வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

 

இத்தனை நாள் பொறுத்துட்டீங்க. இப்போ ஏன் மனசைத் தளர விடறீங்க? அவசரம் வேண்டாம். யார்கிட்டயும் குறை காண வேண்டாம். திடீர் அதிருஷ்டம் உண்டுதான். ஆனால் அதுக்காக உழைப்பைக் கை விட வேண்டாமே! எங்கும் கோபம் எதிலும் கோபம்னு கண்மண் தெரியாமல் எகிறிடாதீங்க. சகோதர சகோதரிகளுக்கிடையே என்னமா ஈகோ வேண்டியிருக்கு? அனுசரிக்கலாமே… எல்லா அதிருஷ்டங்களும் இந்த வாரம் உண்டு. என்னவோ ரொம்பதான் பயந்தீங்களே. இப்போ சரியாயிடுச்சா? குழந்தை பாக்கியம் இதோ ரெடி, குழந்தைகளுக்கு பாக்கியமும் உண்டு, நிறையப் பயணம். ஏராள வெற்றி. எதை எடுத்தாலும் நத்தை அல்லது ஆமையின் ஸ்பீட் என்கிறீர்களா? அடப்போங்க நீங்க. ஒரேயடியாய் நிற்க வேண்டியதை குருபகவான் நகர்த்தி விடராறேன்னு நன்றி சொல்வீங்களா…

விநாயகரை வினாடியும் மறக்காதீங்க

லோன் கிடைக்கும், வீடு வாங்கவீங்க… முதலீட்டை அதிகப்படுத்துவீங்க. உழைச்சு நிறையப் பணம் பார்க்கறப்ப அதோட சுகமே அலாதிதான். மாபெரும் சபைகளில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் குவியும். நீங்கள் மாணவியா? கல்லூரியில் உங்க உழைப்புக்குப் பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும். ஆல் த பெஸ்ட்  மா,  வீட்ல விசேஷங்க (பாக்யராஜ பட டைட்டில் இல்லை…நான் உங்க குடும்பத்தைக் குறிப்பிட்டேன்). எதற்கெல்லாம் பயந்தீங்களோ அந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்ந்திருக்குமே. மகிழ்ச்சியான  செய்திகளா? என்ஜாய். ஜங்க் உணவு சாப்பிட்டு ஆரோக்யத்தைக் கெடுத்துக்காதீங்க. உங்கள் வீட்டின் குடும்பத் தலைவி அது மம்மியோ நீங்களோ…  வைக்கற ரசத்துக்க என்ன குறைச்சலாம்?

பிள்ளையாரை பின்பற்றி வணங்குங்க

புத்தக விற்பனை செய்பவரா நீங்க? இத்தனை காலம் தொய்ந்து விழுந்து கொண்டிருந்த தொழில் தலை நிமிரும். தடை தாமதங்களைத் தவிர்க்கத்தான் முடியாது. அதனால் என்னங்க? கடைசியில் முடிவு சுபம்தானே. அதைப் பார்ப்பீங்களா…எதிலும் படபடப்பு காட்டாமல் அமைதியா செயல்படுங்க. போதும். ஜெயிச்சுட்டீங்க . செலவுக்கு மேல் செலவுன்னாலும் சுப செலவுதான் போங்க..கோபம் வந்தால் பட்டாசு வெடிக்கணும்னு அவசியமே இல்லை. அமைதியா சொன்னால் அதிகப்பலன். 2 சக்கரமா 4 சக்கரமா? எந்த வாகனம் வாங்கப் போறீங்க? ரெடி, ஜூட். கருப்பு வேணாம்பா. எல்லாம் சீக்கிரம் சரியாகும். மிஸ்டர் சனி பகவானை வேண்டிக்குங்க (அல்லது ஹனுமான்ஜி). ஊர் ஊராய்ப் போய்விட்டு வந்திருப்பீங்க. உடம்பை கவனிங்க.

நாராயணனை நாளும் சேவியுங்க 

இன்னிக்கு ஒரு பிளேனில் நாளைக்கு ஒரு ரயிலில்னு நிறைய அலைச்சல்தான்.  ஆனாலும் அதை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. ஜாலியாவும் லாபமாவும் இருக்குமில்ல! சம்பளம் உயரும் அல்லது பண வரவு கூடும் அல்லது புது வேலையில் போய் ஜம்மென்று உட்காருவீங்கள். உள்ளுரிலும் உள்நாட்டிலும் மட்டுமா…? வெளியூரிலும் வெளிநாட்டிலும் பறப்பீங்க. புது வீடு அல்லது புது அலுவலகம் அல்லது புது…சம்திங். எதுவானாலும் நீங்கள் விரும்பியபடியே அமையும். கவலை வேண்டாம். தம்பதி சமேதராய் வெளிநாடு போவீங்க. எனக்கு இது கிடையாது போலிருக்கு என்று நீங்களா ஏன் தீர்மானம் செய்யறீங்க? இந்த வாரம் பாருங்க. அட எனக்கும் அதிருஷ்டம் இருக்கு என்பீர்கள்!

