Random image

வார ராசிபலன் 14-09-18 முதல் 20-09-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

கோயில் குளம்னு ஜாலியாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்க. திடீர்ப் பண வரவும் லாபமும் நன்மையும் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம்  அதிகரிக்கும். குடும்பத்தில் யாராவது வெளிநாட்டில் வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ செல்ல நேரி டும். உங்கள் அதிருஷ்டம் காரணமா உங்க பொறுப்பையெல்லாம் மத்தவங்க எடுத்து அதையும் அருமையா நிறைவேற்றுவாங்க. பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கி ராட்ஸ்.    அடேயப்பா. இதுக்காக எத்தனை காலம் காத்திருந்தீங்க. என்ஜாய். மேரேஜ்  பற்றி எதுக்காக இத்தனை கவலைப்படறீங்க?  எல்லாம் தன்னிச்சையாய்..  நல்லபடியாய் .. ஹாப்பியாய் இதோ நிச்சயமாகப்போகுதேங்க!

சந்திராஷ்டமம் : 14.09.2018 முதல் 17.09.2018 வரை

ரிஷபம்

தந்தையின் புத்திசாலித்தத்தால் நன்மை விளையும்.  திடீர் அதிருஷ்டம் ஏற்படும். அலுவலக விவகாரங்களினால் லேசான டென்ஷன்களைத் தவிர்க்க முடியாது, எனினும் சமாளிச்சுடுவீங்க. மெயில்பாக்சில் உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி வரும். சும்மா இல்லீங்க. நீங்க பல காலம் காத்திருந்த நல்ல நியூஸ்….  வெளியூரில் இருப்பவங்களுக்கு சின்னச் சின்ன நல்லசெய்தி சொந்த ஊர்களிலிருந்து வரும். சகோதர சகோதரிகளின் படிப்பு மற்றும் திருமணம் சம்ப்நதமான தகவல்கள்  மட்டுமின்றிப் பெற்றோரின் வருகையாகவும்  அது இருக்கக்கூடும். பல காலம் சந்திக்க விரும்பிய நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பீங்‘க. நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பீங்க. சந்தோஷம்.

சந்திராஷ்டமம் : 17.09.2018 முதல் 19.09.2018 வரை

மிதுனம்

புகழ் அதிகரிக்கும். செம செம பண வரவு. மற்றபடி நிகழ்வுகளில் ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க. எல்லாம் தானாச் சரியாகும். மாணவர்களே உங்களைப் பொருத்த வரையில் எத்தனை சதவீதம் உழைப்பைப் போடறீங்களோ அத்தனை சதவீதம் பலன் உண்டு.அத்தனை மட்டுமே உண்டு. அதை நினைவில் வெச்சுக்குங்கப்பா. ஆரோக்யம் பத்திரம். அதைக் கெடுத்துக் கொள்ளும் எந்தப் பழக்க வழக்கத்தையும் தலையைச் சுற்றித் தூக்கிப்போடுங்க. தந்தை வழி உறவினர்களைச் சந்திப்பீங்க. அவங்களால லாபம்ஸ் நன்மைஸ் எல்லாமும் கிடைக் கும். சொத்துகிடைக்கவும் சான்ஸ் இருக்குங்க. உங்க வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அலுவலக வேலைகளையும் மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்காதீங்க. நம் காரின்  ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன?

கடகம்

மனசில் நல்ல சிந்தனைகள் விதைச்சுப்ப்பீங்க. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். வாக்கினில் கொஞ்சம் சர்ககரை தடவுவது நல்லது. உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு. இரட்டிப்பு கவனமாய் இருப்பதோட.. எந்தப் பிரச்சினைக்கும் உடனுக்குடன் ஆக்ஷன் எடுங்க. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல் லாம் வெற்றிகரமாகத்தான் முடியும்.  அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட் டிருந்த பிரச்சினைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிஞ்சுக்கும்.  வங்கிக் கணக்குல டிஜிட்கள் ஏறும். மாணவர்கள் தங்கள் மார்க்கைப் பார்த்துக் கண்கள் விரியும். அதிருஷ்டமும் உழைப்பும் ஒரு சேரக் கைகொடுக்கறதுன்னா சும்மாவா?

சிம்மம்

இந்தப் பக்கத்திலிலுந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் என்று வரும். அது பெரிய விஷயம் இல்லைங்க. அது நியாயமான வழியில் வந்த நேர்மையான லாபமாய் இருக்கும். அதுதான் சிறப்பு. தாயாருக்கு நன்மை ஏற்படும். கல்வியில் மேன்மை  ஏற்படும். வாகனம் வாங்குவீர்கள். அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும்.  லாபம் அளிக்கக் கூடிய பயணங்கள் மேற்கொள்வீங்க. தாய் உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்குவார். தங்க நகை  கூடப் பரிசளிக்கலாம்! கல்வியில் அசத்துவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். அல்லது தற்போதுள்ள வாகனத்துக்குப் புதுப் பொலிவு கிடைக்கும்.

கன்னி

முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன் மென்ட்டில் வேலை கிடைக்கும். எந்தப் புது முயற்சியிம் செய்வதற்கு முன்னால் நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. அது மட்டும் போதாதுங்க. உண்மையான நல்ல ஜோசியரைப் பார்த்து   உங்களுக்கு இப்போ உகந்த நேரம் ஓடிக்கிட்டிருக்கான்னு கன்ஃபர்ம் செய்துக்குங்க. பிறகு எதிலும் இறங்குங்க. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் ஏற்படும். அது அனேகமாக உங்க மூலம் ஏற்படக்கூடும். லக் தேவதை வந்து உங்க வீட்டு காலிங்பெல்லை அடிச்சுக் கை நிறைய சந்தோஷத்தைக் கொடுத்துட்டுப் போவாங்க. இன் ஷார்ட் அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். தந்தைக்கு அனைத்து வகை நன்மைகளும் கிடைக்கும்.

