Random image

வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

அனைவருக்கும் இனிய 2017 வாழ்த்துகள்.

மேஷம்:  பளிச்சென்று உங்களிடம் ஒரு மாற்றம் உங்களுக்கே தெரியும். மேடை போட்டுப் பாராட்டு வாங்க. முன்பு முகம் திருப்பிப் போனவர்கள் எல்லாம் இப்போது ”உன்னைப் போல் உண்டா!” என்பார்கள். ஊரெல்லாம் பாராட்டினாலும் வீட்டில் புலி மாதிரி உறுமறீங்களே. அது மட்டும் வேண்டாம். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கப்போறீங்க.

குழந்தைகளின் நலனுக்காக நிறைய செலவு செய்வீங்க. கணவர்/ மனைவிக்கு விமானம் ஏறிக் கடல் தாண்டிச் செல்லக்கூடிய பயணம் அமையும். அல்லது இருக்குமிடத்திற்கே விமா னம் ஏறிக் கடல் தாண்டிச் வருமானம் வரும்! சகோதர சகோதரிகள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மைக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டிங் லிஸ்ட்!

லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். அந்த வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கலைத்துறையிலும் சினிமாத்துறையிலும் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கேது இருப்பதால் லாபங்கள் தாமதமானாலும் மனப்பக்குவம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருந்துகொண்டு மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சகோதர சகோதரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் கிடைக்கும்

பரிகாரம்: அனுமனை வணங்கி பிரதட்சணம் செய்து சனிக்கிழமை நல்லெண்ணை தீபம் ஏற்ற வேண்டும்

ரிஷபம்: பேச்சில் இனிமைகூடி மற்றவர்களுக்கு நன்மை செய்வீங்க. அழகு சாதனங்களுக்கும் அலங்காரப் பொருட்களும் பணம் ஓடும். வெளியூர்ப் பயணம் சந்தோஷம் குவிக்கும். சகோதர சகோதரிகளிடம் வாக்கு வாதம் இல்லாமல் பார்த்துக்குங்க. புதிய வேலை கிடைக்கும். அதற்குப் புது காரில் போவீங்க. சிலருக்குப் புது பெண்டாட்டி/ கணவர் அல்லது புது பாப்பா வரலாம்.

பத்தாம் வீட்டில் மூன்று கிரங்கள் இருப்பதால் உத்யோகப் பொறுப்புக்கள் அதிகமாகும். செவ்வாய் இருப்பதால் கோபம்  அதிகம் வர வாய்ப்புள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஐந்தாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றங் களை ஏற்படுத்துவார். படிக்கும் குழந்தைகளாக இருந்தால் நம்ப முடியாத அளவு நல்ல  மதிப்பெண்கள் வரும். ராசியை புதன் பார்ப்பதால் வியாபாரம் செய்பவர்களுக்க நல்ல யுக்திகள் தோன்றி வியாபாரம் சிறக்க வழி வகை பிறக்கும். நான்காம் வீட்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு வாகனம் வாங்குவீர்கள்

பரிகாரம்: துர்க்கைக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து துர்க்கை சுலோகம் படிக்க வேண்டும்

மிதுனம்: டாடியின் புத்திசாலித்தனம் அலுவலகத்தில் அவருக்குப் பெயர், புகழ் பாராட்டை மட்டும் அல்லாமல் அவார்ட் ரிவார்ட் பணம் என்பனவற்றையும் இணைத்துக் கொடுக்கும். உங்களுக்கு மட்டுமென்ன! திடீர் அதிருஷ்டம் டெரஸைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். புதிதாய் அறிமுகமான ஒரு பெண்மணி மூலம் நன்மைகள் வலது காலை எடுத்து வைத்து வரும்.

பத்தாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் பல காலம் நீங்கள் மிகவும் முனைந்து காத்திருந்த உத்யோக மாறுதல் கிடைக்கும். வேறு வேலை போவதோ அல்லது இந்த உத்யோகத்திலேயே முன்னேற்றமோ நிகழும். பெரிய தீர்மானங்கள் எடுக்குமுன்பு சிறந்த ஜோதிடரிடம் ஜாத கத்தைக் காண்பித்து ஆலோசனை கேட்டு அதன்படி செய்யுங்கள். நான்காம் வீட்டு குரு தாயாருக்கு நன்மைகளை அளிப்பார்.

