வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

--

மேஷம்

புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தையின் புத்திசாலித்தத்தால் நன்மை விளையும்.  திடீர் அதிருஷ்டம் ஏற்படும்.பதினோராம் வீட்டில் ஏகப்பட்ட கிரகங்கள்  கேம்ப் போட்ருக்கே. செம செம பண வரவு. மற்றபடி நிகழ்வுகளில் ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும்.சகோதர சகோதரிகளுடன் குருக்ஷேத்திர யுத்தமெல்லாம் வேண்டாம். மனசில் நல்ல சிந்தனைகள் விதைச்சுப்ப்பீங்க. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். வாக்கினில் கொஞ்சம் சர்க்ரை தடவுவது நல்லது. இந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் என்று வரும். அரசாங்கத்திடமிருந்து காசு பணம் துட்டு மனி…வரும்.

ரிஷபம்

என்னதான் ஏழாம் வீட்டில் சனி இருந்தாலும் அது என்னதான் உங்க ராசியை பார்த்தாலும் ராசிநாதன் அட்டகாசமா அட்டணக்கால் போட்டு சந்தோஷ்மா இருக்காரோ.. பிழைச்சீங்களோ. முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன்மென்ட்டில் வேலை கிடைக்கும். எந்தப் புது முயற்சியிம் செய்வதற்கு முன்னால் நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். மம்மிக்கும் உங்களுக்கும் நல்லுறவு நிலவும்.

இதைவிட ஒரு கெளரவமும் பெருமையும் ஒருவருக்கு வேண்டுமா என்ன? உங்க டாடி மம்மிக்கும் உங்களைப் பார்த்து சந்தோஷமாய் இருக்குமே. அலுவலகத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பாங்க. நமக்குத்தான் திருப்தி ஏற்படாது. அதனால் பரவாயில்லை. கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்தானே. சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வாரம் நிறைய உண்டு. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. அங்கே இங்கேன்னு சந்தோஷமாய் ஊர் சுற்றவே நேரம் சரியாய் இருக்கும். நடக்கட்டும்!

மாணவர்களுக்கு: எத்தனை சதவீதம் உழைப்பைப் போடறீங்களோ அத்தனை சதவீதம் பலன் உண்டு.அத்தனை மட்டுமே உண்டு. புகழ் அதிகரிக்கும். ஆரோக்யம் பத்திரம்

மிதுனம்

நாலில் குரு இருப்பதால் தாயாருக்கு நன்மை ஏற்படும். கல்வியில் மேன்மை  ஏற்படும். வாகனம் வாங்குவீர்கள். அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும். ஏழாம் வீட்டில் சூரியன் இருகாருங்க. பார்த்து பதமா நடந்துக்குங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை வரக்கூடாதுன்னு கவனமா இருங்க. மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. முடிந்தேவிட்டது என்று நீங்க நம்பிக்கை இழந்து கைவிட்ட மேட்டர்க திடீர்னு துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும். கணவருக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும் . ஆறாம் வீட்டில் சனி இருப்பதால் நண்பர்கள் அல்லாதவர்களை நண்பர்கள் என்று நம்பிவிட வேண்டாம். குரு நாலில் இருப்பதால் மாணவர்களுக்கு வெற்றி.

கடகம்

குரு மூன்றில் இருப்பதால் நண்பர்களால் உதவ  முடியாத நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் சந்திரனால் கிடைக்கும். எட்டாம் வீட்டில் கேது இருப்பதால் ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கமும் வேண்டாம். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில் சாமர்த்தியம்  அதிகரிக்கும். குடும்பத்தில் யாராவது வெளிநாட்டில் வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ செல்ல நேரிடும். எட்டாம் வீட்டில் நாலு கிரகங்கள் இருப்பதாலும் பூர்வ புண்ணிய வீட்டில் சனி இருப்பதாலும் லேசான டென்ஷன்களைத் தவிர்க்க முடியாது, எனினும் சமாளிச்சுடு வீங்க. மெயில்பாக்சில் உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி வரும்.  உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு. பேச்சு சாப்பாடு இரண்டையும் சி சி காமரா போடாத குறையாக் கண்காணியுங்க. உங்க வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அலுவலக வேலைகளையும் மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்காதீங்க. நம் ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன?