துலாம்

அரசாங்கத்திடமிருந்து காசு பணம் துட்டு மனி…வரும். பார்த்து பதமா நடந்துக்குங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை வரக்கூடாதுன்னு கவனமா இருங்க. மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. யாரையும் ஏமாற்றாதீங்க. குறிப்பா மனச்சாட்சியை.  பேச்சு சாப்பாடு இரண்டையும் சி சி காமரா போடாத குறையாக் கண்காணியுங்க. குறிப்பாய் முன் பின் தெரியாதவங்களை நமக்கு  நெருக்கமானவங்கன்னு ஏன் கற்பனை செய்துக்கறீங்க? வீட்டில் ஜாதகம் எடுத்திருந்தால் மடமடன்னு முடியும் (கவலைப் படாதீங்க… அம்மா அப்பாவும் இதைப் படிப்பாங்கதானே?) மனதில் இத்தனை காலமாய்க் காணாமல் போயிருந்த நிம்மதியும் சந்தோஷமும் வரும்.

விருச்சிகம்

ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். கொஞ்சம்ள நிதானப்போக்கு இருக்கட்டும். முடிந்தேவிட்டது என்று நீங்க நம்பிக்கை இழந்து கைவிட்ட  விஷயங்கள் திடீர்னு துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும். கணவருக்குப் பதவியும் சம்பளமும் உயரும். உங்களுக்கும் வெளுநாட்டு ட்ரிப்பும் இருக்கு மேடம். வார்த்தைகளை வெளியே விடும்போது மட்டும் இரண்டு அல்லது மடங்கு மூன்று மடங்கு கவனத்துடன் ரிலீஸ் பண்ணுங்க. நல்ல உத்யோகம் கிடைக்கும். ஆனால் நியமன உத்தரவு வருவதற்குள் ஏகப்பட்ட தாமதம் இருக்கும். பொறுமைதானுங்க மிக முக்கியம். பிறகு ஜெயிச்சுடுவீங்க.

தனுசு

மம்மிக்கும் உங்களுக்கும் இத்தனை நாட்களாக இருந்து வந்த சின்னச்சின்ன பிரச்சனை கள் ஒருமுடிவக்கு வந்து அதன் பிறகு நல்லுறவு நிலவும். அது நீடிக்கவும் செய்யும். கணவருக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும் . குழந்தைகள் திடீர்ப் புகழ் அடைவார்கள். சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடுவீங்க. திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடி ஓடி வரும்.  மாணவர்களே…. ப்ளீஸ்.. படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்கள். அப்புறம் பாருங்க. உங்களை அடிச்சுக்க ஆளில்லை.

மகரம்

நாலு நல்லவங்க உங்களைப் புகழ்ந்து பாராட்டுவாங்க. பெரியவங்க ஆசியெல்லாம் கிடைக்குமுங்க. இதைவிட ஒரு கெளரவமும் பெருமையும் ஒருவருக்கு வேண்டுமா என்ன? உங்க டாடி மம்மிக்கும் உங்களைப் பார்த்து சந்தோஷமாய் இருக்குமே. நண்பர்கள் அல்லாதவர்களை நண்பர்கள் என்று நம்பிவிட வேண்டாம். யாரிடமும் மனம் விட்டுப் பேசவும் வேண்டாம். பழகவும் வேண்டாம். பண விவகாரங்களில் பல மடங்கு கவனமாக இருங்க. உங்களின் தந்தைவழியில் வந்த  நெருங்கிய உறவினர் உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகத்தை வாங்கித்தர வாய்ப்புள்ளது! ஜாதகரீதியாக நல்ல நேரமாக இருந்தால் வெளிநாட்டு உத்யோகத்தில் உங்களை உட்கார வைப்பதற்குக்கூட சாத்தியம் உள்ளது.

கும்பம்

அலுவலகத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பாங்க. நமக்குத்தான் திருப்தி ஏற்படாது. பிகாஸ், நீங்க எதிர்பார்த்தது வேறயாவும் கிடைச்சது அதைவிடக்குறைவாகவும் இருக்கும். அதனால் என்னங்க? பரவாயில்லைங்க. கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்தானே. நண்பர்களால் உதவ  முடியாத நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும். தாயின் உதவி சமயத்தில் கிடைப்பதால் மனசுக்கு ஆறுதலாக இருக்கும். மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டை. நண்பர்கள் கூட சண்டை. கத்திச் சண்டை. கத்தாமல் சண்டை. எதுக்கு இதெல்லாம்? டென்ஷன் அவங்களுக்கு மட்டுமா? உங்களுக்கும்தானே. யோசிங்க.

மீனம்

சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வாரம் நிறைய உண்டு. ஜாலியா என்ஜாய் பண் ணுங்க. அங்கே இங்கேன்னு சந்தோஷமாய் ஊர் சுற்றவே நேரம் சரியாய் இருக்கும். நடக்கட்டும்!அதிலும் குறிப்பாய்ப் புண்ணியம் அளிக்கக்கூடிய தலங்களுக்குப் பயணம் செய்வீங்க. மனதுக்கு நிறைவாகவும், இதமாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாவும் அமையும் பயணம். ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கமும் வேண்டாம்… வேண்டாம்… வேண்டவே வேண்டாம். சமாதானமாப் போனால் எல்லாருக்கும் எனர்ஜி மிச்சமாகும்ல மனசெல்லாம் அன்பு! இருந்தும் ஏனுங்க அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திணறிக் கெட்ட பெயர் எடுக்கறீங்க?

சந்திராஷ்டமம் : 12.09.2018 முதல் 14.09.2018 வரை