தூக்கத்தில் கூட துர்க்கையை மறக்காதீங்க

பகைவராய் நினைச்சவங்க நண்பராய் மாறிட்டாங்களா? எல்லாம் உங்கள் கவர்ச்சி அம்சமும் முகராசியும்தான் காரணம். ஒளிவட்டம் உள்ளது. அதை வெச்சே நிறைய நன்மைகளை சாதிச்சுடுவீங்க. ஆனாலும் அதென்ன ஒரு பயம்னு கேட்கறேன், சும்மா அடிச்சுவிடுங்க. வெற்றி உங்களுக்குத்தான்னு உங்களைத் தவிர அத்தனை பேருக்கும் நம்பிக்கை இருக்கு. ஒரு விஷயத்தில் உங்களுக்குப் பாராட்டு கொடுத்தே தீரணும். நீங்கள் டாடிக்கும் மம்மிக்கும் கொடுக்கற முக்கியத்துவம். அது உங்களைக் காப்பாற்றும். உங்களைச் சுற்றி உங்களுக்கு வேண்டாதவர்கள் ஏராளமாய் சதி செய்யறாங்க…அப்படின்னு பயப்படறீங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இயல்பாய் நடக்கும் செயல்களுக்கு மற்றவர்களை ஏன் குற்றம் சொல்லணும்?

மகாலட்சுமியை மனதாரத் துதிக்கணும்

நண்பர்களாய் நடிக்கும் எதிரிகளிடம் மட்டும் கொஞ்சம் கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதும். மற்ற எல்லாமே அருமையாய்ப் போயிக்கிட்டிருக்கு. வீடு வாங்கப்போறீங்க. நல்லபடியாக முடியும். கவலைப் படாதீங்க. அறுவை சிகிச்சைன்னு பயந்துக்கிட்டிருந்தது மாத்திரை மருந்தோடு விட்டதே. மகிழ்ச்சிதான். ‘கடன் அன்பை டெலிட் செய்துவிடும்’ என்று பெரிய எழுத்தில் போஸ்டர் அடிச்சு மனசில் ஒட்டிக்குங்க. வாங்க வேண்டாம். கொடுக்க வேண்டவே வேண்டாம். பழைய நண்பர்களை மறந்திருந்தீங்க.நன்றி மறப்பது நன்றன்று என்று இப்போதாவது உணர்ந்தீர்களே. நாட் பேட். குழந்தைகளைப் பற்றி ஏற்பட்டிருந்த கவலைகள் எல்லாம் வெயியில் வைத்த குல்ஃபி மாதிரி ஆகியிருக்குமே!

ஆதித்தன் என்னும் சூரியனை அணுவளவும் மறக்க வேணாம்

பேச்சினால் வெற்றியை சாதிப்பீங்க. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திக்குக் காத்துக்கிட்டிருந்தீங்களே…வந்திருக்குமே! சின்னதாய்க் காலில் அடிபட்டாலும் அலட்சியம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஹாப்பியான செய்தி உண்டு. குழந்தைகளைக் கோவிச்சுக்காதீங்க. சீக்கிரத்தில் உங்க பாராட்டு அவங்களுக்குக் கிடைக்கும். வித விதமான கலப்படமான நிகழ்ச்சிகளின் மிக்ஸட் வா….ரம். குழந்தைகள் என்றிருந்தால் டென்ஷன் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அதற்காக சோர்ந்து போய்விடுவீர்களா?   குடும்பத்தில், குழந்தைகள்மூலம் மற்றும் அலுவலகத்தில் இருக்கும் அத்தனையும் தற்காலிகப் பிரச்சினைகள்தான். சுனாமி சைசுக்கு பயப்பட வேண்டாம். புதிது புதிதாய் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு போகாதீங்க. ஒன்றை முடித்து அடுத்ததற்கு வருவோம். ஓ.கேயா?

மால் மருகனை – முருகனை – மனதார வணங்குங்க

நல்ல சம்பளத்தில் புது வேலைகிடைக்கலாம் அல்லது இந்த வேலையிலேயே நல்ல சம்பளம் கிடைக்கலாம். பேச்சில் வசீகரிக்கும் தன்மை ஒட்டிக்கும். ஆக எல்லாத்தையும் சாதிச்சுப்பீங்க. கட்டினவங்ககூட கொஞ்சம் அனுசரிச்சுப் போனால்தான் என்ன? வேலை தேடிக்கிட்டிருக்கறவங்களுக்கும் ஏற்கனவே உள்ள உத்யோகத்திலிருந்து மாற நினைக்கறவங்களுக்கும் சூப்பர் வெற்றி உண்டு. டோன்ட் ஒர்ரி. டோன்ட்டே ஒர்ரி.. பாதி கற்பனை பயம். மீதி மற்றவர்கள் மெனக்கெட்டு உங்கள் மீது தெளித்த பயம். (வேப்ப மர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு சொன்னா நீங்களும் நம்பிடுவீங்களாக்கும்).

நாகத்தை வணங்குங்க நரகத்தைக் கடக்கலாம்

சந்திராஷ்டமம் : 29.04.2017 முதல் 02.05.2017 வரை

ஃபோர் அடிக்க மட்டையை உயர்த்தி சிக்ஸர் அடிச்ச மாதிரி ஒரு அதிருஷ் டம்தான்  போங்க. சிவில் படிக்கறவங்க, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யற வங்க, மருத்துவத்துறையின் எந்தக் கிளையிலும் உள்ளவங்க எல்லோருக்கும் நல்ல காலம்தான். அரசாங்க நன்மைக்குக் காத்திருக்கீங்களா. விஷயம் வெற்றிகரமா முடிஞ்சாச்சுன்னு நினைச்சுக்குங்க. லாரி லாரியாய் லாபம் வரும். புது முயற்சிகளை மட்டும் கொஞ்சம் தள்ளிப்போடுங்க. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சின்னச்சின்ன நஷ்டம் வந்தால் உங்களுடைய சிறப்பான அழகிய மூளையைக் கசக்கிக்க வேண்டாம்.

குருவாயூரப்பனைப் பார்த்துக் குவியட்டும் கரம்

சந்திராஷ்டமம் : 02.05.2017 முதல் 04.05.2017 வரை

காதலிக்கும்போதே சண்டை போட்டால் பிற்காலத்தில் இன்னும் சிரமம். அடக்கி வாசியுங்க. நட்பு காதலாய் மலர வாய்ப்புள்ளது. பண பாக்கி வசூலாகும். தற்போதைக்குக் கடன் கைமாத்து லோன் எதுவும் வேண்டாங்க. குடும்பத்தில் ஒரு புது நபர் நுழைந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாங்க. குழந்தைங்க வெற்றியைப் பார்த்து மனசில் மகிழ்ச்சி நயாகராவாகும். என்ஜாய். வாகனம் பிரச்சினை செய்தால் இப்போதைக்கு அதை எடைக்குப் போட வேண்டாம். பொறுமை. அலைச்சல் மிக்க உத்யோகமானாலும் அலேக்காக சமாளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்மா. லாபங்களும் நன்மைகளும் தாமதமானால் கவலை வேண்டாம். அதற்கு உங்கள் முகவரி தெரியும். தேடி ஓடி வரும்.

அனுமனை அனுதினமும் துதித்து வாங்க 

சந்திராஷ்டமம் : 04.05.2017 முதல் 06.05.2017 வரை

உங்க குழந்தைங்களுக்கு நல்லது நடக்கப்போறது. மம்மியை பத்திரமாப் பார்த்துக்குங்க. சகோதரன்/ சகோதரிகிட்ட சண்டை வேண்டாம்.  பல்லி வாலைப்பார்த்துப் பாம்புன்னு  நினைக்கறமாதிரி சின்னத் தலைவலி ஜூரத்தையெல்லாம் கான்சர்னு பூதக்கண்ணாடி வழியாப் பார்க்காதீங்க. கற்பனை பயம்தான் உங்களை முன்னேற விடாம தடுக்குது. பதவி உயரும்போது பணிவு வர வேண்டும். நினைவில் வைத்திருங்கள்மா. எனக்குக் கிடைக்காதது அவளுக்குக் கிடைச்சுடுச்சே இவளுக்கு வாய்ச்சுடுச்சே என்று புலம்பாதீங்க.    

சிவனை சிறுபோதும் மறக்காதீங்க

டாடிக்கும் உங்களுக்கும் (அல்லது உங்களுக்கும் மகனுக்கும்) இருக்கும் அன்பு பலப்படும். அவருக்கு பதவியும் சம்பளமும் உயரும். நண்பர்கள்கிட்ட அளவுக்கு மேல் வேண்டாம். கணவருக்கும் உங்களுக்கும் நல்ல விதமாக ஒற்றுமை அதிகரிக்கும். இத பாருங்க.. எல்லாம் சற்று மெதுவாய்த்தான் நடக்கும். ஏழரைக் காரன் இதுகூட செய்யலைன்னா எப்படி? ஆனா ஒண்ணு… சீக்கிரத்தில் நீங்க ஜெயிக்கத்தான் போறீங்க. இதன் பெயர்தாங்க பொறாமை! அலுவலக சுமையெல்லாம் ஒரு சுமையா? நீங்க இடக்கையால் தூக்கித் தோளில் வெச்சுப்பீங்க. கவலைப்படாம போங்க போங்க. மகிழ்ச்சியின் உச்சியில் இருப்பீங்க. நிம்மதி மீண்டு கையில் வந்து தவழும். சரியா?  ரெடிமேட் பீட்ஸா போல் திடீர் திடீரென்று நிகழ்சிகள் நடந்தேறும்.

ஆஞ்சநேயர் வணங்கினால் அருள் தருவார்.