வார ராசிபலன் 30.06.2017 to 06.07.2017 -வேதா கோபாலன்

--

மேஷம்

சகோதரர்களுக்கெல்லாம் அரசாங்கத்தால் நன்மை கிடைக்குங்க. அதைப்பார்த்து தயவு செய்து சந்தோஷப்படணும், ஒகேயா? குடும்பத்தில் யாருக்காச்சும் லவ் கல்யாணம் அது இதுன்னு நடக்கும், என்ன செய்ய, காலம் மாறிடுச்சில்ல. சந்தோஷமா அட்சதை போடுங்க. வீடு வாங்கவோ அல்லது வீட்டுல வாகனம் வாங்கவோ சாத்தியம் இருக்குங்க. குழந்தைங்களுக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டாட்டா சொல்லுவீங்க. நண்பர்கள் நல்ல யோசனை சொல்லுவாங்க. புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்க. ஆமாம். சொல்லிப்புட்டேன்

சந்திராஷ்டமம் : ஜூலை 4 முதல் ஜூலை 7 வரை

ரிஷபம்

திடீர்னு ஒரு கவர்ச்சி உங்ககிட்ட ஏற்படும். உங்க வசீகரம் காரணமா நாலு பேர் உங்ககிட்ட  வந்து ஆலோசனை கேட்பாங்க. பேச்சில் எந்த அளவு கவர்ச்சியும் அழுத்தமும் இருக்கோ அதே அளவு கோபமும் வெளிப்படும், அதுல  மட்டும் ரொம்பவும் கவனமா இருங்க. அப்பாவுக்கு நன்மைகள் ஏற்படுங்க. இத்தனை நாள் இருந்த வேகம் உங்க முன்னேற்றங்க ளில் குறைஞ்சா டென்ஷன் ஆகாதீங்க. சீக்கிரம் சரியாகும். .குழந்தைங்க வாழ்க்கைல அபார முன்னேற்றமும் சந்தோஷமும் வெற்றியும் உண்டாகும். வெளிநாட்டில் உள்ள கிளைக்குத் தாவுவீங்க, ஆல் த பெஸ்ட்

மிதுனம்

கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது தியானம் இருந்தா மொதல்ல அந்த வகுப்பில் சேருங்க. உங்க நன்மைக்குத்தான் சொன்னேன். அபரிமித புத்திசாலித்தனம் உள்ள உங்களுக்கு ஏராளமான புது விஷயங்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்படும். ஜமாயுங்க. பேச்சிலும் செயலிலும்  வெளிப்படும் புத்திசாலித்தனம் காரணமாக உங்களைப் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக எதிரிகள் நண்பர்களாவார்கள், நண்பர்கள் நல் ஆசானாகி உங்களை வழிநடத்துவார்கள்.தந்தைக்கு வெளிநாடு போக வாய்ப்பு வரும். உங்கள் உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் நம்புங்க. அதிருஷ்டத்தைச் சார்ந்து எதையும் செய்யாதீங்க. ப்ளீஸ்.

கடகம்

பயணம் பயணம் என்ற ஊர் ஊராக நாடு நாடாகக் சுற்றிக் கொண்டிருக்கீங்க. நீங்களா விரும்பி அதற்கு ஒரு இடைக்கால விடுப்பு தருவீங்க. குடும்பத்தில் புதிய வரவுகள் வந்தி ருக்கலாம். அல்லது திருமணம் மற்றும் பிரசவம் காரணமாக அவை ஏற்படலாம். அம்மா வுக்கு ஏற்படும் சிறிய பிரச்சினையைக் கருணையுடன் அணுகுவதைவிட்டுவிட்டு சண்டை சச்சரவுன்னு இறங்காதீங்க. வாகனம் வாங்க இது உகந்த நேரம் இல்லை, எனினும் தவிர்க்கவே முடியாமல் வாங்க நேர்ந்தால் கருப்பு மற்றும் நீல நிறங்களைத் தவிர்க்கப் பார்க்கலாமே. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடக்கும், உங்க பேச்சிலும் செயலிலும் கருணை நிலவும். கணவருக்கு/ மனைவிக்கு நிறையப் பயணங்கள் நேரும். அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய நன்மை இவ்ளோ காலமாய் உங்களை ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்ததில்லையா? அது ஒரு வழியா உங்களை வந்தடையும். வீடு வகையறாக்களால் வருமானமும் லாபமும் வரும். மருத்துவத் துறையில் உள்ளவர்கள் நிறைய லாபமும் நல்ல பெயரும் சம்பாதிப்பீங்க. நல்ல செயல்கள் செய்வீங்க. படிப்புக்காக தான தர்மங்கள் செய்வீங்க. இப்போதைக்கு லோன் எதுவும் போட வேண்டாம்.

கன்னி

குழந்தைகளுக்கும் கணவருக்கும் நன்மைகள் நடந்துகிட்டே இருக்கும், கவலைப் படாதீங்க. வெளிநாடு சம்பந்தமான சில நல்ல செலவுகள் ஏற்படும்.பணத்துக்கு அலைந்தாலும் நல்ல முறையில் நிறைவேறும். கல்வித்துறையில் உள்ளவங்களுக்கு நிறைய லாபம் வரும். புது வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு. நல்ல தசை புக்திநடக்கறவங்க தைரியமா ஏத்துக்குங்க. மருத்துவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். சினிமாத் துறையில் உள்ளவங்களுக்கு நிறைய வாய்ப்பு வரும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவீங்க.

