வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

மேஷம்

அடிச்சுது லக்கி பிரைஸ். நீங்க மட்டும் இல்லை…உங்க எதிரி, நண்பர், மம்மி, டாடி, புரொஃபசர், பிரின்சிபால் யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார் நீங்க இந்த அளவு சக்கை போடு போடுவீங்கன்னு. அரசாங்க சம்பந்தமா ஒரு முயற்சி செய்துகிட்டு இருந்தீங்கல்ல..அது பழுத்து சுவைகூடி மடியில் விழுந்து ‘என்ஜாய்”னு உங்களைப் பார்த்து சிரிக்கும் வேளை வந்தாச்சு. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர் கள் திரும்பி வருவாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். சிலருக்கு வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! நிறைய ஜாலி டூர் போவீங்க. புதிய வீட்டுக்கு அஸ்தி வாரம் போடுவீங்க. பணத்துக்காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். வெற்றிகரமான அலைச்சல்தான்.

 சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : விஷ்ணு சஹஸ்ர நாமம்

ரிஷபம்

சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கலாம். அதைக்கூட வழக்கத்தை விடப் பாதி அளவுதான் செய்யலாம். வார்த்தை கீர்த்தை நழுவி ஓடிப் போச்சோ…எடுத்து பாக்கெட்லயா போட்டுக்க முடியும்? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்களுடைய வருமானம் வானளாவ உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? 4 வகை இன்கம்! ஆபீஸ் விஷயமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள். சந்தோஷமாய்ப் போய்விட்டு சீக்கர மாகத் திரும்பி வருவீர்கள். மம்மிக்கு உடம்பு சரியில்லாமல் போனால் கலவரத்திலும் பதற்றத்திலும் தலையில் கைவெச்சு உட்கார வேண்டாம். இது தற்காலிக பிரச்சினைதான். அவங்க முன் எப்போதும்போல நடமாடி உங்களுக்கு சென்னா மசாலா செய்து தருவாங்க

 சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : விநாயகர் அகவல்

 மிதுனம்

உங்க அப்பாவுக்கு நன்மை ஒன்று நடக்கப் போகுது. நண்பர்கள் கைகுலுக்குவாங்க. நெல்லுக்காக ஊத்தின தண்ணீர் புல்லுக்கும் பொசிவது போல உங்களுக்கும் சின்ன அளவு நன்மை உண்டு. நீங்க அலுவலகவாசியா? கங்கிராட்ஸ். இருக்கும் இடத்திலும் மதிப்பு கூடும். போகும் இடமும் கை நீட்டி வரவேற்கும். பயணங்களின்போது ஜாலி யாய்த் தூங்கிடாதீங்க. பொருட்களின்மீது கவனமாக இருங்க. நண்பர்கள் வீட்டு விசேஷத்தில் நீங்கள் நடுநாயகமாக இருப்பீங்க. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில பெரிய நன்மைகள் தடைப்பட்டுக் கொண்டே போனதில்லையா…அது 2011 இரண்டாம் பாதியில் இனிதே நிறைவேறும்.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : லலிதா சஹஸ்ரநாமம்

கடகம்

நீங்க எந்தப் பாலினம்? பெ.பா? கொஞ்சம் ஆரோக்யத்தைப் பார்த்துக் குங்கம்மா? நத்திங் சீரியஸ். எனினும் முன்கூட்டியே கவனமாய் இருந்துட்டா நல்லதில்லையா? குடும்பம் இந்த வாரம்  செம ஜாலியா இருக்கும். மாயா ஜால் முதல் பிளாக் தண்டர் வரை கலக்கிடுவீங்க. டாடியை நிறைய நாள் பிரிஞ்சிருந்தவங்க ஹாப்பியா சேருவீங்க. செலவு கள் எல்லாம் மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே இருக்கும். கணவன் மனை விக்குள் முன்பு எப்போதும் இல்லாத ஒற்றுமை நிலவும். சில விஷங்கள்தி ட்டமிட்டுத் திட்டமிட்டுத் தட்டிப் போயிருக்கலாம். அவை இப்போ சிறிது சிறிதாக நிறைவேற ஆரம்பிக் கும். ஆரோக்யத்தை மட்டும் வைரப்பதக்கம் மாதிரிப் பாதுகாத்துக்குங்க. கண்டதை சாப்பிடா மல் கண்ட வேளையில் காரிலும் பஸ்ஸிலும் அலையாமல் கவனமாய் இருங்க

