வார ராசிபலன்: 30-8-18 முதல் 05-09-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

நண்பர்களுக்கு .. குறிப்பா எதிர்பாலினத்தில் உள்ள நட்பூஸ்க்கு பிராப்ளம் வரும்தான். நீங்க எழுநூறு கிலோமீட்டர் வேகத்துல ஓடிப்பறந்தெல்லாம் போய் உதவணும்னு அவசியமே இல்லைங்க. பிறகு பிரச்சினை பிரச்சினைன்னு புலம்பும்போது கேட்கவோ உதவவோ எந்த ஃப்ரெண்டும் முன் வரமாட்டாங்க. ஆமாங். சொல்லிப்புட்டேன். ஆபீஸ் விஷயமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள். சந்தோஷமாய்ப் போய்விட்டு சீக்கரமாகத் திரும்பி வருவீங்க. திடீல் லாபம்ஸ் மற்றும் இன்கம்ஸ் வரும். என்றைக்கோ மறந்து போன முதலீடுங்ககூட லாபம் தந்து அசத்தும். என்ஜாய்.

ரிஷபம்

பள்ளி.. கல்லூரி மற்றும் கல்வி நிலையங்கள்ல ஜமாய்ப்பீங்க. கவலையை விடுங்க. எதுக்கெடுத்தாலும் பயப்படாதீங்க. உத்யோகம் சம்பந்தமா சின்ன ஏமாற்றம் இருந்தாலும் உடனுக்குடன் சரியாகும். கவலை வேண்டாம்.  கொஞ்சம் ஆரோக்யத்தைப் பார்த்துக்குங்க… நத்திங் சீரியஸ். எனினும் முன்கூட்டியே கவன மாய் இருந்துட்டா நல்லதில்லையா? சரின்றீங்களா? தட்ஸ் குட். அதிருஷ்டம், லாட்டரி .. காஸினோ மண்ணாங்கட்டியையெல்லாம் நம்பாதீங்க. இப்போதைக்கு நல்ல நேர்மையான உழைப்பு … உழைப்பு… உழைப்பு மட்டுமே கைகொடுக்கும்.      இதை மட்டும் நல்லா நினைவில் பதிச்சுக்குங்க.

மிதுனம்

பிசினஸ் பார்ட்னர்கள் புதிய தலைவலிகள் கொடுக்க வாய்ப்பிருக்கு.  அதனால் என்ன அது பற்றி நீங்க எடுக்கும் தீர்மானங்கள் எல்லாம் அருமையான ரிசல்ட் கொடுக்குங்க. டாடியை நிறைய நாள் பிரிஞ்சி ருந்தவங்க ஹாப்பியா சேருவீங்க. செலவுகள் எல்லாம் மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே இருக்கும். கணவன் மனைவிக்குள் முன்பு எப்போதும் இல்லாத ஒற்றுமை நிலவும். குடும்பத்தினர், கணவர்/மனைவி நண்பர்கள் இவர்களுடன் உங்களுக்கிருந்த மனத்தாபங்கள் தீரும். சந்தேகப் பேய்களை அடிச்சு விரட்டுவீங்க. அலுவலகத்தில் பாராட்டுக்கள் அதிகப்படியாகும்.

கடகம்

குடும்பத்தில் சந்தோஷம் கூடும். சில விஷங்கள் திட்டமிட்டுத் திட்டமிட்டுத் தட்டிப் போயிருக்கலாம். அவை இப்போ சிறிது சிறிதாக நிறைவேற ஆரம்பிக்கும். குறிப்பாய் வீடு கட்டுவது.. வீடு மாறுவது.. வேலை மாறுவது …போன்றவை. சகோதர சகோதரிகளுக்கு எதிர்பாலினத்தினரால் பிரச்சனை வரக்கூடும். கவனமாயிருக்கச்சொல்லுங்க. வீரத்துக்கும், அசட்டு தைரியத்துக்கும் வித்தியாசம் இருக்குங்க. மறக்க வேண்டாம். மாணவர்களுக்கு கிளாப்ஸ் பாராட்ஸ் எல்லாம் உத்தரவாதமாய்க் கிடைக்கும். பொறுப்போட படிக்கும் ஆர்வம் திடீர்னு உண்டாகும்.

