அமெரிக்கா – இந்திய விமானப்படை 12 நாள் கூட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

பானாகார், மேற்கு வங்கம்

ன்று முதல் மேற்கு வங்க மாநிலத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் விமானப்படை வீரர்களுக்கான 12 நாள் பயிற்சி தொடங்குகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் பானாகார் மற்றும் கலைகுண்டா ஆகிய பகுதிகளில் விமானப்படை தளங்கள் அமைந்துள்ளன. இந்த 2 தளங்களில் இன்று முதல் 12 நாட்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு விமானப்ப்டை வீரர்கள் கலந்துக் கொள்ளும் பயிற்சி தொடங்கப்படுகிறது. இரு தளங்களில் பயிற்சி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கிடையில் உள்ள ராணுவ ஒப்பந்தங்கள் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படைகளின் ஒத்துழைப்பையும் இந்த பயிற்சி உறுதி செய்யும் எனவும்கூர்ப்படுகிறது.

இந்த பயிற்சியின் நோக்கமானது செயல்திறன் வெளிப்பாட்டை வழங்குதல், பரஸ்பரம் சிறப்பு பயிற்சிகளை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவைகள் ஆகும் என இந்திய விமானபடை தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின் அமெரிக்க கடற்படையின் எஃப் 15 மற்றும் சி 130 ஆகிய ராணுவ விமானமும் இந்திய விமானப்படையின் ஜாகுவார், மிராஜ் உள்ளிட்ட ராணுவ விமானங்களும் பயன்படுத்தப் பட உள்ளன.