இருங்க, மேரேஜ் ஆகலையேன்னு  முகத்தை முழ நீளத்துக்குத் தொங்கப் போட்டுக்கிட்டு சோகமான எமோஜி மாதிரி போஸ் குடுக்க வேண்டாம். இதோ அந்த நாள் வரத்தானே போகுது என்று விளம்பர மாடலிங்க் மாதிரிக் கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிப் பாருங்க. இனிக்கும், உண்மையில் நடக்கும். அலுவலகத்தில் இன்ன வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையும் உங்கள் பொறுப்பில் விழக்கூடும், செய்ங்க. அது உதவும்.

விருச்சிகம்

வெளிநாட்டில் உத்யோகம். டாலர்களிலும் பவுண்ட்களிலும் சம்பளம். ஹும், உங்களுக்கு என்னம்மா. லேட்டா வந்தாலும் ஸ்மார்ட்டா வந்து ஜெயிப்பீங்களே. மெடிக்கல் பில்லுக்குப் பணம் கட்ட நேரும் அளவுக்கு ஆரோக்யத்தில்  அலட்சியம் வேண்டாம். கவனமா யிருங்கம்மா. எதிர்பாலினத்தைச் சேர்ந்த நண்பர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பெரிய உதவிகளைச் செய்வாங்க.

தனுசு

எதுக்கு பயம்? உங்களுக்கு ஏழரைச் சனி என்று ஊர் முழுக்க போஸ்ட்டர் அடிச்சு ஒட்டி யிருந்ததைப் பார்த்து டென்ஷன் ஆக வேண்டாம். வீண் பழி வரும்னு யாராவது சொன்னால் அவங்களைப் புறக்கணியுங்க. அனுமான் சாலீசா நமக்காகத்தானே எழுதப்பட்டிருக்கு? பிறகென்ன? ஜமாய்ப்பீங்க.

சில விஷயங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்து சந்தோஷ அதிர்ச்சி வழங்கும். மகளின் திருமணம் செட்டில் ஆகிவிட்டது, மகிழ்ச்சிதானே?

மகரம்

காத்திருந்த சுபகாரிங்கள் கைவசப்படும். அப்பா உங்களுக்கு ஏதேனும் பரிசு தருவார். அல்லது அவர் வழி சொத்துக்களில் பாகம் கிடைக்கும். குழந்தைகள் மேடை ஏறிப் பரிசுவாங்குவாங்க. கைதட்டல் சத்தம் மனசில கேட்கும். வெளிநாடு செல்லவும் வெளியூரில் வேலை கிடைக்கவும் வேளை வந்தாச்சு. உங்களின் புத்திசாலித்தனம் குடும்பத்தில்.. பள்ளியில்.. அலுவலகத்தில் என்று நன்மை செய்து புகழ் வாங்கித்தரும். 

கும்பம்

மம்மிக்குப் புகழ்னா உங்களுக்கும் பெருமைதான். குழந்தைகள் விதவிதமாய் மகிழ்ச்சியும் கர்வமும் அளிப்பாங்க. படிப்பில் மட்டுமில்லாமல் ஆல் ரவுண்ட் சாதனைங்க செய்வாங்க. கணவர் வெளிநாட்டு .. வெளியூர் டூர் போவார். வயிறு சம்பந்தமான சிறு பிரச்சினைகள் ஏற்படாதபடி பாதுகாப்பது உங்கள் கையில்தான்மா இருக்கு. தயவு செய்து உத்யோகம் மாறுவது பற்றி யோசிக்காதீங்க. ப்ளீஸ்

சந்திராஷ்டமம்: ஜுன் 2 முதல் ஜுன் 5 வரை

மீனம்

பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும் மா. புதுசாய் வீடு வாங்குவீங்க. அதுவும் பசுமை சூழலில்…கார் வாங்குவீங்க. அதுவும் அழகாக… கவர்ச்சியாக. இதோ .. காத்திருந்த கல்யாணம் முடிஞ்சாச்சே. ஆரோக்யக் குறைபாடுகள் சரியாகும். கவர்ன்மென்ட் உத்யோகம்  அல்லது பேங்க் ஜாப் முயற்சி செய்துகிட்டிருந்தவங்களுக்கு மெயிலில் தேன் பாயும். கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் எல்லாம் டக்டக்கென்று நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: ஜுன் 5 முதல் ஜுன் 7 வரை

Leave a Reply

Your email address will not be published.