பரிகாரம்: கோதுமையால்  செய்த உணவு  அல்லது இனிப்பை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்

சந்திராஷ்டமம் : 30.12.2016 சனி பகல் 12.56 முதல் 02.01.2017 திங்கள்  அதிகாலை 04.18 வரை

கடகம்: நிறையத் தண்ணீர் குடியுங்கள். பச்சை மிளகாயைப் படக்கென்று கடித்தமாதிரி வார்த்தைகளை விநியோகம் செய்ய வேண்டாம். மம்மிகூட சண்டை வேண்டவே வேண்டாம். நல்லது செய்யறவங்க எல்லாம் எனி மிப்பட்டாளம் மாதிரி ஒரு பிரமை உங்களுக்கு. குழந்தைங்க அவங்க வயதுக்குத் தகுந்த மாதிரிதான் நடந்துப்பாங்க. தாத்தா மாதிரிப் பக்குவம் எதிர்பார்த்தால் எப்படி!

இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகளைத் தவிர்க்கவே முடியாது. குரு மறைவிடத்தில் இருப்பதால் மாணவர்களும் நிதித்துறையில் வேலை பார்ப்பவர்களும் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பதினோராம் வீட்டை சனி பார்ப்பதால் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருமானமும் லாபங்களும் சற்றுத் தாமதமாகக்கூடும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி முடிந்தால்  கோயிலுக்குச் சென்று விளக்கேற்ற வேண்டும்

சந்திராஷ்டமம் : 02.01.2017 திங்கள்  அதிகாலை 04.19 முதல் 04.01.2017 புதன் காலை 09.34 வரை

சிம்மம்: நிதானமாய் அடி எடுத்து வையுங்கள். சம்பளம் கூடும். பொறுப்பும் அதிகரிக்கும். பாராட்டு எல்லாவற்றையும்விட அதிகமாகும். தலை கழுத்துக்கு மேல் கரெக்டாய்ப் பொருந்தியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ”நான் என்னங்க செய்துட்டேன். எல்லாம் ஆண்டவன் செயல்” என்ற வசனத்தை உருப்போட்டு டெலிவரி செய்யுங்க.

ராசியின் மீது ராகு இருப்பதாலும் ராசியைக் கேது பார்ப்பதாலும் எண்ணங்களின்மீது கவனம் செலுத்த வேண்டும். உங்களைத் தீய வழிகளில் அழைத்துச் செல்லும் நண்பர்களோ எண் ணங்களோ உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனினும் இரண்டாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அரணாக இருப்பார்கள் என்பது நிம்மதி.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு அகவல் சொல்லி மாலை சாற்ற வழிபடுங்கள்

சந்திராஷ்டமம் :  04.01.2017 புதன் காலை 09.35 முதல் 06.01.2017 வெள்ளை பகல் 01.02 வரை

கன்னி: அப்பாடா! எத்தனை காலத்துக்குப் பிறகு செலவுகள் கட்டுக்குள் அடங்குகின்றன! மம்மி டாடிக்குத் தனிப்பட்ட முறையிலும் வெற்றிகள் உண்டு….உங்க மூலமாகவும் பெருமைகள் உண்டு. கல்யாணம், கச்சேரி, கொண்டாட்டாம், சந்தோஷம்…இதோ வந்தாச்சே! குடும்பத்தில் யாருக்கோ குவா குவா உண்டு. புதிய சாதனைகள் படைப்பீர்கள். முதலாளி ஷொட்டும் தருவார். பணமும் அருள்வார்.

பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டில் உள்ள உங்கள் குடும்பத்தினருக்கா கச் செலவு செய்ய வேண்டி வரும். நாலாம் வீட்டில் சூரியன் இருப்பதால் தாயாருக்கு அவர்க ளின் தந்தை வழியில் லாபங்களோ நன்மைகளோ சொத்தில் பங்கோ கிடைக்கும். இந்த சூரியன் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுக்கே அரசாங்க உத்யோகமோ அல்லது அரசாங்கத்திடமிருந்து பிசினஸ் ஆர்டரோ கிடைக்கும்

பரிகாரம்:  விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லி விஷ்ணுவை வழிபட்டு பச்சை நிறப் பொருட்கள் தானம் அளியுங்கள்

சந்திராஷ்டமம்:  06.01.2017 வெள்ளை பகல் 01.03 முதல் 08.01.2017 ஞாயிறு மாலை 03.34 வரை