சிம்மம்

மனதில் உறுதியும் தைரியமும் ஸ்டிக்கர்ஸ் மாதிரி ஒட்டிக்குங்க. ஆரோக்யத்தை மட்டும் வைரப்பதக்கம் மாதிரிப் பாதுகாத்துக்குங்க. கண்டதை சாப்பிடாமல் கண்ட வேளையில் காரிலும் பஸ்ஸிலும் அலை யாமல் கவனமாய் இருங்க. அது போதும். அது மட்டுமே போதும். மற்ற எல்லாம் சூப்பரா இருக்குங்க. திடீர் நன்மைகள் வாழ்வில் உண்டுங்க. ஆனால் அதை மட்டுமே நம்பிக்கிட்டுக் கடமைகளைக்  கோட்டைவிட வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்தாலும் கோயில் குளம்னு ஒண்ணாப் போவீங்க என்பதால் உடனுக்குடன் ராசியாயிடும். நிம்மதி மீளும்.

கன்னி

கொஞ்சம் மனோதிடம் இழந்தமாதிரி ஒரு ஃபீல் வரும். நம்பாதீங்க. எல்லாமே பிரமைதான். உங்க டாடிக்கு நன்மை ஒன்று நடக்கப் போகுது. நண்பர்கள் கைகுலுக்குவாங்க. நெல்லுக்காக ஊத்தின தண்ணீர் புல்லுக் கும் பாய்கிற மாதிரி உங்களுக்கும் நன்மை உண்டுங்க. என்ஜாய். ஃபேமிலியுடன் ஜாலியா வெளியில் போவீங்க. குறிப்பா கோயில்களுக்குப் போவீங்க. பல காலமா பெண்டிங்கில் போட்டு வைச்சிருந்த பிரார்த்தனைகளைச் சற்றும் எதிர்பாராத வகையில் துரிதமா நிறைவேற்றுவீங்க. . அரசாங்க சம்பந்தமா ஒரு முயற்சி செய்துகிட்டு இருந்தீங்கல்ல..அது வெற்றிகரமாக முடிந்து  உங்களைப் பார்த்து சிரிக்கும் வேளை வந்தாச்சு.

சந்திராஷ்டமம்: 30.08.2018 முதல் 01.09.2018 வரை

துலாம்

எதிர்பாலினத்து நண்பர்களுக்கு உங்களாலும் உங்களுக்க அவங்களாலும் .. அதாவது ம்யூச்சுவலாக  நன்மைகள் ஏற்படுமுங்க. குழந்தைங்களுக்கு ஒரு பக்கம் மெதுவான நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் பாராட்டும் பரிசும் உண்டுங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. சிலருக்குக் குழந்தை பிறப்பதால் வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். சிலருக்குத் திருமணம் நடந்து முடியும் என்பதால் வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! சில வீண்  செலவுகள் குறைய ஆரம்பிக்கும். . நண்பர்கள் வீட்டு விசேஷத்தில் நீங்கள் நடுநாயகமாக (நாயகியாக) இருப்பீங்க.

சந்திராஷ்டமம்: 01.09.2018 முதல் 04.09.2018 வரை

விருச்சிகம்

அலுவலகத்தில் உங்க பாஸ் பாராட்டுவாங்க. பள்ளியோ, கல்லூரியோ, அலுவலகமோ, வீடோ எதுவாயி னும் நீங்க இருக்கும் இடத்தில் மதிப்பு கூடும். போகும் இடமும் கை நீட்டி வரவேற்கும். பயணங்களின் போது ஜாலியாய்த் தூங்கிடாதீங்க. பொருட்களின்மீது கவனமாக இருங்க. நகை, சேலை, அழகு சாதனங்கள், அலங்காரப் பொருட்கள்னு வாங்கிக்கிட்டே போவீ‘ங்க.  மனசில் மகிழ்ச்சி ஒரு புறமும் ஆர்வம் ஒரு புறமும் கலந்திருக்கும். கலைத்துறைல உள்ளவங்களுக்கு உட்கார்ந்த இடத்திலேயே புதுப்புது முன்னேற்றங்கள் இருக்கும். எந்த முயற்சியும் செய்யாமலேயே நன்மைகள் தேடி வரும். அல்லது பழைய முயற்சிகள் காத்திருந்ததற்கேற்ற நல்ல பலன் தரும்.

