வார ராசிபலன்: 2-11-18  முதல் 08-11-18 வரை! வேதா கோபாலன்

மேஷம்

வாழ்க்கை எந்தத் திசையில் போகுமோ என்று டென்ஷனாயிக்கிட்டிருந்தீங்க. குறிப்பா அலுவலகத்தில் என்ன திருப்பம் ஏற்படுமோ என்ற கவலையில் சமீபத்தில் நாலு கிலோ எளைச்சுட்டீங்க. அட. கவலைப்படாதீங்கப்பா. முன்பு நிறைய டூர்  போயிக்கிட்டிருந்தீங் களே. அது கொஞ்சம் குறையும். மற்றபடி வருமானத்தில் எந்தவித்க் குறைவும் இருக்காது. குழந்தைங்களால மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படும். பெத்தவங்களால் திடீர் நன்மை கள் ஏற்படும். அது உங்களுக்கு  மட்டுமின்றி அவங்களுக்கும் சந்தோஷம் குடுக்கும். சகோதர சகோதரிகளின் போக்கைப் புரிஞ்சுக்க முயற்சிக்காதீங்க. முடிஞ்சா உதவி செய்ங்க. இல்லாட்டி விட்ருங்க.

ரிஷபம்

சின்னச்சின்ன உடல் உபாதைகள் சரியாகும். நிம்மதி ஏற்படும். அம்மா அப்பாவிடம் எத்தனையோ அன்பும், பாசமும், ஆசையும் வெச்சிருக்கீங்க. பிறகு ஏன் கடுகடுன்னு ஒரு முகத்தை அணிஞ்சுக்கிட்டு அவங்க கிட்ட டென்ஷன் காண்பிக்கறீங்க? அன்பைப் புரிய வைங்கப்பா. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைங்க எல்லாம் இப்போ சரியாயிடுச்சா? என்னமோ ரொம்பத்தான் பயந்தீங்களே? இந்த ராசிப்பெண்களுக்கு நினைத்தும் பார்த்திருக்காத நன்மைகள் ஏற்படும். பெரிய வாய்ப்புகள் தேடி வந்து வாழ்க்கையில் வரிசையாக விளக்கேற்றி வைக்கும்., அப்பாவிடன் உடல் நிலை பற்றி பயம் வேண்டாம்., எல்லாம் சரியாகும்.

மிதுனம்

புத்திசாலித்தனமான செயல்கள் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. விட்டுப்பிரிஞ்சு போன உறவினர்கள் மெல்ல மெல்ல உங்களை வந்து சேர்ந்துக்குவாங்க. சண்டைகள் முடிஞ்சு வெள்ளைக்கொடி பறக்க விடும் காலம் வந்தாச்சு, நீங்க வீட்டைத் தாழ் போட்டுக்கிட்டு உள்ளே உட்கார்ந்தாலும்கூட அதிருஷ்ட தேவதைக் கதவைத் தள்ளிக்கிட்டு உள்ளே வந்து உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கிட்டுப் போவாங்க. பயணங்கள்   அதிகமாய்த்தான் இருக்கும். எல்லாமே அர்த்தமுள்ள பயணங்கள் மட்டுமில்லை. நிறைய நல்ல ரிசல்ட்களையும் தரப்போகுது. குழந்தைகளிடம் அதிகக் கடுமை காட்ட வேண்டாம்.

கடகம்

குழந்தைங்களின் போக்கு முன்பு மாதிரி இல்லை என்று மனசில் சங்கடமூம் நிரடலும் இருந்தால் அதை ஒரு பெரிய பிரச்சனை என்று மனசில் போட்டுப்புரட்டிக் கவலை கிவலை எல்லாம் படாதீங்க. அது அநேகமாகக் கற்பனை பயமாய்த்தான் இருக்கும். அல்லது ஒரு வேளை அதில் உண்மையும் நியாயமும் இருந்தாலும்கூட, அது மிகவும் தற்காலிகமானது என்பதை நீங்க உறுதியா நம்பலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வேளை வந்தாச்சுங்க. அக்கம்பக்கத்தினருடன் மிக அழகிற நட்பு வைச்சிருக்கீங்க. சமுதாயத்தில் உங்க மதிப்பும், செல்வாக்கும் தீபாவளி ராக்கெட் செல்லும் உயரத்துக்கு அதிகரிக்கும். எதிரிகளின் திட்டம் புஸ்வாணம் மாதிரிப் போவதால் உங்கள் புன்னகை மத்தாப்பாய் விரியும்.

