பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய விமானி அபிநதனுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் உருவாக்கப்பட்ட #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

hashtag

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையை, இந்திய விமானப்படையினா் பதிலடி கொடுத்து விரட்டியடித்தனா். இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது தமிழகத்தைச் சோ்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டாா்.

twitter

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பதில் தாக்குதல் நடத்திய போது அபிநந்தன் சென்ற போா் விமானம் விபத்துக்குள்ளானது. இதை தொடா்ந்து வேறு வழியின்றி அபிநந்தன் பாராசூட் உதவியுடன் பாகிஸ்தான் எல்லையில் தரையிரங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர். சிறைப்ப்டிக்கப்பட்ட அபிநந்தனை பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.

இதையடுத்து, விமானப் படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அறிவித்தாா். அதன்படி இன்று பிற்பகல் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது வருகையை ஒட்டி, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியா வந்த அபிநந்தனுக்கு பஞ்சாப் முதல்வா் அம்ரிந்தா் சிங் உள்பட வாகா எல்லையில் குவிந்திருந்த பொது மக்கள் உணா்ச்சிப் பொங்க ஆரவார வரவேற்பு அளித்தனா்.

abhi

இந்நிலையில், அபிநந்தன் இந்தியா திரும்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றது. இந்திய மக்கள், சமூகவலைதள பயன்பாட்டாளர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இந்தியா திரும்பிய அபிநந்தனை வரவேற்று, வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, அபிநந்தன் தொடர்பாக #AbhinandanReturns, #Adhinandhancoimgback, #Attari உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.