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : சஷ்டி கவசம்

சிம்மம்

காதல் சிறகை விரித்து ஒன்பதாம் மேகத்தின் மேல் டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்சவங்களும் அடுத்த ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. சந்தோஷத்தை தங்க நாணயம் மாதிரிக் காப்பாற்றிக்கறது உங்க கையில்தான் இருக்கு. அவசரப்பட்டு யாரையும் புண்படுத்திடாம இருந்தால் வெற்றி உங்க கையில். ஹலோ….யார் தூண்டினாலும் பொறுமையா இருங்க. பேப்பர் போடறேன்னு பாஸ் அறையின் வாசலில் போய் நிற்க வேண்டாம். கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. பொறுமையாய் இருங்க. அட எத்தனை நாட்கள். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்கள்தாங்க.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : குரு கீதா

கன்னி

விமானத்தில் பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. என்னது? பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. இன்னும் கொஞ்சம் பொறுமை. உங்க காதலர் அல்லது கணவர் (அல்லது காதலி அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போகிறார். பார்த்துப் பெருமிதப் படப்போ றீங்க. பெரிய பயணங்கள் போகப் போறீங்க. அது அலுவலகரீதியான பயணமாக இருக்குமானால் அதன் முடிவில் உங்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும். திருமணத்திற்காகக் காத்திருப்ப வர்களுக்கு ஒருவார்த்தை…இத்தனை வருடங்கள் காத்திருந்தீங்க…இன்னும் கொஞ்சம் காத்தி ருங்க. மிக நல்ல விதமாக எல்லாமும் நடக்கும்.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : ஹனுமான் சாலீசா

சந்திராஷ்டமம் : 02.03,2017 முதல் 04.03,2017 வரை

துலாம்

எதிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகு துங்க. செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கி கிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க! குழந்தை உங்களை சந்தோஷப்படுத்தப்போகுது. வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. அரசியலில் இருப்பர்கள் இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வைப்பீங்க. நண்பர்கள் ஒரு பெரிய நன்மைக்குக் காரணமாய் இருப்பாங்க. மம்மி யால் உங்களுக்கும் உங்களால் டாடிக்கும் நன்மைகள் ஏற்படும். ஆக மொத்தத்தில் குடும்ப ஒற்றுமை கூடும். 

 சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : ஆதித்ய ஹ்ருதயம்

சந்திராஷ்டமம் : 04.03,2017 முதல் 06.03.2017 வரை

விருச்சிகம்

வீட்டில் ரோஜா மாலை கற்கண்டு சந்தனம் மஞ்சள் விருந்துன்னு ஏகமாய் சந்தோஷம் வரப்போகுது. இன்னொரு பக்கம் அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு பொறுப்பு உயர்வு கவுரவம்னு மகிழ்ச்சி அலை அடிக்கப்போகுது. சுண்டுவிரல் வலிக்கெல்லாம் கவலைப்பட உங்களுக்கு ஏது நேரம்? நிறையப் பாராட்டுக் கிடைக்கப்போகுது.  பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பெற்றோர்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா! கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நிறையப்புதிய பொறுப்புக்கள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து  வைக்கறது நல்லது