சிம்மம்

எந்த வம்பு வழக்கிலும் சிக்கிக்காதீங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலையைக் கவனிச்சுக் கிட்டுக் குனிஞ்ச தலை நிமிராமல் போங்க. அலைச்சலும் உழைப்பும் அதிகமாத்தான் இருக்காது. நீங்க உழைச்ச உழைப்புக்கு ஏற்ற பலன் அல்லது வருமானம் இல்லைன் னெல்லாம் நினைச்சு வீணாய் உங்க அமைதியைக் கெடுத்துக்காதீங்கப்பா. சோம்பல் என்றொரு குணம் உங்ககிட்ட வந்து ஒட்டியிருக்கே.. அதை மட்டும் வெட்டித்  தள்ளுங்க. மற்றபடி வெற்றி மனிதர்/ மனுஷிதான் நீங்க. உறவினர்களும் நண்பர்களுமாக வீடு களைகட்டும். நண்பர்களால் எதிர்பார்த்திராத நன்மைகள் உண்டு.. குறிப்பாக வெளிநாடு சம்பந்தப்பட்ட நன்மைகள்.

கன்னி

திடீர்ப் பண வரவும் லாபமும் நன்மையும் ஏற்படும். தேர்வுக்குப் படிக்கறவங்கள் ஒரு பத்து பர்சன்ட் முயற்சியை அதிகமாய்த் தாளிக்கணும்   என்பதைக் கல்வெட்டு மாதிரி மனசில் பதிச்சுக்குங்க. எதிர்பாலினத்தைச் சேர்ந்த  சிநேகிதர்கள்/ சிநேகிதிகள் நன்மையளிப்பார் கள்.  நண்பர்களால் உதவ  முடியாத நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் அளிக்க அவங்களைவிட்டா வேறு யாருங்க? பிசினஸ் செய்யறவங்களுக்கு ரியலி நல்ல காலங்க. நண்பர்களோட வீண் சண்டையா? நோ நோ. பணிஞ்சு போங்க. தழைஞ்சு போங்கப்பா. குடி முழுகியா போயிடும்? சகோதரர்களுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு வாழ்க்கை இனிக்கும். ஜமாய்ங்க.

துலாம்

கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும். மாணவர்களே.. ஒங்களுக்கு ருசியான ரிசல்ட் வரும். ஓகேயா? குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார் ஐடியா கொடுத்தாலும் தூக்கி அடிச்சுக் கண் காணாத தொலைவுக்கு அவங்களை விரட்டிடுங்க. கடுமையாப் பேச முடியாத நபர்னா இனிமையாப்பேசியும் விலக்கலாம். உங்களுக்கு எல்லாம் சாத்தியம். உங்களுக்கென்றே உள்ள அந்த கவரும்  தன்மையை வெச்சுக்கிட்டு ஜமாய்ப்பீங்க. உற்றார், உறவினர், நெருங்கிய சொந்தபந்தங்கள் எல்லோருமே மிகவும் அனுசரணையாகவும் ஆதரவாகவும் இருக்கையில் உங்களுக்கென்னப்பா குறைச்சல்? பெற்றோருக்கு நன்மைகள் நிகழும்.

விருச்சிகம்

இனிதாய் ஒரு காதல் துவங்க வாய்ப்புண்டு. திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். நிலம் வீடு வாங்கத் திட்டமிடுங்க. நல்லபடியா முடியும். நண்பர்களும் வங்கி லோனும் மனசுக்கு மகிழ்ச்சி தரும். சாப்பாட்டு விஷயத்தில் கவனமோ கவனம் தேவை . குடும்பத்தினருடனோ, உறவினருடனோ, அலுவலகரீதியாகவோ, நண்பர்களு டனோ ஒரு நீண்ட பயணம் உண்டு. அதனால் நன்மையும் உண்டு.  கணவன் மனைவிக் கிடையே அழகிய அன்யோன்யம் நிலவும்.  பழைய சண்டைகளுக்குச் சந்தடி சாக்கில் ஸாரி கேட்டுடுங்க.  மகன் அல்லது மகள்  பற்றிச் சின்னச்சின்னதாய்  டென்ஷன்கள் இருந்தாலும் அதெல்லாம் காற்றுக்குமிழ்கள் போல் சின்ன ஆயுள் கொண்ட கவலைகள்தான் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.         

தனுசு

நண்பர்களால் நன்மை ஏற்படும்.. தந்தையின் புத்திசாலித்தத்தால் நன்மை விளையும்.  திடீர் அதிருஷ்டம் ஏற்படும்.சின்னதாய் ஜுரம் வந்தா பெரிசா கவலை வேணாம். ஜுஜூபி. எல்லாம் தானாய்ச் சரியாப் போகுங்க. என்னாகுமோ ஏதாகுமோன்னு ஏன் இப்படி பயந்து பயந்து டென்ஷன் ஆறீங்க? தந்தைக்கு வெளிநாட்டு யோகம் உண்டு. அதிருஷ்டத்தை மட்டுமே நம்பாமல் உழைப்பை  நம்ப வேண்டிய தருணம் இது. நிறைய வருமானங்களும் லாபங்களும் வரும். குறிப்பாக் கலைத்துறையில் இருக்கறவங்க சூப்பர்சானிக் வேகத்தில் வாழ்க்கையில் சந்தோஷங்களும் அதிருஷ்டமும் அதிகரிக்கும்.  பணமெல்லாம் அருவி மாதிரிக் கொட்டும். அள்ளிப் போட்டுக்குங்க. அதே சமயம் வருங்காலத்துக்கு சேமியுங்க.

மகரம்

குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். செலவுதான் அதிகம் – என்கிறீர்களா! ஸோ வாட்! ஹாப்பீ செலவுதானே? எல்லாத்துக்கும் முகத்தை ஒண்ணேகால் முழ நீளத்துக்குத் தூக்கி வெச்சுக்கிட்டா யாரும் உங்களுக்க்க பயப்பட மாட்டாங்க. மாறாக அலட்சியப்படுத்துவாங்க. ரகசியமா எரிச்சலடைவாங்க. தேவையா? தேவையா? நிறைய வெளியூர் வெளிநாட்டுப் பயணமெல்லாம் போய் வந்திருப்பீங்க. நிறைய அன்பளிப்புகள் வரும். வந்திருக்கும். பல காலம் காத்திருந்த வெற்றி வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும். சில சந்தோஷமான  தருணங்களை மறந்தே போயிருந்தீர்கள் அலுவலக வாழ்க்கையில் / தொழில் ரீதியாக. அதெல்லாம் தன்னிச்சையாய் மறுபடியும் தங்களைத் தேடி ஓடி வரும்.

சந்திராஷ்டமம் :  நவம்பர் 1 முதல் 4 வரை

கும்பம்

ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கமும் வேண்டாம். பேச்சில் சாமர்த்தியம்  அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல நேரிடும்.  சாதாரணமாவே துர்வாசருக்கு நெருங்கிய சொந்தக்காரங்க மாதிரித்தான் குரல் உசத்துவீங்க.. இப்போ கேட்கவே வேண்டாம். வில்லும் வேலும் கையில் இல்லாத குறையாய் சண்டை போட ஆரம்பிக்காதீங்க. அமைதியா இருக்கும்படி உங்க மனசுக்கு நீங்களே ஆட்டோ சஜஷன் குடுத்துக்குங்க. உத்யோகம் பற்றிய டென்ஷன்களைப் பெரிதாய் நினைச்சுக் கவலைப்படாதீங்க. பொறுப்பாய்ப் பொறுமையா வேலை  செய்தாலே ஜெயிச்சுடுவீங்க. அவசியம் நேராமல் வேலை மாறுவது  பற்றி யோசிக்கவே யோசிக்காதீங்க.

சந்திராஷ்டமம் :  நவம்பர் 4 முதல் 6 வரை

மீனம்

கல்யாண முயற்சிகள் டாப் கியரில் போகலைன்னு டென்ஷனாகாதீங்க. எந்த கியரில் போனாலும், விரைவாக முடிந்து சந்தோஷமளிக்கும்.  டோண்ட் வொர்ரி.. புது வேலை தேடணுமா! கம் ஆன்! ஸ்டார்ட். உடனே முயற்சி துவங்குங்க. பலன் இருக்கும். குழந்தைங்களோடயும் குழந்தைங்களோட குழந்தைங்களோடயும் சந்தோஷமாய்ப் பொழுது கழியும். குடும்பத்தில் உங்களுக்கோ.. மற்றவர்களுக்கோ சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்க பகல் கனவில்கூட எதிர்பார்த்திருக்காத நன்மைகள் + அதிருஷ்டம் ஏட்பட்டு உங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யும். செலவுகள் ஒரு வழியாக் கட்டுப்படும். டோட்டலாய்ப் பார்த்தால் நிம்மதியும் சந்தோஷமும் முழுமையாய் மனசில் நிலவும். வேற என்னங்க வேணும்? சூப்பர்.

சந்திராஷ்டமம் :  நவம்பர் 6 முதல் 8 வரை