துலாம்: எப்போதையும்விட அலுவலகப் பொருப்புக்கள் தலைமேல் ஏறி உட்காரும். சாப்பிடவும் தூங்கவும் திரைப்படம்பார்க்கவும் கச்சேரி கேட்கவும் நேரம் இல்லைன்னு அங்கலாய்க்காதீங்க. பணத்தை எண்ணக்கூட நேரம் கிடைக்காதே அதுக்கு என்ன சொல்ல! பேச்சே வேண்டாம். மாட்டிக்காதீங்க. குழந்தைங்க மேடையில் பரிசு வாங்குவாங்க.

ஆறாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் சிநேகிதர்கள் அல்லது சிநேகிதிகளுக்கு வாழ்வில் முன்னேற்றமும் நிதி வசதியும் அதிகரிக்கும். ஏழரைச் சனியின் பிடியிலிருந்து நீங்கள் இன்னமும் முழுவதுமாக விடுபடவில்லை என்பதால் எடுத்த காரியங்களில் சற்றுத் தடைகளும் தாமதங்களும் ஏற்படத்தான் செய்யும். குருவும் மறைந்திருப்பதால் நீங்கள் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங் கள்.  ஒன்பதாம் வீட்டை சூரியன் பார்ப்பதால் தந்தை வழி உறவினர்களிடமிருந்து சொத்து அல்லது பங்கு கிடைக்கலாம்

பரிகாரம்: மாணவர்களுக்குப் படிப்புக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கம் உதவுங்கள்

விருச்சிகம்: பணம் புரளும். குழந்தைகளால் சந்தோஷம் கூரை வரை குவியும். அப்பா அம்மா எப்போதும் இல்லாத அளவு அனுசரணையாய் இருப்பாங்க. உடன் பிறந்தவர்கள் முன்பைவிட அன்பாய் இருப்பாங்க. புதிய வேலை மாற ணுமா? தசை புக்தி  அனுமதிச்சால் ஜமாயுங்க. கடன்கள் அடையும். கொடுங் கோல் பாஸ் வேறு வேலைக்குப் போய் அன்பான பாஸ் அருகில் வந்து தட்டிக் கொடுப்பார்.

ராசியின்மீது புதனும் சனீஸ்வரனும் அமர்ந்திருப்பதால் இரண்டு விதப் பலன்களை அனு பவிப்பீர்கள். சனி பகவான் எல்லாவற்றிலும் ஒரு நிதானப் போக்கையும் மனதிலும் உடலிலும்  ஒரு சோம்பலை ஏற்படுத்தியிருப்பார். அதற்கு நேர் எதிராக புதன் சற்று வேக மாகச் செயல்பட வைத்துக் காரியங்களை துரிதமாக்குவார். ஏழுக்குரிய சுக்கிரன் நான்காம் வீட்டில் இருப்பதால் மனைவி அல்லது கணவரின் தாயாருடன் இருந்து வந்து பிரச்சினைகள் நல்ல முறையில் தீரும். நட்புறவு சுமுகமாகும். இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் குடும்பத்தில் யாருக்கேனும் அரசாங்க நன்மைகள் அல்லது உத்யோகம் கிடைக்கும்.

பரிகாரம்: கோயில்களில் விளக்கேற்ற நெய் மற்றும் நல்லெண்ணை முடிந்த அளவு கொடுங்கள்

தனுசு: வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பேக் செய்ய ஆரம்பிச்சி ருப்பீங்களே. பேச்சில் பணிவும் அடக்கமும் தேவைன்னு எதிரில் உள்ள சுவரில் எழுதி வெச்சுக்குங்க. ஆபீஸ் வீடு இரண்டு இடங்களிலுமே எழுதினால் இன்ன மும் நல்லது. மம்மிக்கு திடீர்ப் புகழ் பரிசு எல்லாம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று சற்றுத் தள்ளிப்போய்க்கொண்டிருந்தாலும் மேமாதம் வெற்றி உண்டு.