சிம்மம்

கோயில் குளம்னு ஜாலியாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்க. பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக இத்தனை கவலைப்படறீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும்.  குழந்தைகளுக்கும் கணவருக்கும் நன்மைகள் நடக்கும். பத்தாம் வீட்டிற்குத் தற்போது குரு பார்வை கிடைத்திருப்பதால் உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும். ஐந்தில் புதன் என்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். இத்தனை காலம் கல்வியில்  நாட்டமின்றி இருந்த குழந்தைகள் திடீரென்று ஆர்வம் வரப்பெற்று நல்ல முறையில் படித்து உயர்ந்து உங்களுக்கு நிம்மதி அளிப்பார்கள். இரண்டில் குரு இருப்பதால்  குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு.

கன்னி

அதிருஷ்ட வீடு என்றும் செளபாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்பதாம் வீட்டை பொன்னன் என்று அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த குரு பகவான் பார்க்கிறார். எனவே திடீர்ப் பண வரவும் லாபமும் நன்மையும் ஏற்படும். தைரிய மாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மைதான் விளையும். மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படணும்னு வெச்சிருக்கீங்களே அந்த  பாலிசியை மட்டும் மாத்திக்குங்க.. நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியும்.

சந்திராஷ்டமம் : 06.01.2017 முதல் 08.01.2017 வரை

துலாம்

ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்ப் புகழ் அடைவார்கள்.ஏழரைச் சனியால் சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடு வீங்க. கணவருக்குப் பதவியும் சம்பளமும் உயரும். உங்களுக்கும் வெளுநாட்டு ட்ரிப்பும் இருக்கு மேடம். அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினை கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிஞ்சுக்கும்.  வார்த்தைகளை வெளியே விடும்போது மட்டும் இரண் மடங்கு மூன்று மடங்கு கவனத்துடன் ரிலீஸ் பண்ணுங்க. ஒன்பதாம் வீட்டை சூரியன் பகவான் பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடி ஓடி வரும். நாலாம் வீட்டை குரு பகவான் பார்க்கிறார். நான்காம் வீடு குறிப்பது தாயார் ! கல்வி! வாகனம்!! தாய் உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்குவார். தங்க நகை  கூடப் பரிசளிக்கலாம்! கல்வியில் அசத்துவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். அல்லது தற்போதுள்ள வாகனத்துக்குப் புதுப் பொலிவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 08.01.2017 முதல் 10.01.2017 வரை

விருச்சிகம்

நாலாம் வீட்டில் கேது. படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்கள். பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகத்தை வாங்கித்தர வாய்ப்புள்ளது! பத்தாம் வீட்டில் அமரந்திருக்கும் ராகுவும் அந்த வீட்டைப் பார்க்கும் கேதுவும் வெளிநாட்டு உத்யோகத்தில் உங்களை உட்கார வைப்பார்கள். அல்லது உள்ளூரில்  உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலக /சொந்த விஷயமாகவும் வெளியூர் வெளிநாடு என்று போக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். (இல்லைன்னாலும் அலுவலகத்தில் என்றைக்குத் தூங்கியிருக்கீங்க!) மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டை. நண்பர்கள் கூட சண்டை. கத்திச் சண்டை. கத்தாமல் சண்டை. எதுக்கு இதெல்லாம். கின்னஸ்கா போகப்போறீங்க? சமாதானமாப் போனால் எல்லாருக்கும் எனர்ஜி மிச்சமாகும்ல மனசெல்லாம் அன்பு! தென் வாட்!?

