வெலிங்டன் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

குன்னூர்

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையைச் சேர்ந்த சம்பத்(20) 2019 ஆம் ஆண்டு இராணுவ தேர்வில் தேர்ச்சி பெற்றவர். தற்போது வெலிங்டன் எம்.ஆர்.சி.அவாஹில் இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வெலிங்டன் ராணுவ முகாமும் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

வெளியே எங்கும் செல்ல முடியாததால் சம்பத்குமார் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். எனவே சனிக்கிழமையன்று அவர் ராணுவ முகாமை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் உதகை தேசிய நெடுஞ்சாலையில் பிளாக்பிரிட்ஜ் அருகே மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.