உலகம் முழுவதும் 1மணி நேரம் முடங்கிய ‘யுடியூப்’ இணையதளம்

லகம் முழுவதும் இணையதளங்கள் முடங்க வாய்ப்பு இருப்பதாக சர்வதேச இணையதள சேவை அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று பிரபல வீடியோ இணையதளமான யுடியூப் சேவை சுமார் 1 மணி நேரம் முடங்கியது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஷ்யாவில் உள்ள  தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் நேம்ஸ் அண்ட் நம்பர் (Internet Corporation For Assigned Names & Numbers) என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு உலகம் முழுவதும் இணையதளங்களை பராமரித்து வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக,  உலகளவில்  48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இன்று  உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது; சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக  கூறப்பட்ட நிலையில் சுமார் 1 மணி நேரத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது.