வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீங்க. தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையும்.  அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதக மான தீர்ப்பு கிடைக்கலாம். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். மேலதிகாரிகள் உதவுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உங்கள் முயற்சிகள் பெரும்பாலானவை வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு என்றாலும், உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்க. குடும்பத்தில் யாருக்கேனும் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். இந்த வாரம் சனிக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

குட் லக்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை 

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்  கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீங்க. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீங்க திடீர்னு உங்களிடம் உள்ள கவரும் தன்மை பல மடங்காகும். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வரும். ஃபாரின்ல வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு குட் நியூஸ் வரும். உடல்நலனில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். அரசுப்பணிகளில் ஆதாயம் கிடைக்கும்.  கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். நீங்கள் சந்தித்து வந்த கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, உற்சாகம் பெறும் வாரம் இது. உத்தியோகஸ்தர்களின் விருப்பங்கள் மிகுந்த முயற்சிக்குப் பிறகு நிறைவேறும். அலுவலகம் சம்பந்தமாக பயணம் செல்ல நேரிடும். தொழில், வியாபாரம் மிகவும் லாபகர மாக நடைபெறும். குடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிருக்காது. இந்த வாரம் திங்கட்கிழமை சிவாலயம் சென்று வழிபாடு செய்யுங்க.

குட் லக்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை 

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. ஆரோக்யம் பயமுறுத்தினா நீங்க ஏன் டென்ஷன் ஆறீங்க? டாடியைப் பத்திரமா பார்த்துக்குங்க.  திடீர் அதிருஷ்டம் அது இதுன்னு எதிர்பார்க்கவே வேண்டாங்க. உழைப்பு மட்டுமே பலன் தரும். லாபங்கள் அதிகரிக்கும். பயணங்களும் அதிகரிக்கும். எதிலும் சற்று நிதானப்போக்கு இருக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நிதானமும் பொறுமையும் தேவை. திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உத்தியோகஸ்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்கள், முன்னேற்றமான போக்கைக் காண முடியும். பெண்களின் நிர்வாகம் குடும்பத்தில் அமைதியை தரும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரம் புதன்கிழமை அன்று நரசிம்ம சுவாமியை துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீங்க. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க. தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்க. அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வருமானமும் நல்லாவே இருக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் லாபமோ கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலக விஷயங் களில் திருப்திகரமான பலன்களைக் காண்பாங்க. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெண்கள் சமாளித்து நிம்மதியை ஏற்படுத்துவார்கள். தொழில் செய்பவர்கள், பணியாளர்களின் ஒத்துழைப்பால் அவற்றைச் சமாளிப்பீங்க. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகரை வழிபடுங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும்.  கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் தாண்டி வெற்றி பெறுவீங்க. கடன் வாங்க வேண்டாம். அடைப்பது சிரமம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. தந்தை நலம் முன்பைவிட மேம்படும். மன நிம்மதி பிறக்கும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். அலுவலகத்தில் பரபரப்பாக உழைக்க வேண்டி வரும். அதற்கான பாராட்டும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீங்க. தொழிலில் அதிக அளவில் பொருட்களை இருப்பு வைத்திருப்பதால் வீண் விரயங்கள் உண்டாகும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ராமரை வழிபடுங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரங்க. அப்பாவுக்கு உயர்வான வாரம். திடீர் அதிருஷ்டப் பரிசுங்க கிடைக்கும். அப்பா வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உங்களுக்கேதான். டோன்ட் ஒர்ரி. எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறையில் லாபம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறுவது சந்தேகம் தான். தொழில் செய்பவர்களுக்கு, தொழிலில் எதிர்பார்க்கும் திருப்தி இருக்காது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியடைய வழியில்லை. குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெண்களின் சாமர்த்தியத்தால் அவை நிவர்த்தியாகும். இந்த வாரம் சனிக் கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீங்க. டாடிக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். குழப்பம் நீங்கி மனத்தெளிவும் பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் திறமைக்குரிய பலனை அடைவார்கள். திடீர் அதிருஷ்டம் உண்டு. அம்மா அப்பாவுக்கு உங்களின் ஆதரவு அதிகரிப்பதால் அவங்களோட ஆசியை ஈசியாப் பெறுவீங்க. நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த சில முயற்சிகளில் இந்த வாரம் மும்முரம் காட்டு வீங்க. எதிலும் பொறுமை அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு அதிருப்திகரமான போக்கே தென்படும். தொழில் செய்பவர்கள், பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடுதலாக இருந்து வரும். இந்த வாரம் புதன்கிழமை பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்யுங்க.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீங்க. மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீங்க. அதிருஷ்டம் உங்களை எட்டிப் பார்க்கும். திரைத்துறை மற்றும் கலைத்துறைல உள்ளவங்களுக்குப் பொற்காலம்தான். ஆனாலும் வேளைப் பளு தோளை அழுத்தும். கார், பஸ், ரயில், விமானம்னு எல்லாத்திலும் பறப்பீங்க. பண விவகாரங்கள் மெதுவாக  இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். தொழில், வியாபாரத்தில் குறைந்தபட்ச முன்னேற்றம் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தி வருவது அவசியம். இந்த வாரம் சனிக்கிழமை அன்று ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்து வணங்குங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார்.  புத்தக வியாபாரம், எழுத்து, பத்திரிகை, தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பாங்க. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.  மாட்டிக்கொள்ளவே மாட்டோம் என்று நினைச்சுச் சட்ட விரோதமான மற்றும் நிழல் வியாபாரங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் நன்மை செய்வார்கள். தெய்வ பலத்தால் எதிலும் வெற்றிபெற முடியும். அவசரப்படாமலும், ஆத்திரப்படாமலும் பொறுமையாக நடந்து கொண்டால் சிக்கல்கள் உங்களை அணுகாது. தொழில் செய்பவர்கள், பொருளாதார நிலையில் உயர்வை காண முடியும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இந்த வாரம் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கடினமான காரியத்தைக்கூட எளிதாகமுடிப்பீங்க. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீங்க. வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் அமைவார்கள். ஜாலியா ஊரைச் ளசுத்துவீங்க. இட்ஸ் ஓகே. யாரு வேணான்னது? கூடவே கடமை கடமைன்னு ஒண்ணு இருக்கே அதையும் கவனிக்க வேண்டாமா? ஆரோக்யத்தைக் கெடுக்கும் விஷயத்துக்குப் பெரிய சைஸ் ‘நோ‘ சொல்லிடுங்க. பெண்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்யம் சிறக்கும். உத்தியோகஸ்தர்கள் வேறு இடத்திற்கு மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை உங்கள் திறமையால் திருப்திப்படுத்துவீங்க. தொழில் செய்பவர்கள், படிப்படியாக முன்னேற்றம் காண்பாங்க. குடும்பத்தை பெண்கள் சாமர்த்தியமாக நிர்வகிப்பாங்க. அவசர வார்த்தையால் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க நேரிடும். இந்த வாரம் தினந்தோறும் நவக்கிரகங்களை வணங்கி வாருங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