துலாம்

வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். எதுக்கெல்லாம் பயந்து நடுங்கிக்கிட்டிருந்தீங்களோ அதெல்லாம் சுலபமா சால்வ் ஆகும். பேச்சில் கடுமை ஏற்படாமல் பார்த்துக்குங்க. குழந்தைங்க வெளிநாடு போக ஆசைப்பட்டால் தடை போடாதீங்க. அப்புறம் வாய்ப்பு வருமோ என்னவோ? தந்தைக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அவர் பயணங்கள் செய்வதால் அவருக்கு மட்டுமின்றிக் குடும்பத்துக்கே நன்மையும் லாபமும் உண்டாகும். புது வேலை கிடைச்சா சீனியர்களைக் கலந்தாலோசிச்சு அவங்க அனுபவப்படி ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நல்லதுங்க

விருச்சிகம்

பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாமே தவிர மற்றபடி எல்லாம் நல்லபடிதான் போய்க்கிட்டிருக்கும். நீங்க திருமணமாகாதவர்னா காதல் அனுபவங்கள் ஏற்படும். அது திருமணத்தில்தான் முடியும். சினிமா அது இதுன்னு ஜாலியாப் பொழுது கழியும். வெளிநாட்டு வேலை உடனே கிடைக்கும். உடனடியா போயி சேரும்படி இருக்கும். தயார் நிலையில் பாஸ்போர்ட்டையும் சூட்கேஸையும் வைச்சுக்குங்க. மம்மியின் உடல் நிலையை நல்லாப் பார்த்துக்குங்க, வாகனம் வாங்குவதை இன்னும் சில மாதங்களுக்கு ஒத்திப்போட முடியுமா?

தனுசு

இந்த அளவாவது எல்லாம் நல்லபடியா நடக்குதேன்னு சந்தோஷப்படுங்க. அதை விட்டுப்புட்டு நடக்காத விஷயங்களுக்கு வருத்தப்படுவது அபத்தம். எதிர்பாலினத்து சிநேகிதங்களால் நன்மைகள் நடக்கும். அவங்க உங்க வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் மட்டும் இல்லாமல் உதவிகளும் செய்வாங்க. கணவருடன்/ மனைவியுடன் சண்டை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காதீங்க. அதை மட்டும் அவாய்ட் செய்தே ஆக வேண்டும். வேலை மாறும் யோசனையை இரண்டு மாசங்களுக்கு ஒத்திப் போடுங்க. சற்று மெதுவாப் போனாலும் எல்லாமே நிறைவேறும். கவலைப்படாதீங்க.

மகரம்

அதிருஷ்டம்னா அதிருஷ்டம்,அவ்ளோ அதிருஷ்டமான நேரம் இது. என்னதான் ஏழரை ஆரம்பிச்சாலும் உங்களை யாரும் எதுவும் அசைக்க முடியாது. மிகப் பெரிய தீர்மானங்கள் எடுக்க வேண்டாம். எனினும் தன்னிச்சியான நன்மைகள் நடந்துகொண்டே இருக்கும். வாயில் நல்ல வார்த்தைகள் மட்டுமே வருவதானால் வாயைத்திறங்க, இல்லாட்டி பேசவே வேண்டாம். வாரம் முழுக்க மௌன விரதம் இருந்தாலும் தப்பில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நல்லா நினைவில் வெச்சுக்குங்க. பழைய பாக்கிங்க வசூலாகும்.

கும்பம்

எல்லா வகைப் பயணமும் செய்து முடிச்சிருப்பீங்க. இப்ப ரெஸ்ட் எடுக்க உகந்த நேரம். அழகான வீடு அழகான வாகனம் எல்லாம் வாங்கப் போறீங்க. அவ்ளோவும் வாங்கப்போகும் நீங்க செலவு பற்றி முனகினால் எப்படி? குழந்தைங்க சில சிறு டென்ஷன் ஏற்படுத்துவாங்க. அதைப் போய்ப் பெரிசாக்கிப் பொருட்படுத்துவாங்களா? விட்டுத் தள்ளுங்க. வயிறு சம்பந்தமான சின்னச் சின்ன உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தை களுக்கு அரசாங்க சம்பந்தமான நன்மைகள் கட்டாயம் உண்டு. குடும்பத்தில் நல்ல விசேஷங்கள் நடப்பதால் ஹாப்பீயாவீங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை

மீனம்

மனசில் சந்தோஷமும் உடலில் ஆரோக்யமும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும் உங்களை யாரால் பிடிக்க முடியும்? ஏதாவது வேண்டாத விஷயங்களுக்கு மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டும் மனசைப் போட்டு வருத்திக்கொண்டும் இருப்பீங்க. கணவருக்கு/ மனைவிக்கு இருந்த உடல் நலக்கோளாரெல்லாம் நல்லா சரியாகும். அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷனாறீங்க? வீடு வாங்குவீங்க. இரண்டு மற்றும் நாலு சக்கர வண்டி வாங்குவீங்க. கணவருக்கு/மனைவிக்கு அலுவலகத்திலும் சமூகத்திலும் அந்தஸ்த்து உயரும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 2 முதல் ஜூலை 4 வரை