முதல்வருக்கு வரவேற்பு: அதிமுக கொடிக்கம்பம் நட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி…

சென்னை: தமிழக முதல்வர் இன்று சென்னையில் நவர் புயல் பாதிப்பு மற்றும் மழைநீர் தேக்கம் குறித்துஆய்வு செய்தார். முன்னதாக சென்னை உத்தண்டி பகுதியில், வரும் முதல்வரை வரவேற்கும் விதமாக, அ.தி.மு.க கொடிக்கம்பம் நடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கொடிகப்பம் நட்டபோது, மேலே உள்ள மின்வயரில் கம்பம் பட்டதால்,  கூலித்தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 28ந்தேதி (நவம்பர்) கரையை கடந்த நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக புறநகர் பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளை   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட்டார்.  வேளச்சேரி பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளை ஆய்வு செய்த நிலையில்,  இறுதியாக பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் முட்டுக்காடு முகத்துவாரத்தை பார்வையிட்டார்.

இந்த நிலையில் முதல்வரின் வருகையையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க-வினர் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், சாலையோரங்களிலும், சாலையின் நடுவிலும்  அ.தி.மு.க கொடிக் கம்பங்களை நட்டு வைத்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கூலித்தொழிலாளியான தியாகராஜன் என்பவர் சாலை ஓரத்தில் கொடிக்கப்பம் நடும் பணியில்  ஈடுபட்டார்.  அப்போது சா

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தியாகராஜன்,  உடலை கைபற்றி,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.