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : துர்க்கை சுலோகம்

சந்திராஷ்டமம் : 06.03.2017 முதல் 08,03.2017 வரை

தனுசு

எது நடந்தாலும் நன்மைக்குத்தான். இப்ப இப்படி ஆகிப்போச்சேன்னு நினைக்காதீங்க. இதன் விளைவு பற்றி பிற்காலத்தில் பெரிய அளவில் சந்தோஷப்படப்போறீங்களாக்கும். உங்க டாடிக்கு ஏதோ நன்மை காத்துக் கிட்டிருக்கு. குடும்பத்தில் மகிழ்ச்சி தேவதை நடு ஹாலில் சோஃபா போட்டு உட்காரப்போறா.   கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இதுபோல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. ஆரோக்யமா ஃபைன், நிதி நிலையா திருப்திகரம், குடும்ப மகிழ்ச்சியா சூப்பர்னு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும்.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம்: மகிஷாசுர மர்த்தினி சுலோகம்

மகரம்

எத்தனை நாளாப் படுத்திக்கிட்டிருந்தபிரச்சனை ஒன்று உங்களைவிட்டு நிரந்தரமாய் டாட்டா சொல்லப்போகுது. வெகு காலத்திற்குப் பிறகு நிம்மதிக்கு ஸ்பெல்லிங் கண்டுபிடிப்பீங்க. வேறு அலுவலகத்திற்க மாற இத்தனை காலம் தடையும் தாமதமுமாய் வந்துகிட்டு இருந்தது. இப்பதான் வேளை வந்திருக்கு. கரிக்குலம் விட்டே ரெடியா- விட்டேற்றியா இருந்து டாதீங்க. கம் ஆன்.  திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக் காக ஏங்குபவர்கள், உத்யோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு. சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஆரோக்யம் அற்புதமாய் இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை சேவ் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு வெச்சுடுங்க.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : உங்களுடைய குரு பற்றிய சுலோகம்

கும்பம்

உங்களுடைய கவர்ச்சி அம்சம் முழு வீச்சில இருக்கும். வருவாரும் போவாருமாய் வீடு அமர்க்களப்படும். உங்களுக்கு இந்த விசேஷம் அந்த சுப நிகழ்ச்சின்னு சரியாய் இருக்கும். நீங்க ஒரு இளம் பெண்ணா… சிநேகிதிக்கு காதல் தூது போறதுக்கு முன்னால் 2,3,4,5 முறை நல்லா யோசிச்சுட்டு இறங்குங்க.  கடிகாரத்திலும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. உங்க சந்தோஷத் துக்கு இதைவிட வேற என்ன காரணம் வேண்டும்! உங்களுக்கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : விநாயகர் சம்பந்தமான எதுவும்

மீனம்

நமக்கெங்கே இதெல்லாம் கிடைக்கப்போகுது என்று நீங்கள் ஒரு காலத்தில் ஏங்கிய விஷயமெல்லாம் இப்போது உங்க முன்னால் சகஜமாய்  வந்து உட்காரும். குழந்தைகளால் பெருமிதம் அனுபவிப்பீங்க. இந்த அளவு அவங்க சாதிப்பாங்கன்ன நீங்க நினைச்சதில்லை! காதல் விஷயத்தில் அவசரம் வேண்டாம். சில விஷயங்களில்  தடை தாமதம் ஏற்படுவது கூட நல்லதுதான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! இத பாருங்க….சிறு சிறு டென்ஷன்கள் இருக்கிறதே என்று கவலை வேண்டாம். முன்பிருந்தமாதிரி பெரிய பெரிய டென்ஷன்கள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். கடன்கள் வாங்க இது உகந்த நேரம் அல்ல. ஒத்திப் போடுங்கள். செலவுகளை மட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கடுமையான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். செய்யுங்களேன்.

சி.டி போட்டு கூடவே ஃபாலோ செய்ய வேண்டிய சுலோகம் : ராமாயம் அல்லது சுந்தர காண்டம் (சிறிய அளவிலாவது)

Leave a Reply

Your email address will not be published.