மன மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும். ஏற்கனவே குழந்தை இருப்பவரா? எனில் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும். பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றம் காண்பாங்க. பிரபலமானவர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்களைச் செய்ய நேரிடும். இருப்பினும் மறுக்காமல் செய்து முடிப்பதே நல்லது. வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாக பழகுங்க.. பெற்றோரின் அறிவுரைகளை ஏற்றுச் செயல்படுங்கள். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நலம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

குட் லக்.

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீங்க. கவர்ச்சி அம்சம் மேலோங்கி செல்வாக்கு கும்முன்னு உயருங்க. அவசியமான பேச்சு மட்டுமே பேசுங்க. ஆடை ஆபரணம்ஸ் சேரும். கல்யாணமானவங்களுக்கு சந்தோஷமான தினங்கள் இந்த வாரம் முழுக்க உண்டு. பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால் சம்பளம் அதிகரிக்கும். வாரத்தின் துவக்கம் சாதாரணமாக இருந்தாலும் அதன்பிறகு நல்ல திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன்மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்கள், போதிய வாய்ப்பைப் பெற, ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவசியம். குடும்பத்தில் புத்திர வழியில் மருத்துவ செலவுகள் நேரலாம். இந்த வாரம் சனிக்கிழமை அன்று நவக்கிரக சன்னிதியிலுள்ள சனீஸ்வர பகவானை தீபம் ஏற்றி வணங்குங்கள்.

குட் லக்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 13 முதல் நவம்பர் 15 வரை