சந்திராஷ்டமம்: 04.09.2018 முதல் 06.09.2018 வரை

தனுசு

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில பெரிய நன்மைகள் தடைப்பட்டுக் கொண்டே போன தில்லையா…  அது நிறைவேறும். ஆரோக்யம் ஆரோக்யம்னு தினமும் மனசில் நினைச்சுக்கிட்டே ஒவ்வொரு  செயலையும் செய்ங்க.  அதைக் கெடுத்துக்கொள்ளும் வகையில் ஒண்ணுமே செய்துடாதீங்க. ஹலோ….யார் தூண்டினாலும் பொறுமையா இருங்க. இப்போதைக்கு அலுவலகத்தில் நீங்கதான் ஹீரோ(யின்). எனவே அசைக்க முடியாது யாரும் ஒங்களை. எனினும் நீங்களே உங்க தலையில் கடல் மணலை எடுத்துத் தூவிக்க வேண்டாம் இல்லையா. அதைச் சொன்னேன்.

மகரம்

சந்தோஷத்தை அபூர்வமாய்க் கையில் கிடைச்ச வைரம்  மாதிரிக் காப்பாற்றிக்கறது உங்க கையில்தான் இருக்கு. அவசரப்பட்டு யாரையும் புண்படுத்திடாம இருந்தால் வெற்றி உங்க கையில்.  சின்னச்சின்ன ஏமாற்றங்களைப் பெரிதுபடுத்திக்காதீங்க.தாமதங்களைப் பெரிசைய்ப் பொருட்படுத்தாதீங்க. டாடி வழி உறவினர்களைச் சந்திக்கறது மட்டுமில்லீங்க. அவங்களால நன்மையும் சந்தோஷமும் கிடைக்கும். யார் கண்டது ஒரு வேளை தாத்தா வழி சொத்துக்கள் அல்லது அதில் கணிசமான பங்கு கிடைக்கக்கூட வாய்ப்பிருக்குங்க. எந்த நன்மை பற்றியும் அவசரமே வேண்டாங்க. பொறுமையாய் இருங்க. அட எத்தனை நாட்கள். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்கள்தாங்க.

கும்பம்

பெரிய பயணங்கள் போகப் போறீங்க. அது அலுவலகரீதியான பயணமாக இருக்குமானால் அதன் முடிவில் உங்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும். உடன் பிறந்த பிரதர்ஸ்க்கும் சிஸ்டருங்களுக்கும் நன்மையோ நன்மை காத்திருக்கு. சந்தோஷப்படுங்க. ஏன் என்றா கேட்கறீங்க? அவங்களால உங்களுக்கும் சில நன்மைகள் உண்டே. வெளிநாட்டில் உள்ள நண்பர்களைச் சந்திப்பீங்க. ஒரு வேளை நீங்க அங்கே  போயும் சந்திக்கக்கூடும். அல்லது அவங்க வருவாங்க. பெண்களுக்கு அடி வயிறு சம்பந்தமான சில சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் வாரக்கடைசிக்குள் எல்லாம் சரியாகும்.

மீனம்

கவரும் அம்சம் அதிகமாகும். இனிய பொழுது போக்குகளில் சந்தோஷமா ஈடுபடுவீங்க. சினிமா, டிராமான்னு ஜாலியா போவீங்க. குறிப்பா உங்க கணவர்/ மனைவி அல்லது காதலர்/ காதலி உங்களுடன் வருவாங்க. சாப்பாட்டில் கவனமா இருங்க. அது ஆரோக்யதைக் கெடுக்காதபடி பார்த்துக்குங்க. திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு ஒருவார்த்தை…இத்தனை வருடங்கள் காத்திருந்தீங்க…இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்கள் காத்திருங்களேன். மிக நல்ல விதமாக எல்லாமும் நடக்கும். பாராட்டும் புகழும் மேடைமேல் கைதட்டலும் கிடைக்கும். அலுவலகப் போக்கெல்லாம் ஆமை நடையாகத்தான் இருக்கும். டோன்ட் ஒர்ரி. கடமையைச் செய்ங்க. எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்குவான்.