பத்தாம் வீட்டில் குரு இருப்பதால் உத்யோகத்தில் பெரிய நன்மைகளை எதிர்பார்ப்பதில்லை. ராசியின்மீது சூரியன் அமர்ந்திருப்பதால்  உஷ்ண சம்பந்தமான சிறு உடல் உபாதைகளோ சருமப் பிரச்சினைகளோ ஏற்படக்கூடும். ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பதால் தந்தையின் உடல் நலனிலோ அல்லது அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவிலோ பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்ப்ள்ளது எனவே மரியாதையும் அன்பும் பாசமும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாம் வீட்டில் சனியுடன் கூடிய புதன் இருப்பதால் கல்விச் செலவுகள் அதிகரித்து அவை தாமதமாகவே பலன் தரும்

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராமாணயம் படித்து ராமருக்கு சிவப்புப் புஷ்பம் சாற்றி வழிபடுங்கள்

மகரம்:  இந்தப் பக்கம் ஒரு செலவு செய்தால் அந்தப் பக்கம் இரண்டு வரவுகள் வரும். அப்பாவை அதிருஷ்ட தேவதை அணைத்துக் கொள்வாள். உங்கள் பேச்சில் குளிர்ச்சி கூடி  விலை கொடுக்காமலேயே நன்மைகளை வாங்கி உங்கள் கையில் அடைக்கும். சகோதர சகோதரிகளுடன் குருக்ஷேத்திர யுத்தம் செய்ய நினைத்தாலும் பிசுபிசுத்து அசடு வழிவீர்கள்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் மீது உள்ள நியாயத்தை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் மறைந்திருப்பதால் தந்தையைன் நலனைக் கண் போல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் ஆரோக்யத்தின்மீது அக்கறை செலுத்த வேண்டும் என்றாலும் ஒன்பதாம் வீட்டு குரு சகல செளபாக்யங்களை வழங்குவார். இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம். ஆனால் குரு பகவானால் அவை நடக்கும்.

பரிகாரம்: துர்க்கை கோயிலில் கருப்பு உளுந்து கொடுத்து ராகுகால விளக்கேற்றி கன்னிப்பெண்களுக்குத் தாம்பூலம் அளியுங்கள்

கும்பம்: பொழுது போக்கு அம்சங்களுக்குக் குறைவில்லை. கவர்ச்சி அம்சம் என்பார்களே அது அதிகரிக்கும். ஞாயிறு சினிமா, திங்கள்  பீச், செவ்வாய் சர்க்கஸ், புதன் டிராமா என்று ஜாலியாகப் போவீர்கள்.  எனினும்…திடீரென்று ஆன்மிக ஈடுபாடு வரும். அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. மம்மி கிட்ட சண்டை போடமாட்டேன்னு 100 முறை இம்பெசிஷன் எழுதுங்க.

ராசியின்மீது ஏராளமாக கிரகங்கள் கூட்டம் போட்டிருப்பதால் (வார மத்தியில் சந்திரனும் வருகிறார்) மிகவும் கலப்படமான நிகழ்வுகள் நடக்கும். மன நிலையோ சம்பவங்களோ ஒரு நாளைக்கு இருந்தாற்போல் இன்னொரு நாள் இருக்காது. ஏழாம் வீட்டில் ராகு இருப்பதாலும் எட்டாம் வீட்டில் குரு மறைந்திருப்பதாலும் திருமணம் உடனே நடக்கம் என்று எதிர்பார்ப்ப தற்கில்லை எனினும் குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திருமணம் நிச்சய மாகிவிடும். ராசியின்மீது சுக்கிரன் அமர்ந்திருப்பதால் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை நவகிரக சன்னிதியில் மூன்று நெய்விளக்கேற்றி கொண்டைக்கடலையை அளியுங்கள்

மீனம்: விரயத்தைக் குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் மருத்துவ செலவு ஏற்பட்டாலும் சுக்கிரன் இருப்பதால் நிறைய அழகு சாதனங்கள் வாங்க செலவினங்கள் அதிகரித்தாலும் சந்திரன் இருப்பதால் மனசில் சஞ்சலங்கள் அலைபாய்ந்தாலும் கவலை வேண்டாம்.

ராசியைப்பார்க்கும் குரு பகவான் அனைத்தையும் சரிக்கட்டிவிடுவார். ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் திருமணம் உடனே நிச்சயமாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்திலும் சம்பளத்திலும் உயர்வு கிட்டும்.

பரிகாரம்: முருகருக்கு அர்ச்சனை செய்து பாலபிஷேகம் செய்யலாம். முருகரை வலம் வந்து அர்ச்சனை செய்யுங்கள்