சந்திராஷ்டமம் : 10.01.2017 முதல் 12.01.2017 வரை

தனுசு

இரண்டாம் வீட்டுக்கு சனி பகவானின் பார்வை கிடைத்திருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம். வங்கிக் கணக்குல டிஜிட்கள் ஏறும். மாணவர்கள் தங்கள் மார்க்கைப் பார்த்துக் கண்கள் விரியும். அதிருஷ்டமும் உழைப்பும் ஒரு சேரக் கைகொடுக்கற துன்னா சும்மாவா? வீட்டில் ஜாதகம் எடுத்திருந்தால் மடமடன்னு முடியும் (கவலைப்படா தீங்க… அம்மா அப்பாவும் இதைப் படிப்பாங்க?) பாப்பா பிறக்கும். டாட்டா போகத் திட்டமிட்டி ருந்தீங்க. நடக்கும். விசாவுக்குக் காத்திருந்தால் அதுவும் கைகூடும். விசா கிடைச்சாச்சு. ஏழரைச் சனி இருப்பதால் முன்னேற்றமும் சற்று நிதானமாகவே இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பதினோராம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும்.

மகரம்

ஒன்பதாம் வீட்டில்  குரு இருப்பதால் அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். இதே காரணத்தினால் தந்தைக்கு அனைத்து வகை நன்மை களும் கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் உடல் நிலையை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு வாக்குப் பலிதம் அதிகமாகும். பன்னிரண்டாம் வீட்டில் புதன் இருப்பதால் படிப்புக்காகவும், சுக்கிரன் இருப்ப தால் ஆடை அணிமணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள். சனி பார்வை ராசிக்கு இருப்பதால் எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும்  குரு பார்ப்பதால் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும்.  கணவருக்கும்  உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்களேன்? தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. பயணம் போவீங்க. நிறையப் பயணம்! பெரிய பயணம்! புது வேலை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். தகவல் இப்பவே  வரும்.

கும்பம்

ராசியின்மீது செவ்வாய் அமர்ந்திருக்கிறார். இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்க வேண்டாம். அநாவசிய கோபம் ஏற்படாமலும் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து சத்தம்  போடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. ப்ளீஸ். ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா? கணவர்/ மனைவி வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க.எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க.போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும். திருப்தியாகத்தான் இருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கே தெரியும். நியாயமாகக் கிடைக்க வேண்டியது குறைவின்றிக் கிடைக்கிறதே! குடும்பத்தலைவி/தலைவருக்கு: எத்தனையோ பெரிய சுறாக்களை சந்தித்து நீந்தி வந்துட்டீங்க. அரை அங்குல மீனைப் பார்த்து பயப்படறீங்களே? அச்சம் தவிருங்க.வெளியூர் வெளிநாடுன்னு சுத்தியடிச்சுக்கிட்டிருந்தவர்களுக்குத் தாய்நாடு திரும்ப ஆசை ஏற்பட்டால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லபடியாக ஈடேறும்.கடன்களை முடிச்சுட்டீங்களே வாழ்த்துக்கள்.முடிக்காதவங்க முனைந்தால் முடிஞ்சுடுமே!

மீனம்

குரு உங்களின் ராசியைப் பார்க்கிறார்.  ஆகவே மனதில் நிம்மதியும் சந்தோஷ மும் பெருகும். கேது பன்னிரண்டாம் வீட்டிற்குப் போய்விட்டதனால் சஞ்சலங்கள் விலகும். ராகு ஆறாம் வீட்டிற்கு வந்திருப்பதால் நண்பர்களால் நன்மையும் லாபமும் ஏற்படும். அவர்களின் உதவி அதிகமாகக் கிடைக்கும். பதினொன்றில் சூரியன் இருப்பதால் அரசாங்க நன்மைகள் கிடைக்கும்.  ஏழாம் வீட்டில் தற்சமயம் குரு இருப்பதால் கணவருக்கு/ மனைவிக்கு நன்மை ஏற்படும். கேது பன்னிரண்டில்.மனதில் விரக்தி நிலவ அனுமதிக்காதீர்கள். கவர்ச்சி அம்சம் கூடுதலாகும். மேடை ஏறிப் பேசிக் கைத்தட்டல் வாங்குவீங்க. கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்புவீங்க. குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேளமாவது கொட்டும். நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.